Author: vijay paul

img_166

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

25-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் தீர்வை அனுபவியுங்கள்!

9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள்,அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். லூக்கா 11:9,11-13 NKJV.

இது பிரார்த்தனை பற்றிய பரிசுத்த வேதாகமத்தின் மிகவும் பிரபலமான பகுதியாகும்,இங்கு நீங்கள் தேவனிடம் உரிமையோடு கேட்கவும்,தேடவும் மற்றும் தட்டவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நிறைய தேவைகள் உள்ளன மற்றும் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதபோது நாம் பிரார்த்தனை செய்கிறோம்.அதாவது ,தேவனிடம் உரிமையோடு கேட்கவும், தேடவும், கதவை தட்டவும் வேண்டும் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இதுவே வெற்றிகரமான பிரார்த்தனையின் மந்திரத்தை (முறை அல்லது சூத்திரம்) வைத்திருந்தாலும்,நம்முடைய பிரார்த்தனைகளுக்கு இன்னும் பதில் கிடைக்காதபோது பல நேரங்களில் நாம் இதயம் தளர்வடைகிறது.ஒருவேளை அது தேவனின் சித்தமல்ல என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளுகிறோம்.

ஆனால், வெற்றிகரமான பிரார்த்தனைக்கான உண்மையான திறவுகோல் மேலே உள்ள பகுதியில் தெளிவாக காணப்படுகிறது.ஒவ்வொரு முறையும் நாம் எந்த தேவைக்காக ஜெபிக்கும் போதும்,தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர் தாமே. இந்த மகத்தான மற்றும் அற்புதமான உண்மையின் வெளிப்பாட்டை எனது விலைமதிப்பற்ற மனைவி மூலம் நான் புரிந்துகொண்டேன்.

ஆம் என் அன்பு நண்பர்களே, நீங்கள் எந்த தேவைக்காகவும் ஜெபிக்கும்போது, தேவனின் பதில் பரிசுத்த ஆவியானவர்தாமே .தேவன் தாமே எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லா இடங்களிலும் இருக்கிறவர்,மற்றும் சர்வ வல்லமை நிறைந்தவர் அதற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர் தாமே.
பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் வாழ்வில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார். அவர் ஆன்மீக விஷயங்களை இயற்கையில் உண்மையாக்குகிறார். அவர் பரலோகத்தில் முடிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் பூமியில் வெளிப்படுத்துகிறார். அல்லேலூயா!

ஆகவே, பரிசுத்த ஆவியானவரை உங்கள் நண்பராக இருக்க இன்றே அவரை அழைக்கவும்,உங்கள் வாழ்க்கையில் அவருடைய வெளிப்பாட்டை மகிமையாக அனுபவிக்கவும். ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_167

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

24-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்.நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
லூக்கா 24:49 NKJV.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு பிதாவின் வாக்குறுதியாயிருக்கிறார்! பரிசுத்த வேதாகமத்தில் தேவன் நமக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் மற்ற எல்லா வாக்குறுதிகளை விட மேலான வாக்குறுதி.

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவரை விட மிகவும் பிரியமானதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனின் சிறந்த மற்றும் சொந்த பொக்கிஷமாயிருக்கிறார்!
பழைய ஏற்பாட்டின் நாட்களில் தேவனுடன் பயணித்த அனைத்து தேவமனிதர்களும்,பிதா மற்றும் குமாரன் இருவராலும் பெரிதும் நேசிக்கப்படும் மிகவும் அன்பான நபர் பரிசுத்த ஆவியானவர் என்ற இந்த பெரிய அற்புதமான உண்மையை தெளிவாக புரிந்து கொண்டிருந்தனர்.

