Author: vijay paul

img_91

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

20-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

1. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1 NKJV

தாவீது ராஜா-சங்கீதக்காரன் முத்தரப்பு மனிதனைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார்,ஏனென்றால் தன்னை முதலில் புரிந்துகொள்வது தேவனுடன் மிகவும் பயனுள்ள முறையில் நாம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

தாவீது கூறுகிறார், “நான் உம்மைத் தேடுவேன்,என் ஆத்துமா உமக்காக தாகமாக இருக்கிறது,என் உடல் உம க்காக ஏங்குகிறது…”.
இதில் அவன் தனது ஆவிதான் உண்மையானவன் என்று தெளிவாக அறிவிக்கிறான். இங்கே “நான்” என்பது தேவனைத் தேடும் அவனுடைய சொந்த ஆவி.

பிறகு “என் ஆத்துமா” என்று சொல்வதன் மூலம்,தன் ஆத்துமா அவனுடைய உடைமை – அதாவது ஆவியின் உடைமை என்று கூறுகிறான்.

பின்னர் மீண்டும் அதே முறையில் தனது உடலும் தன்னுடைய (ஆவியின்) உடைமை என்று கூறுகிறான்.

ஆம் என் அன்பானவர்களே, உண்மையான நபர் ஒருவரின் ஆவிதான்.தேவன் ஆவியாக இருப்பது போல் நீங்களும் ஆவியாக இருக்கிறீர்கள் (யோவான் 4:24).நம்முடைய ஆவி மட்டுமே ஆவியான தேவனுடன் தொடர்பு கொள்ள முடியும்.

நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளும் போது,​​நீங்கள் ஆவியில் மீண்டும் பிறந்தவர்களாகிறீர்கள்.பரிசுத்த ஆவியானவருடன் ஒன்றாக இருக்கிறீர்கள். (நீங்கள் அவருடன் 24 மணிநேரமும் (உங்கள் ஆத்துமா உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் உடல் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும்) சகவாசத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாகிறீர்கள்,பழையவைகள் எல்லாம் ஒழிந்துவிட்டன.

நீங்கள் ஒரு ஆவி,நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி,மற்றும் நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்ற இந்த சத்தியத்தை அங்கீகரித்து ஒப்புக் கொள்ளுங்கள்.
இதன் மூலம், உங்கள் ஆத்துமாவிற்கு மேலே (நீங்கள் நினைப்பது, எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் விரும்புவது மற்றும் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு மேலாக) உங்கள் சொந்த ஆவி வெளிப்படுவதை உறுதிப்படுத்துவீர்கள் (அதிகாரம் அளிக்கவும்).
நீங்கள் தேவனுக்கு அடிபணிவது போல் உங்கள் உடலையும் ஆவிக்கு கீழ்ப்படுத்துங்கள். இதன் மூலம், மகிமையின் ராஜா ஆட்சி செய்வது போல் நீங்கள் எல்லாவற்றின் மேலும் ஆட்சி செய்கிறீர்கள். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நீங்களும் இவ்வுலகில் இருக்கிறீர்கள் (1யோவான் 4:17). பூமியில் ஆளுகை செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவிக்கு அடிபணிந்து பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

g14

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

19-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.எபிரெயர் 4:12 NKJV‬‬

மனிதனின் ஆவி கடவுளிடமிருந்து வந்தது, மரணத்தின் போது, ​​மனிதனின் ஆவி அதைக் கொடுத்த கடவுளிடம் (படைப்பாளர்) திரும்புகிறது (பிரசங்கி 12:7).மனிதனுக்கு மரணத்தின் மீது ஒரு கட்டுப்பாடும் இல்லை.

இருப்பினும்,மனிதன் தனது சொந்த ஆத்துமாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறான்: தான் விரும்பும் எதையும் சிந்திக்கும் திறன்,அதை நினைத்து தான் விரும்பும் எதையும் உணரும் திறன் (இதில் கற்பனையும் அடங்கும்) மற்றும் அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை தீர்மானிக்கும் திறன்.இந்தக் கண்ணோட்டத்தில், அவன் தேவனுடைய உதவியின்றி தன்னிச்சையாக இருக்க முடியும்.ஆனால் மனிதன் மனிதனாகவே இருக்கிறானேயன்றி தேவனாகமுடியவில்லை, ஏனென்றால் அவன் உயிருக்கு காரணமான ஆவி அவனுடைய படைப்பாளரின் கைகளில் உள்ளது.

ஞானவான் தனது உயர்ந்த அறிவாற்றல் அல்லது செல்வத்தின் மூலம் புத்தியுடன் கையாளுதல் அல்லது திறம்பட நிர்வகிப்பதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டவன் அல்ல, மாறாக மிகவும் வரையறுக்கப்பட்ட அவன் ஆத்துமாவை தேவனுக்கு விருப்பத்துடன் அடிபணிபவனே ஞானி. இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவரைத் தேட கிழக்கிலிருந்து ஞானிகள் வந்ததில் ஆச்சரியமில்லை. இப்போதும் ஞானம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தேடிக்கொண்டிருக்கிறது! எனவே தன்னை (ஆத்துமா மற்றும் உடல்) தேவனுக்கு சமர்பிப்பது தான் ஞானம்.

கர்த்தரை நம்புகிற மனிதன் ஒருபோதும் வெட்கப்பட மாட்டான், அதனால் பஞ்ச காலத்திலும் நன்மையை மட்டுமே காண்பான்,ஏனென்றால் இயேசு தனது தியாக மரணத்தால் மரணத்தை என்றென்றும் ஒழித்து, எல்லா மனிதர்களுக்கும் நித்திய ஜீவனைக் கொண்டுவந்தார்.நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.(2 தீமோத்தேயு 1: 10)

என் பிரியமானவர்களே,உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கிய இயேசுவின் நிமித்தம் இன்றும் இந்த வாரம் முழுவதும் நீங்கள் நன்மையை மட்டுமே அனுபவிப்பீர்கள்.இதுவே பூமியில் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்க்கான ஆதாரம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் ஆவியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img 109

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, அவருடைய குமாரத்துவத்தோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

16-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, அவருடைய குமாரத்துவத்தோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 NKJV.

தேவனாகிய ஆண்டவர் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கினார்’ என்பது மனிதனின் உடல். எனவே, மனித உடலின் தோற்றம் பூமியிலிருந்து வந்தது .
கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவ சுவாசத்தை (பரிசுத்த ஆவியை) மனிதனுக்குள் ஊதினார். எனவே, மனித ஆவியின் தோற்றம் பரிசுத்த ஆவியிலிருந்து வந்தது. .
தேவனின் ஆவியும் மண்ணும் இணைந்ததன் விளைவு மனித ஆத்துமா. இப்போது மனிதன் உயிருள்ளவனாக மாறிவிட்டான்.
எனவே, மனிதன் மூன்று பகுதியானவன்- அவன் ஒரு ஆவி,ஆத்துமாவைக் கொண்டு சரீரத்தில் வாழ்கிறான்.
ஆவியை கொண்ட மனிதன் தேவ உணர்வுள்ளவன். அதேபோல்
ஆத்துமாவைக் கொண்ட மனிதன் சுய உணர்வுள்ளவன்.
உடலைக் கொண்ட மனிதன் உலக உணர்வுள்ளவன்.

நன்மை தீமை பற்றிய அறிவின் கனியைப் புசித்து மனிதன் பாவம் செய்தபோது, ​​அவனது ஆவி செயலிழந்தது அப்படியானால் இறந்துவிட்டது. தேவனை அறியும் புரிதலை இழந்தான்.அவன் இனி தேவன் உணர்வு கொண்டவன் அல்ல . அவன் சுயநினைவு பெற்றான், அவன் நிர்வாணமாக இருப்பதைக் காணத் தொடங்கினான்,தன்னை மறைக்க அத்தி இலைகளை கட்டி,தேவனின் முன்னிலையில் இருந்து தன்னை மறைத்துக் கொண்டான். அவனது ஆத்துமா அவனுக்கு புதிய வழிகாட்டியாக மாறியது. அவன் இப்போது சுயமாக செயல்படும் மனிதனானான்.

ஐயோ! ஆவியிலிருந்து இயங்கும் உயிரை இழந்து ,தேவனின் வல்லமையிலிருந்து புறப்படும் அவனது உண்மையான ஆற்றலை விட்டு மிகக் குறைவாகவே உள்ள தனது ஆத்துமாவால் வாழத் தொடங்கியிருக்கிறான். இது தான் வீழ்ந்த மனிதனின் நிலை ,அதன் வேதனை பயங்கரமானது.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இயேசு மனிதனை மீட்டெடுக்க வந்தார் மற்றும் மீண்டும் இறக்க முடியாத ஒரு புதிய பிறப்பால் அவனது ஆவிக்கு புத்துயிர் அளித்தார்.மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மனிதனை மரணம் இனி ஆள முடியாது. *மனிதன் இப்போது புது சிருஷ்டியாயிருக்கிறான்’ – தேவனால் பிறந்தான். தேவனால் பிறந்த ஒவ்வொருவரும் உலகத்தை ஜெயிக்கிறார்கள் (1 யோவான் 5:4).
இயேசுவின் மரணம் மனிதனை என்றென்றும் வாழவும் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்யவும் செய்கிறது. அல்லேலூயா!
புது சிருஷ்டியான மனிதன் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! தேவனுடன் சரியாகவும் பூமியில் மகிமைப்படுத்தவும்ப்படுகிறான்! அவன் பிதாவாகிய தேவனின் வாரிசும் ,கிறிஸ்துவுடன் கூட்டு வாரிசுமாய் இருந்து பூமியில் ராஜரீக ஆசாரியனாய் வாழ்கிறான்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய குமரத்துவத்தோடு பூமியில்
ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

15-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

11. மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். I கொரிந்தியர் 2:11 NKJV

படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மற்றும் படைப்புகளில், மனிதனே முதன்மையானவன் மற்றும் தேவனின் கைவேலையில் இதுவரை செய்த படைப்புகளிடம் இல்லாததைக் கொண்டுள்ள தனித்துவமானவன்.ஏனென்றால், மனிதன் மட்டுமே தேவனின் சாயலில் உருவானான்.

எனவே, தேவனை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் உண்மையான சுயத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். படைப்பாளராகிய தேவனைத் தவிர வேறு யாராலும் உங்களை முழுமையாக வரையறுக்க முடியாது.

மனிதன் முக்கூட்டு அங்கமாக (மூன்று பகுதியுள்ளவனாக) வாழ்கிறான். அவன் ஒரு ஆவி, அவனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, பூமியில் ஒரு உடலில் வாழ்கிறான். அவனது உடலால், அவன் சுவை, வாசனை, செவி கேட்க, பார்க்க மற்றும் உணர முடியும். அவனது ஆன்மாவுடன்,அவன் தன்னைப் பற்றி சிந்திக்க முடியும், தனது சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் மற்றும் தனது சொந்த முடிவை எடுக்க முடியும். இது அவனை ஒரு ஆளுமைக்குள்ளாக வைக்குகிறது. அவனே சொந்தக்காரர் (அவனது மனதையும் உடலையும் பொறுத்த வரை).
ஆனால் மனிதனின் ஆவி தேவனிடமிருந்து வந்தது, அதனால் தேவனே அதன் உரிமையாளர்.

எனவே, மனிதனின் ஆத்துமா அதன் செயல்பாட்டில் வரம்புக்குட்பட்டது, ஆனால், மனிதனின் ஆவியோ அதன் செயல்பாட்டில் வரம்பற்றது, ஏனெனில் அவனது ஆவி தேவனிடமிருந்து வந்தது _.
எனவே,உங்கள் வரம்பிற்குட்பட்ட ஆத்துமாவிற்கும்,உங்கள் உடலுக்கும் மேலாக உங்கள் ஆவியை வெளிப்பட அனுமதிக்கும் போதுதான் ​​வரம்பற்ற உங்கள் உண்மையான திறனை நிரூபிக்க முடியும்.

உங்கள் ஆவி தேவனால் இயக்கப்படுகிறது! உங்கள் ஆத்துமா (உங்கள்) சுயத்தால் இயக்கப்படுகிறது!! உங்கள் உடல் உலகத்தால் ஈர்க்கப்பட்டு, உங்கள் ஆத்துமா தன்னால் அல்லது ஆவியால் சொல்வதைச் செயல்படுத்துகிறது.
அதுவே அவனது ஆவியால் இயக்கப்பட்டால், அவன் ஆன்மீக மனிதர் என்று அழைக்கப்படுகிறான்.
ஆனால் அது அவனது ஆன்மாவால் இயக்கப்பட்டால், அவன் மாமிசத்திற்குட்பட்ட மனிதன் அல்லது இயற்கை மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.

