Author: vijay paul

img_168

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

29-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:17-19NKJV

இந்த ஜெபம் முழு வேதத்திலும் உள்ள மிகவும் அற்புதமான பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்த ஜெபத்தை ஒருவர் வாஞ்சையோடு ஜெபித்தால், அவனது வாழ்க்கை ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்காது. இதுவே சத்தியம்!

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நான்கு முக்கியமான பகுதிகளை அப்போஸ்தலனாகிய பவுல் கவனம் செலுத்துகிறார்:
1.ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிய ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியைப் பெற வேண்டும்.
2. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் அவனது வாழ்வில் தேவனின் அழைப்பை அறிந்து கொள்ள ஒளியூட்டப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அவருடைய அழைப்பைப் பற்றிய இந்த புரிதல் கிறிஸ்துவில் உங்கள் உண்மையான அடையாளத்தையும் (IDENTITY) உங்கள் வாழ்க்கையில் தேவனின் இலக்கையும் (DESTINY ) தெளிவாக வரையறுக்கும்.
3. இந்த உலகில் உங்களுக்காக மகிமையான மற்றும் தனித்துவமாக வைக்கக்கப்பட்ட தேவனின் ஆஸ்தியை அறிய ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் ஒளிர வேண்டும்.
4. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் மிகவும் பிரகாசமாக ஒளிமயமாக இருக்கும் போது, அவன் தேவனின் ஒப்பற்ற மற்றும் அற்புதமான வல்லமை(DUNAMIS POWER) தன்னில் செயல்படுவதை அறிந்துகொள்கிறான். இந்தப் புரிதல் எந்த மனிதனையும் பூஜ்ஜியத்திலிருந்து வெற்றியாளனாக மாற்றும். அது நிச்சயம்! இதுவே உன்னதமான துனாமிஸ் சக்தி (DUNAMIS POWER). அது உங்களை சேற்று களிமண்ணிலிருந்து உன்னதத்தில் மாட்சிமையுடன் அமர வைக்கிறது.

ஆம் என் அன்பானவர்களே, இந்த ஜெபத்தை உங்கள் தனிஜெபமாக விசுவாசத்தோடு ஏறெடுங்கள்.அப்பொழுது ,நீங்கள் நிச்சயமாக ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்க மாட்டீர்கள். அது “முட்கள் நிறைந்த” வாழ்க்கையிலிருந்து மகிமையின் ராஜாவுடன் “சிம்மாசனத்தில்” அமர்ந்திருக்கும் வாழ்க்கைக்கு உங்களை உயர்த்தும்!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்!

28-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்!

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;எபேசியர் 1:17-18NKJV

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மரணம்,அடக்கம்,உயிர்த்தெழுதல் மற்றும் சிம்மாசனத்தில் அமர்ந்ததின் காரணமாக,பிதாவாகிய தேவன் நம் ஒவ்வொருவருக்கும் விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் ஏற்கனவே அருளி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை விசுவாசிகள் அறிய, அப்போஸ்தலன் பவுல் மிகவும் வல்லமை வாய்ந்த உண்மையை மற்றும் கிறிஸ்துவின் தியாகத்தின் சத்தியத்தை அற்புதமாய் வெளிப்படுத்துகிறார்.

இதை படிக்கும் பொழுது நமக்கு மூன்று கேள்விகள் எழுகின்றன:
ஏன் ஆன்மீக ஆசீர்வாதம்?
பூமியில் அல்லாமல் நாம் ஏன் பரலோகத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்?
இயற்கை உலகில் இந்த ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெறுவது?

ஆகிய கேள்விகளுக்கு எபிரெயர்1:3 நமக்கு பதில் தருகிறது:

நேரம் மற்றும் உலகம் தேவனுடைய வார்த்தையால் உருவாக்கப்பட்டது என்பதை விசுவாசத்தின் மூலம் புரிந்துகொள்கிறோம்,அதனால் காணப்படுவது கண்ணுக்கு தெரியாதவற்றால் உண்டாக்கப்பட்டது என்று அறிகிறோம்.

காணக்கூடிய விஷயங்கள் கண்ணுக்கு தெரியாதவற்றின் துணைக்குழுவாக (subset) செயல்படுகிறது. பூமியில் வெளிப்படுவதற்கு முன்,பிரச்சினை முதலில் பரலோகத்தில் தீர்க்கப்படுகிறது. உண்மையில், ஒவ்வொரு நாளும் பூமியில் நடக்கும் அனைத்தும் முதலில் பரலோகத்தில் தீர்க்கப்பட்ட பிறகே அரங்கேறுகின்றன. இது ஒரு அற்புதமான உண்மை. இது தான் தேவனின் வழக்கமான விதிமுறையாக இருக்கிறது!

தேவன் ஒவ்வொரு காரியங்களை எவ்வாறு பார்க்கிறார் என்பதை பார்த்து மற்றும் பரலோகத்தில் அவரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து கொண்டு பார்த்தால் மட்டுமே,நாம் இயற்கை உலகில் நடைமுறையில் அதை உடனடியாக பார்க்க முடியாவிட்டாலும்,நன்றி செலுத்துவதினாலும் உயர்ந்த புகழினாலும், அந்த காரியம் நடந்து முடிந்ததென்று நினைத்து நாம் பேரானந்தமாக இருப்போம். ஆகவே, எபேசியர் 1:17-20-ல் அப்போஸ்தலன் பவுல் கற்பித்த விதத்தில் ஜெபிப்பது தவிர்க்க முடியாதது, ஞானத்தின் ஜெபத்தின் மூலமாக முதலில் ஆவியில் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் இயற்கை பார்வையால் அல்ல,விசுவாசத்தால்அது நடந்தாக நம்பி நடக்க வேண்டும்.அப்பொழுது நாம் ஆவியில் பார்ப்பது இயற்கையில் வெளிப்படும். ஆமென் 🙏

ஜெபம்: என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே,மகிமையின் பிதாவே, உங்களைக் காண ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குத் தந்தருளும். ஏழ்மையில் செழுமையையும், குறையில் மிகுதியையும், நோயில் குணமடைவதையும், முட்டாள்தனத்தில் ஞானத்தையும், அதிருப்தியில் திருப்தியும் மகிழ்ச்சியையும் காண என் கண்களுக்கு ஞானஒளி கொடுப்பீராக .இதை நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் சாம்ராஜ்யத்தைப் பார்த்து இவ்வுலகில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் வாழ்க்கையின் இலக்கைத் தெளிவாகப் பாருங்கள்!

27-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் வாழ்க்கையின் இலக்கைத் தெளிவாகப் பாருங்கள்!

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும், மகிமையின் தகப்பனுமாகிய அவர், அவரை அறிகிற அறிவில் ஞானத்தையும் வெளிப்பாட்டின் ஆவியையும் உங்களுக்குக் கொடுப்பார்“;
எபேசியர் 1:17-18aNKJV

எந்தவொரு மனிதனுக்கும் மிகப்பெரிய சங்கடம் அல்லது துரதிர்ஷ்டம் அவனது தஇலக்கைத் தீர்மானிக்கும் தருணத்தை நழுவ விடுவதுதான்.அதற்கு காரணம் அவனுக்கு முன்னால் இருக்கும் ஆசீர்வாதத்தை அவனால் பார்க்க முடியாமல் இருப்பதுதான். அவனது திருப்திக்கான தேடுதல்,அவனது கனவு நனவாகும் தருணம் வேறு என்று கருதுகிறான்.மனிதன் திருமணத்திற்கு வெளியே தனது திருப்திக்காகவும்,தனது களத்திற்கு வெளியே தனது அதிர்ஷ்டத்திற்காகவும்,வேறொருவரிடமிருந்து தனது ஆஸ்திவரும் என்று தேடுகிறான்.

ஆபிரகாம்,யோசேப்பு மற்றும் பவுலை வழிநடத்தியது போல் பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு நபரை பசுமையான மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,ஆனால்*அவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்தித்த பிறகு தான் அவர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் நிகழ்ந்தன.எனவே விரக்தி, ஏமாற்றம்,மற்றும் வனாந்தரம் அல்லது குருட்டுத்தன்மை போன்றவற்றின் இடத்தில் கடந்து செல்லும் நமக்கு மகிமையின் ராஜா நம் மனக்கண்களை திறக்கத் துடிக்கிறார் என்பதை மனதில் கொண்டு அவரோடு ஒரு சந்திப்பிற்காக நாம் வேண்டுவோம்.

என் அன்பானவர்களே, உங்கள் குறையில் தேவன் உங்களை சந்திக்கிறார்.
உங்கள் நோயில் அவர் உங்களை சந்திக்கிறார்.உங்களது விரக்தியிலும்,தோற்றுப்போன சூழ்நிலையிலும் ,பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முன்னால் இருக்கும் விடுதலையைக் காண்பிப்பார். அது ஆகாருக்கு நடந்ததைப் போலவே,தேவன்,பாலைவனத்தில் இறக்கும் தன் மகனைக் காப்பாற்ற அவள் கண்களை தண்ணீரைப் பார்க்க திறந்ததுபோலவே இயேசுவின் நாமத்தில் இன்று உங்கள் கண்களையும் திறப்பாராக.

ஜெபம்: என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே,மகிமையின் பிதாவே,உங்களைக் காண ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குத் தந்தருளும்.ஏழ்மையில் செழுமையையும், குறையில் மிகுதியையும்,நோயில் குணமடைவதையும்,முட்டாள்தனத்தில் ஞானத்தையும்,அதிருப்தியில் திருப்தியும் மகிழ்ச்சியையும் காண என் மனக்கண்களை திறந்தருளும் .இதை நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் வாழ்க்கையின் இலக்கைத் தெளிவாகப் பாருங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

img_200

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய கிருபையின் நற்செய்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

26-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய கிருபையின் நற்செய்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும், மகிமையின் தகப்பனுமாகிய அவர், அவரை அறிகிற அறிவில் ஞானத்தையும் வெளிப்பாட்டின் ஆவியையும் உங்களுக்குக் கொடுப்பார்“;
எபேசியர் 1:17-18aNKJV

எந்தவொரு விசுவாசியும் செய்யக்கூடிய மிகப்பெரிய பிரார்த்தனை என்பது மனக்கண்களை திறப்பதற்கான பிரார்த்தனையாகும். அது கண்களின் அறிவொளியை பிரகாசித்தது,பல முனிவர்களை இதற்க்காக மனிதகுலத்தின் வாசத்தைவிட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.அத்தகைய வாழ்க்கை முனிவர்களை எல்லா கவனச்சிதறல்களிலிருந்தும்,தேவன் விரும்பாத விஷயங்களிலிருந்தும் தடுத்து நிறுத்தியது.

ஆனால், கிறிஸ்துவின் நற்செய்தி என்பது தேவன் எவ்வாறு மனிதகுலத்தைத் தேடி பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார் என்பதைப் பற்றியது, மாறாக மதம் என்பது மனிதன் தேவனைத் தேட முயற்சி செய்வதை பற்றியது.

கிறிஸ்துவின் நற்செய்தி என்பது தேவன் மனிதகுலத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றியது, ஆனால், தேவனைக் கண்டுபிடிக்க மனிதன் தன்னை எவ்வளவு வெறுக்க வேண்டும் என்பதையும் தேவனைப் பிரியப்படுத்த அவன் செய்ய வேண்டிய விஷயங்களையும் மதம் கற்பிக்கிறது.

கிறிஸ்துவின் நற்செய்தி என்பது, மனித குலத்தை தனது தயவினாலும்,ஆசீர்வாதங்களையும் அளவில்லாமல் நாம் பெறுவதற்கு அவர் விலைக்கிரயமாக தம் உயிரைக் கொடுத்தார் என்பது பற்றியது, அதேசமயம்,தேவனின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெற மனிதன் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதில் மதம் கவனம் செலுத்துகிறது.

கிறிஸ்துவின் நற்செய்தி,பாவிகளில் மோசமானவர்களைக் கூட காப்பாற்றுகிறது, மாறாக மதம் பாவிகளைக் கண்டனம் மட்டும் செய்கிறது.அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம்.

சுருக்கமாக சொல்வோமானால் மதம் என்பது வாழ்வில் எல்லவாற்றையும் இழந்து நிராயுதபாணியாய் நிற்பவனிடம் தேவனுக்காக அவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை அளிக்கிறது மாறாக ஆண்டவராகிய இயேசுவின் கிருபையின் நற்செய்தியானது அவர் எல்லாவற்றையும் அவனுக்காக செய்து முடித்திவிட்டார் என்பதை அவனை காணச்செய்து தேவைகளை பூர்த்தி செய்ய கிருபையளிக்கிறது.