என் அன்பானவர்களே, இந்த பிதாவின் வாக்குறுதியை உங்கள் சொந்த நண்பராகப் பெறும்போது,நீங்கள் தெய்வீகமானவராக,நித்தியமானவராக,அழியாதவராக ,மற்றும் மேற்கொள்ள முடியாதவராக அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! ஆமென் 🙏

இந்த வாரம் ஜூன் மாதத்தின் இறுதி வாரமாகும், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் வாக்களிக்கப்பட்ட”யாராலும் மூட முடியாத திறந்த வாசல்”நடைமுறைப்படுத்தப்படுவதை நீங்கள் காண வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை பேசுவதன் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

21-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.யோவான் 16:13-14 NKJV.

பரிசுத்த ஆவியானவருடன் வாழ்கின்ற வாழ்க்கை ஒரு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் பரிபூரண வாழ்க்கை.அது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை.அது தேவனின் வாழ்க்கை மேலும் வாழ்வில் ஆளுகை செய்யும் வாழ்க்கை!
அப்போது,நீங்கள் ஒரு வெற்றியாளர் மட்டுமல்ல,ஒரு வெற்றியாளரை விட மேலானவராயிருக்கிறீர்கள். (ரோமர் 8:37).

பரிசுத்த ஆவியானவரை உங்களில் வசிப்பவராக இருக்க அனுமதிப்பது அவருடைய நித்திய ஜீவனை உங்களில் செயல்பட அனுமதிப்பதாகும்.
பரிசுத்த ஆவியானவரை உங்கள் தலைவராக இருக்க அனுமதிப்பது, எல்லாவற்றிலும்,எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், உங்களை எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்து விளங்கச் செய்வதாகும். அல்லேலூயா!

பரிசுத்த ஆவிக்கு சரணடைவது இயேசு கிறிஸ்துவை நம்மில் மகிமைப்படுத்துகிறது மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கும் அவருடைய நியாயப்பிரமணத்திற்கும் இயேசு முழுமையாகக் கீழ்ப்படிவதால் இயேசுவுக்குத் தகுதியான அனைத்தையும் நான் அனுபவிக்க வழிவகுக்கிறது .

என் அன்பான நண்பர்களே, இயேசு கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் தகுதியான தண்டனை( பாவத்தின் சம்பளம்) அனைத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டு உயிர் தியாகம் செய்ததால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தகுதியான அனைத்தையும் நாம் உரிமையோடு பெற்றுக்கொள்ளலாம்.
பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இதை உங்கள் வாழ்க்கையில் நிகழச் செய்ய முடியும் – இதுவே தெய்வீக பரிமாற்றம்!அவர் உங்கள் நண்பராக இருக்க விரும்புகிறார்,ஆம்,சிறந்த நண்பராக!
இன்று அவரை உங்கள் வாழ்க்கைக்கு வரவேர்ப்பீர்களா?

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதியாயிருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு வெற்றியாளரை விட மேலானவர் !! பரிசுத்த ஆவியை உங்களில் வரவேர்த்ததினால் நீங்கள் என்றென்றும் தெய்வீகமான,நித்தியமான,அழியாத, மற்றும் வெல்லமுடியாதவராயிருக்கிறீர்கள்!!!
உண்மையிலேயே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

19-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் யோவான் 16:7 ‭NKJV‬‬.

4 சுவிசேஷங்களிலும் கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுடன் வாழ்க்கையைப் படிக்கும்போது,கர்த்தராகிய இயேசுவின் பூமிக்குரிய வாசத்தின் போது சீஷர்கள் அவருடன் இருந்த விதம்,அவருடன் இருப்பது எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் என்று நான் பலமுறை எண்ணி ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஆனால், உண்மை என்னவெனில் (ஆண்டவர் இயேசு கூறியது போல்),உங்கள் வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் பரிசுத்த ஆவியானவர் வருவதற்காக, கர்த்தராகிய இயேசு பரலோகத்திற்குச் சென்றது உங்களுக்கும் எனக்கும் நன்மையே.
ஏன் ?
ஏனென்றால்,கர்த்தராகிய இயேசு மனிதனாக அவதரித்த போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும், ஆனால் இப்போது, கர்த்தராகிய இயேசுவின் ஆவியான பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும்,எல்லாரோடும் இருக்கிறார், ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு எல்லா நேரங்களிலும் குறிப்பாக சேவை செய்கிறார். அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் எல்லையற்றவர் என்று சொல்கிறேன்! அல்லேலூயா!!

