Author: vijay paul

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

15-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

11. மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். I கொரிந்தியர் 2:11 NKJV

படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மற்றும் படைப்புகளில், மனிதனே முதன்மையானவன் மற்றும் தேவனின் கைவேலையில் இதுவரை செய்த படைப்புகளிடம் இல்லாததைக் கொண்டுள்ள தனித்துவமானவன்.ஏனென்றால், மனிதன் மட்டுமே தேவனின் சாயலில் உருவானான்.

எனவே, தேவனை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் உண்மையான சுயத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். படைப்பாளராகிய தேவனைத் தவிர வேறு யாராலும் உங்களை முழுமையாக வரையறுக்க முடியாது.

மனிதன் முக்கூட்டு அங்கமாக (மூன்று பகுதியுள்ளவனாக) வாழ்கிறான். அவன் ஒரு ஆவி, அவனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, பூமியில் ஒரு உடலில் வாழ்கிறான். அவனது உடலால், அவன் சுவை, வாசனை, செவி கேட்க, பார்க்க மற்றும் உணர முடியும். அவனது ஆன்மாவுடன்,அவன் தன்னைப் பற்றி சிந்திக்க முடியும், தனது சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் மற்றும் தனது சொந்த முடிவை எடுக்க முடியும். இது அவனை ஒரு ஆளுமைக்குள்ளாக வைக்குகிறது. அவனே சொந்தக்காரர் (அவனது மனதையும் உடலையும் பொறுத்த வரை).
ஆனால் மனிதனின் ஆவி தேவனிடமிருந்து வந்தது, அதனால் தேவனே அதன் உரிமையாளர்.

எனவே, மனிதனின் ஆத்துமா அதன் செயல்பாட்டில் வரம்புக்குட்பட்டது, ஆனால், மனிதனின் ஆவியோ அதன் செயல்பாட்டில் வரம்பற்றது, ஏனெனில் அவனது ஆவி தேவனிடமிருந்து வந்தது _.
எனவே,உங்கள் வரம்பிற்குட்பட்ட ஆத்துமாவிற்கும்,உங்கள் உடலுக்கும் மேலாக உங்கள் ஆவியை வெளிப்பட அனுமதிக்கும் போதுதான் ​​வரம்பற்ற உங்கள் உண்மையான திறனை நிரூபிக்க முடியும்.

உங்கள் ஆவி தேவனால் இயக்கப்படுகிறது! உங்கள் ஆத்துமா (உங்கள்) சுயத்தால் இயக்கப்படுகிறது!! உங்கள் உடல் உலகத்தால் ஈர்க்கப்பட்டு, உங்கள் ஆத்துமா தன்னால் அல்லது ஆவியால் சொல்வதைச் செயல்படுத்துகிறது.
அதுவே அவனது ஆவியால் இயக்கப்பட்டால், அவன் ஆன்மீக மனிதர் என்று அழைக்கப்படுகிறான்.
ஆனால் அது அவனது ஆன்மாவால் இயக்கப்பட்டால், அவன் மாமிசத்திற்குட்பட்ட மனிதன் அல்லது இயற்கை மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.

உண்மையான சுதந்திரம் என்பது நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வதில்லை (ஆத்துமா வழிநடத்துகிறது). மாறாக உண்மையான சுதந்திரம் என்பது தேவனின் கண்ணோட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வது அதாவது ஆவியின் வழிநடத்துதலோடு செய்வதாகும்.

வரம்பற்ற மண்டலத்தில் இருந்து வரம்பற்ற உயிரினமாக செயல்பட உங்கள் ஆவியை உயிர்ப்பிக்க இயேசு வந்தார். ஆமென் 🙏
அவருடைய நீதியே (பரிசுத்த ஆவியானவர் ) உங்களை வரம்பற்றதாக ஆக்குகிறது! நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியிருக்கிறீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில்
ஆளுகை செய்யுங்கள்.

உங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

14-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

12.நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். I கொரிந்தியர் 2:12 NKJV

உலகத்தின் ஆவி நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறது,ஆனால்,தேவனுடைய ஆவியானவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்தவற்றின் நிமித்தம் அவருடைய நீதியின் படியாக உங்களுக்குச் சரியானதைச் செய்ய பெலன் தந்து உதவுகிறார்.

உங்கள் செயல்திறன் உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை உலகத்தின் ஆவி சொல்லும்,ஆனால் கல்வாரி சிலுவையில் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் காரணமாக,தேவனின் ஆவியானவர் நீங்கள் இப்போது இருக்கும் உயர்ந்த நிலையை உங்களுக்கு சுட்டிக் காட்டி உறுதியளிக்கிறார்.

உலகத்தின் ஆவி உங்களுக்கு பற்றாக்குறை மற்றும் கோரிக்கைகளை முன் வைக்கும்,அது தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும், ஆனால் தேவனின் ஆவியானவர் உங்களுக்கு தேவனின் மிகுதியையும்,மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை விளைவிக்கும் இணையற்ற வளங்களையும் காட்டுவார்.

உலகின் ஆவி எப்போதும் உங்கள் செயல்திறனையே சார்ந்திருக்கும்,ஏனெனில் எதுவும் இலவசமாக வராது, எல்லாமே விலைக் குறியுடன் தான் வருகிறது மற்றும் அதில் எப்போதும் மறைக்கப்பட்ட செலவுக் காரணிஉள்ளடக்கியிருக்கும்.ஆனால், தேவன் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்ததை நீங்கள் அனுபவிக்கும்படி தேவனின் ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார்.

ஆம் என் அன்பானவர்களே, உலகத்தின் ஆவியும், தேவனின் ஆவியும் எதிரும் புதிருமாக இருக்கும்.மன அழுத்தம் இல்லாத, கவலையற்ற, கடனற்ற, நோயற்ற மேலும் கண்டனம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்குக் காட்டி உதவுகிறார்.

அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவரை உங்கள் வாழ்வில் அனுமதியுங்கள்!! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்.ஏனென்றால், இயேசு ஏற்கனவே முழுமையாக உங்களுக்கு பதிலாக கிரையம் செலுத்திவிட்டார்.
ஆம்! இது நமக்கு இலவசம் ஆனால் அது தேவனுக்கு செலவாகும். மேலும், நீங்கள் அவரை உள்ளே அழைக்கும் போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வதிக்கப்படுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

13-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

1. இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 32:1,17 NKJV

கர்த்தராகிய இயேசு சிலுவையில் நமக்காகச் செய்தவற்றின் நிமித்தம் நாம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நீதிமான்களாய் இருக்கிறோம் என்பது நமது நிலைப்பாடு. மனிதகுலத்திற்காக அவர் அனுபவித்த துன்பம், பரிசுத்த தேவனின் நீதியின் பிரமாணங்களை திருப்திப்படுத்தியது.நம்மீது சுமத்தப்பட்ட மரண தண்டனை இயேசு கிறிஸ்துவின் மீது வந்தது. அவருடைய இரத்தத்தால் நாம் மன்னிக்கப்பட்டு,கழுவப்பட்டு, என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம்.
இது தேவனின் பார்வையில் நம் நீதியின் நிலைப்பாடு -முற்றிலும் மன்னிக்கப்பட்டு,கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா!!

இருப்பினும்,தேவனால் சுமத்தப்பட்ட இந்த நீதியின் விளைவும்,விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் அது செயல்படுவதும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவராலன்றி, இரட்சிப்பு,பரிசுத்தமாக்குதல், குணப்படுத்துதல், தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவித்தல் அல்லது வேறு எந்த ஆசீர்வாதமாக இருந்தாலும் இயேசு நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை உணராதிருந்தால் நாம் ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரே இயேசுவின் நிமித்தம் தேவனின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுபவ ரீதியாக நம்மில் நிஜமாக்குகிறார். அல்லேலூயா!

நாம் தேவ பரம்பரையின் சட்டப்பூர்வ வாரிசாக இருக்கலாம்,ஆனால் அதை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. நமது வேத புரிதல் மற்றும் நமது பிரசங்கத்தில் நாம் கோட்பாட்டு ரீதியாக பரிபூரணமாக இருக்க சாத்தியமாயிராது, ஆனால் அவற்றை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கமுடிகிறதில்லை.இதற்கு முக்கிய காரணியே பரிசுத்த ஆவியானவர்தான்.அவர் தான் நம் அறிவுக்கும்,அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்க்கும் பாலமாக செய்லபடுகிறார்.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை அறியமட்டுமில்லை,ஆனால் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் அழைக்கவும்.எல்லா விஷயங்களிலும் அவரை ஈடுபடுத்தி வெற்றி பெறுங்கள். அவருடைய வல்லமையை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை இருக்கிற வண்ணமாகவே இருக்காது! நீதிமான்களாக்கப்பட்ட நாம் மகிமைப்படுத்தப்படுவோம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

g18_1

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

12-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.ஏசாயா 32:15 NKJV

மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் பரிசுத்த ஆவியானவரே பதில்!
பூமியில் முதல் மனிதனை உருவாக்கிய போது அவன் நாசியில் தன் சுவாசத்தை ஊதி அவனை ஜீவாத்துமாவாக்கியவரும் அவரே!

குழந்தை இல்லாத ஆபிரகாமையும் சாராளையும் ஈசாக்கைப் பெற்றெடுக்கச்செய்து, தேசங்களின் தந்தையாகவும் தாயாகவும் ஆக்கியதும் அவரே!

சிம்சோனின் மாபெரிய பலத்திற்கு பின்னால் இருந்த வல்லமையானவர் அவரே !

சவுல் என்ற சாதாரண மனிதனை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தியதும் அவரே !

ஆதியிலிருந்த வார்த்தையை தம் ஆவியின் மூலம் இயேசுவாக பூமியில் அவதரிக்கச் செய்தவரும் அவரே!

தம் அபிஷேகத்தை நசரேனாகிய இயேசுவின் மீது ஊற்றி ,எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தி, எல்லா வகையான பிசாசுகளின் சக்திகளிலிருந்து மக்களை விடுவித்து அற்புதம் செய்தவரும் அவரே!

பரிசுத்த ஆவியானவர் தான் பயத்தோடு இருந்த சீஷர்களுக்குப் புது சிருஷ்டியின் அனுபவத்தைப் பெற செய்து அவர்கள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்து உலகத்தை கலக்கியவரும் அவரே.

பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதல் வல்லமையே பேதுருவை 153 பெரிய மீன்களை ஒரேமனிதனாய் கரைக்குக் கொண்டு வர உதவியது.

பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, கூடிவந்த விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் மகிமையாக இறங்கி வந்ததால். அந்த விசுவாசிகள் உலகை அசைக்க தயாரானார்கள்.

ஆம் என் பிரியமானவர்களே,அதே பரிசுத்த ஆவியானவர் இன்றும் நம்முடனே இருக்கிறார், அவர்தான் நம் மூலமாக பெரிய காரியங்களைச் செய்வார்.! அவர் தான் நம் எதிர்காலத்தை மாற்றுபவர் !!

இந்த வாரம் நீங்கள் அவருடைய அற்புதத்திற்கு சாட்சியாக இருப்பீர்கள், உலக மனிதர்கள் கண்களுக்கு முன்பாக ஆச்சரியப்படவும் மற்றும் தேவனின் மகிழ்ச்சிக்கும் இயேசுவின் நாமத்தில் பாத்திரராயிருப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_134

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

09-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

ஏசாயாவின் 32ஆம் அதிகாரம் முழுவதும் பூமியில் தேவ நீதியும், நியாயமாக நடத்தப்படுவதை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் நியாயமானது அவருடைய நீதியின்படி நிறைவேற்றப்படுகிறது, மனிதனின் சொந்த நியாயத்தின் படி அல்ல(மனிதன் நீதி என்று நினைப்பதும் அல்லது அவன் நீதியை நிறைவேற்றும் வழி என்று எண்ணுவதும் அல்ல).

இந்த அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடும் இரண்டு பகுதிகள் உள்ளன,அவை மனிதகுலத்தின் மீது தேவனின் ஆசீர்வாதத்திற்கு மிகப்பெரிய தடைகள் மட்டுமல்ல,இந்த இரண்டு பகுதிகளும் இறுதியில் மனிதகுலத்தை அழிக்கவும் கூடும்:
1. முட்டாள்தனம்(foolishness) ( வசனம் 5-7) மற்றும்
2 சுயநீதி (self righteous) (வசனம் 9-14).

சுய நீதியை தான் தேவன் முட்டாள்தனம் என்று அழைக்கிறார். கலாத்தியர் 3:1 போன்ற முழு வேதத்திலும் இதை நாம் காண்கிறோம்,அங்கு விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் கூட முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். ஏனென்றால், தேவனின் நீதியை ஏற்றுக்கொண்டு (இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தால் உருவாக்கப்பட்டது) இந்த கிறிஸ்தவர்கள் பின்னர் கிருபையில் தொடரத் தவறிவிட்டனர், மாறாக தேவனைப் பிரியப்படுத்த மனித செயல்கள் மற்றும் சுயநீதியை சார்ந்து இருந்தனர். சுய நீதி என்கிற பாவம் அனைத்து பாவங்களுக்கும் தாயாக கருதப்படுகிறது மற்றும் அது லூசிஃபருக்கு நடந்ததைப் போலவே நித்திய சாபத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.

ஆனால் அன்பானவர்களே, இது இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்கு அல்ல. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறீர்கள். கிருபை மட்டுமே எப்போதும் உங்கள் உள்ளீடாக இருக்கட்டும் – அதாவது தகுதியில்லாத, சம்பாதிக்கப்படாத, நிபந்தனையற்ற கிருபை. ஆமென்!

கல்வாரி சிலுவையில் இயேசுவின் தியாகத்தின் காரணமாக அந்த கிருபையின் அடிப்படையில் நீங்கள் தேவனை அணுகும் ஒவ்வொரு முறையும், உங்கள் ஜெபங்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்பதில் உறுதியாயிருங்கள்!

ஜெபம் : பிதாவாகிய தேவனே! கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக ஆக்கியதற்கு நன்றி. இன்று என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மிகுதியாக இருக்கும் உங்கள் கிருபையைப் பெற நான் உங்களிடம் வருகிறேன் (உங்கள் மனுவைக் குறிப்பிடவும்). என் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கும், அனைத்து அச்சுறுத்தும் அந்தகார சக்திகளின் மீதும் என்னை ஆட்சி செய்ய வைக்கிறதற்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறுகிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_136

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

08-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். I கொரிந்தியர் 2:9-10 NKJV

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய். தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்)உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,உங்கள் சமகாலத்தவர்களை விட உங்களை உயரச் செய்யும்.

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த ஆன்மீக உணர்வுகளை நம்மில் எழுப்பி பாதுகாக்க முடியும். ஒரு விசுவாசியின் வெற்றி இந்த ஆன்மீக உணர்வுகள் எழும்பி தேவனோடு நம்மை இணைப்பதால் தான். பரிசுத்த ஆவியியானவரோடு இருக்கும் ஐக்கியமே இதை செய்கிறது!

எந்தவொரு மனிதனும் தேவனிடமிருந்து பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு பரிசுத்த ஆவியாகிய நபர்தாமே.அவர் பிதாவாகிய தேவனின் தனிப்பட்ட பொக்கிஷமாயிருக்கிறார்.

தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய பரிசுத்த ஆவியை அருளுவதில் பிதா மகிழ்ச்சியடைகிறார்,ஏனென்றால் கர்த்தராகிய இயேசு பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை (பாவத்தால் உண்டாக்கப்பட்ட) தன் மீது சுமந்து கொண்டு அதை முற்றிலுமாக சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

கல்வாரியில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டு அதன்மூலம் பரிசுத்த ஆவியானவர்,இப்போது விசுவாசிக்கிற ஒவ்வொருவரின் இதயத்திலும் என்றென்றும் வசிக்க வழிசெய்தது.
விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் நபரை அங்கீகரிக்கவும், அவருடைய வழிகாட்டுதல் (ஞானம்) மற்றும் கைரோஸ் (புரிதல்) எனப்படும் அவரது நேரத்திற்காகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும்போது அது மனித எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாகவும்,மனித கற்பனைக்கும் மனித புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கும்.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தேவனுடைய நீதியின் அடிப்படையில் செயல்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டு,அனைத்து மனிதகுலத்திற்கும் இலவச பரிசாகக் கொடுக்கப்படுகிறது, எனவே, “நான் கிறிஸ்துவுக்குள் தேவநீதி ” என்று நம்பி ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யும்போது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களில் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள்!
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம்  !!

img_137

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

07-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். ஏசாயா 32:3-4 NKJV.

உலகத்தில் பிறர் பார்க்க முடியாத காரியங்களை பரிசுத்த ஆவியானவரே உங்களைப் பார்க்க வைக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட பாலைநிலத்தில் உள்ள நீர் ஊற்றை பார்க்க ஆகாரின் கண்களை திறந்தார்.அதன்மூலம் கொடூர வெயிலின் காரணத்தால் மரணத்தின் விளிம்பில் இருந்த அவளது மகனின் தாகத்தைத் தணித்தார். (ஆதியாகமம் 21:19)

இஸ்ரவேல் தேசத்தில் நிலவிய கடும் வறட்சிக்கு( பஞ்சம்) முற்றுப்புள்ளி வைத்து,கோடிக்கணக்கான மக்களை பயங்கரமான மரணத்திலிருந்து காப்பாற்றிய பெரு மழையின் சத்தத்தை எலியா தீர்க்கதரிசிக்குக் கேட்கச் செய்ததும் பரிசுத்த ஆவியானவர் தாமே. (1 இராஜாக்கள் 18:41-45).

அதே பரிசுத்த ஆவியானவர் யோபுவின் புரிந்துகொள்ளுதலை திறந்து, சுய நீதியின் மூலம் விழுங்கப்பட்டு மரண படுக்கையிலிருந்த யோபுவை தேவனுடைய நீதியை விட்டு சுய நீதிக்கு சென்ற காரணத்தை புரியச்செய்தார். பின்னர், யோபுவின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் இழந்ததை விட இரண்டு மடங்கு மீட்டெடுத்துக்கொடுத்தார். (யோபு 42: 2-6,10,12).

பரிசுத்த ஆவியானவரே விசுவாசிகளை பரலோக மொழியில் (அந்நிய பாஷைகளின் வரம்) பேசவும், அவருடைய பரலோக ஆலோசனையைப் பெறவும்,நீதியின் பாதையில் நடத்தவும் செய்கிறார்.இது விசுவாசிகளை பூமியில் இருக்கும் போதே அனுபவரீதியாக பரலோகத்தை அனுபவிக்கச்செய்கிறது.ஆமென் 🙏

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய்.தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்) உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,மற்ற எல்லா சமகாலத்தவர்களை விடவும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.நமது நீதியான இயேசுவின் நிமித்தம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உங்கள் அன்பான தேவனாகவும் மற்றும் சிறந்த நண்பராகவும் இருக்கிறார்,இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க உதவுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

06-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது எதிர்க்காற்றுகள் அனைத்திலிருந்தும் உங்களை மறைக்கிறது.
கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, ஒவ்வொரு கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்தும் உங்களை மூடுகிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதியானது உங்களுக்குள் இருந்து ஜீவத்தண்ணீரின் ஆறுகளை ஓடச் செய்கிறது,நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களைச் செழிக்கச் செய்கிறது.
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதி என்பது ஷெக்கினா மகிமை மேகமாகும்,இது உங்கள் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் குறிப்பாக உங்கள் வனாந்தர பயணத்தின் போது உங்களைச் சூழ்ந்துகொள்ளும் கர்த்தர்,இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து வெளியேறும் போது மேகத்ஸ்தம்பமாக முன்சென்றது போல உங்கள் வாழ்க்கையிலும் முன் செல்வார்.

ஆம் என் பிரியமானவர்களே, இந்த வாக்குறுதிகள் உங்களுடையது, நீங்கள் நிச்சயமாக இந்த மாதம் இயேசுவின் நாமத்தில் சாட்சியாக எழும்புவீர்கள்!

உங்கள் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்று இயேசு சிலுவையில் உங்களுக்காக தியாகம் செய்து என்றென்றும் நீதிமானாக்கியதால் அவரில் அடைக்கலம் பெறுங்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்ற உணர்வு, அவமானம், தனிமையின் அச்சுறுத்தல், ஊக்கமின்மை மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது – மேலே கூறப்பட்டுள்ளபடி இந்த ஆசீர்வாதங்களை அறிக்கையிட்டு சொல்லுங்கள்,அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இதைத் தவறாமல் செயல்படுத்துவார். ஆமென் 🙏

மனிதனால் அடையப்பட்ட நீதியில் அல்ல,தேவனின் தயவில் மட்டுமே நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்ட நீதியைக் காண்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,புயல்களில் அவருடைய பாதுகாவலை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

05-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். ஏசாயா 32:1 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் அன்பானவர்களே, உங்கள் நிலைப்பாடு உங்கள் செயல்திறனைத் தீர்மானிக்கிறது மற்றும் உங்கள் நிலையிலிருந்து உங்கள் நன்மைகளைப் பெறுகிறீர்கள்.

ஒரு தேசம் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தினால் மட்டுமே,அவருடைய குழுவினர்கள் (அமைச்சர்கள்) அவர்களுக்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்ற முடியும்.
எனவே,நீதியில் ஆட்சி செய்யும் எந்தவொரு ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் தனது மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நீதியே காரணம். ஏனெனில் உண்மையான நியாயம், நீதியிலிருந்து மட்டுமே வருகிறது.

