29-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 NKJV
கர்த்தராகிய இயேசுவுக்குள் பிரியமானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில், இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை இன்று சிந்திப்போம்.
1)ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும், வேதத்தில் அதை சொந்தமாக்குவதற்கான வழியை தேவன் வரையறுத்துள்ளார்.
2) பழைய ஏற்பாட்டில் நாம் காண்கிறபடி, அவர் ஒருமுறை ஆசீர்வதித்தால், அதை அவரால் ஒருபோதும் மாற்ற முடியாது.ஆனால் மனிதன் தனது முட்டாள்தனத்தின் மூலம் ஆசீர்வாதத்தை இழக்கலாம் அல்லது தனது அறியாமையின் மூலம் அதை பிசாசு திருட அனுமதிக்கலாம்.
3) இறுதியாக, தேவன் எந்த மனிதனையும் ஆசீர்வதிக்கும்போது, அதனோடு எந்த வேதனையையும் கூட்டார் .
இயேசு “நானே வழி” என்று சொன்னபோது, எந்த ஆசீர்வாதத்திற்கும் அவரே வழி என்று அர்த்தம்.
அவரே சத்தியம் என்பது அந்த சத்தியம் நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, அதே போல் மனிதனுக்கு ஆசீர்வாதங்கள் (இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவர்-கடவுளின் பிரசன்னம் போன்றவை ) நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, ஏனென்றால் கர்த்தராகிய இயேசு தாமே நியாயப்பிரமாணத்தின் தேவையை நமக்காக முற்றிலும் நிறைவேற்றி அதை சம்பாதித்தார் ,காரணம் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நிபந்தனைக்குட்பட்டது .
அவரே ஜீவன் என்பது அவருடைய வாழ்க்கை துக்கமில்லாதது மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தது, அவருடைய ஆசீர்வாதங்களும் அப்படியே மகிமை நிறைந்தது!
என் பிரியமானவர்களே, பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு கடினமாகப் பிரயாசப்பட்டார்கள், அவற்றைப் பெற்ற பிறகும், யோபு பயந்ததைப் போலவே அவர்கள் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ்ந்தார்கள் (யோபு 3:25).
ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசி ஆசீர்வாதத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டியதில்லை அல்லது ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ வேண்டியதும் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவைப் பார்த்து,நம் வாழ்வில் இயேசுவின் மீது கவனம் செலுத்துவதுதான் அப்படி செய்தால் எல்லா ஆசீர்வாதங்களும் உங்களைத் தேடி வரும், அவை எப்போதும் உங்களுடன் இருக்கும். ஏனென்றால், நீங்கள் பரலோகப் பிதாவின் பிள்ளைகள் என்ற தகுதி பெற்று இருக்குறீர்கள்.உங்களின் இந்தப் புதிய அடையாளம், பிதாவின் வாரிசான உங்களை நோக்கி ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்படுகிறது.இந்த ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் உழைக்கத்தேவையில்லை, தகுதிபெறத்தேவையில்லை ஆம், அவை கிருபையும் நித்தியமுமானவை ! அல்லேலூயா! ஆமென் 🙏.
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.