Author: vijay paul

g991

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

24-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:6,7,29 NKJV.

ஆபிரகாமை நீதிமானாக்கிய விசுவாசமானது – தேவன் இயேசுவின் நிமித்தம் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார் ,அதுவே இன்றும் தேவநீதியாக இருக்கிறது என்பதே.

நாம் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டோம்?சரியானதைச் செய்வதன் மூலமா அல்ல,ஆனால் அநீதியானவர்களை தேவன் நீதிமானாக்கினார் என்று நம்புவதன் மூலம் தான்.

தேவன் அநீதியானவர்களை நீதிமானாக்கியதால்,அநீதியானவர்கள்,தம் நீதி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை,தண்டனை மட்டுமே அவர்கள் தகுதியாக இருக்கிறது. இருப்பினும்,தேவனின் கிருபை என்னவென்றால்,தேவனின் பரிசாகிய நீதி தகுதியற்றவர்களுக்கும் அநீதியானவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பதே.
இந்த தகுதியற்ற மற்றும் நிபந்தனையற்ற பரிசைப் பெறும்போது,அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஒருவன் நீதிமானாக்கப்படும்போது அது அவனை நீதியின் வழியில் வாழ வைக்கிறது மாறாக நீதியின் வாழ்வு அவனை நீதிமானாக்கும் என்பதல்ல.உங்களை நீதிமான்களாக்கிய அவருடைய நிபந்தனையற்ற கிருபைக்காக எல்லா மகிமையும் தேவனுக்கே. இதில் எல்லாம் தேவனுடைய செயல் மாத்திரமே, என்னுடயை செயல் ஒன்றும் இல்லை.

இதைத்தான் ஆபிரகாம் விசுவாசிதார்,அவர் என்றென்றும் நீதிமானாக இருந்தார்.அவர் நம்பியதைப் போலவே நம்பும் நாமும் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள்,அவரைப் போலவே ஆசீர்வதிக்கப்பட்டு, உலகத்தின் வாரிசாக மாறி,பூமியில் ஆளுகை செய்கிறோம்.அல்லேலூயா! ஆமென் 🙏

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும்,ஆபிரகாமை விசுவாசித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் ராஜாக்களாக அரசாளுவதற்கு தேவனுடைய நீதியை பெற்றிருக்கிறீர்கள் என்றும் அறிக்கை செய்யுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

gt5

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

22-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.கலாத்தியர் 3:6-7 NKJV.

தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினர் அனைவருக்கும் திரும்பிப்பெற முடியாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத ஆசீர்வாதங்களை வழங்கினார்.ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியின் வழியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேவன் விதித்திருக்கிறார்.ஆபிரகாமின் பரம்பரையிலிருந்து ராஜாக்கள் தோன்றுவாருகள் என்று அவர் உறுதியளித்தார்.(ஆதியாகமம் 17:6).தேவன் ஆபிரகாமுக்கு அளித்த ஆசீர்வாதங்களில்,ஆபிரகாமைச் சபிக்கிற எவரும் சாபத்தை அனுபவிப்பார்கள் மற்றும் முழு பாதுகாப்பையும் உள்ளடக்கியது ஆபிரகாமின் ஆசீர்வாதம்.இந்த பாதுகாப்பு ஆபிரகாமின் பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் வாக்களிக்க ப்பட்டுள்ளது.

இப்போது, ஆபிரகாமின் சந்ததியினர் உடல் ரீதியாக உள்ள பிள்ளைகள் மட்டுமல்ல, ஜாதி, நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும் உரித்தாகும் . இன்றும் ஆபிரகாம் அனுபவித்த அதே ஆசீர்வாதத்தை அனுபவிக்க அனைவரும் அழைக்கப்படுகிறோம் .அவர் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் (ஆதியாகமம் 24:1). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!