அப்படியிருந்தும், தனிப்பட்ட கண்ணோட்டத்தில்,தேவன் தம்முடைய நீதியை நம்மிடம் பரிமாற்றம் செய்யும்போது மட்டுமே நமது வாழ்க்கை சரியானதாக இருக்கும். இதை வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவின் மரணத்தின் விளைவாக நாம் நீதிமான்களாக நியாந்தீர்க்கப்பட்டோம், எனவே நம் வாழ்க்கையும் சரியானதாக இருக்க.நமது செயல் நமது நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படுகிறது. அதுவே நாம் யார் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பாவத்தில் கருவுற்றிருந்த நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆனதற்கு,காரணம் ஆவியானவரே. பாவமே அறியாத இயேசு தம் பிதாவுக்கு முழுமையாக கீழ்ப்படிந்ததால் பரிசுத்த ஆவியானவரால் மரித்தோரிலிருந்து எழுப்பபட்ட்டு நாம் நீதிமான்களாக மாற்றப்பட்டோம். ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக மாற்றப்பட்ட நாம் நீதியைச் செய்கிறோம். அல்லேலூயா!

இன்று, என் அன்பானவர்களே “நீங்கள் என்றென்றும் நீதிமான்கள்” என்ற சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த வலிமையான செயல்பாட்டை நீங்கள் நம்பும்போது, ​உங்கள் வாழ்க்கை முறை மாறுகிறது,மேலும் நீங்கள் நேர்மறையான முடிவுகளைக் காணத் தொடங்குகிறீர்கள். இந்த மாதம் இயேசுவில் பரிசுத்த ஆவியானவர் நமக்குச் செய்வதாக வாக்குறுதியளித்த நன்மைகளையும் பெறுவீர்கள்.
நீங்கள் அவருடைய நீதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் இன்று நியாயம் , நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே பெற நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_157

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்!

31-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்!

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்குள் வரும்வேளையில் , ​​இந்த மாபெரும் மற்றும் அற்புதமான உண்மையை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன் – நீங்கள் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள உங்கள் கனவுகள் மட்டுமல்ல நீங்கள் நினைத்து பார்க்க முடியாத கனவுகளை சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவன் உங்களுக்கு செய்கிறார்.

ஒவ்வொரு காலையிலும்,நம் மூலம் விரும்பிய வெளியீட்டைக் காண அனைவருக்கும் முதலாக சரியான உள்ளீடு தேவைப்படுகிறது.
எந்த நிபந்தனையின்றி,உங்கள் முயற்சியோ,உழைப்போ இல்லாமல்,அளவில்லாமல் இலவசமாகக் கொடுக்கப்படும் அவருடைய கிருபையே உங்கள் உள்ளீடாக இருக்க வேண்டும்.அவருடைய கிருபையை பெறுவது,உங்களை முழுவதுமாக நிரப்புகிறது மற்றும் நிரம்பி வழிகிறது உங்கள் மூலம் சுற்றியுள்ள மக்களையும் ஆசீர்வதிக்கிறது!

தேவனுடைய பார்வையில் இன்று நீங்கள் நீதிமான்களாக திகழ்வது இயேசு உங்களுக்கு இலவசமாக கொடுத்த நீதியின் வரத்தின் மூலம் ஆகும். (அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் பிதாவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்ததே அந்த நீதியாகும் ).ஆகவே இந்த நீதியை அறிக்கையிடும்போது உடனடியாக இல்லாவிட்டாலும் நிச்சயமாக ஒரு நாள் அவர் நீதியோடும் என் செயல்கள் பொருந்தும்.ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரே அந்த கிரியையை எனக்குள் நடப்பிக்கிறார்.

இந்த ஜூலை மாதம் முழுவதும் நம் அனைவரையும் மிகவும் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையின் தியானத்தில் என்னுடன் சேர்ந்து, உங்களின் பொன்னான நேரத்தை ஓதுக்கியதற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தர் தம்முடைய நீதியில் உங்களை நிலைநிறுத்தி, இயேசுவின் நாமத்தில் அவருடைய நிரம்பி வழியும் கிருபையால் உங்களைத் திருப்திப்படுத்துவாராக!

வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் அற்புதமான வெளிப்பாடு மற்றும் அபிஷேகத்திற்காக இயேசுவின் நாமத்தில் என்னுடன் இணைந்திருங்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!