மேலும்,கர்த்தராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில்,அவர் சீஷர்களுடன் மனிதனாக வாழ்ந்தார்,ஆனால் இப்போது அதே கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவராக என்னோடு மாத்திரமல்ல எனக்குள்ளும் வாசம்செய்கிறார்.நீங்களும் நானும் பலமுறை தோல்வியுற்றிருந்தாலும் நம்மை விட்டு விலகாமல் அவர் எப்போதும் நம்மில் வாழ்கிறார்.இது உண்மையிலேயே அற்புதமானது மற்றும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது!

மோசேயின்நியாயப்பிரமாணம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தும் ஆனால் எப்படி செய்வது என்று உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் தான் உங்களுக்கு உதவமுடியும்.

மோசேயின் நியாயப்பிரமாணம் நீங்கள் எல்லாவற்றயும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் பரிபூரண கீழ்ப்படிதலின் நிமித்தம் நியாயப்பிரமாணம் என்ன எதிர்பார்கிறதோ அந்த எதிர்பார்ப்பிற்க்கு அப்பால் செயல்பட கிருபையை (அவரது திறனை) வழங்குகிறார் . இது உங்களுக்கு சாதகமாக இல்லையா? இது உண்மையிலேயே அற்புதம் இல்லையா? ஆம்! இது உண்மையில் நற் செய்தி தான். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெரிய காரியங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_206

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

18-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

28. உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
29. அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். எண்கள் 11:28-29 NKJV

இன்றைய தியானத்திற்காக எடுக்கப்பட்ட மேற்கூறிய வேதப் பகுதியின் பின்னணி என்னவென்றால்,2 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த இஸ்ரவேல் மக்களுக்கு மோசே நியாயப்பிரமாணத்தை(பத்து கட்டளைகளை) கொடுத்தார்.இந்த மக்கள் தேவன் சொல்வதையெல்லாம் தங்களால் கடைப்பிடிக்க முடியும் என்று சுயத்தில் பெருமையடித்தனர் (யாத்திராகமம் 19:8-20:17).ஆனால்,தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் தற்பெருமை கொண்ட அதே மக்கள்,தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்கி அதை வணங்குவதன் மூலம் (யாத்திராகமம் 32:1)முதல் கட்டளையாகிய விக்கிரக வழிபாடு செய்யக்கூடாது என்பதை உடனே மீறினர்.

அதற்கும் மேலாக,ஆன்மீக/தெய்வீக தீர்வுகளுக்காக மக்கள் தங்கள் பிரச்சினைகளை மிக அற்பமான விஷயங்களையும் கூட மோசேயிடம் கொண்டு வரத் தொடங்கினர்,விரைவில் மோசே தீர்வுகளை கொண்டு வருவதில் சோர்வடைந்தார்.தேவனுடைய தலையீட்டிற்காக அவர் கூக்குரலிட்டார்,இந்த பாரத்தை சுமக்க 70 மூப்பர்களை தேர்ந்தேடுத்து பரிசுத்த ஆவியானவர் மோசே மீது வைத்த அதே அபிஷேகத்தை ஊற்றினார்.

நியாயப்பிரமாணத்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது என்பதை மோசே புரிந்துகொண்டார், மாறாக பரிசுத்த ஆவியானவர் மக்கள்மீது ஊற்றப்படும்போது நிச்சயமாக மக்களை ஆசீர்வதிக்க முடியும் என்று நம்பினார். (நியாயப்பிரமாணம் மரணத்தை கொடுக்கும் ,ஆனால் ஆவி உயிர் கொடுக்கிறது – 2 கொரிந்தியர் 3:6). ஆகவே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் எல்லா மக்களுக்கும் வர வேண்டும் என்று மோசே ஏங்கினார்.

