இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது!

20-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது!

45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
47. சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். (மார்க் 6:45, 47-48) NKJV.

என் அன்பான நண்பர்களே,தந்தையின் இதயம் உங்கள் இதயத்தின் விருப்பங்களை செய்ய தயாராக இருக்கிறது.அவர் நாம் கேட்பதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக செய்ய வல்லவராக இருக்கிறார்.அவர்
நமக்காக ஏற்படுத்திய எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் அது மனித பார்வைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.ஆகவே, அவர் விரும்பிய புகலிடத்தை நாம் அடைவதற்கு அவருடைய வழிகாட்டுதல் அல்லது வழிநடத்துதல் மிகவும் அவசியமானதாயிருக்கிறது,ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இதைப் புரிந்து கொள்ளாததால் தம்முடைய சீஷர்களின் வாழ்வில் தேவன் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தினார்.நமது தியானத்திற்கான இன்றைய வேதப் பகுதியில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு அழகாக விளக்கப்பட்டுள்ளது.

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை பெத்சாய்தா என்று அழைக்கப்படும் கரையின் மறுபக்கத்திற்குச் செல்லும்படி வற்புறுத்தினார்.அவர்களுடன் அவர் செல்லவில்லை.சீஷர்களுடைய இந்த எளிய பயணம் கடினமானதாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்பட்டது,அவர்கள் பயிற்சி பெற்ற மீனவர்களாக இருந்தாலும், காற்று எதிர்மாறாக இருந்ததால் அவர்களால் கடலில் படகோட்ட முடியவில்லை.அவர்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, பாதி தூரத்தை மட்டுமே கடந்தனர் (மொத்தம் 21 கிமீ தூரம்).

என் பிரியமானவர்களே, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் போராட்டங்கள் அல்லது நம் கனவுகளை அடைவதற்காக எடுக்கும் முயற்சிகள் நம்மை சோர்வடையச் செய்கிறது,சில சமயங்களில் நாம் அதை கைவிடுகிறோம்.இருப்பினும்,இந்த வாரம் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக பிதாவுக்கு விருப்பமானதும் ,அவர் நியமித்த புகலிடத்திற்கு இயேசுவின் நாமத்தில் உங்களை அழைத்துச் செல்லத் தொடங்குவார்! இயேசுவின் நாமத்தில் இந்த அனுபவத்தை பெறுவீர்கள்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,தேவனால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *