Author: vijay paul

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

21-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. ரோமர் 10:1 NKJV
4.அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5.பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.ரோமர் 9:4-5 NKJV

விசுவாசத்தின் மூலம் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இருக்கிறது!

ஆபிரகாமுக்கு தேவன் அருளிய ஆசீர்வாதமானது, இஸ்ரவேல் மூலம் பூமியின் முகாந்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதிப்பதாகும்.(ஆதியாகமம் 12:2-3).
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேல் மூலமாக மனித குலத்திற்கு அனுப்பினார்.
முழு வேதத்தில் நாம் கண்ட அனைத்து வாக்குறுதியும்,மேலும் நாம் அனுபவித்த மற்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் இஸ்ரேலின் நிமித்தமாக நமக்கு கிடைத்தன.
இஸ்ரவேலினால் எல்லா தேசங்களுக்கும் இரட்சிப்பு வந்தது.அல்லேலூயா! ஆமென்!

இன்று, நாம் காணும் உலகத்தில்,இஸ்ரவேல் இன்னும் தங்கள் மேசியா வருவார் என்று எதிர்பார்க்கிறது. ஆனால்,அவர் ஏற்கனவே வந்து, பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றி தேவனின் வலது பாரிசத்தில், மகிமையின் ராஜாவாக பரலோகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை அறியாமல் அவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கிறது!

ஆகையால், அவர்கள் தங்கள் மேசியாவை நிராகரித்தார்கள் என்பது உண்மைதான், இப்போது இரட்சிப்பு உலகிற்கு வந்துவிட்டது. _அதேபோல், இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளும் போது யூதர்கள் அல்லாத அனைத்து விசுவாசிகளுக்கும் “அபரிவித ஆசீர்வாதங்கள்” வரும் என்பதும் உண்மைதான், அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் இருக்கும். ரோமர் 11:12.

என் பிரியமானவர்களே, எருசலேம் மற்றும் இஸ்ரவேலின் சமாதானத்திற்காகவும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காகவும் நாம் ஜெபிக்கும்போது, தேவன் நம் வாழ்வில் எண்ணற்ற ஆசீர்வாதங்களைத் தருகிறார்.(சங்கீதம் 122:6). ஆமென்!
இஸ்ரவேலர் மீதுள்ள பகுதியளவு குருட்டுத்தன்மை நீங்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்,அதனால் அவர்கள் தங்கள் கண்களால் கண்டு, தங்கள் காதுகளால் சத்தியத்தை கேட்டு, தங்கள் இதயங்களால் புரிந்துகொண்டு குணமடைய வேண்டும். (ரோமர் 11:25,26 , ஏசாயா 6:10). ஆமென் !

இஸ்ரவேல் தேசமானது கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியாயிருக்கிறது என்று அறிக்கையிடுவோமாக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

20-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். லூக்கா 22:32NKJV.

தேவனுடைய ராஜ்ஜியம் வருவதன் நோக்கம் உங்கள் சக மனிதர்களுக்கு நீங்கள் உதவுவதாகும். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
தேவன் உங்களை கடன்களிலிருந்தும், நோய்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவிக்கிறார், அதனால் நீங்கள் உங்கள் அயலாரையும் அதே சோதனையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க தேவனின் கருவியாக இருப்பீர்கள்.

நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் நம் வாழ்க்கைப் படகை மூழ்கடிப்பது போல் தோன்றலாம், ஆனால் அது அவருக்கு மகிமை உண்டாக்கி நம்மை உயர்த்துவதாகும், சேற்றிலிருந்து நம்மை உடனடியாக உயரத்தில் அவரது மாட்சிமையுடன் அமரும்படி மறுரூபமடைய செய்கிறது. சூழ்நிலைகளின் காரணமாக மூழ்கும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியும் கூட உயர்த்தபட வேண்டும் என்ற நோக்கத்துடன் பலப்படுத்தப்பட்டு மகிமையின் ராஜாவை அனுபவிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது செழிப்பான ஆத்துமாக்களால் பரலோகத்தை நிரப்பி பாதாளத்தை கொள்ளையடிப்பது ஆகும்.

ஆம் என் அன்பிற்குரியவர்களே, நமது அன்பான பிதாவின் கரங்களில் உங்களை ஒப்படைத்து விடுங்கள், நீங்கள் பிதாவிடமிருந்து பெறும்போது உங்களின் அனைத்து தொடர்புகளுக்கும் (குடும்பம், நண்பர்கள், அந்நியர்கள்) கொடுக்கிறீர்கள்.

சில சமயங்களில், நீங்கள் மற்றொரு ஆத்துமாவிற்கு தண்ணீர் ஊற்றும்போது உங்கள் அற்புதத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் (“தாராள மனப்பான்மை ஐசுவரியமாக்கப்படும், மேலும் தண்ணீர் பாய்ச்சுபவர் தானும் பாய்ச்சப்படுவார்.” நீதிமொழிகள் 11:25).

பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மக்கள் மகிமைப்படுத்துவதற்காக உங்களில் உள்ள அவருடைய நீதி உங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் பரவட்டும் (மத்தேயு 5:16).ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

19-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6-9,10 NKJV

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”என்று நாம் கூறும்போது பரலோக பிதா வீட்டில், இராணுவம் போன்ற ஆட்சியை ஏற்படுத்த தம்மை ஈடுபடுத்துவதில்லை மாறாக அது,பரிசுத்த ஆவியில் நீதி,சமாதானம் மற்றும் மகிழ்ச்சியின் ராஜ்யம்,போட்டி,மன அழுத்தம் மற்றும் பயம் ஆகியவற்றின் ராஜ்ஜியம் அல்ல.அது உங்கள் மீது பிதா அருளுகிற அன்பின் ராஜ்யம்.

பிதாவின் ராஜ்யத்தில் உள்ள மதிப்பீட்டு முறையானது, நீங்கள் அவரிடமிருந்து எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதைச் சரிபார்ப்பதாகும் அவருடைய தயவு, அவருடைய நீதி, அவருடைய நிபந்தனையற்ற அன்பு ஆகியவைப் பொருந்தும்,மாறாக நீங்கள் அவருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது அல்ல.
பிதாவின் முன் உங்கள் வளர்ச்சியின் அளவீடு அவரிடமிருந்து நீங்கள் எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதுதான்.

ஏனென்றால், நீங்கள் எப்போது இலவசமாகப் பெறுகிறீர்களோ, அப்போது நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். பிதாவிடமிருந்து பெறாமல், நம் சக மனிதனை உண்மையாக ஆசீர்வதிக்க முடியாது. பிதாவுடனான உங்கள் செங்குத்து உறவு சரியாக அமைந்தால், மற்ற எல்லா உறவுகளும் சரியான இயக்கத்தில் அமைக்கப்படும்.

தேவன் உலகத்தை மிகவும் நேசித்தார், அவர் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை நமக்காக ஜீவபலியாக கொடுத்தார். நீங்கள் அவரிடமிருந்து பெறும்போது பிதாவாகிய தேவன் மதிக்கப்படுகிறார் – அவருடைய ராஜ்யம் வந்து அவருடைய நாமத்தை புனிதமாகவும், மிகவும் கௌரவமாகவும், மேன்மையாகவும் ஆக்குகிறது.

உண்மையான சுதந்திரம் என்பது அவருடைய ராஜ்யத்திலிருந்து பெறுவதே!

அவருடைய அபரிவிதமான கிருபையையும், நீதியின் வரத்தையும் பெற்று, உண்மையான சுதந்திரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் அனுபவியுங்கள். ஆமென் 🙏

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

18-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6-9,10 nkjv

என் பிதாவுக்கு பிரியமானவர்களே,நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்த பிரதான ஜெபமானது பிதாவின் ராஜ்யத்தை அழைப்பதை வலியுறுத்துகிறது. இருப்பினும் ஜெபமானது, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே..” என்று தொடங்குகிறது.

பரலோக ராஜ்யம் பூமியில் முக்கிய பங்கு வகிக்கிகிறது,எனவே,எல்லா வகையிலும் பிரார்த்தனையானது ராஜ்யத்தின் ராஜாவை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.ஆனால்,பிதாவாகிய தேவன் ராஜாவாக இருந்தாலும், நமக்கு பிதா என்றஉறவு முக்கியமானது.எனவே, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதா”என்று அவரை அழைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கூற்றானது நமது புரிதலை ஒளிர செய்கிறது! பல சமயங்களில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளை மட்டுமே தேவனிடம் கொண்டு வந்து சர்வவல்லமையுள்ள தேவனால் தீர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.அற்பமான விஷயங்களை அவரிடம் கொண்டு செல்ல கூடாதென்றும் அது அவருக்கு முக்கியத்துவம் இல்லாதிருக்கலாம் என்றும் நினைக்கிறோம்.

ஆனால், தேவன் நம் தந்தையாக,அப்பா பிதாவாக இருக்கும்போது,நம்முடைய பெரிய அல்லது சிறிய, குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமற்ற எல்லா பிரச்சினைகளிலும் அவரை உதவிக்கு அழைக்க முடியும். பிரார்த்தனைக்காக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்லது யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்கள். மிகவும் அந்தரங்கமானவை – அவை அனைத்தையும் நம் பிதாவாகிய தேவன் அறிந்திருக்கிறார். மேலும் இவை அனைத்திலும் ஈடுபடவும் அதை மிக நுணுக்கமாக தீர்த்து வைப்பதும் அவர் சித்தமாக இருக்கிறது.நன்றி அப்பா!

என் அன்பானவர்களே, இந்த வாரம் பரலோகத் தகப்பன் உங்களுக்காக அவர் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பது நாம் சாதாரணமாக நினைப்பது போல் ஒரு நிர்வாக மற்றும் பொதுவான விஷயம் அல்ல,மாறாக அது நீதி நிறைந்தது, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியில் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்தது. உங்கள் பிதாவாகிய தேவன் ஈடுபடும்போது அது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆமென் !

வாழ்க்கையின் மிக அற்பமான பிரச்சனைகளுக்கு கூட தீர்வு பெறுவது இந்த வாரம் உங்கள் சாட்சியாக இருக்கட்டும்.தயவு உங்களை ஒரு கேடயமாக சூழ்ந்துள்ளது.அவருடைய நீதியானது ஒவ்வொரு கோணலான பாதையையும் நேராக்க உங்களுக்கு முன் செல்கிறது. அவருடைய மகிழ்ச்சியே உங்கள் பலம்!ஆமென் மற்றும் ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆளுகை செய்ய “கேட்கும் இதயம்” பெற்றுக்கொள்ளுங்கள்!

14-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆளுகை செய்ய “கேட்கும் இதயம்” பெற்றுக்கொள்ளுங்கள்!

9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.I இராஜாக்கள் 3:9 NKJV

ஞானமுள்ள ராஜாவான சாலொமோன்,இஸ்ரவேல் தேசத்தில் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்குவதற்காக, புரிந்துகொள்ளும் இருதயத்தைக் கொடுக்க தேவனை நாடினார்.

எபிரேய மொழியில் “புரிந்துகொள்ளும் இதயம்” என்றால்,நன்கு கேட்கக்கூடிய இதயம்,புத்திசாலித்தனமாக மக்களின் பிரச்சனைகளை கேட்கக்கூடிய ஒரு இதயம், நீதி மற்றும் வெளிப்புறக் கீழ்ப்படிதலை பிறப்பிப்பதற்காக கவனத்துடன் கேட்கக்கூடிய இதயம்.

“உமது ராஜ்யம் வருவதாக” என்றால் புரிந்துகொள்ளும் இதயம் அல்லது கேட்கும் இதயம் வேண்டும் என்று அர்த்தம்: சர்வவல்லமையுள்ள தேவன்-மகிமையின் ராஜா பேசும்போது கேட்க விரைவான இதயம், விரைவான கீழ்ப்படிதலை விளைவிக்கிறது.

வேதத்தின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் புத்தகத்தில்,ஏழு தேவாலயங்களுக்கும் மகிமையின் ராஜாவிடமிருந்து ஒரு பொதுவான அறிவுறுத்தல் என்னவென்றால், “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் காது உள்ளவர் கேட்கட்டும்
அதாவது “ஆவியானவர் கூறுவது” என்பது, அவர் இன்னும் கூறுகிறார், இன்றும் அவர் பேசுகிறார் என்று அர்த்தம். நம்மில் சிலர், “தேவன் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை அல்லது தேவன் என்னிடம் பேசும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறுகிறோம்.

என் பிரியமானவர்களே,அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு செவிசாய்க்கும் இதயம் வேண்டும் என்ற நோக்கத்துடன் (அதாவது அவருடைய ராஜ்யத்தை முதன்மையான தேவையாக வைப்பது) அவருடைய ராஜ்யம் வர வேண்டும் என்று நாம் ஜெபிக்கும்போது,அவருடைய ஆவியானவர் கேட்கும்படி செவியை நமக்குக் கொடுப்பார்.
சாலமோன் ராஜாவைப் போலவே, நாமும் தேவனின் உறுதியான குரலைக் கேட்க முடியும், இது மற்றவர்களுக்கு கேட்காது. ‘வரிகளுக்கு இடையில் வாசிக்கப்பட வேண்டும்’. இதுவே அவரது குரலின் உண்மையான பகுத்தறிவு!

அவருடைய நீதியானது நம் இருதயத்தை விருத்தசேதனம் செய்து கேட்கும்படி செய்கிறது! அல்லேலூயா!
நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆளுகை செய்ய “கேட்கும் இதயம்” பெற்றுக்கொள்ளுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த உலகில் ஆளுகை செய்யுங்கள்!

13-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த உலகில் ஆளுகை செய்யுங்கள்!

15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.I யோவான் 2:15 NKJV

நீங்கள் உலகில் இருக்கிறீர்கள் ஆனால் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல. நீங்கள் உலகத்தில் இருக்கும்போது, ​​அடிமைத்தனம், ஊழல், வறுமை,கோரிக்கைகள் போன்றவற்றால் திணிக்கப்படுகிறீர்கள்.அதனால் உலகின் ராஜ்யங்கள் உங்களில் ஆளுகை செய்கின்றன.

உமது ராஜ்யம் வருவதாக” என்பது சர்வவல்லமை பொருந்திய தேவனுக்கு உங்கள் இதயத்தை அணுகும் அணுகலைக் கொடுக்கும் ஜெபமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் இதயத்தை இயேசுவுக்குக் கொடுக்கும்போது,மகிமையின் ராஜா உங்கள் இதயமாகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது, தேவன், உங்களை இருளின் சக்தியிலிருந்து விடுவித்து, அவருடைய அன்பின் குமாரனின் ராஜ்யத்திற்கு உங்களை இடம் பெயர்க்கிறார் (கொலோசெயர் 1:13).

அவருடைய அன்பானது,அவருடைய மிகச் சிறந்ததை உங்களுக்குத் தருகிறது, உங்களிடமிருந்து ஒருபோதும் அதை திருப்பி எடுக்காது.

அவருடைய அன்பானது, உங்களுக்கு சிறந்து விளங்குவதற்கான அனைத்து கிருபைகளையும் வழங்கி மற்ற எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறசெய்கிறது.

இன்று, மனிதகுலம் தற்போது எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கும் தீர்வைக் கொண்டுவரும் தேவனின் கருவியாக நீங்கள் மாறுவதற்கு அவருடைய அன்பு உங்களை அத்தகைய ஞானத்தாலும் புரிதலாலும் வளப்படுத்துகிறது.

உமது ராஜ்யம் வருவதாக” என்பது தேவனின் அனைத்து உள்ளடக்கிய அன்பையும் உங்கள் இதயத்தைக் கவர அனுமதிக்கும் அழைப்பாகும்.
உங்கள் இதயத்தில் அவர் வீற்றிருக்கும்போது, ​​நீங்கள் இவ்வுலகின் அரியணையில் ஏறுகிறீர்கள். நீங்கள் ஆளுகை செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த உலகில் ஆளுகை செய்யுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, அவருடைய நீதியிலும் கிருபையிலும் அவரோடு ஆளுகை செய்யுங்கள்!

12-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, அவருடைய நீதியிலும் கிருபையிலும் அவரோடு ஆளுகை செய்யுங்கள்!

1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 NKJV
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளிப்படுத்துதல் 1:18 NKJV

உமது ராஜ்யம் வருவதாக!”அப்படியென்றால் ,ஒரு ராஜ்யத்திற்கு நிச்சயமாக ஒரு ராஜா இருப்பார். அதுபோலவே, தேவனுடைய ராஜ்யம் வரும்போது,​​மகிமையின் ராஜா அரியணையில் அமர்வதற்கு வருகிறார். உங்கள் இதயம் அவருடைய சிம்மாசனமாக இருக்கும்!

உலகில் மற்ற ராஜ்ஜியங்களைப் போலல்லாமல், அவருடைய ராஜ்யம் மட்டுமே வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் உங்களுக்குப் பயனளிக்கிறது. இது நடக்க, உங்கள் உடல் ஒரு ஜீவ பலியாக படைக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜா சிம்மாசனத்தில் இருக்க வேண்டும் என்றால், நீங்களும் நானும் ஜீவபலியாக பலிபீடத்தின் மீது படைக்கப்பட வேண்டும் என்று பொருள்படுகிறது.

‘ஒரு ஜீவபலி’ என்றால் மரித்தாலும் இன்னும் சதாகாலங்களிலும் வாழ்கிறேன் என்று அர்த்தமாகிறது. இந்த கூற்றைப் புரிந்தால் மகிமையின் ராஜாவின் வார்த்தைகள் இன்னும்நிறைய அர்த்தமுள்ளதாக தோன்றும். “நான் மரித்தேன், இதோ நான் என்றென்றும் சதாகாலங்களிலும் வாழ்கிறேன்.

அதுபோலவே, கர்த்தர் கிருபையுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்திருந்தால்(புது சிருஷ்டியாக), அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (ரோமர் 6:6,11). ‘மேலும் ஒரு உயிருள்ள தியாகம்’ என்றால், நீங்கள் பலிபீடத்தில் படைக்கப்பட்டு, கிறிஸ்துவுடன் உங்கள் பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டதாக எண்ணுவதாகும். அதுவே, நீங்கள் கிறிஸ்துவில் தேவ நீதியாக இருக்கிறீர்கள்! (புதிய சிருஷ்டியாகிறீர்கள்) என்பதாகும்.

நீங்கள் நியாயபிரமானத்திற்கு (சட்டத்தின் கோரிக்கைகளுக்கு) மரித்தீர்கள் ஆனால் பரிசுத்த ஆவிக்கு உயிருடன் இருக்கிறீர்கள் (அவர் எல்லா கோரிக்கைகளையும் விட அதிகமாக வழங்குகிறார்), இப்போது ராஜாவின் மணவாட்டி ஆனதால், நீங்கள் அவருடன் சமமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் (ரோமர் 7:4 மற்றும் 8:2). ஒரு ஜீவபலி’ என்றால், நீங்கள் பலிபீடத்தில் படைக்கப்பட்டு, நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாமல், கிருபையின் கீழ் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. அப்போது, உங்கள் மீதான அனைத்து கோரிக்கைகளையும் ராஜாவிடம் ஏற்றி, பரிசுத்த ஆவியின் மூலம் ராஜாவிடமிருந்து ஏராளமான கிருபையைப் பதிவிறக்கம் செய்கிறீர்கள்.
ஏராளமான கிருபையையும் நீதியின் வரத்தையும் பெறுபவர்கள் இயேசுவின் மூலம் வாழ்க்கையில் ஆளுகை செய்வார்கள்- மகிமையின் ராஜாவுக்கு ஸ்தோத்திரம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியிலும் கிருபையிலும் அவரோடு ஆளுகை செய்யுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் சிந்தையை புதுப்பிக்க அவரை அனுமதியுங்கள்!

11-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் சிந்தையை புதுப்பிக்க அவரை அனுமதியுங்கள்!

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6:10 NKJV.
1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.ரோமர் 12:1 NKJV

வாழ்க்கைப் போராட்டங்கள் நடைமுறையில் தோல்வியடைவதற்கு அல்லது வெற்றிபெறுவதற்கு முன்பு அவை மனதில் வெற்றி பெறுகின்றன அல்லது இழக்கப்படுகின்றன.
மனிதர்கள் படைக்கப்பட்ட போது தேவன் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார் (ஆதியாகமம் 1:28). இருப்பினும்*முதல் பெற்றோர்களான ஆதாமும் ஏவாளும் இந்த உலகத்தை ஆளக் கொடுத்த ஆளுமையை இழந்தனர்*.

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது நம்மை மீட்டெடுக்க தேவனிடம் ஏறெடுக்கும் முதன்மையான ஜெபமாக இருக்கிறது. இந்த ஜெபத்தின் மூலம், பல ஆண்டுகளாக பலவீனமாயிருந்த உங்கள் புத்தி, உங்கள் உணர்ச்சி மற்றும் உங்கள் விருப்பத்தை தேவன் மீட்டெடுக்கிறார்.
குற்றஉணர்வு கொண்ட மனநிலை,அடிமைத்தனம்-மனநிலை,செய்ய முடியாது,வெற்றிபெற முடியாது-என்ற மனநிலை மற்றும் இது போன்ற சில சிந்தையால் நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். “உமது ராஜ்யம் வருவதாக” என்பது நம் மனநிலையை மாற்ற தேவனின் தலையீட்டை கோருவதாகும்.

நான் நினைக்கும் விதத்தை மாற்ற சுயமாக முயற்சித்தால்,நான் மிகக் குறைவான வெற்றியையே காணலாம், ஆனால், என் மனநிலையை மாற்ற தேவன் அனுமதித்தால், மாற்றம் நிரந்தரமாகவும் நித்தியமாகவும் இருக்கும். இதன் மூலம் அவருடைய ராஜ்யம் நமக்குள் வந்திருக்கிறது (மத்தேயு 17:21) என்று அர்த்தமாகிறது. அல்லேலூயா!

எனவே,என் அன்பானவர்களே உங்கள் உடலை தேவனுக்கு ஒரு உயிருள்ள தியாகமாக முன்வைத்து, அவருடைய ராஜ்யம் உங்கள் ஆத்துமாவில் வந்து செயல்பட அனுமதியுங்கள்,நிச்சயமாக நீங்கள் ஆச்சரியமான முடிவுகளைக் காண்பீர்கள். அவருடைய வாக்குறுதிகள் ஒருபோதும் வீண்போகாது. உங்கள் சமகாலத்தவர்கள் அனைவரையும் தாண்டி, எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். இந்த நாளில் உன்னத பரலோகத்தில் மாட்சிமையுடன் அமர்ந்திருக்க புழுதியிலிருந்து நீங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள். ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவ நீதி என்று உள்நோக்கத்துடன் செய்யும் உங்கள் ஒப்புதல் விசுவாச அறிக்கை உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிஜமாக்குகிறது!

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

08-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6:10 NKJV.
1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.ரோமர் 12:1 NKJV

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது அனைத்து பிரார்த்தனைகளின் தலையாய பிரார்த்தனையாக இருக்கிறது.

தேவன் உண்மையிலேயே இறையாண்மையுள்ளவர்,அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும் ,அவருடைய நோக்கங்கள் எதுவும் தடைபடாது. அதே நேரத்தில் அவர் மனிதனுக்குண்டான சுதந்திரத்தை மதிக்கிறார், அதனால்தான், பூமியை மனிதனுக்குக் கொடுத்தார், “வானம், வானங்கள் கூட இறைவனுடையது; ஆனால் பூமியை அவர் மனுபுத்திரருக்குக் கொடுத்திருக்கிறார்” என்று சங்கீதம் 115:16.ல் பார்க்கிறோம். அவர் கொடுத்தது ஆண்டவருடையது என்றாலும் திரும்பப் பெறுவதில்லை (சங்கீதம் 24:1) .

இருப்பினும், தேவன் பரிந்துரைத்த வழியை மனிதர்கள் தேர்ந்தெடுக்கவில்லை (“உண்மையாகவே, இதை மட்டும் நான் கண்டேன்: தேவன் மனிதனை நேர்மையாகப் படைத்தார், ஆனால் அவர்கள் பல திட்டங்களைத் தேடினர்.” பிரசங்கி 7:29 ) . ‘இந்தப் பல திட்டங்கள்’ பல ராஜ்ஜியங்கள் அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால் அது உலக ராஜ்ஜியங்கள்’. அவை வெறுப்பு, அடிமைத்தனம், ஊழல், வறுமை மற்றும் பலவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் நல்லதைச் செய்வதாக உறுதியளிக்கிறது, ஆனால் அது உறுதியளித்ததற்கு மாறாக எதிர் மறையானதைச் செய்கிறது.பின்னர் இன்னொருவர் வருகிறார், பல ஆண்டுகள்,நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதே வண்ணமாக கதை தொடர்கிறது, இதன் நிகர விளைவு என்னவென்றால், மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட பூமி முற்றிலும் தவறாக நிர்வகிக்கப்படுகிறது.

இப்படி துன்பப்பட்டவர்களின் அழுகை பரலோகத்தை எட்டியது,தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை மனித உருவில் அனுப்பினார், மனிதகுலத்தை தேவனின் நோக்கத்திற்கு மீட்டெடுக்க நம்மிடையே ஒருவராக இருக்க வேண்டும் என்றும் நீதியும் பரிசுத்தமுமான தேவனை திருப்திப்படுத்த அவரது மரணம் தேவைப்பட்டது. ஆனால், பாவம், கலகம் மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு நித்திய முடிவு கட்ட தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

எனவே, தேவனின் ஆட்டுக்குட்டியாக வந்த இயேசு,மரித்தார் மற்றும் தேவனின் மகிமையின் உயிர்த்தெழுதலால் மகிமையின் ராஜாவானார். அவருடைய ராஜ்யத்திற்கு முடிவே இல்லை, ஏனென்றால் அவருடைய ராஜ்யம் நீதி, சுதந்திரம், பரிசுத்த ஆவியின் அதிகாரம் மற்றும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டால் வகைப்படுத்தப்படுகிறது.

எனவே என் அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில், உங்கள் குடும்பத்தில், உங்கள் கல்வி, தொழில், வணிகம் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய ராஜ்யம் வருவதற்கு நீங்கள் கவனம் செலுத்தும்போது, ​நீங்கள் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மேலாக தேவனின் மிகச் சிறந்த ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். ஆமென் 🙏

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ஆளுகை செய்ய நீதியைப் பெறுங்கள்!

07-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ஆளுகை செய்ய நீதியைப் பெறுங்கள்!

8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6:8-10 NKJV

ஜெபிப்பதற்கான சிறந்த வழி – நீங்கள் விரும்புவதைச் செய்ய தேவனை பயன்படுத்தாமல்,மாறாக ,-அவர் உங்களிடமிருந்தும் உங்கள் மூலமாகவும் தாம் விரும்புவதைச் செய்யும் தேவனின் கருவியாக மாறுவது ஆகும்.
உங்களுக்குத் தேவையான விஷயங்களை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார் என்ற புரிதலுடன் தேவனை அணுகுவது முதல் மற்றும் முக்கிய முன்னுரை ஆகும்.

ஜெபங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்காதபோது அல்லது பதில் இல்லாமல் விஷயங்கள் தாமதமாகும்போது அல்லது பதில் முற்றிலும் இல்லாமல் போகும் போது – தேவன் பதிலளிக்கவில்லை அல்லது அது தேவனின் விருப்பம் இல்லை என்று முடிவு செய்வது மிகவும் தவறான கருத்தாகும்.

விவேகம் என்பது உங்களுக்கு போதிக்கப்பட்ட அனைத்தையும் உபயோகித்து நீங்கள் விரும்பிய பலன் இல்லாமல் எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்தபின் தேவனின் உதவியை நாடுவதாகும். அவருடைய உதவியை நாடுவது என்பது அவருடைய ராஜ்யம் வர வேண்டும் என்று பொருள்படுகிறது.

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது பிரார்த்தனைகளின் தலையாய பிரார்த்தனை! இது தேவை என்று நாம் நினைப்பதற்கு மேல் நம் வாழ்வில் முதன்மை பெறுகின்ற தேவனின் நோக்கத்தில் கவனம் செலுத்துகிறது.

பூமியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் (INFLUENCIAL PEOPLE) தங்கள் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறு பதில் பெறவேண்டும் என்பதை அறிந்தவர்களே ஆவர்!
பரிசுத்த ஆவியானவர் மட்டுமே பதில் அளிக்கப்பட்ட அனைத்து ஜெபங்களும் எப்படி ஏறெடுக்கப்படவேண்டும் என்பதை அறிந்தவராகும்!
பதில் அளிக்கப்பட்ட ஜெபங்களுக்கு “மூலக் காரணமானவர்” இயேசு கிறிஸ்து மட்டுமே.
அனைத்து பதில்களும் வரும்”ஆதாரம்” ( SOURCE) பிதாவாகிய தேவன்.

என் அன்பானவர்களே, மேற்கண்ட அடிப்படைகளை உங்கள் இதயத்தின் மையத்தில் வைத்திருங்கள், இதன் மூலம் ஒவ்வொரு எதிர்ப்பும் தேவனின் பார்வையில் ஆதாரமற்றதாகிவிடும், மேலும் நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைக்கும்.
ஆகையால், முதலில் அவருடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், மற்றவை அனைத்தும் உங்களுக்கு கூட கொடுக்கப்படும். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ஆளுகை செய்ய நீதியைப் பெறுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!