என் அன்பானவர்களே,நீங்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்,ஆபிரகாமின் எல்லா ஆசீர்வாதங்களிலும் உங்களுக்கும் பங்கு உண்டு.ஆபிரகாம் வலிமையுடனும் வீரியத்துடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்.ஆபிரகாம் நோய்வாய்ப்பட்டதை வேதத்தில் நாம் எங்கும் காணவில்லை.அதே வழியில்,இன்று ஆரோக்கியம் உங்கள் பங்கு.அவர் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்தார்,ஏனென்றால் அவர் கால்நடைகள்,வெள்ளி மற்றும் தங்கத்த்தினால் நிறைந்திருந்தார். மேலும்,அதே வழியில் செல்வமும்,செழிப்பும் உங்கள் பங்கு. அல்லேலூயா!
ஆபிரகாம் விசுவாசித்ததை மட்டும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் காரணமாக தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார், நீதிமான்களை ஆசீர்வதிக்கிறார் என்று அவர் நம்பினார்.

ஆகையால்,நீங்கள் ஆபிரகாமின் சந்ததி.நீங்கள் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . இயேசு கிறிஸ்துவின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

18-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

3. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
4. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். ரோமர் 4:3-5 NKJV.

தேவன் நம் தந்தை ஆபிரகாமுக்குப் பிரசங்கித்த நற்செய்திதான் இன்று நமக்குப் பிரசங்கிக்கப்படுகிறது (கலாத்தியர் 3:8).இந்த சுவிசேஷம் விசுவாசத்தினால் வரும் நீதி.அதாவது -விசுவாசம் மூலமே தேவநீதி வருகிறது நம் கிரியை மூலம் அல்ல.
உலகில் எல்லா மதங்களுக்கும் உள்ள ஒரே கோட்பாடானது,தேவன் பக்கிதியற்றவர்களை அநீதியானவர்களாக நியாயந்தீர்க்கிறார்,மற்றும் தேவ பக்தியுள்ளவர்களை நீதிமான்களாக கருதி ஆசீர்வதிக்கிறார்.
ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி மட்டுமே தேவன் அநீதியானவர்களை நியாயப்படுத்துகிறார் என்று அறிவிக்கிறது.இதைத்தான் ஆபிரகாம் கேட்டு விசுவாசித்தார்,அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. அல்லேலூயா!

தேவனின் சொந்த மதிப்பீட்டில்,நீதிமான்கள் யாரும் இல்லை,ஒருவர் கூட இல்லை (ரோமர் 3:9,10). அப்படியானால்,தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்கினார் என்றால்,அவர் அநீதியானவரை தண்டிக்காமல் விட்டுவிடுகிறாரா ?இல்லை! ஒருபோதும் இல்லை!! அவருடைய நீதி மற்றும் பரிசுத்தம்,தேவனின் தரநிலை உயர்ந்ததாகவே இன்றும் இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த தரமாகும். இருப்பினும்,அவர் அநீதியானவர்களின் அனைத்து பாவங்களையும் இயேசுவின் உடலில் சுமத்தினார்,அதன்படி நம்முடைய பாவங்களுக்காக அவரைத் தண்டித்தார். நியாயத்தீர்ப்பின் சட்டத்தின்படி,எந்தவொரு குற்றமும் ஒரு முறை மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்,அது கர்த்தராகிய இயேசுவின் உடலில் வந்தது,மேலும் நாம் அனைவரும் விடுவிக்கப்பட்டு நீதியின் அடிப்படையில் அதாவது சட்ட அடிப்படையில் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம்.பாவியை நீதிமான்களாக்குவதில் தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்.இதுவே உண்மையான நற்செய்தி! அல்லேலூயா!!

என் பிரியமானவர்களே,நீங்கள் தேவனை அறிவதில் உண்மையுள்ளவர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் பல சமயங்களில் நீங்கள் தேவனின் பரிசுத்தத்தின் தரத்திற்கு ஏற்ப வாழத் தவறுகிறீர்கள்!கலங்காதிருங்கள்! உங்கள் இதயம் உங்களைக் குற்றப்படுத்த வேண்டாம்,ஏனென்றால் தேவன் உங்களைக் குற்றப்படுத்துவதில்லை குறிப்பாக ,நீங்கள் தோல்வியடையும் போது தேவன் பாவிகளை நீதிமான்களாக்குகிறார் என்ற நற்செய்தியை ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யுங்கள்,விரைவில் அக்ஷணமே நீங்கள் தேவ நீதியின் வெகுமதியை அனுபவிப்பீர்கள்,அது பாவத்தின் நாட்டத்தை விரட்டியடித்து,தேவனின் வகையான நீதியின் அம்சத்தில் நீங்கள் ஆளுகை செய்யத் தொடங்குவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

17-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

1.அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2.ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது?ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்,அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.ரோமர் 4:1-3 NKJV

என் அன்பானவர்களே,நாம் நம்முடைய சுய நீதியை அல்ல தேவனுடைய நீதியைப் புரிந்துகொள்வதே அவசியம். காரணம ஆன்மீகம் அல்லது இயற்கையான ஆசீர்வாதங்கள், தனிப்பட்ட அல்லது பொதுவான ஆசீர்வாதங்கள், குடும்பம் அல்லது சமூகம் சார்ந்த ஆசீர்வாதங்கள்,ஆரோக்கியம் அல்லது செல்வம்,அமைதி அல்லது மகிழ்ச்சி என எல்லா ஆசீர்வாதங்களும் இந்த தெய்வீக நீதியிலிருந்து மட்டுமே தொடங்குகிறது. அல்லேலூயா!

தேவனின் வகையான நீதியைப் புரிந்துகொள்வதற்கு,நாம் ஆபிரகாமின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், தேவன் அவரைப் புகழ்ந்தார் மேலும் அபிராகமை நீதியாகக் கருதினார், ஏனென்றால் தேவன் அவரை பூமியின் அனைத்து குடும்பங்களுக்கும் பிரதானத் தலைவராக ஆக்கினார்,வேறுவிதமாகக் கூறினால் ஆபிரகாம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் தந்தையாக ஆக்கப்பட்டார். .
பிறகு, ஆபிரகாம் தேவனுடைய நீதியைப் பற்றி என்ன கண்டுபிடித்தார் (வசனம் 1)?
முதலாவதாக,தேவனுடைய நீதி முற்றிலும் தேவனுடையது என்றும் அதற்கு மனித பங்களிப்பு இல்லை என்றும் அவர் கண்டறிந்தார்.இந்த முக்கியமான பாடத்தை நேற்று நாம் கற்றுக்கொண்டோம்.

இரண்டாவதாக, தேவனுடைய இந்த நீதி மனிதனுக்கு தேவனிடமிருந்து ஒரு பரிசாக வருகிறது,மனிதனின் செயல்களுக்கு வெகுமதியாக அல்ல தேவன் ஒருபோதும் யாருக்கும் கடனாளி அல்ல!
நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால்,மாத இறுதியில் எனக்கு ஒரு மாத ஊதியம் அல்லது சம்பளம் கொடுக்கப்படும்.ஆகையால் நான் பணிபுரியும் நிறுவனம் எனக்கு கடனாளி.இன்றைய தியானப் பகுதியில் வசனம் 4-ன் அர்த்தம் இதுதான். என்னால் ஒருபோதும் தேவனின் தயவை ஊதியமாக உழைத்து பெற முடியாது,இல்லையெனில் அதை ஒருபோதும் கிருபை என்று அழைக்க முடியாது.அதனால்தான் கிருபை எனது நற்செயல்களால் சம்பாதிக்க முடியாத ஈவு என்று அழைக்கப்படுகிறது.