என் பிரியமானவர்களே,இந்த வாரம் நாம் இம்மாத இறுதிக்கு வரும்வேளையில், ​​இயேசுவின் தியாகத்தினால் ஏற்கனவே உங்களுக்குக் கிடைத்துள்ள தேவனின் அசாத்திய ஆசீர்வாதங்களை ஆன்மீக ரீதியில் பார்க்கவும் இயற்கையாக அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் புரிதலின் கண்களை ஒளிரச் செய்வாராக. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய கிருபையின் நற்செய்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

image

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

23-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

2. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
5. நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.சங்கீதம் 63:2-3, 5 NKJV

உங்கள் வாழ்வில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு உங்கள் ஆத்துமாவிடம் இல்லை, ஆனால் உங்கள் சொந்த ஆவியின் மூலம் தொடர்பு கொள்ளும் பரிசுத்த ஆவியிடம் உள்ளது. அப்படியென்றால் உங்கள் ஆத்து மாவிற்கு பரிசுத்த ஆவியிலிருந்து வரும் செய்தியை அறியத்தக்க தெளிவு அல்லது புரிதலின் ஞானம் தேவை.
எனவே, மனிதனை ஒருங்கிணைக்கும் ஒரே நபர்பரிசுத்த ஆவியான தேவன் (அவனை சரியான வரிசையில் ஒன்றாக்குவது: ஆவி – ஆத்து மா-சரீரம் ). அல்லேலூயா!

இந்தச் சரியான ஒழுங்குமுறை அமைந்தால்,மனிதன் தன் ஒவ்வொரு தேவைக்கும் ஆதாரமாக இருக்கும் தேவனைத் தானாகவே தேடுவான். அவன் தேவனை சந்திக்கவும் மற்றும் தேவனின் அன்பான இரக்கத்தை (GRACE) அனுபவிக்கவும் செய்கிறான்.இந்த தேவனின் கிருபையானது – வாழ்க்கை அவனுக்கு வழங்கக்கூடிய அனைத்தையும் விட மிகவும் சிறந்தது என்பதை அவன் உணரச்செய்கிறது(Thy lovingkindness is better than life). அல்லேலூயா !

இதன் விளைவாக, நன்றி செலுத்துவதும் தேவனை துதிப்பதும் இயல்பாகவும் தன்னிச்சையாகவும் மனிதனுக்குள் பாய்கிறது மற்றும் அவனது ஆத்துமா செழுமையினால் முழுமையாக திருப்தி அடைகிறது. இது அருமை!

உடலின் எலும்புகளில் உள்ள மஜ்ஜையும்,கொழுப்பானது வாழ்க்கையைத் திருப்திப்படுத்த ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது மேலும் இன்று எளிமையாக புரிந்துகொள்வோம். மஜ்ஜை ( HEALTH ) என்பது ஆரோக்கியத்தையும் ,கொழுப்பானது ( WEALTH ) மிகுதியான செல்வசெழிப்பையும் குறிக்கிறது.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமையின் ராஜாவை சந்திப்பது வாழ்க்கைத் தரத்தையும் (ஆரோக்கியத்தையும்) மிகுதியாக அல்லது ஏராளமான செல்வத்தையும் தருகிறது. இவை மனிதனை திருப்திப்படுத்த அனைத்து மனித தேவைகளையும் உள்ளடக்கியது.

என் அன்பு நண்பர்களே, பரிசுத்த ஆவியின் மூலம் நம் வீட்டை ஒழுங்கமைப்போம்:அதாவது ,
நீங்கள் ஒரு ஆவி, உங்களுக்கு ஒரு ஆத்துமா உள்ளது மற்றும் நீங்கள் ஒரு சரீரத்தில் வாழ்கிறீர்கள்.

உங்கள் ஆவி தேவனின் ஆவியுடன் ஒன்றிணைந்து எப்போதும் அவரைத் தேடுகிறது உங்கள் ஆத்துமாவுக்கு ஒவ்வொரு நாளும் புத்தி புரிதலும்,தெளிந்த ஞானமும் ( ENLIGHTENMENT) தேவைப்படுகிறது.
தேவனின் ஆவியானவர்,தேவனின் வார்த்தையானவர்(இயேசு கிறிஸ்து) உங்கள் ஆவியின் மூலம் உங்கள் ஆத்துமாவை அறிவூட்டுகிறார் மற்றும் போஷிக்கிறார்.
உங்கள் சரீரமானது நன்றி பலியினாலும் மற்றும் உயர்ந்த துதிகளினாலும் தேவனை போற்றுகிறது.