என் அன்பு நண்பர்களே,இன்று உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்,பரிசுத்த ஆவியானவர்தான் தீர்வு.பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்கு முக்கியம் என்பதால் விசுவாசிகளுக்கு அந்நிய பாஷை பேசுவதற்கான உச்சரிப்பைக் கொடுக்கிறார்.

இன்று, வாழ்வில் தேவையான ஒழுங்குமுறையைக் கொண்டுவருவதற்கு அதிகமான சட்டங்களையோ அல்லது கடுமையான சட்டங்களையோ கொண்டு வருவதல்ல,மாறாக பரிசுத்த ஆவியின் விசேஷித்த அபிஷேகம் தேவைப்படுகிறது,இதனால் நியாயப்பிரமாணத்தின் தேவை நம்மில் நிறைவேற்றப்படும் (ரோமர் 8:4).பரிசுத்த ஆவியானவர் அருளிய பரலோக மொழியைப் பேசுவதற்காக நீங்கள் உங்கள் வாயைத் திறக்கும்போது,​​எந்த மனிதனும் மூட முடியாத திறந்த வாசலின் கதவை உங்களுக்கு முன் வைக்கிறார்.

ஒவ்வொரு அபிஷேகம் செய்யப்பட்ட, அந்நிய பாஷை பேசும் விசுவாசி ஒரு வெற்றியாளன்,எவராலும் தடுத்து நிறுத்த முடியாதவன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் திறந்த வாசலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

im

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் கராஹ்வை அனுபவியுங்கள்!!

17-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் கராஹ்வை அனுபவியுங்கள்!!

2. அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்போஸ்தலர் 13:2 NKJV

வேலை, வியாபாரம், கல்வி ,தொழில் முதலீடு மற்றும் வாழ்க்கைத் துணை,வணிகத் துணையைக் கண்டுபிடிப்பது மேலும் திருப்பணி செய்ய அழைக்கும் ஊழியம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வழிநடத்துதலை தேடுகிறார்கள்.

நாம் அந்நியபாஷையில் ஜெபிக்கும்போது நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். 1 கொரிந்தியர் 14:2 ல், ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார், அந்நிய பாஷையில் பேசுகிறவன் மனுஷரோடே பேசாமல் தேவனிடத்தினாலே பேசுகிறான்; இருப்பினும், ஆவியில் அவன் ரகசியங்களைப் பேசுகிறான்.”
நாம் ஜெபிக்கும்போது அல்லது அந்நியபாஷையில் பேசும்போது யாருக்கும் தெரியாத இரகசியங்களைப் பேசுகிறோம் (1 கொரிந்தியர் 2:9).
நீங்கள் தேடும் அந்த ரகசியங்களை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.

அந்தியோகியாவிலுள்ள சீஷர்கள் அந்நிய பாஷையில் ஜெபித்து, கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள், திடீரென்று பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் பேசி,அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டினார்.

ஆம் என் அன்பானவர்களே,அதே பரிசுத்த ஆவியானவர் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் வழிகாட்டுதலை நீங்கள் அந்நிய பாஷையில் பேசும்போது காண்பிப்பார்

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் தேவனின் வழிநடத்துதலை அனுபவிப்பீர்கள். நீங்கள் செய்யும் எல்லாக்காரியங்களில் வெற்றி பெறுவீர்கள் (கராஹ்) ,அதாவது அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் ,சரியான நேரத்தில் சரியான நபரை சந்திப்ப்பீர்கள்.பரிசுத்த ஆவியானவர் வழங்கியஅந்நிய பாஷை வரத்தின் மூலம் (TONGUES). பல ஆண்டுகளாக உங்கள் மனதைக் குழப்பிக்கொண்டிருந்த பிரச்சினைகளில் நீங்கள் தெளிவு பெறுவீர்கள். நீங்கள் உங்கள் ஆத்துமாக்கு ஆறுதலையும் இளைப்பாறுதலையும் உங்கள் உடலுக்கும் சுகத்தைப் பெறுவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷை வரத்தின் மூலம் கராஹ்வை அனுபவியுங்கள்!!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அன்பின்நிமித்தம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