ஆகவே, தேவனின் தயவானது சம்பாதிக்க முடியாத கிருபையாக இருப்பதால்,நாம் அதை விசுவாசத்தால் மட்டுமே (நம்பிக்கை மூலம்) பெற முடியும். மேலும்,அது அளவற்ற தயவாக இருந்தால்,அது நிபந்தனையின்றி வர வேண்டும்,எந்த நிபந்தனைகள் இணைக்கப்படாமல் இருக்க வேண்டும்,அல்லது எனது முயற்சிகள் நடைமுறைக்கு வரும்,பின்னர் அதை எங்கள் கூலியாகக் கூறுவோம்,கிருபையாக அல்ல.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்று நம்புங்கள்.நீங்கள் நிச்சயமாகவே ஆளுகை செய்ய முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

16-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

1. அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2. ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.ரோமர் 4:1-3 NKJV

ஆபிரகாம் ‘விசுவாசத்தின் பிரதானத் தலைவர்.அது அவரின் விசுவாசத்தினால் நீதியாக பார்க்கப்பட்டது . சுவிசேஷம் முதன்முதலில் ஆபிரகாமுக்கு தேவனால் பிரசங்கிக்கப்பட்டது (கலாத்தியர் 4:8).ஆபிரகாம் அதை நம்பினார்.எனவே ,அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்,மேலும் அவர் நம்முடைய தந்தையுமாய் இருக்கிறார்.

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் என்பதற்கான அவரது சாட்சியம் இதுவே,அது அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது அல்லது வரவு வைக்கப்பட்டது! அவர் கீழ்ப்படிந்ததால் அல்ல,ஆனால் அவர் விசுவாசித்ததால் தேவனின் பார்வையில் அவர் நீதியுள்ளவராக அறிவிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அவர் விசுவாசித்த பிறகே அவருடைய கீழ்ப்படிதல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

ஆபிராகாமல் எதுவும் இல்லை,அனைத்தும் தேவனுடைய கிருபையால் சாத்தியம்’என்று அவர் ஒப்புக்கொண்டார்,மேலும் அது ஆபிரகாமுக்கு நீதிக்காகக் கணக்கிடப்பட்டது .அதாவது தேவன் ஆபிரகாமை எப்போதும் முற்றிலும் நீதியுள்ளவராகப் பார்க்கிறார்.
நம் செயல்களை நம்ப முடியாது,ஏனென்றால் அவை சில நேரங்களில் நல்லதாகவும் மற்றும் சில நேரங்களில் கெட்டதாகவும் இருக்கும்.ஆனால்,தேவன் எப்போதும் நல்லவர்! அவர் உண்மையுள்ளவர்.அவரை நம்பலாம், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவருடைய குமாரனாகிய இயேசுவை உலகத்திற்கு அனுப்பினார், அவருடைய கீழ்ப்படிதல் நாம் முழுமனதோடு விசுவாசிக்கும் போது தேவனுடைய நீதியை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. (ரோமர் 5:19).

ஆம் என் பிரியமானவர்களே, தேவனின் தயவான நீதி முற்றிலும் தேவனுடையது,அதற்கு மனித பங்களிப்பு எதுவும் இல்லை.நாம் அவருடைய நீதியை நம்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம், நமது நம்பிக்கையின் வெளிப்பாடு விசுவாச அறிக்கையாகும்.
ஒவ்வொரு முறையும்,“நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்” என்று சொல்லும் போது அது தேவனுடைய செயல் தான் என்றும்,என்னுடைய செயல் ஒன்றுமில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். இயேசுவின் கீழ்ப்படிதலே தேவனைப் பிரியப்படுத்தியது,என் கீழ்ப்படிதல் அல்ல.இந்த விசுவாசம் என்னை எப்போதும் ஆளுகை செய்ய வைக்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

15-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17NKJV.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியானது உங்களை வெற்றியடையச் செய்து,எப்போதும் உங்களை சாதனையாளராக்குவதாகும்.தேவன் இயேசுவை மேன்மைப்படுத்தினார்,மேலும் எல்லா நாமத்திற்க்கும் மேலான ஒரு நாமத்தை அவருக்கு கொடுத்தார்,அதனால் நீங்களும் நானும் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் மேற்கொண்டு ஆளுகை செய்யலாம்.

