15-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
2. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.(ஆதியாகமம் 26: 2,3 NKJV)
என் அருமை நண்பர்களே,இந்த வாரம் நீங்கள் நுழையும்போது,பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆட்சி செய்வதற்கு மற்றொரு அற்புதமான திறவுகோலைத் திறக்கிறார். இந்த உலகத்தின் பொருள்கள் மற்றும் தீய சக்திகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு,தேவன் உங்களை நிலைநிறுத்தியுள்ள உங்கள் களத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆபிராமுக்குத் தோன்றிய மகிமையின் தேவன்,அவருக்குக் கட்டளையிட்ட முதல் விஷயம்,தேவனாகிய ஆண்டவர் அவருக்கு முன்னறிவித்த இடத்திற்கு (DOMAIN )அவரை மாற்றுவதாகும். (ஆதியாகமம் 12:1)
ஆபிராம் கானான் தேசத்திற்குச் செல்வதற்கு முன்பு அவர் குடியிருந்த இடத்தில் அவரை ஆசீர்வதித்திருக்கலாம். ஆயினும்கூட,தேவன் தனது ஞானத்திலும்,முன்னறிவிப்பிலும்,பூமியில் நம் வாழ்விற்கான அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிகவும் பொருத்தமானது என்று அவர் நினைக்கும் இடத்தில் நம்மை உத்தியின் ரீதியாக நிலைநிறுத்துகிறார்.
விசுவாசிகள், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர்கள் பரத்திலிருந்து வல்லமை பெறும் வரை எருசலேமில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர் (லூக்கா 24:49).
சீஷர்கள் புறப்பட்டு வந்த கலிலேயாவிலும் அவர் பரிசுத்த ஆவியை ஊற்றியிருக்கலாம். ஆயினும்கூட, அவர் எருசலேமைத் தேர்ந்தெடுத்தார்,அவர் தனது எல்லையற்ற ஞானத்தின்படி அனைத்து நாடுகளின் மக்களையும் உத்தியின் ரீதியாக பாதிக்கக்கூடிய இடமாக எருசலேம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.
கர்த்தர் உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்,அது உங்கள் தேவன் முன்குறித்த இடம் என்பதை நீங்கள் அறிந்தால்,நீங்கள் திறம்பட செயல்படலாம் மற்றும் ஆளுகை செய்யலாம்!
அன்புள்ள பிதாவே,நீங்கள் எனக்காக முன்னரே தீர்மானிக்கப்பட்ட களத்தை அறிந்து கொள்வதற்கான புரிதலை எனக்கு கொடுங்கள்,தேவனால் நியமிக்கப்பட்ட இலக்கை நிறைவேற்ற தேவனால் கொடுக்கப்பட்ட எனது ஆளுமையைப் பெற இயேசுவின் நாமத்தில் அருள்புரிவீராக.ஆமென் ! 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.