14-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அன்பின்நிமித்தம் திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

20. நீங்களோ பிரியமானவர்களே,உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
21. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். யூதா 1:20,21 NKJV

நாம் அந்நிய பாஷையில்(தேவனின் மொழியில்)பேசும்போது அல்லது ஜெபிக்கும்போது, அவர் நமக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின் மூலம் நாம் நம்மைக் கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், நம்மைக் காத்துக் கொள்கிறோம் மேலும் தேவ அன்பில் நாம் நிலைநிறுத்த்தப்படுகிறோம்.

என் அன்பானவர்களே,திறந்த வெளியில் சூரிய ஒளி இருப்பதை அறிவது ஒருவிஷயம்,அதே சூரியனின் வெப்பத்தின் தீவிரத்தை அனுபவிக்க சூரியனின் கீழ் வருவது வேறு விஷயம்.
அதுபோல, தேவனின் அன்பு என்பதை அறிவது ஒரு விஷயம், இந்த தேவன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அனுபவிப்பது மற்றொரு விஷயம்.

நீங்கள் அந்நியபாஷையில் பேசும்போது, ​உங்களை நேரடியாக தேவனின் அன்பின் அனுபவத்தின் கீழ் கொண்டு வருகிறீர்கள். அல்லேலூயா!
நம்முடைய கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும்கூட அன்பான அப்போஸ்தலன் யோவான் இதைத் தொடர்ந்து அனுபவித்தார்,ஆனால் அந்நிய பாஷை பேசும் அனுபவம் பின்னர் வந்தது.

என் பிரியமானவர்களே,நீங்களும் புதிய பாஷையில் பேசலாம் மற்றும் பிதாவின் எப்போதும் பிரகாசிக்கும் அன்பை அனுபவிக்கலாம்.நீங்கள் அவருடைய அன்பில் திளைக்க உங்களை அனுமதிக்கும் போது உங்கள் விசுவாசம் வானத்தை எட்ட உயரும்.அப்பொழுது அவருடைய கிருபைஉங்கள் தேவைகளை மிஞ்சி வழிந்தோடும். ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.உங்களில் உள்ள கிறிஸ்து உங்களில் தங்கியிருக்கும் பரிசுத்த ஆவியானவர்,அவர் அந்நிய பாஷையில் பேசுவதற்குத் தம்முடைய வார்த்தைகளை உங்களுக்குத் தருகிறார். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியிருக்கிறீர்கள்,ஆபிரகாமை விசுவாசிக்கும் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.நீங்கள் உலகத்தின் வாரிசு.பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தின் கதவுகளையும் திறந்து உட்பிரவேசிக்க உங்களைத் நடத்துகிறார்- நீங்கள் இன்று யாரும் மூட முடியாத திறந்த வாசலில் இயேசுவின் நாமத்தில் பிரவேசிக்கிறீர்கள்.! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அன்பின்நிமித்தம் திறந்த வாசலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!!

13-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!!

3. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், *பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
20. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, யூதா 1:3, 20 NKJV

நாம் பெற்ற விசுவாசத்தை முழு ஈடுபாட்டுடன் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறோம். இந்த விசுவாசம் நீதியினால் வரும் விசுவாசமாகும். (கலாத்தியர் 3:5,6,24)அதை நாம் ஒரு பரிசாகப் பெறுகிறோம் (ரோமர் 5:17) அதை நாம் நமது கீழ்ப்படிதல்/செயல்களால் பெறுவது அல்ல மாறாக இயேசுவின் கீழ்ப்படிதலினால் மட்டுமே தேவன் நம்மை நீதிமான்களாக்கினார்.

பிசாசை தோற்கடிப்பதற்கான ஒரே வழி, உங்கள் பயம் மற்றும் போராட்டங்களை சமாளிப்பதற்கான வழி,உங்கள் பெலவீனத்திலிருந்ந்து சுகம் பெறுதல் மற்றும் உங்கள் உண்மையான அடையாளம், உங்கள் பரம்பரை மற்றும் உங்கள் இலக்கை அனுபவிப்பதற்கான ஒரே வழி, இயேசுவை விசுவாசமாக பற்றிப் பிடித்துக்கொண்டு, இயேசு நமக்காக சிலுவையில் செய்த உயிர் தியாகத்தைப் பற்றிக்கொள்வதுதான். இயேசு தனக்காக இறக்கவில்லை,ஏனென்றால் அவரில் பாவம் இல்லை.அவர் அவருடைய பாவங்களுக்காக அடிக்கப்படவில்லை,ஆனால் நம்முடைய பாவத்திற்காக அடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடைய அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். இயேசு ஒருபோதும் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை,ஆனால் அவர் பட்ட துன்பம் அனைத்தும் நம் சார்பாக இருந்தது.

நீதியினால் வரும் விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு தக்கவைப்பது அல்லது பாதுகாப்பது?
அந்நியபாஷையில் பேசுவதன் மூலம்! ஆம்!!
பரிசுத்த ஆவியில் ஜெபிப்பதன் மூலம் (அந்நிய பாஷையில் ஜெபிப்பதன் மூலம்) உங்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட அந்த மிகபரிசுத்த விசுவாசத்தின் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அந்நிய பாஷை என அழைக்கப்படும் தேவன் கொடுத்த மொழியில் பேசுவது உங்கள் விசுவாசத்தை வளர்க்க உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து அந்நிய பாஷையில் பேசுவதால்,நீங்கள் வாழ்வில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களாகவும் ஆகிவிடுவீர்கள்.நீங்கள் வாழ்வில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அந்நிய பாஷையின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உன்னதமான திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

12-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உன்னதமான திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

5. அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
7. அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
10. அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.அப்போஸ்தலர் 12:5, 7, 10 NKJV

இது பேதுருவின் வாழ்க்கையில் கிடைத்த அற்புதமான விடுதலை.பேதுரு கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,அடுத்த நாள் தூக்கிலிட தயாராக இருந்தார்.
இருப்பினும், பேதுருக்காக தேவன் வெவ்வேறு திட்டங்களை வைத்திருந்தார்,அது சபையின் ஜெபத்தால் நிறைவேற்றப்பட்டது,அவர்கள் அந்நிய பாஷைகளில் ஜெபித்தார்கள்,பரிசுத்த ஆவியானவர் தம்முடைய உச்சரிப்பை அவர்களுக்குக் கொடுத்தார்.

பேதுருவை விடுவிப்பதற்காக அந்த அந்நியபாஷை ஜெபம் ஒரு தேவதூதனை அனுப்பி பின்னர் அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் அவரது கைகளிலிருந்து விழுச்செய்தது.

சபையின் அந்த ஜெபம் பேதுருக்கு மிகவும் வலிமையான சிறைச்சாலையின் வாயில்களையும் மற்றும் சிறைக் காவலர்களின் நிலைகளைக் கடந்து செல்ல வழியைக் கொடுத்தது.

அந்நியபாஷையின் இந்த ஜெபம் நகரத்திற்குச் செல்லும் இரும்புக் கதவை தானாக திறக்க செய்தது.பின்னர் பேதுரு சிறைச்சாலையிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட்டார். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, பேதுருக்கு இந்த அற்புதம் நேர்ந்தால்,அவ்வண்ணமே நம்முடைய மருத்துவ அறிக்கைகளில் சித்தரிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் அந்நிய பாஷையில் பேசுவதால் தலைகீழாக மாறிவிடாதா? கண்டிப்பாக அது தலைகீழாக மாறும்! அல்லேலூயா !