சில காரணங்களுக்காக,நாம் பரலோகத்திற்கு செல்லும்போது தான் நமது வாழ்வில் வெற்றி வரும் என்று நினைக்கிறோம்.நிச்சயமாக நாம் பரலோகத்தில் அரசாளுவோம்.ஆனால்,பரலோகம்-போட்டி,எதிர்ப்பு, பாவம்,நோய், வறுமை, மரணம் இல்லாத இடம் அப்படியானால் நாம் பரலோகத்தில் எதை மேற்கொண்டு ஆளுகை செய்வது ?
என் அன்பான நண்பர்களே,மேலே கூறிய அனைத்து எதிர்ப்புகளும் இருக்கும் இடம் பூமி.ஆகவே உங்களை எதிர்க்கும் இந்த வாழ்க்கையில் மேற்கொண்டு நீங்கள் ஆளுகை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியின் வரத்தையும் நீங்கள் பெறும்போது இந்த ஆளுகை சாத்தியமாகும். அல்லேலூயா!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,வியாதிகள்,வறுமை மற்றும் மரணம் ஆகியவற்றை நமக்காக தம்மீது பெற்றார்.ஆனால் அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை, அதுபோலவே நாம் ஒருபோதும் நீதியை செய்யவில்லை என்றாலும்,அவருடைய நீதியைஇலவசமாகப் பெறுகிறோம்.
கர்த்தாவே,உமது பரிசுத்தமான நீதியையும் கிருபையின் மிகுதியையும் நான் பெறுகிறேன்” என்ற வார்த்தையைப் பேசுவதன் மூலம் நாங்கள் பெறுகிறோம்.

இதை நாம் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்ல வேண்டும்,அதனால் நாம் அவருடைய நீதியை உணர்ந்து, வெற்றியோடு வாழலாம்.ஏனென்றால் இந்த உலகில் நாம் சந்திக்கிற ஒவ்வொரு எதிர்ப்பையும் நம் வாழ்வில் மேற்கொள்ளச்செய்கிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்த வாரம் நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் நீதியைப் பெற்று வாழ்வில் எல்லாவற்றையும் மேற்கொண்டு ஆளுவீர்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_136

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வெற்றியாளரை விட மேலானவராக ஆளுகை செய்யுங்கள்!

12-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வெற்றியாளரை விட மேலானவராக ஆளுகை செய்யுங்கள்!

10.இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்
11.பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று*நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்*எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.பிலிப்பியர் 2:10-11 NKJV.

என் அன்பானவர்களே ,இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்றும் அவர் உங்கள் நீதி என்றும் அறிக்கைசெய்யும் போது,தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்.பிதாவாகிய தேவன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.அவர் மிகவும் கனமடைகிறார்.அவர் முகம் புன்னகையால் நிரம்புகிறது,ஏனென்றால் மனிதனால் சாத்தியமற்றது இப்போது அவர் குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் சாத்தியமாகியது,அவர் நம்மில் வசிக்கிறார்.அல்லேலூயா!
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறாக அறிக்கைசெய்கிறார்,”என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலம் நான் எல்லாவற்றையும் செய்ய முடியும்“.

என் பிரியமானவர்களே,பாவம்,மரணம்,நரகம்,பிசாசு ஆகிய அனைத்தையும் வென்றவர் உங்களில் வாழும் போது, ​நீங்கள் ஒரு வெற்றியாளரை விட மேலானவராக உயர்தப்படுகிறீர்கள்.
சவால்கள் உங்கள் வழியில் வரும்போது,அது நீங்கள் யார் என்பதைப் பற்றியது அல்ல உங்களில் யார் இருக்கிறார் என்பதை பொறுத்தது. அல்லேலூயா!
இந்த உணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள்.இதுதான் தேவநீதியின் உணர்வு! மகத்தான கர்த்தர் உங்களில் வாழ்கிறார்!உங்கள் மூலம் செயல்பட அவரை அனுமதியுங்கள் உங்கள் புதிய அத்தியாயத்தை இந்த உலகம் பார்க்கும்!
உலகத்தில் இருப்பவரை விட உங்களில் இருப்பவர் பெரியவர்.(1 யோவான் 4:4).ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வெற்றியாளரை விட மேலானவராக ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_166

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

11-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

10.இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்
11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று *நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்*எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.பிலிப்பியர் 2:10-11 NKJV.

மேலே உள்ள வசனங்களை எழுதிய ஆசிரியரான அப்போஸ்தலன் பவுல் தனது குறிப்பை ஏசாயா 45:23,24 இலிருந்து எடுத்துக்கொண்டது சுவாரஸ்யமானது,
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்,நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்;இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்;அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.
மனிதர்கள் தேவனுடைய நீதியை ஒரு பரிசாகப் பெறுவார்கள்,மனித செயல்பாட்டின் மூலம் அல்ல என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக கூறினார் அல்லேலூயா!

தேவன் இயேசுவை உயர்த்தி,அவருக்கு ஆண்டவர்- எல்லாருக்கும் மா உன்னதமானவர் என்ற நாமத்தைக் கொடுத்தார்.இந்த நாமத்தைக் கொண்டுள்ளவரை நம்பும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தேவனின் நீதி ஒரு பரிசாக வழங்கப்படும்.

ஆரோக்கியம், செல்வம், நல்வாழ்வு, பண்பு, உயர்வு, அமைதி மற்றும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களை வெளிப்படுத்தும் முதன்மையான ஆசீர்வாதம் இதுவாகும்.

என் அன்பானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நீதி என்று நீங்கள் அறிக்கைசெய்யும்போது, நீதித்துறை அடிப்படையில் தேவனிடமிருந்து மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் பெற உங்களைத் தகுதிப்படுத்துகிறது.
சட்டப்படி சரியா தவறா,பிசாசானாலும் சரி,மக்களிடமிருந்தும் சரி,வெளியிலிருந்து வந்தாலும் சரி, உங்கள் சொந்த மனசாட்சியிலிருந்தும் சரி,உங்கள் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் எதுவாக இருந்தாலும் நீங்கள் இன்னும் தேவனின் முன்னோடியில்லாத,கேள்விப்படாத ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கத் தகுதி பெற்றிருக்கிறீர்கள்.உங்களது பாவங்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையானது அவர்மீது வந்தது அவருடைய இரத்தத்தால் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள்*.அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக இருக்கிறீர்கள்.
நீங்கள் எல்லாவற்றின் மீதும் ஆட்சி செய்வதற்கும் ஆளுகை செய்வதற்கும் அவரைப் போலவே நீங்கள் உயர்த்தப்பட்டு சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் சாதனையாளர் மற்றும் ஒரு வெற்றியாளரை விட அதிகமாக இருக்கிறீர்கள், ஏனென்றால் கர்த்தராகிய இயேசுவே உங்கள் நீதியானவர்!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_173

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

10-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10.இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்
11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.பிலிப்பியர் 2:9-11 NKJV.

ஒவ்வொரு முழங்காலும் வணங்கக்கூடிய நாமம் ஒன்று மட்டுமே:அது பரலோகத்தில் வசிப்பவர்கள்,பூமியில் வசிப்பவர்கள் மற்றும் பூமியின் கீழ் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வணங்கக்கூடிய நாமம்.அந்த நாமம் யெகோவா அல்லது யாவே (YAHWEH ) ! (யாத்திராகமம் 6:2,3)- சர்வ வல்லமையுள்ளவர், ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் பிரபு.(1 தீமோத்தேயு 6:15).அவர் மட்டுமே அழியாதவர,அணுக முடியாத வெளிச்சத்தில் வாழ்கிறவர்(1 தீமோத்தேயு 6:16).தேவன் இயேசுவை பரத்திற்கு உயர்த்தியபோது அவருக்கு வழங்கப்பட்ட நாமம் இது. ஆமென் 🙏. அல்லேலூயா!!

என் அன்பானவர்களே,மகிழ்ச்சியாக இருங்கள்! இன்று நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற இந்த நாமத்தை அழைக்கும் போது – ஒவ்வொரு நோயும் வணங்கும்,ஒவ்வொரு வியாதியும் ஓடும்,மரணம் ஓடிவிடும், அனைத்து நரகமும் அமைதியாகிவிடும்.ஒவ்வொரு வாய்ப்பு கதவும் திறக்கும் மற்றும் அழிவு, ஊக்கமின்மை, கவனச்சிதறல்,பிரிவு,மரணம் ஆகியவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிரந்தரமாக மூடப்படும்! அவர் மகிமையின் ராஜா!!

உங்கள் தலைகளை உயர்த்துங்கள், ஓ வாயில்களே! நித்திய கதவுகளே, உயர்த்தப்படுங்கள்! மகிமையின் ராஜா உள்ளே வருவார். “சங்கீதம் 24:7 ஆமென் மற்றும் ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

08-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

8.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9.ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,பிலிப்பியர் 2:8-9 NKJV.

தேவன் இயேசுவை உயர்த்தி,பரலோகத்திலும்,பூமியிலும் எல்லா நாமத்திற்கு மேலான ஒரு நாமத்தை அவருக்கு கொடுத்தார்,ஏனென்றால் இயேசு முழு உலகத்திற்காகவும் சிலுவையில் தம் உயிரைக் கொடுத்ததன் மூலம் பிதாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார்.
அதோடு அவர் உலகத்தின் அனைத்து பாவங்களையும்,அனைத்து நோய்களையும், அனைத்து சாபங்களையும்,அனைத்து துன்பங்களையும் வலி, வறுமை நிராகரிப்பு,தகுதியின்மை, அவமானம், துரோகம் கேலி மற்றும் எல்லா வடிவில் உள்ள அவமானங்களையும் சிலுவையில் எடுத்தார்.அவர் எதையும் விட்டுவைக்கவில்லை.பூமியில் மனிதனின் இப்போதுள்ள வாழ்க்கை மற்றும் வரவிருக்கும் வாழ்க்கை தொடர்பான அனைத்து மனிதப் பிரச்சினைகளையும் அவர் கல்வாரியில் முடித்து தீர்த்தார்.

மனித குலத்தின் ஒவ்வொரு பிரச்சினையும் இயேசுவின் உயிர் தியாகத்தின் மூலம் தீர்க்கப்பட்டதாக தேவன் திருப்தியடைந்த பிறகு,கடந்த காலத்தில் மனிதகுலத்தை பாதித்த அனைத்து பிரச்சினைகளும் இன்று அல்லது எதிர்காலத்தில் மனிதனை பாதிக்க அச்சுறுத்தும் அனைத்து பிரச்சனையையும் இயேசு கிறிஸ்துவோடு நிரந்தர அடக்கம் செய்தார். அல்லேலூயா!

அவர் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்,மேலும் அவருடைய உயிர்த்தெழுதலில் இப்போது விசுவாசம் கொண்ட அனைவரையும் பரிசுத்த ஆவியானவரால் அதிகாரம் பெற்ற ஒரு புதிய வாழ்க்கை – பயம்,தோல்வி,பலவீனம்,நோய்,சாத்தான் மற்றும் அழிவு அல்லது மரணம் ஆகியவற்றால் பயமுறுத்தவோ வெல்லவோ முடியாத ஒரு வெற்றி வாழ்க்கையை அளித்தார். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, இந்த வாரம் தொடங்கிய வேளையில் ஆசீர்வாதம் மட்டுமே உங்கள் பங்கு, ஆரோக்கியம் மட்டுமே உங்கள் பங்கு,செல்வம் அல்லது நல்வாழ்வு மட்டுமே உங்கள் பங்கு, நீண்ட ஆயுள் அல்லது முடிவில்லாத வாழ்க்கை மட்டுமே உங்கள் பங்கு.
கிறிஸ்து உங்களை ஒரு புதிய சிருஷ்டியாக்கினார்!அவரே உங்கள் நீதியாகிவிட்டார்(எபிரேய மொழியில் JEHOVA TSIDKENU என்று அழைக்கப்படுகிறது) அல்லேலூயா!! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த நீதியின் பரிசை நம்பி பெறுங்கள்.இயேசு கிறிஸ்து உங்கள் நீதி என்று தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள்.நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள். ஆமென்🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!