Author: vijay paul

img_200

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

10-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; கொலோசெயர் 2:14 NKJV

இயேசு சிலுவையில் மனிதனுக்குத் தகுதியான மரணம் உட்பட அனைத்து தண்டனையையும் ஏற்றுக்கொண்டபோது,நியாயப்பிரமாணத்தின் தீவிர கோரிக்கைகளை அவரது சொந்த உடலில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் ஒரு திவாலான மனிதனிடமிருந்து நீதியைக் கோரியது. ஆனால், பெலனற்ற அவல நிலையில் இருந்த மனிதனுக்கு தண்டனையும் அனுபவிக்க வேண்டிய நிலை இருந்தது.நமது ரட்சகராகிய கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் ஏற்பட வேண்டிய தீர்ப்பையும், தண்டனையையும் ஏற்ற்றுக்கொண்டு முழுமையாக சுமந்து தீர்த்தார் .

இயேசு கிறிஸ்து தான் நியாயப்பிரமாணத்தின் நிறைவாக இருக்கிறார்.விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதிக்கான நியாயப்பிரமாணத்தின் முடிவாக கிறிஸ்துவே இருக்கிறார் (ரோமர் 10:4). மனிதன் குற்றத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்,மனிதன் நீதிமானாக அறிவிக்கப்படுகிறான் (அவன் பாவம் செய்யாதது போலவே). அல்லேலூயா!

என் அன்பானவர்களே, தேவனின் பார்வையில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு காரணம்,உங்களால் செயல்பட முடியவில்லை என்பதல்ல,ஆனால்,கடந்த வாழ்வில் நடந்த குற்றங்களினால் குற்ற உணர்வுகளும்,எதிர்காலத்தில் தோல்வி ஏற்படும் என்ற பயமும் உங்களைச் செயல்படவிடாமல் தடுக்கிறது.

இன்று,அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு (கிறிஸ்து) எல்லா குற்றங்களையும் துடைத்து,எல்லா பயத்தையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து என்றென்றும் விரட்டுகிறார்.அவர் உங்கள் வலது கையைப் பிடித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றியை அடையச் செய்கிறார், ஏனென்றால் அவர் சிலுவையின் மரணத்தின் போது நமக்கு எதிராக நிற்கும் ஒவ்வொரு எதிர் சக்தியையும் அடக்கினார்,ஆண்டு கொண்டார்.

இயேசு கிறிஸ்துவே என் நீதி (Jehovah T’sidkenu) என்று நீங்கள் கூறும்போது , பாவம் அல்லது நோய், பயம் அல்லது அவமானம் என ஒவ்வொரு அடிமைத்தனத்தையும் உடைக்கும் அபிஷேகத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.உங்களுக்குத் தகுதியான தண்டனை அனைத்தையும் இயேசு சுமந்ததால்,அவருடைய கீழ்ப்படிதலின் மூலம் அவருக்குத் தகுதியான அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக அறுவடை செய்வீர்கள். இன்று, நீங்கள் சுதந்திரமாக மட்டுமல்ல, நீங்கள் ஆளுகையும் செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

grgc911

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

09-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

13. உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:13-15 NKJV

கிறிஸ்துவின் நீதி உங்களுக்கு முன்பாக சென்று,எல்லா கோணலானவைகளையும் நேராக்கியது .

கிறிஸ்துவானவர் பின்வருவனவற்றைச் செய்துள்ளார்:
1. அவர் உங்கள் எல்லா பாவங்களையும் குற்றங்களையும் என்றென்றும் மன்னித்தார்.உங்கள் கடந்தகால வெறுக்கத்தக்க செயல்கள் இனி உங்கள் உயர்வுக்கு தடையாக இருக்க முடியாது.

2. தேவ கரங்களால் எழுதப்பட்ட பத்து கட்டளைகள்- மனிதனால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாத நியாயப்பிரமாணம் என்பதால் அவர் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மனிதனிடமிருந்து எடுத்துவிட்டார். உங்கள் தற்போதைய வாழ்க்கை தேவனின் எதிர்பார்ப்புகள் உள்ள வாழ்க்கை அல்ல.

3. உங்களுக்கு எதிராக முயற்சிக்கும் அனைத்து தீய சக்திகளின் ஆயுதங்களையும் அவர் நிராயுதமாக்கியுள்ளார்.குறிப்பாக குற்ற உணர்வு மற்றும் பயம் என்ற ஆயுதங்களை சிலுவையில் அறைந்ததன் மூலம் நம்மை விட்டு முற்றிலும் நீக்கினார்.உங்கள் எதிர்காலம் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் முற்றிலும் பாதுகாப்பானது.

இயேசுவே நமது நீதி! இது நம்மீது அவருடைய வெற்றிக்கொடி.அவர் நிபந்தனையற்ற கிருபையின் எண்ணற்ற ஆசீர்வாதங்களை அனுபவிக்க இரட்டைக் கதவுகளைத் திறந்துள்ளார், அது உங்களை ஆளுகை செய்ய வைக்கிறது.உங்களிடமிருந்து அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இருப்பினும் உங்களைச் சுற்றியுள்ள மக்களின் எதிர்ப்புகள் உங்கள்மீது இருக்கிறது.அதை சந்திக்க அவரது வலிந்தோடும் கிருபை அந்த நபர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுகிறது.

என் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் மூலம் மகிமையில் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் எல்லா தேவைகளையும் தேவன் எப்பொழுதும் பூர்த்தி செய்கிறார் என்ற மனநிலையை வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்று அறிக்கை செய்து கொண்டே இருங்கள் ; நீங்கள் ஆபிரகாமின் சந்ததி; நீங்கள் ஆபிரகாமை நம்பும் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் நீங்கள் உலகின் வாரிசாக இருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்று ஆளுகை செய்வோம்!

07-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்று ஆளுகை செய்வோம்!

1.கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான் சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக ஆக்கியது. ராஜாவின் ஆளுகை அபிஷேகத்தில் இருந்து வருகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நீங்கள் வாழ்க்கையில் ஆளுகை செய்கிறீர்கள்.

நீங்கள் அபிஷேகம் செய்யப்படும்போதும்,தேவன் உங்கள் வலது கையைப் பிடிக்கும்போதும் மூன்று விஷயங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்:
1. எதிரியை பாதபடியாக்குதல்
2. எதிரிகளின் பலத்தை நிராயுதாமாக்குதல்
3. இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு -அரச வரவேற்புடன் நீங்கள் சிரமமின்றி நுழைதல் .

சைரஸின் வாழ்க்கையில் இதுதான் நடந்தது, இயேசுவின் நாமத்தில் உங்களுக்கும் இதுதான் நடக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மரணத்தை தாமே ஏற்றுக்கொண்டு உங்களுக்காக பாவமானார்,அதேபோல் இன்று அவருடைய நீதியைப் பெற்று நீங்கள் ஆளுகை செய்கிறீர்கள். சிலுவையில் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்,வாழ்க்கையில் ஆளுகை செய்வதற்கு தேவன் உங்களுக்கு அவருடைய நீதியை இலவசமாக வழங்கினார்.

சிலுவையில்,இயேசு உங்களுக்குத் தகுதியான பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டார்,அதே போல் அவருடைய பாவமற்ற வாழ்க்கை மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எப்போதும் முழுமையாக கீழ்ப்படிந்ததால் அவருக்குத் தகுதியான நீதியை இன்று நீங்கள் பெறுவீர்கள்.

நமக்குத் தகுதியானதை அவர் முழு மனதோடு பெற்றுக்கொண்டார்(ஏனெனில் நாம் தண்டனைக்கும் மரணத்திற்கும் மட்டுமே தகுதியானவர்கள்) எனவே,அவருக்குத் தகுதியானதை நாம் எதிர்பார்ப்போடு பெற வேண்டும்.அவை வாழ்வு, ஆரோக்கியம், நல்வாழ்வு, செல்வங்கள் உட்பட பரலோக மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள். இது தான் தெய்வீக பரிமாற்றம்!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று ஒப்புக்கொள்வதில் நீங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்களோ (கர்த்தராகிய இயேசுவுக்குத் தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள்), இயேசுவின் நாமத்தில் சிரமமின்றி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் ஆளுகை செய்ய அவருடைய அபிஷேகத்தையும் அப்படியே அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களைப் பெற்று நாம் ஆளுகை செய்வோம் .

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்!

06-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்!

1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ,தேவன் தாம் தேர்ந்தெடுத்த ஜனமாகிய இஸ்ரவேலை பாபிலோனிலிருந்து விடுவிப்பதற்காகவும்,அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் சுதந்தரிப்பதற்காகவும் பெர்சியாவின் புறஜாதி அரசரான சைரஸை அபிஷேகம் செய்தார்.
தீர்க்கதரிசனமாகப் பார்த்தால் ,இன்று தேவன் நமக்கு கொடுத்த சுந்தந்திரத்தை பெறுவதற்கு வாக்குத்தத்தமாக இருக்கும்..

தேவன் சைரஸை அபிஷேகம் செய்தது போல், நசேரனாகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் செய்தார், அவர் நன்மை செய்து, பிசாசினால் ஒடுக்கப்பட்ட அனைவரையும் குணப்படுத்தினார், ஏனென்றால் தேவன் இயேசுவோடு இருந்தார் (அவரது வலது கையைப் பிடித்தார்) அப்போஸ்தலர் 10:38.

இன்று, அந்த அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு(கிறிஸ்து) கர்த்தராக உயர்ந்தவர் மற்றும் அவர் உங்கள் வலது கையைப் பிடித்து, பரிசுத்த ஆவியினாலும்,வல்லமையினாலும் உங்களை அபிஷேகம் செய்ய விரும்புகிறார்.

சைரஸ் ராஜாவுக்கும் மற்ற தேசங்களின் ராஜாக்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது இந்த அபிஷேகம்! இன்றும் கூட, அபிஷேகம்தான் உங்கள் சமகாலத்தவர்களிடமிருந்து – குறிப்பாக இந்த மாதம் மற்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆட்சி செய்ய உங்களுக்கு பரிசுத்த ஆவியும் அவருடைய வல்லமையும் தேவை. மற்றவற்றிலிருந்து உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும் இந்த அபிஷேகத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் இன்று அதைப் பெறலாம்!
இயேசுவே சிலுவையில் கீழ்ப்படிவதன் மூலம் தேவனின் இந்த மிக வல்லமை வாய்ந்த பரிசைப்(பரிசுத்த ஆவியானவர்) பெற உங்களைத் தகுதிப்படுத்துகிறார்.
தேவனின் இந்த மாபெரும் பரிசை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இயேசு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கிய அவருடைய இரத்தத்தைச் சிந்தியதால் இந்த அபிஷேகம் வருகிறது.

ஜெபம்: அன்பான பரலோகத் தகப்பனே, இயேசுவின் ஜீவாதார பலியின் நிமித்தம் என் எல்லா பாவங்களையும் மன்னித்து, என்னை என்றென்றும் நீதியுள்ளவனாக்கியதற்கு நன்றி. இந்த அடிப்படையில்,பரிசுத்த ஆவியை வரமாகப் பெற நான் உங்களிடம் கேட்கிறேன். நான் இயேசுவை என் கர்த்தராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆமென் 🙏

.மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைப்பிடத்தின் பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

03-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைப்பிடத்தின் பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

ஆண்டவர் கூறுவது இதுவே:சைரஸ்(உங்கள் பெயரை உச்சரியுங்கள்),நான் உனக்கு முன்னே சென்று மலைகளைத் தரைமட்டமாக்குவேன். நான் வெண்கல வாயில்களை இடித்து இரும்புக் கம்பிகளை வெட்டுவேன். இருளில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் – ஒளிபடிதின் செல்வங்களை நான் உங்களுக்கு தருவேன். நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்,உன்னைப் பெயர் சொல்லி அழைத்தவர் என்று நீ அறியும்படி இதைச் செய்வேன்.ஏசாயா 45:2-3 NLT

ஒவ்வொரு முறையும் சில காரியங்களைச் செய்வதாக தேவன் நமக்கு வாக்களித்தால்,நாம் எதையும் செய்யாமல்,அதை முழுவதுமாகச் செய்து முடிக்க அவர் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம்.
ஏனென்றால்,நம்மால் செய்ய முடியாததை தான் தேவன் நமக்கு வாக்குத்தத்தமாக வாக்களிக்கிறார்.அதைச் செய்வது நம் சக்திக்கு உட்பட்டது என்றால்,அதை நாமே செய்ய முடியும் என்றால் தேவனுடைய வாக்குறுதிகளின் அவசியம் என்ன?

இரண்டாவதாக,”நான் உங்களுக்கு முன் சென்று, எல்லா தடைகளையும் சமன் செய்வேன், உங்களை முன்னேற விடாமல் தடுத்துள்ள ஒவ்வொரு மூடிய கதவுகளையும் உடைப்பேன்” என்று அவர் கூறும்போது, ​​அவர் ஏற்கனவே சென்றுவிட்டார்,இரவு நேரத்தில். நீங்கள் தூங்கும்போது அவர் வாக்குறுதியளித்ததைச் செய்து முடித்தார் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சங்கீதம் 127:2ல் சங்கீதக்காரன் கூறுகிறான்,”நீ அதிகாலையில் எழுவதும்,தாமதமாக உட்காருவதும், துக்கத்தின் அப்பத்தை உண்பதும் வீண்; ஏனென்றால்,அவர் தம்முடைய அன்பானவருக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.

நீங்கள் ஓய்வெடுக்கும்போது தான் தேவன் செயல்படுகிறார்.

என் அன்பானவர்களே,இயேசு தேவனுக்குக் கீழ்ப்படிந்து கல்வாரி சிலுவையில் மரித்ததன் நோக்கம், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வதிக்கப்படுவதற்குப் போராடாமல் இருப்பதை உறுதிசெய்வதாகும், ஏனென்றால் நீங்கள் தேவனுக்கு 100% எப்போதும் கீழ்ப்படிய முடியாது.
ஆனால்,இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால்,நீங்கள் நிபந்தனையின்றி தேவனால் ஆசீர்வதிக்கப்படும்போது, அந்த ஆசீர்வாதத்துடன் அவருடைய சித்தத்தின் வல்லமை வருகிறது,அவருடைய சித்தத்தைச் செய்ய உங்களை உற்சாகப்படுத்துகிறது. அல்லேலூயா! இது தான் நற்செய்தி! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைப்பிடத்தின் பொக்கிஷங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்!

02-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,ஏசாயா 45:2-3 NKJV

கிறிஸ்துவுக்குள் அன்புக்குரியவர்களே,இனிய புதிய மாதத்தின் வாழ்த்துக்கள்!

இந்த புதிய மே மாதத்திற்குள் நாம் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், கோணலான பாதைகளை நேராக்க கர்த்தர் உங்களுக்கு முன்பே சென்றிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆம் என் பிரியமானவர்களே, இந்த மாதம் கர்த்தர் எல்லா தடைகளையும் உடைத்து, உங்களுக்கு எதிராக தன்னை உயர்த்தும் ஒவ்வொறு காரியத்தையும் தரைமட்டமாக்குவதை அனுபவிப்பீர்கள், ஒவ்வொரு மூடிய கதவுகளையும் திறந்து,பெரிய கர்த்தர் உங்களுக்காக சேமித்து வைத்திருக்கும் பொக்கிஷங்களையும் – மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும்,இரகசிய செல்வங்களையும் நீங்கள் சுதந்தரிப்பீர்கள். அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் 1 கொரிந்தியர் 2:9 (NLT) ல்,எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

ஆம்! மனித மற்றும் தேவ தூதர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்ட கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதமான விஷயங்கள் – எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்பதே இதன் பொருள். அல்லேலூயா!

கர்த்தர் நமக்கு முன்பாகச் செல்லும்போதுதான் இது சாத்தியமாகும் என்பதை சங்கீதம் 85:13 இலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம்,அவருக்கு முன்பாக அவருடைய நீதியும் அவருடைய பாதச்சுவடுகளும் நமது பாதையாகின்றன – ஆம் வெற்றிக்கான பாதை! ஆகவே இயேசுவின் நீதியை நம்புவோம்,அவருடைய நீதியான செயலை நம்புவோம்,அவருடைய கீழ்ப்படிதலே பெரியது நம்முடையது அல்ல. அவருடைய நீதி இந்த நாளில் நாம் எல்லாவற்றிலும் எளிதாக வெற்றிபெறச் செய்யும். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g11

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

30-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18 NKJV.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்குள் வரும்வேளையில், இந்த மாதத்தின் வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கிப் பார்ப்போம்.
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தை மீட்கும்படியாக அனுப்பினார், அவரை நாம் அனைவரும் இயேசு என்று அறிவோம்.

தேவன் இந்த இயேசுவை கர்த்தராகவும்,கிறிஸ்துவாகவும் அனுப்பினார் (அப்போஸ்தலர் 2:36). அவர் கிறிஸ்து, ஏனென்றால் அவர் நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் மீது சுமந்து நம்மை நீதிமான்களாக்கினார். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி,தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரவைத்து,பரலோகத்திலும்,பூமியிலும்,பூமியில் உள்ள சகல நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி,நம்மை அவருடன் அரசாள வைக்கும் போது அவர் என்றென்றுமாகிய கர்த்தர்.

இயேசுவின் மீது தேவன் வைத்த இந்த மேன்மையே நம்மை ஆபிரகாமின் சந்ததியாக்கியது,எனவே ஆபிரகாமின் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறோம், மேலும் நாம் உலகின் வாரிசாக இருக்கிறோம்.

ஆகையால், இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக ஆக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் நம்பும்போதும், ஒவ்வொரு ஆசீர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் உரித்தாகிறது. இதுவே ஆபிரகாம் நம்பிய நற்செய்தியாகும்,மேலும் ஆபிரகாமுக்கு அது நீதியாக எண்ணப்பட்டது.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ,யாரை நம்புகிறீர்களோ அதை வெளிப்படுத்துவது விசுவாச அறிக்கை என்று அழைக்கப்படுகிறது!
(2 கொரிந்தியர் 4:13) .
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்றும்,நீங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும்,ஆபிரகாம் விசுவாசிக்கும் ஆசீர்வாதத்தால் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்றும் தொடர்ந்து அறிக்கையிடுங்கள்,ஏனெனில் நீங்கள் உலகத்தின் வாரிசாக இருக்கிறீர்கள் மற்றும் ஒருபோதும் உலகத்தின் அடிமை அல்ல. அல்லேலூயா!ஆமென் 🙏

இந்த மாதத்தில் சத்தியத்தை மிகவும் கிருபையாக அருளி, தேவனுடைய தயவைப் பற்றிய ஒரு நுண்ணறிவைக் கொடுத்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்,இதுவே மகிமையின் ராஜாவுடன் நம்மை ஆளுகை செய்ய வழிவகுத்தது!

என் அன்பானவர்களே, ஆண்டவரையும் அவருடைய நீதியையும் அறிய இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில்,நம் கர்த்தரின் மகத்தான வெளிப்பாடுகளுள்ள புதிய மாதத்திற்கு நாளை என்னுடன் மீண்டும் இணையுங்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g111

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

29-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.லூக்கா 19:5, 9-10 NKJV.

சகேயு என்பவர் பணம் சம்பாதிப்பதற்காக நெறிமுறையற்ற மற்றும் நேர்மையற்ற நடைமுறைகளுக்குப் பெயர் போனவர்.மேலும் தலைமை வரி வசூலிப்பவராக இருந்ததால்,அநீதியாக செல்வத்தை குவித்ததால் மக்கள் அவரை வெறுத்தனர்.அவரது வீடு அனைத்து தெய்வபக்தியற்ற மற்றும் பாவ நடவடிக்கைகளால் நிறைந்த திருடர்களின் குகையாக பார்க்கப்பட்டது.

இயேசு அவருடைய வாழ்க்கையிலும் அவருடைய வீட்டிலும் நுழைந்தார்,சகேயுவைப் பற்றிய அனைத்து குறைபாடுகளும் முற்றிலும் மாறிவிட்டன.சகேயு என்ற மனிதன் மகிமையின் ராஜாவை சந்தித்தான் அதன்மூலம்,அவன் வாழ்க்கை மறுரூபமடைந்தது.

தேவனின் கிருபை இந்த தொலைந்து போன மனிதனை தேடிக் கண்டுபிடித்தது,தேவ நீதி அவனது வாழ்க்கையைச் சரியாக்கியது!

ஆம் என் அன்பானவர்களே, இந்த வாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கை, உங்கள் வணிகம், உங்கள் தொழில், உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார்.அவருடைய கிருபை உங்களைக் தேடிக் கண்டுபிடிக்கும்,அவருடைய நீதியானது கோணலான பாதைகளை நேராக்குகிறது.நீங்கள் மீண்டும் பழைய வாழ்க்கையில் இருக்க மாட்டிர்கள்.அற்புதத்திற்கு தயாராய் இருங்கள்! இப்போது உங்கள் குறைபாடுகள் உங்களுக்கு சாதகமாக மாறுகிறது! அல்லேலூயா!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தியுங்கள்,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g16

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

26-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.ஆதியாகமம் 15:2, 5-6 NKJV

விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும்! அல்லேலூயா!

கீழ்வரும் பகுதியில் நம் பிதாவாகிய ஆபிரகாமின் சாட்சியைப் பார்க்கிறோம்,.அவர் ஒரு குழந்தையைப் பெற ஆவலோடு தேடினார்,ஏனென்றால் அவர் குழந்தை இல்லாமல் வயதானவராக மாறிக்கொண்டிருந்தார்.அவர் தேவனின் வாக்குறுதிகளை அறிக்கை செய்துகொண்டிருந்தார்,அப்படியே மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்துவிட்டன,எதுவும் நடக்கவில்லை.அவர் முதன்முறையாக தேவனை நம்பி, தனது உறவினர்களையும் நாட்டையும் விட்டு தேவன் அவரை அழைத்த தேசத்திற்கு வந்ததிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

குழந்தை இல்லாமையின் பிரச்சினை உண்மையில் ஆபிரகாமை மிகவும் கடுமையாக பாதித்தது மற்றும் விரக்தியோடு அவர் தேவனைத் தேடினார், அப்பொழுது தேவ நீதியைத் தேடுமாறு அவருக்கு நினைவூட்டி தேவன் அவரை அமைதிப்படுத்தினார்,அதன் மூலம்,ஆசீர்வாதம் அவரைத் தேடி வரும் என்று தேவன் உரைத்தார் .
தேவன் ஆபிரகாமுக்கு தேவ நீதியைப் பற்றிய புதிய புரிதலைக் கொடுத்தார்,எனவே ஆபிரகாமுக்கு சாத்தியமற்றது என்று தோன்றியதை மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாகவும் நிச்சயமாக சாத்தியமாகும் என்று ஆபிரகாம் விசுவாசித்தார்!

தேவநீதியைப் பற்றிய புதிய புரிதலில்,ஆபிரகாம் ஒரு குழந்தைக்காக பிரயாசப்பட்டார்,ஆனால்,தேவன் அவரை எண்ணற்ற குழந்தைகளுக்குத் தந்தையாக ஆக்குவதற்கு ஏற்கனவே ஆணையிட்டிருந்ததை கண்டார்.

என் அன்பானவர்களே,நீங்கள் விடுதலையை நாடுகிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு மீட்பராக இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.,நீங்கள் உங்கள் இல்லத்தின் முன்னேற்றதிற்காக பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு நாட்டிற்கே நிதியாளராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் குணமடையத் தேடுகிறீர்கள்,ஆனால் மக்களை குணப்படுத்தும் சுகாதார அமைப்பின் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணிலடங்கா வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் சுகம் அளிக்கும்படியாக தேவன் ஆணையிட்டுள்ளார். அவருடைய நீதியைப் பற்றிய புதிய புரிதலை நீங்கள் தேடும்போது உங்களுக்கு இதுவே நடக்கும்,இதுவே நம் பிதாவாகிய ஆபிரகாமுக்கு நேர்ந்தது அவர் நம்மைகுறித்து நினைத்திருந்த காரியங்கள் நாம் நம்மைக் குறித்து நினைப்பதை காட்டிலும் பெரியது.ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!! ஆமென் 🙏

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g17

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

25-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

2.ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ,எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
5.அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
6.அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. கலாத்தியர்-3:2, 5-6 NKJV

நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு காரியம் என்னவென்றால் விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடமிருந்து எதையும் பெற முடியாது.அது பெலவீனத்திலிருந்து சுகம் பெறுதல்,சுகவாழ்வு ,புதிய வேலை வாய்ப்பு ,புதிய வியாபாரத்திற்கான வாய்ப்பு,பூமிக்குரிய அல்லது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விசுவாசத்தினால் தவிர தேவனிடமிருந்து பெற முடியாது (எபிரெயர் 11:6)

மேலும், இந்த விசுவாசம் கேள்வியினால்(மீண்டும்,மீண்டும் கிறிஸ்துவின் வார்த்தையை உன்னிப்போடு கேட்பதினாலும்,வருகிறது என்பதை நாம் அறிவோம் (ரோமர் 10:17).
அப்படியானால்,அற்புதங்களை வெளிப்படுத்தும் ,விசுவாசத்தை உண்டு பண்ணும்படியாக நான் கேட்க வேண்டிய கிறிஸ்துவின் வார்த்தை என்ன?

தேவ நீதியைப் பற்றிய கிறிஸ்துவின் வார்த்தையே ஆகும்.

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கண்ட வசனத்தில் கூறுகிறார்.நாம் விசுவாசத்தின் செய்தியைக் கேட்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்,அபிஷேகத்தினால் நிரம்புகிறோம். ஆபிரகாம் விசுவாசித்தது,அது அவருக்கு நீதிக்காகக் கருதப்பட்டது அதேபோல் விசுவாசத்தைக் கேட்பதன் மூலம் அற்புதங்களை நாம் பெறுகிறோம்.

என் பிரியமானவர்களே,விசுவாசத்தை உண்டுபண்ணும் தேவ நீதியின் செய்தியைக் கேளுங்கள் (நாம் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்பில் அல்ல,மாறாக இயேசு எனக்காக என்ன செய்தார் என்பதை பார்க்க வேண்டும்).
கல்வாரியில் இயேசுவின் கீழ்ப்படிதலே நம்மை நீதிமான்களாக்க உந்தியது என்று சித்தரிக்கும் செய்திகள் (ரோமர் 5:19),தொலைந்து போனவர்களைத் தேடிக் காப்பாற்ற இயேசு வந்தார் என்பதைக் காட்டும் செய்திகள் (லூக்கா 19:10) – இப்படிப்பட்ட செய்திகளை கேட்க வேண்டும். .

நீங்கள் விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,​​நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும். அல்லேலூயா!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!