உண்மையான சுதந்திரம் என்பது நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வதில்லை (ஆத்துமா வழிநடத்துகிறது). மாறாக உண்மையான சுதந்திரம் என்பது தேவனின் கண்ணோட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வது அதாவது ஆவியின் வழிநடத்துதலோடு செய்வதாகும்.

வரம்பற்ற மண்டலத்தில் இருந்து வரம்பற்ற உயிரினமாக செயல்பட உங்கள் ஆவியை உயிர்ப்பிக்க இயேசு வந்தார். ஆமென் 🙏
அவருடைய நீதியே (பரிசுத்த ஆவியானவர் ) உங்களை வரம்பற்றதாக ஆக்குகிறது! நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியிருக்கிறீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில்
ஆளுகை செய்யுங்கள்.

உங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

14-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

12.நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். I கொரிந்தியர் 2:12 NKJV

உலகத்தின் ஆவி நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறது,ஆனால்,தேவனுடைய ஆவியானவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்தவற்றின் நிமித்தம் அவருடைய நீதியின் படியாக உங்களுக்குச் சரியானதைச் செய்ய பெலன் தந்து உதவுகிறார்.

உங்கள் செயல்திறன் உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை உலகத்தின் ஆவி சொல்லும்,ஆனால் கல்வாரி சிலுவையில் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் காரணமாக,தேவனின் ஆவியானவர் நீங்கள் இப்போது இருக்கும் உயர்ந்த நிலையை உங்களுக்கு சுட்டிக் காட்டி உறுதியளிக்கிறார்.

உலகத்தின் ஆவி உங்களுக்கு பற்றாக்குறை மற்றும் கோரிக்கைகளை முன் வைக்கும்,அது தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும், ஆனால் தேவனின் ஆவியானவர் உங்களுக்கு தேவனின் மிகுதியையும்,மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை விளைவிக்கும் இணையற்ற வளங்களையும் காட்டுவார்.

உலகின் ஆவி எப்போதும் உங்கள் செயல்திறனையே சார்ந்திருக்கும்,ஏனெனில் எதுவும் இலவசமாக வராது, எல்லாமே விலைக் குறியுடன் தான் வருகிறது மற்றும் அதில் எப்போதும் மறைக்கப்பட்ட செலவுக் காரணிஉள்ளடக்கியிருக்கும்.ஆனால், தேவன் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்ததை நீங்கள் அனுபவிக்கும்படி தேவனின் ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார்.

ஆம் என் அன்பானவர்களே, உலகத்தின் ஆவியும், தேவனின் ஆவியும் எதிரும் புதிருமாக இருக்கும்.மன அழுத்தம் இல்லாத, கவலையற்ற, கடனற்ற, நோயற்ற மேலும் கண்டனம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்குக் காட்டி உதவுகிறார்.

அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவரை உங்கள் வாழ்வில் அனுமதியுங்கள்!! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்.ஏனென்றால், இயேசு ஏற்கனவே முழுமையாக உங்களுக்கு பதிலாக கிரையம் செலுத்திவிட்டார்.
ஆம்! இது நமக்கு இலவசம் ஆனால் அது தேவனுக்கு செலவாகும். மேலும், நீங்கள் அவரை உள்ளே அழைக்கும் போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வதிக்கப்படுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

13-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

1. இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 32:1,17 NKJV

கர்த்தராகிய இயேசு சிலுவையில் நமக்காகச் செய்தவற்றின் நிமித்தம் நாம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நீதிமான்களாய் இருக்கிறோம் என்பது நமது நிலைப்பாடு. மனிதகுலத்திற்காக அவர் அனுபவித்த துன்பம், பரிசுத்த தேவனின் நீதியின் பிரமாணங்களை திருப்திப்படுத்தியது.நம்மீது சுமத்தப்பட்ட மரண தண்டனை இயேசு கிறிஸ்துவின் மீது வந்தது. அவருடைய இரத்தத்தால் நாம் மன்னிக்கப்பட்டு,கழுவப்பட்டு, என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம்.
இது தேவனின் பார்வையில் நம் நீதியின் நிலைப்பாடு -முற்றிலும் மன்னிக்கப்பட்டு,கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா!!