பரிசுத்த ஆவியானவர் உங்களை சிறந்த தரத்தினாலும் மற்றும் செழிப்பினாலும் திருப்திப்படுத்துகிறார், மேலும் அவருடைய கிருபையின் மிகுதியானது சாதாரன வாழ்க்கை வழங்கக்கூடியதை விட மிக அதிகமாக வழங்குகிறது. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

22-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

1. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2. என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
3. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு *என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:1-3aNKJV

சங்கீதக்காரன் ஒரு பக்கம் தன் எதிரியால் துன்புறுத்தப்படுவதையும் விரக்தியடைவதையும் கண்டு புலம்புகிறான்.பலவிதமான எண்ணங்கள் அவனுக்குள் பொங்கி எழுகின்றன,தேவன் தன்னை மறந்துவிட்டாரோ அல்லது அவனைக் கைவிட்டுவிட்டாரோ என்று உணரும் அளவிற்கு தத்தளித்தான் .

விரக்தியடைந்த சங்கீதக்காரன், “எவ்வளவு காலம் என் ஆத்துமாவில் நான் ஆலோசனை பெற வேண்டும்?” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆ! உண்மையில் பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதை இந்தக் கூற்று நமக்கு எளிமையாகக் காட்டுகிறது- ஒருவருடைய ஆத்துமாவிலிருந்து ஆலோசனை பெறுவதனால் தான் இந்த பிரச்சனை வந்தது, மனிதன் ஆவியாகிய தேவனின் சாயலில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவி என்பதை மறந்துவிடுகிறான்,ஆவியான இந்த தேவன் மனிதனின் ஆவியுடன் தொடர்பு கொள்கிறார். நமது ஆவியிலிருந்து புறப்படும் ஆலோசனையானது தேவனின் வாழ்க்கையிலிருந்தும் நம் ஆத்துமாவிலும் நம் உடலிலும் ஊடுருவுகிறது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், மிகவும் குழப்பமான மற்றும் அவநம்பிக்கையுடன் இருக்கும் நமது ஆத்துமாவை அமைதிப்படுத்துவது மற்றும் அவரது ஆவி வெளிப்படுவதற்கு அனுமதிப்பதாகும். நமது புரிதலுக்கு அதாவது ஆத்துமாவுக்கு தேவன் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
ஆவியின் அறிவுரையே ஆத்துமாவுக்கு ‘சரியான அறிவுரை’ மற்றும் உயிர் கொடுக்கும் அறிவுரை,அதுவே நிரந்தர தீர்வு.

எனவே, என் மனக்கண்களை பிரகாசிப்பியும் என்ற பிரார்த்தனை நம் மாமிசக் கண்களை குறிப்பதில்லை, ஆனால் அது எபேசியர் 1:18 இல் எபேசியர் ஜெபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே “மனக்கண்கள் பிரகாசிக்கும் போது” அவருடைய அழைப்பின் நம்பிக்கையும் அவருடைய சுதந்தரத்தின் மகிமையின் ஐசுவரியங்கள் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் ஆத்துமா புரிந்து கொள்வதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு பெறமுடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆத்துமாவிற்கு ஆவியின் ஆலோசனை தேவைப்படுகிறது!

பரிசுத்த ஆவியுடன் நெருங்கிய உறவு கொள்ளுங்கள்.உங்கள் ஆத்துமாவிற்கு (அறிவளிக்க) ஒளி வீச அவரை அனுமதிக்கவும்.அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து தேவையான ஆலோசனையை உங்கள் ஆத்துமாவிற்குள் கொண்டு வர பெரிதும் உதவுகிறது. நீங்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதி என்று இடைவிடாமல் அறிக்கைசெய்வது உங்கள் ஆத்துமாவை அமைதிப்படுத்துகிறது மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆலோசனையை உங்களுக்கு கிடைக்க செய்கிறது,அது உங்கள் எதிரியை உங்கள் பாதபடியாக்கி, நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஆட்சி செய்ய வழிவகுக்கிறது . ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஒன்றுபட்ட(UNIFIED) மனிதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

21-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஒன்றுபட்ட(UNIFIED) மனிதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

1. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1 NKJV
“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதிக்கும்; உமது சத்தியத்தில் நடப்பேன்; உமது நாமத்திற்கு அஞ்சும்படி என் இருதயத்தை ஒருங்கிணைக்கவும். சங்கீதம் 86:11 NKJV

தேவன் ஒரு ஆவியாக இருப்பது போல் மனிதனும் ஒரு ஆவியாக இருக்கிறான்!தான் சிந்திக்கவும் உணரவும் முடிவெடுக்கவும் கூடிய ஆத்துமா மனிதனுக்கு உண்டு.மனிதனும்(ஆவியானவன்) அவனது ஆத்துமாவும் அவன் உடலில் வாழ்கின்றன!

