20-01-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது,நம்மை மறுரூபமாக்குகிறது மற்றும் அவருடைய தெய்வீக நோக்கத்திற்கு நம்மை உயர்த்துகிறது!
17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
20. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,எபேசியர் 1:17, 19-20 NKJV
மகிமையின் பிதாவை அறிந்துகொள்வதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அந்தளவுக்கு பிதாவின் மகிமையை அறிய நமது புரிதலின் கண்கள் ஒளிமயமாக இருக்க வேண்டும்.
மகிமை என்பது பாராட்டு அல்லது கனத்துக்கு தகுதியான எதையும் அல்லது யாரையும் குறிக்கிறது.
மகிமையின் பிதா அத்தகைய மகிமையின் நிறுவனர்,பிறப்பாளர் (FATHER) மற்றும் முன்னோடியாய் இருக்கிறார். அவர் புகழ் அல்லது மரியாதைக்குரிய அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறார்.
எவருடைய வாழ்விலும் ஏதேனும் ஒரு தனித்திறமை,சிறப்பம்சத்தை நாம் போற்றும்போது அல்லது இயற்கையின் அல்லது படைப்பின் அழகை ரசிக்கும்போது, அப்படிப்பட்ட வியப்பின் மூலகாரணமே நமது பரலோகப் பிதா!
உண்மையில், மகிமையின் பிதா ஒரு சிறந்த,அழகான மற்றும் போற்றத்தக்க அனைத்திற்கும் இறுதி ஆதாரம். நாம் காணும் மகிமையின் ஒவ்வொரு வெளிப்பாடும் – படைப்பிலோ, திறமைகளிலோ அல்லது ஞானத்திலோ அல்லது வல்லமையிலோ, அவருடைய எல்லையற்ற மகத்துவத்தின் பிரதிபலிப்பே வெளிப்படுகிறது.
பிதாவின் மகிமை அவரது சொந்த மகிமை மற்றும் முரண்பாடுகள் இல்லாமல், அவரது சொந்த மகிமை தனித்து நிற்கிறது மற்றும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற மகிமையாகும்.
இந்த வாரம் அனைத்து மகிமையின் பிதா தம்முடைய சொந்த மகிமையை அறிந்து அனுபவிக்க ஒரு புரிதலை அருளுவார். அத்தகைய புரிதல் நிச்சயமாக உங்களை தேவனின் குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும். ஆமென்!
மகிமையின் பிதா இந்த வாரம் அவருடைய மகிமையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள நமது இதயங்களை திறந்திருக்கவும், நமது புரிதலின் கண்கள் ஒளிமயமாக இருக்கவும்,பிதாவின் மகிமையின் அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை நமக்குத் தருவாராக.
இயேசுவின் நாமத்தில், நம்மை மாற்றி, அவருடைய தெய்வீக நோக்கத்திற்கு நம்மை உயர்த்தும் விதத்தில் அவருடைய பிரசன்னத்தை நாம் சந்திப்போமாக. ஆமென்🙏
மகிமையின் பிதாவை அறிவது,நம்மை மறுரூபமாக்குகிறது மற்றும் அவருடைய தெய்வீக நோக்கத்திற்கு நம்மை உயர்த்துகிறது.
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!