இருப்பினும்,தேவனால் சுமத்தப்பட்ட இந்த நீதியின் விளைவும்,விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் அது செயல்படுவதும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவராலன்றி, இரட்சிப்பு,பரிசுத்தமாக்குதல், குணப்படுத்துதல், தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவித்தல் அல்லது வேறு எந்த ஆசீர்வாதமாக இருந்தாலும் இயேசு நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை உணராதிருந்தால் நாம் ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரே இயேசுவின் நிமித்தம் தேவனின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுபவ ரீதியாக நம்மில் நிஜமாக்குகிறார். அல்லேலூயா!

நாம் தேவ பரம்பரையின் சட்டப்பூர்வ வாரிசாக இருக்கலாம்,ஆனால் அதை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. நமது வேத புரிதல் மற்றும் நமது பிரசங்கத்தில் நாம் கோட்பாட்டு ரீதியாக பரிபூரணமாக இருக்க சாத்தியமாயிராது, ஆனால் அவற்றை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கமுடிகிறதில்லை.இதற்கு முக்கிய காரணியே பரிசுத்த ஆவியானவர்தான்.அவர் தான் நம் அறிவுக்கும்,அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்க்கும் பாலமாக செய்லபடுகிறார்.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை அறியமட்டுமில்லை,ஆனால் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் அழைக்கவும்.எல்லா விஷயங்களிலும் அவரை ஈடுபடுத்தி வெற்றி பெறுங்கள். அவருடைய வல்லமையை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை இருக்கிற வண்ணமாகவே இருக்காது! நீதிமான்களாக்கப்பட்ட நாம் மகிமைப்படுத்தப்படுவோம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

g18_1

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

12-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.ஏசாயா 32:15 NKJV

மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் பரிசுத்த ஆவியானவரே பதில்!
பூமியில் முதல் மனிதனை உருவாக்கிய போது அவன் நாசியில் தன் சுவாசத்தை ஊதி அவனை ஜீவாத்துமாவாக்கியவரும் அவரே!

குழந்தை இல்லாத ஆபிரகாமையும் சாராளையும் ஈசாக்கைப் பெற்றெடுக்கச்செய்து, தேசங்களின் தந்தையாகவும் தாயாகவும் ஆக்கியதும் அவரே!

சிம்சோனின் மாபெரிய பலத்திற்கு பின்னால் இருந்த வல்லமையானவர் அவரே !

சவுல் என்ற சாதாரண மனிதனை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தியதும் அவரே !

ஆதியிலிருந்த வார்த்தையை தம் ஆவியின் மூலம் இயேசுவாக பூமியில் அவதரிக்கச் செய்தவரும் அவரே!

தம் அபிஷேகத்தை நசரேனாகிய இயேசுவின் மீது ஊற்றி ,எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தி, எல்லா வகையான பிசாசுகளின் சக்திகளிலிருந்து மக்களை விடுவித்து அற்புதம் செய்தவரும் அவரே!

பரிசுத்த ஆவியானவர் தான் பயத்தோடு இருந்த சீஷர்களுக்குப் புது சிருஷ்டியின் அனுபவத்தைப் பெற செய்து அவர்கள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்து உலகத்தை கலக்கியவரும் அவரே.

பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதல் வல்லமையே பேதுருவை 153 பெரிய மீன்களை ஒரேமனிதனாய் கரைக்குக் கொண்டு வர உதவியது.

பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, கூடிவந்த விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் மகிமையாக இறங்கி வந்ததால். அந்த விசுவாசிகள் உலகை அசைக்க தயாரானார்கள்.

ஆம் என் பிரியமானவர்களே,அதே பரிசுத்த ஆவியானவர் இன்றும் நம்முடனே இருக்கிறார், அவர்தான் நம் மூலமாக பெரிய காரியங்களைச் செய்வார்.! அவர் தான் நம் எதிர்காலத்தை மாற்றுபவர் !!

