15-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்!
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:17 NKJV.
பாவம்,வியாதி,வறுமை,அழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை மீட்க தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
ஒரு மனிதனின் பாவத்தினால்தான் முழு மனித இனமும் அழிவில் மூழ்கியது.
ஆனால்,அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு,விழுந்துபோன மனிதகுலத்திற்கு மீட்பைக் கொண்டு வந்தார்.அவருடைய கீழ்ப்படிதலின் வாயிலாக எல்லா நீதியான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்தார் அதன் மூலம் பிதா மகிமைப்படுத்தப்பட்டார்.
.
ஆகையால்,ஒரே மனிதனின்(ஆதாமின்) தவறால் முழு மனித இனமும் வீழ்ந்தது போல்,ஒரே மனிதனின் நீதியால் -இயேசு கிறிஸ்துவின் நீதியால் இரட்சிப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைத்தது.
கர்த்தராகிய இயேசு கீழ்ப்படிந்து,யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கான முதல் அடியை எடுத்த தருணத்தில்,தேவன் தம்முடைய தலைசிறந்த படைப்பாகிய மனிதகுலம் இறுதியாக மீட்கப்பட்டதாகத் தம்முடைய மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பரலோகம் இனி மூடப்படாது.அல்லேலூயா!
தேவன் தம் மகனையும்,அவருடைய கீழ்ப்படிதலையும் (தேவனின் நீதி) பார்த்து நம்மை ஆசீர்வதிக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தேவை அல்லது பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு முறையும், தேவன் தம் மகனாகிய இயேசுவையும் அவருடைய கீழ்ப்படிதலையும் பார்த்து, இயேசுவின் நிமித்தம் பிரச்சனையை தீர்க்கிறார்.அதனால்தான்,இயேசுவே நமக்குத் தீர்வு என்று ஒவ்வொரு பிரச்சனையிலும் அவரை நோக்கிப் பார்த்து விடுதலை அடைகிறோம்! அவரே நம்மைக் குணப்படுத்துபவர்! அவரே நம் விடுதலை! அவரே நம் வழக்கறிஞர் ! அவரே தான் நம் பதவி உயர்வு!அவரே நமது நிறைவேறுதல் ! இதுவே நம் விசுவாசம். .ஆமென் 🙏 !
இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்*!
கிருபை நற்செய்தி தேவாலயம்.