என் அருமை நண்பர்களே,நிலநடுக்கமே ஏற்பட்டாலும் திறக்க முடியாத இரும்புக் கதவு தன்னிச்சையாகத் திறக்க முடிந்தால்,நீங்களும் அந்நியபாஷை பேசும்பொழுது பெரும் நன்மையின் கதவுகள் உங்களுக்குத் திறக்ப்பட்டு – சிறையிலிருந்து அரண்மனைக்கு செல்லும் வழி திறக்கப்பட்டு,கந்தலில் இருந்து செல்வமும், சேற்று களிமண்ணிலிருந்து மாட்சிமையுடன் உயர்ந்த நிலையும் செல்லுதல் ஆகியவை உங்களுக்காக கண்டிப்பாக திறக்கும் !

நீங்கள் அந்நியபாஷைகளில் பேசுங்கள்,அந்நியபாஷையில் தொடர்ந்து பேசுங்கள்,அப்பொழுது இளைப்பாறுதல் தருவது பரிசுத்த ஆவியின் பொறுப்பு. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பெரிய திறந்த வாசலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_94

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உலகத்தில் ஆட்சிசெய்ய ஆவியானவரின் யுக்தியை அனுபவியுங்கள்!!

11-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உலகத்தில் ஆட்சிசெய்ய ஆவியானவரின் யுக்தியை அனுபவியுங்கள்!!

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
17. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
18. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.யாக்கோபு -5:16b-18 NKJV

புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நீங்கள் பரலோக மொழியில் (அந்நிய பாஷைகளில்) ஜெபிக்கும்போது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சரியான நேரத்தில்,சரியான இடத்தில் இருக்க தேவன் உங்களுக்கு ‘கராஹ்’ (SUCCESS) வழங்குகிறார்.

பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் உங்களில் தங்கியிருக்கிறார்.பழைய ஏற்பாட்டில் இது சாத்தியமில்லை, ஏனென்றால் அப்போது இயேசு உலகத்திற்கு வரவில்லை,சிலுவையில் உலகத்தின் பாவத்தைப் போக்கிய தேவ ஆட்டுக்குட்டி அவரே,தேவன் மூன்றாம் நாளில் அவரை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச்செய்து , எல்லா நாமத்திற்கும் மேலாக அவரை உயர்த்தினார்.அவர் தான் கர்த்தர் – மகிமையின் ராஜா. இந்த மகிமையே பரிசுத்த ஆவியானவரை உங்களில் வந்து வாசம்பண்ணவும்,என்றென்றும் உங்கள் மீது தங்கவும் செய்தது.

ரிசுத்த ஆவியானவர் இன்று உங்கள் வாழ்வில் சரியான நிகழ்வுகளை நடக்க வைப்பவர்.நீங்கள் செல்ல வேண்டிய வழியை அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார் (சங்கீதம் 32:8). அவர் உங்களுக்கு லாபத்தைக் கற்பிக்கிறார், உங்களை வெற்றிக்கு வழிநடத்துகிறார் (‘கராஹ்’) – ஏசாயா 48:17.
உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் போது, ​பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷைகளில் ஜெபிப்பதன் மூலம் உங்களை வழிநடத்துகிறார் – உங்கள் வேலையைச் செய்து முடிக்க சரியான நபரைச் சந்திக்க சரியான நேரத்தில் உங்களை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அல்லேலூயா! ஆமென் 🙏

என் அன்பு நண்பர்களே,
இயேசு மரித்ததால்,உங்களுக்கு நித்திய வாழ்வு வந்தது மற்றும் நீங்கள் ஒருபோதும் இறக்க மாட்டீர்கள் (நீங்கள் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நீதிமான்கள்);
தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதால், நீங்கள் இப்போது புதிய சிருஷ்டியாகிவிட்டீர்கள், பழையவைகள் ஒழிந்தன ;
தேவன்,இயேசுவை எல்லா நாமத்திற்கு மேலாக உயர்த்தி,அவரை மகிமையின் ராஜாவாக முடிசூட்டி,நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகளில் பேச உதவுகிறார். நீங்கள் அவருடன் என்றென்றும் ஆட்சி செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உலகத்தில் ஆட்சிசெய்ய தேவனின் யுக்தியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!