இந்த வாரம் நீங்கள் அவருடைய அற்புதத்திற்கு சாட்சியாக இருப்பீர்கள், உலக மனிதர்கள் கண்களுக்கு முன்பாக ஆச்சரியப்படவும் மற்றும் தேவனின் மகிழ்ச்சிக்கும் இயேசுவின் நாமத்தில் பாத்திரராயிருப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_134

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

09-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

ஏசாயாவின் 32ஆம் அதிகாரம் முழுவதும் பூமியில் தேவ நீதியும், நியாயமாக நடத்தப்படுவதை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் நியாயமானது அவருடைய நீதியின்படி நிறைவேற்றப்படுகிறது, மனிதனின் சொந்த நியாயத்தின் படி அல்ல(மனிதன் நீதி என்று நினைப்பதும் அல்லது அவன் நீதியை நிறைவேற்றும் வழி என்று எண்ணுவதும் அல்ல).

இந்த அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடும் இரண்டு பகுதிகள் உள்ளன,அவை மனிதகுலத்தின் மீது தேவனின் ஆசீர்வாதத்திற்கு மிகப்பெரிய தடைகள் மட்டுமல்ல,இந்த இரண்டு பகுதிகளும் இறுதியில் மனிதகுலத்தை அழிக்கவும் கூடும்:
1. முட்டாள்தனம்(foolishness) ( வசனம் 5-7) மற்றும்
2 சுயநீதி (self righteous) (வசனம் 9-14).

சுய நீதியை தான் தேவன் முட்டாள்தனம் என்று அழைக்கிறார். கலாத்தியர் 3:1 போன்ற முழு வேதத்திலும் இதை நாம் காண்கிறோம்,அங்கு விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் கூட முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். ஏனென்றால், தேவனின் நீதியை ஏற்றுக்கொண்டு (இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தால் உருவாக்கப்பட்டது) இந்த கிறிஸ்தவர்கள் பின்னர் கிருபையில் தொடரத் தவறிவிட்டனர், மாறாக தேவனைப் பிரியப்படுத்த மனித செயல்கள் மற்றும் சுயநீதியை சார்ந்து இருந்தனர். சுய நீதி என்கிற பாவம் அனைத்து பாவங்களுக்கும் தாயாக கருதப்படுகிறது மற்றும் அது லூசிஃபருக்கு நடந்ததைப் போலவே நித்திய சாபத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.

ஆனால் அன்பானவர்களே, இது இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்கு அல்ல. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறீர்கள். கிருபை மட்டுமே எப்போதும் உங்கள் உள்ளீடாக இருக்கட்டும் – அதாவது தகுதியில்லாத, சம்பாதிக்கப்படாத, நிபந்தனையற்ற கிருபை. ஆமென்!

கல்வாரி சிலுவையில் இயேசுவின் தியாகத்தின் காரணமாக அந்த கிருபையின் அடிப்படையில் நீங்கள் தேவனை அணுகும் ஒவ்வொரு முறையும், உங்கள் ஜெபங்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்பதில் உறுதியாயிருங்கள்!

ஜெபம் : பிதாவாகிய தேவனே! கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக ஆக்கியதற்கு நன்றி. இன்று என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மிகுதியாக இருக்கும் உங்கள் கிருபையைப் பெற நான் உங்களிடம் வருகிறேன் (உங்கள் மனுவைக் குறிப்பிடவும்). என் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கும், அனைத்து அச்சுறுத்தும் அந்தகார சக்திகளின் மீதும் என்னை ஆட்சி செய்ய வைக்கிறதற்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறுகிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

img_136

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

08-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திப்பதில்,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். I கொரிந்தியர் 2:9-10 NKJV

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய். தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்)உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,உங்கள் சமகாலத்தவர்களை விட உங்களை உயரச் செய்யும்.

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த ஆன்மீக உணர்வுகளை நம்மில் எழுப்பி பாதுகாக்க முடியும். ஒரு விசுவாசியின் வெற்றி இந்த ஆன்மீக உணர்வுகள் எழும்பி தேவனோடு நம்மை இணைப்பதால் தான். பரிசுத்த ஆவியியானவரோடு இருக்கும் ஐக்கியமே இதை செய்கிறது!

எந்தவொரு மனிதனும் தேவனிடமிருந்து பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் அல்லது பரிசு பரிசுத்த ஆவியாகிய நபர்தாமே.அவர் பிதாவாகிய தேவனின் தனிப்பட்ட பொக்கிஷமாயிருக்கிறார்.

தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய பரிசுத்த ஆவியை அருளுவதில் பிதா மகிழ்ச்சியடைகிறார்,ஏனென்றால் கர்த்தராகிய இயேசு பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை (பாவத்தால் உண்டாக்கப்பட்ட) தன் மீது சுமந்து கொண்டு அதை முற்றிலுமாக சிலுவையில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

கல்வாரியில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டு அதன்மூலம் பரிசுத்த ஆவியானவர்,இப்போது விசுவாசிக்கிற ஒவ்வொருவரின் இதயத்திலும் என்றென்றும் வசிக்க வழிசெய்தது.
விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் நபரை அங்கீகரிக்கவும், அவருடைய வழிகாட்டுதல் (ஞானம்) மற்றும் கைரோஸ் (புரிதல்) எனப்படும் அவரது நேரத்திற்காகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும்போது அது மனித எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாகவும்,மனித கற்பனைக்கும் மனித புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகவும் இருக்கும்.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தேவனுடைய நீதியின் அடிப்படையில் செயல்படுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,அது அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டு,அனைத்து மனிதகுலத்திற்கும் இலவச பரிசாகக் கொடுக்கப்படுகிறது, எனவே, “நான் கிறிஸ்துவுக்குள் தேவநீதி ” என்று நம்பி ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யும்போது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களில் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள்!
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகளை எழுப்பி பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம்  !!

img_137

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

07-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். ஏசாயா 32:3-4 NKJV.

உலகத்தில் பிறர் பார்க்க முடியாத காரியங்களை பரிசுத்த ஆவியானவரே உங்களைப் பார்க்க வைக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட பாலைநிலத்தில் உள்ள நீர் ஊற்றை பார்க்க ஆகாரின் கண்களை திறந்தார்.அதன்மூலம் கொடூர வெயிலின் காரணத்தால் மரணத்தின் விளிம்பில் இருந்த அவளது மகனின் தாகத்தைத் தணித்தார். (ஆதியாகமம் 21:19)

இஸ்ரவேல் தேசத்தில் நிலவிய கடும் வறட்சிக்கு( பஞ்சம்) முற்றுப்புள்ளி வைத்து,கோடிக்கணக்கான மக்களை பயங்கரமான மரணத்திலிருந்து காப்பாற்றிய பெரு மழையின் சத்தத்தை எலியா தீர்க்கதரிசிக்குக் கேட்கச் செய்ததும் பரிசுத்த ஆவியானவர் தாமே. (1 இராஜாக்கள் 18:41-45).

அதே பரிசுத்த ஆவியானவர் யோபுவின் புரிந்துகொள்ளுதலை திறந்து, சுய நீதியின் மூலம் விழுங்கப்பட்டு மரண படுக்கையிலிருந்த யோபுவை தேவனுடைய நீதியை விட்டு சுய நீதிக்கு சென்ற காரணத்தை புரியச்செய்தார். பின்னர், யோபுவின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் இழந்ததை விட இரண்டு மடங்கு மீட்டெடுத்துக்கொடுத்தார். (யோபு 42: 2-6,10,12).

பரிசுத்த ஆவியானவரே விசுவாசிகளை பரலோக மொழியில் (அந்நிய பாஷைகளின் வரம்) பேசவும், அவருடைய பரலோக ஆலோசனையைப் பெறவும்,நீதியின் பாதையில் நடத்தவும் செய்கிறார்.இது விசுவாசிகளை பூமியில் இருக்கும் போதே அனுபவரீதியாக பரலோகத்தை அனுபவிக்கச்செய்கிறது.ஆமென் 🙏

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய்.தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்) உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,மற்ற எல்லா சமகாலத்தவர்களை விடவும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.நமது நீதியான இயேசுவின் நிமித்தம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உங்கள் அன்பான தேவனாகவும் மற்றும் சிறந்த நண்பராகவும் இருக்கிறார்,இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க உதவுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!