மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

04-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 1:28 NKJV.

தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது,அதில் நான்கு பரிமாணங்கள் உள்ளன:
1.வாழ்வில் பலன்தரும் தன்மை;
2. வாழ்வில் பெருக்குதல்
3. வாழ்வில் பூர்த்தி அடைவது அல்லது திருப்தி அடைவது
4. வாழ்வில் ஆதிக்கம் அல்லது ஆளுமை செய்வது .

பாவத்தின் விளைவாக,மற்ற பரிமாணங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்,மனிதன் ஆசீர்வாதத்தின் 4 வது பரிமாணத்தை இழந்தான் – அதாவது ஆதிக்கத்தை அல்லது ஆளுமை (DOMINION ).

இயேசு நம் மரணத்தை தாம் ஏற்று மரித்தார் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது ஆசீர்வாதங்களின் முதல் மூன்று பரிமாணங்களை மீட்டெடுத்தது. இருப்பினும்,கர்த்தர் எல்லா வானங்களுக்கும் மேலாக உயர்ந்து,பிதாவாகிய தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்தபோது, ​​அவர் ராஜாக்களின் ராஜாவாக முடிசூட்டப்பட்டார். இதன் மூலம் அவர் அனைத்து படைப்புகளின் மீதும் முழுமையான அதிகாரம் பெற்றவராக ஆனார். அல்லேலூயா!

4வது பரிமாணத்தை மறுசீரமைப்பதே மிகவும் முக்கியமானது – ஆளுமை (DOMINION), மற்ற மூன்று பரிமாணங்களின் மறுசீரமைப்பும் தேவைப்பட்டாலும்.
ஆசீர்வாதத்தின் அனைத்து பரிமாணங்களும் மீட்டெடுக்கப்படும்போது மட்டுமே மனிதன் முழுமையடைகிறான்.

என் பிரியமானவர்களே,மகிமையின் ராஜாவாகிய இயேசுவை நாம் சந்திக்கும்போது, ​​ஆசீர்வாதத்தின் பரிமாணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் இயங்குவதைக் காண்போம்.
இயேசு உங்கள் இதயத்தில் வருவதிலிருந்து இது தொடங்குகிறது.ஆம்,அவர் உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும்போது,நீங்கள் இயேசுவின் நாமத்தில் உலகில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதை அனுபவிப்பீர்கள் .ஆமென் ! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *