10-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.யோவான் 8:35 NKJV
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகத் தம்முடைய பிள்ளைகளாக இருக்க நம்மை அழைத்திருக்கிறார்.“”இதோ, நாம் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, தந்தை நம்மை எவ்வளவாக அன்புகூர்ந்திருக்கிறார்!.என்று யோவான் 3:1 ல் குறிப்பிட்டது அப்போஸ்தலன் யோவானை ஆச்சரியப்படவைத்தது.
அவர் ஏன் நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்க வேண்டும்?ஏனெனில்,அப்போதுதான் நாம் அவருடன் ஆளுகை செய்ய முடியும்.
ஒரு வீட்டில் தந்தையின் காரியங்களில் வீட்டின் மகன் தான் உதவி செய்து கவனித்துக் கொள்கிறான். அவர்கள் வீட்டில் பணிபுரியும் அடிமைகள் இல்லை.வீட்டின் மகன் தன் தந்தையோடு என்றென்றும் இருப்பான்.தந்தையின் எல்லா சொத்துக்களுக்கும் அவன் வாரிசாகிறான்.
ஆனால், இந்த தேவனின் குமாரத்துவத்தைப் பெற,நம்முடைய கர்த்தராகிய இயேசு மரிக்க வேண்டியிருந்தது. ஏனெனில்,முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு கழுவப்பட வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே நம்முடைய எல்லா பாவங்களையும் கழுவியது.நாம் பாவத்தின் கீழ் இருக்கும் வரை,நாம் அடிமைகள் என்று அழைக்கப்படுகிறோம்,அடிமைகள் ஆட்சி செய்ய மாட்டார்கள்.
அதனால்தான் நம்முடைய பாவங்களை மேற்கொள்ளவும்,அதன் மூலம் அடிமைத்தனத்தை ஒழித்து, நம்மை அவருடைய குமாரர்களாக மாற்றவும், நாம் ஆளுகை செய்வதற்கு அவருடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பிய தேவனுக்கு நன்றி! அல்லேலூயா!
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.(யோவான் 1:12)
என் அன்பானவர்களே, உங்கள் இதயத்தைத் திறந்து இயேசுவை உங்கள் ஆண்டவராகவும்,ராஜாவாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
இயேசு உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும்போது, நீங்கள் இவ்வுலகில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறீர்கள்!
ஆமென் ! 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.