21-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் மீது உள்ள தேவனின் பேரொளியை மனிதர்களுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறது!
10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.லூக்கா 2:10, 17 NKJV
மரியாளும்,யோசேப்பும் கலிலேயாவிலிருந்து பெத்லகேம் என்ற தாவீதின் நகரத்திற்கு வந்தனர்,அங்கு அவர்களது உறவினர்களோ நண்பர்களோ இல்லை.
இயேசுவின் பிறப்பு பற்றி யாருக்கும் தெரியாவிட்டாலும் தேவனும்,பரலோக சேனைகளும் நியமிக்கப்பட்ட நேரத்தை அறிந்தபடியால் அதை விளம்பரப்படுத்தினார்கள்.
அப்படியிருந்தும், என் அன்பானவர்களே!நீங்கள் பூமியில் தனிமையாக வாழலாம் மேலும் உலகம் உங்களை அறியாது இருக்கலாம்,உங்கள் தாலந்துகளும்,திறமைகளும் இன்னும் செயலற்றதாகவும் இருக்கலாம்.ஆனால்,கிறிஸ்துவில் உள்ள தேவனின் பேரொளி உங்கள் மீது இருப்பதால்,நீங்கள் இதுவரை மனிதர்களால் கவனிக்கப்படாமல் போயிருந்தாலும்,உங்கள் தேவதருணத்தைப்பற்றி(KAIROS MOMENT) முழுமையாக அறிந்த பரலோக ராஜ்ஜியம் அதை உலகுக்கு அறிவிப்பார்கள்.
உங்கள் இலக்கின் இணைப்பாளர்கள் சில நேரங்களில் தேவதூதர்களாக கூட வரலாம்!
இந்த இணைப்பாளர்கள் உங்களில் வெளிச்சத்தைக் கண்டு உங்களைப் பற்றிய நல்ல செய்திகளை உலகிற்கு விளம்பரப்படுத்துவார்கள்.
*இன்றைய தினம்,உங்கள் இலக்கின் இணைப்பாளர்களை தூண்ட தேவதூதர்களை
கட்டளையிடுகிறேன்,அவர்கள் உங்கள் மீதுள்ள தெய்வீக ஒளியையும்,உங்களில் உள்ள கிருபையையும் கவனித்து,இயேசுவின் பெயரில் மக்களுக்கு விளம்பரப்படுத்துவார்கள்*.ஆமென் 🙏
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரட்சகர் பிறந்தார் என்பதை நினைவூட்டுவது மட்டுமல்ல கிறிஸ்துமஸ் செய்தி, மாறாக இந்த இரட்சகர் இன்று நம்மை வேறு பரிமாணத்திற்கு உயர்த்துவதற்காக நம் வாழ்வில் கிருபையை வெளிப்படுத்துவதே அந்த நற்செய்தி! ஆமென் 🙏
நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம் என்னவென்றால் :“நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்! என்னில் உள்ள கிறிஸ்து தேவனின் பேரொளியின் வெளிப்பாடு! ”ஆமென்!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் மீது உள்ள தேவனின் பேரொளியை மனிதர்களுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.