மனிதனின் ஆவி தேவனைத் தேடும் நேரத்தில்,அவனது ஆத்துமா தேவனுக்காகத் தாகமாக இருக்கலாம் – அதாவது,மனிதன் தேவனை மட்டுமே தேடும் போது, அவனது ஆத்துமா பதவி உயர்வு,தொழில் அல்லது கல்வியில் சிறப்பது, வணிகத்தில் வெற்றி, அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு போன்ற வேறு எதற்கும் தாகமாக இருக்கலாம் மற்றும் பல. அதுபோலவே அவனது உடலும் தேவனுக்காக ஏங்கலாம் அல்லது இன்பங்கள், நல்ல உணவு, நல்ல உணர்வைத் தரக்கூடிய விஷயங்கள் போன்ற எதற்கும் ஏங்கலாம். ஆம், மனிதனின் ஆத்துமாவும்,உடலும் தேவனுக்காக ஏங்காமல் இருக்கலாம், ஆனால் தேவன் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற காரணத்தினால் ஏங்கலாம்!

மனிதனுக்குள் இருக்கும் இந்த பிளவுபட்ட ஆர்வம் அவனைத் திசைதிருப்பவும்,தொந்தரவு செய்யவும், ஊக்கமில்லாதிருக்கவும்,அதிருப்தியாகவும் ஆக்குகிறது.எனவே,சங்கீதக்காரனாகிய தாவீது , ” தேவன் பெயரை உயர்த்த என் இதயத்தை ஒன்றுபடுத்தும்” என்று ஜெபிக்கிறார்.

சங்கீதக்காரன் தனது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் தலையீட்டை நாடுகிறார்,அவன் (ஆவி), அவனது ஆத்துமா மற்றும் அவனது உடலை ஒன்றிணைத்து அதிகாலையில் தேவனைத் தேடுகிறார். என்ன ஒரு அற்புதமான மற்றும் மகிமையான பிரார்த்தனை! இந்த பிரார்த்தனை முறையாக தேடுபவரின் ஒவ்வொருவரின் தலைவிதியையும் மாற்றும் மற்றும் அவரது தேவன் நியமித்த உண்மையான அழைப்பில் அவரை அழைத்துச் செல்ல முடியும்.

ஆம், என் அன்பானவர்களே, ஜீவனுள்ள தேவனின் குமாரன் இயேசுகிறிஸ்து மற்றும் கர்த்தராகிய தேவன், அவரது உடலை அடையாளம் காணமுடியாத அளவிற்கு உடைத்து சிதைக்கக் கொடுத்தார் (ஏசாயா 52:14; 53:2), அவரது ஆத்துமா மனிதகுலத்தின் அனைத்து துன்பங்களையும் அவமானங்களையும் எடுத்துக் கொண்டது. (ஏசாயா 53:11) மேலும் அவர் தனது ஆவியை அவருடைய பிதாவாகிய தேவனிடம் ஒப்புவித்தார் மற்றும் கல்வாரி சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தார் (லூக்கா 23:46).

ஆகையால், இன்று இயேசுவின் இந்த தியாகத்தின் மூலமும் அவருடைய இரத்தத்தின் மூலம் செயல்படும் பரிசுத்த ஆவியானவர் முத்தரப்பு மனிதனை(ஆவி,ஆத்துமா மற்றும் உடல்) ஒன்றிணைத்து,மனிதனுக்கு தேவனின் உயர்ந்த தயவைப் பெறச் செய்கிறார்- கேட்கப்படாத, அறியப்படாத அற்புதங்களை,மிகவும் தகுதியில்லாத கீழான நபருக்குக் கூட இதை சாத்தியமாக்குகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஒன்றுபட்ட(UNIFIED) மனிதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

img_91

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

20-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

1. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1 NKJV

தாவீது ராஜா-சங்கீதக்காரன் முத்தரப்பு மனிதனைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார்,ஏனென்றால் தன்னை முதலில் புரிந்துகொள்வது தேவனுடன் மிகவும் பயனுள்ள முறையில் நாம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

தாவீது கூறுகிறார், “நான் உம்மைத் தேடுவேன்,என் ஆத்துமா உமக்காக தாகமாக இருக்கிறது,என் உடல் உம க்காக ஏங்குகிறது…”.
இதில் அவன் தனது ஆவிதான் உண்மையானவன் என்று தெளிவாக அறிவிக்கிறான். இங்கே “நான்” என்பது தேவனைத் தேடும் அவனுடைய சொந்த ஆவி.

பிறகு “என் ஆத்துமா” என்று சொல்வதன் மூலம்,தன் ஆத்துமா அவனுடைய உடைமை – அதாவது ஆவியின் உடைமை என்று கூறுகிறான்.

பின்னர் மீண்டும் அதே முறையில் தனது உடலும் தன்னுடைய (ஆவியின்) உடைமை என்று கூறுகிறான்.

ஆம் என் அன்பானவர்களே, உண்மையான நபர் ஒருவரின் ஆவிதான்.தேவன் ஆவியாக இருப்பது போல் நீங்களும் ஆவியாக இருக்கிறீர்கள் (யோவான் 4:24).நம்முடைய ஆவி மட்டுமே ஆவியான தேவனுடன் தொடர்பு கொள்ள முடியும்.

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளும் போது,​​நீங்கள் ஆவியில் மீண்டும் பிறந்தவர்களாகிறீர்கள்.பரிசுத்த ஆவியானவருடன் ஒன்றாக இருக்கிறீர்கள். (நீங்கள் அவருடன் 24 மணிநேரமும் (உங்கள் ஆத்துமா உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் உடல் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும்) சகவாசத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாகிறீர்கள்,பழையவைகள் எல்லாம் ஒழிந்துவிட்டன.

நீங்கள் ஒரு ஆவி,நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி,மற்றும் நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்ற இந்த சத்தியத்தை அங்கீகரித்து ஒப்புக் கொள்ளுங்கள்.
இதன் மூலம், உங்கள் ஆத்துமாவிற்கு மேலே (நீங்கள் நினைப்பது, எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் விரும்புவது மற்றும் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு மேலாக) உங்கள் சொந்த ஆவி வெளிப்படுவதை உறுதிப்படுத்துவீர்கள் (அதிகாரம் அளிக்கவும்).
நீங்கள் தேவனுக்கு அடிபணிவது போல் உங்கள் உடலையும் ஆவிக்கு கீழ்ப்படுத்துங்கள். இதன் மூலம், மகிமையின் ராஜா ஆட்சி செய்வது போல் நீங்கள் எல்லாவற்றின் மேலும் ஆட்சி செய்கிறீர்கள். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நீங்களும் இவ்வுலகில் இருக்கிறீர்கள் (1யோவான் 4:17). பூமியில் ஆளுகை செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

g14

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

19-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.எபிரெயர் 4:12 NKJV‬‬

மனிதனின் ஆவி கடவுளிடமிருந்து வந்தது, மரணத்தின் போது, ​​மனிதனின் ஆவி அதைக் கொடுத்த கடவுளிடம் (படைப்பாளர்) திரும்புகிறது (பிரசங்கி 12:7).மனிதனுக்கு மரணத்தின் மீது ஒரு கட்டுப்பாடும் இல்லை.

இருப்பினும்,மனிதன் தனது சொந்த ஆத்துமாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறான்: தான் விரும்பும் எதையும் சிந்திக்கும் திறன்,அதை நினைத்து தான் விரும்பும் எதையும் உணரும் திறன் (இதில் கற்பனையும் அடங்கும்) மற்றும் அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை தீர்மானிக்கும் திறன்.இந்தக் கண்ணோட்டத்தில், அவன் தேவனுடைய உதவியின்றி தன்னிச்சையாக இருக்க முடியும்.ஆனால் மனிதன் மனிதனாகவே இருக்கிறானேயன்றி தேவனாகமுடியவில்லை, ஏனென்றால் அவன் உயிருக்கு காரணமான ஆவி அவனுடைய படைப்பாளரின் கைகளில் உள்ளது.

ஞானவான் தனது உயர்ந்த அறிவாற்றல் அல்லது செல்வத்தின் மூலம் புத்தியுடன் கையாளுதல் அல்லது திறம்பட நிர்வகிப்பதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டவன் அல்ல, மாறாக மிகவும் வரையறுக்கப்பட்ட அவன் ஆத்துமாவை தேவனுக்கு விருப்பத்துடன் அடிபணிபவனே ஞானி. இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவரைத் தேட கிழக்கிலிருந்து ஞானிகள் வந்ததில் ஆச்சரியமில்லை. இப்போதும் ஞானம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தேடிக்கொண்டிருக்கிறது! எனவே தன்னை (ஆத்துமா மற்றும் உடல்) தேவனுக்கு சமர்பிப்பது தான் ஞானம்.

கர்த்தரை நம்புகிற மனிதன் ஒருபோதும் வெட்கப்பட மாட்டான், அதனால் பஞ்ச காலத்திலும் நன்மையை மட்டுமே காண்பான்,ஏனென்றால் இயேசு தனது தியாக மரணத்தால் மரணத்தை என்றென்றும் ஒழித்து, எல்லா மனிதர்களுக்கும் நித்திய ஜீவனைக் கொண்டுவந்தார்.நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.(2 தீமோத்தேயு 1: 10)

என் பிரியமானவர்களே,உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கிய இயேசுவின் நிமித்தம் இன்றும் இந்த வாரம் முழுவதும் நீங்கள் நன்மையை மட்டுமே அனுபவிப்பீர்கள்.இதுவே பூமியில் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்க்கான ஆதாரம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img 109

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, அவருடைய குமாரத்துவத்தோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

16-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, அவருடைய குமாரத்துவத்தோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 NKJV.

தேவனாகிய ஆண்டவர் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கினார்’ என்பது மனிதனின் உடல். எனவே, மனித உடலின் தோற்றம் பூமியிலிருந்து வந்தது .
கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவ சுவாசத்தை (பரிசுத்த ஆவியை) மனிதனுக்குள் ஊதினார். எனவே, மனித ஆவியின் தோற்றம் பரிசுத்த ஆவியிலிருந்து வந்தது. .
தேவனின் ஆவியும் மண்ணும் இணைந்ததன் விளைவு மனித ஆத்துமா. இப்போது மனிதன் உயிருள்ளவனாக மாறிவிட்டான்.
எனவே, மனிதன் மூன்று பகுதியானவன்- அவன் ஒரு ஆவி,ஆத்துமாவைக் கொண்டு சரீரத்தில் வாழ்கிறான்.
ஆவியை கொண்ட மனிதன் தேவ உணர்வுள்ளவன். அதேபோல்
ஆத்துமாவைக் கொண்ட மனிதன் சுய உணர்வுள்ளவன்.
உடலைக் கொண்ட மனிதன் உலக உணர்வுள்ளவன்.

நன்மை தீமை பற்றிய அறிவின் கனியைப் புசித்து மனிதன் பாவம் செய்தபோது, ​​அவனது ஆவி செயலிழந்தது அப்படியானால் இறந்துவிட்டது. தேவனை அறியும் புரிதலை இழந்தான்.அவன் இனி தேவன் உணர்வு கொண்டவன் அல்ல . அவன் சுயநினைவு பெற்றான், அவன் நிர்வாணமாக இருப்பதைக் காணத் தொடங்கினான்,தன்னை மறைக்க அத்தி இலைகளை கட்டி,தேவனின் முன்னிலையில் இருந்து தன்னை மறைத்துக் கொண்டான். அவனது ஆத்துமா அவனுக்கு புதிய வழிகாட்டியாக மாறியது. அவன் இப்போது சுயமாக செயல்படும் மனிதனானான்.

ஐயோ! ஆவியிலிருந்து இயங்கும் உயிரை இழந்து ,தேவனின் வல்லமையிலிருந்து புறப்படும் அவனது உண்மையான ஆற்றலை விட்டு மிகக் குறைவாகவே உள்ள தனது ஆத்துமாவால் வாழத் தொடங்கியிருக்கிறான். இது தான் வீழ்ந்த மனிதனின் நிலை ,அதன் வேதனை பயங்கரமானது.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இயேசு மனிதனை மீட்டெடுக்க வந்தார் மற்றும் மீண்டும் இறக்க முடியாத ஒரு புதிய பிறப்பால் அவனது ஆவிக்கு புத்துயிர் அளித்தார்.மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மனிதனை மரணம் இனி ஆள முடியாது. *மனிதன் இப்போது புது சிருஷ்டியாயிருக்கிறான்’ – தேவனால் பிறந்தான். தேவனால் பிறந்த ஒவ்வொருவரும் உலகத்தை ஜெயிக்கிறார்கள் (1 யோவான் 5:4).
இயேசுவின் மரணம் மனிதனை என்றென்றும் வாழவும் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்யவும் செய்கிறது. அல்லேலூயா!
புது சிருஷ்டியான மனிதன் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! தேவனுடன் சரியாகவும் பூமியில் மகிமைப்படுத்தவும்ப்படுகிறான்! அவன் பிதாவாகிய தேவனின் வாரிசும் ,கிறிஸ்துவுடன் கூட்டு வாரிசுமாய் இருந்து பூமியில் ராஜரீக ஆசாரியனாய் வாழ்கிறான்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய குமரத்துவத்தோடு பூமியில்
ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!