Author: vijay paul

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

31-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.(பிலேமோன் 1:6) NKJV.

இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில்,மாதம் முழுவதும் ஓய்வு அல்லது இளைப்பாறுதலைக்குறித்து அறிந்த சத்தியத்தை நாம் சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம்.​​ஓய்ந்திருப்பதால் நாம் இந்த வாழ்க்கையில் ஆட்சி செய்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மனிதன் வியர்த்து உழைக்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் நினைக்கவில்லை.இன்று நாம் உழைத்தாலும், நாம் கிருபையின் படிகளில் லகுவாக நடக்கிறோம் .நாம் செய்துதான் முடிக்க வேண்டும் என்று நம் செயல்திறனை நம்பும் மனநிலையுடன் அல்ல,மாறாக “ஏற்கனவே நமக்காக செய்து முடிக்கப்பட்டது ” என்ற மனநிலையுடன் செயல்படுகிறோம் .அல்லேலூயா!

தேவன் நமக்காகத் திட்டமிட்டிருக்கும் விதமான ஓய்வு இதுவே:
நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார்.இயேசு கிறிஸ்து நமக்காக செய்த தியாக மரணத்தின் நிமித்தமாக கடவுள் எல்லாவற்றையும் நமக்கு வழங்கியுள்ளார் என்று நாம் நம்ப வேண்டும்.

இதை நாம் உண்மையாகப் புரிந்துகொள்ளும்போது, ​​நம் இதயங்கள் நன்றியறிதலாலும், உருக்கமான அறிக்கையாலும் நிறைந்திருக்கும். நம்முடைய ஜெபத்தில் அதிக நேரம் நன்றி செலுத்துதலால் நிறைந்திருக்குமே தவிர பிரார்த்தனைகள்/கோரிக்கைகள் சிலதாகவே இருக்கும்.
கர்த்தர் தம்முடைய முடிக்கப்பட்ட வேலைகளில் உங்களை இளைப்பாறச் செய்வாராக, இந்த ஓய்வில் அவர் உங்கள் வாழ்க்கையில் ஆளவும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கவும் செய்வார்.ஆமென் 🙏.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

30-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV.
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.(கொலோசெயர் 2:10) NKJV.

புதிய சிருஷ்டி பரிபூரணமும் முழுமையுமானது. ஆதிசிருஷ்டி சிருஷ்டிக்கப்பட்ட நாட்களில் இருந்ததது போலவே அதில் குறை ஏதுமில்லை.
புதிய சிருஷ்டி என்பது நிகழ்காலத்தில் வாழும் நித்தியம் ஆகும் .

வியாதியிலிருந்து குணமடைய மட்டும் அல்ல (3 ஜான் 2).நாம் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதே புது சிருஷ்டி.
நம் வாழ்வில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் வறுமையில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிலும் ஏராளமான ஆசிர்வாதங்களோடே இருப்பதே புது சிருஷ்டி(2 கொரிந்தியர் 8:9).
சூழ்நிலைகளை பார்த்து சோர்ந்து போகாமல்,கர்த்தர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தார் என்று விசுவாசத்தோடு நடப்பதே புது சிருஷ்டி .(2 கொரிந்தியர் 5:7)
புது சிருஷ்டி இயற்கை சட்டங்களால் அல்ல (எபிரேயர் 11:3),ஆன்மீக சட்டங்களால் ஆளப்படுவதாகும் .
புது சிருஷ்டி இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல . (யோவான் 17:16).
பரிசுத்த ஆவியானவர் புது சிஸ்டியாகிய நம்மில் இருப்பதால் நாம் எல்லாவற்றையும் அறிகிறோம். (1 யோவான் 2:20)ஆமென் 🙏.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

29-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV.

“புதிய சிருஷ்டி ” என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கிறவரைப் பற்றிய மிக அற்புதமான உண்மைகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். தங்கள் சொந்த முட்டாள்தனத்தால் வீழ்ந்த மனிதகுலத்தை, கிறிஸ்துவானவர் மனிதகுலத்தின் மீது வைத்த மிகுந்த அன்பின் மூலம் ,மீட்டு உயர்ந்த நிலைக்கு உயர்த்தினார் .

புதிய சிருஷ்டி என்றென்றும் புதியதாகவே இருக்கும்! மீட்பின் பணியானது இயேசுவின் இரத்தத்தின் வல்லமையால் நிறைவேறியதால், அது ஒருபோதும் கடவுளின் நீதியின் வழியை விட்டு விலகாது.
புதிய சிருஷ்டி என்பது கடவுளின் வகையான அவரைப்போன்ற வாழ்க்கை அவ்வாழ்க்கையானது மனிதனில் செயல்படுவது மனிதனை நிகழ்காலத்தில் நித்தியவாசியாக்குகிறது (Eternal being in time ).

புதிய சிருஷ்டி ஒருபோதும் மரணத்தை ருசிக்க முடியாது, பாவத்தால் கறைபடாது, ஏனென்றால் அது மனிதனை என்றென்றும் நீதிமான்களாக்கிய சிலுவை மரணம் மற்றும் இயேசுவின் கீழ்ப்படிதலின் விளைவாக “பரிசுத்தம்”என்ற முத்திரையிடப்பட்டது .
கிறிஸ்துவை விசுவாசிப்பவர், தான் ஒரு புதிய சிருஷ்டி என்றும்,எந்த தீயசக்தியாலும் வெல்ல முடியாத வெற்றியாளர் என்றும் நம்ப வேண்டும். பிரியமானவர்களே, கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையில் ஓய்வெடுங்கள் (விசுவாசியுங்கள்) மற்றதை பரிசுத்த ஆவியானவர் செய்வார். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

28-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV

கடவுள் 6 நாட்கள் உலகத்தை படைத்து முடித்தப் பிறகு 7ஆம் நாளில் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:1-2:1). அவர் செய்த வேலை சரியாகவும் முழுமையாகவும் முடிந்ததால்,கடவுள் மனிதனிடம் எதிர்பார்த்தது அவன் அவருடைய படைப்பில் ஓய்வெடுத்து அதை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆகும் . ஆனால்,ஆதாமும்,ஏவாளும் பிசாசினால் ஏமாற்றப்பட்டு, தங்களிடம் இல்லாத ஒன்று இன்னும் ஏதோ எஞ்சி இருக்கிறது என்று நம்பி, முழுப் படைப்பையும் சிதைத்து வீழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
இதுவே படைப்பின் வீழ்ச்சியடைந்த நிலையில் கடவுளை மறுவேலை செய்ய வைத்தது .”மறுவேலை என்பது -மீட்பு”என்று அழைக்கப்படுகிறது. இது இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் நிறைவேறியது . மீட்பின் வேலையின் விளைவாக, ‘புதிய படைப்பு’ தோன்றியது.

இயேசுவை தனது ஆண்டவராகவும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய சிருஷ்டியாயிருக்கிறார்கள் . அவனுடைய / அவளுடைய வாழ்க்கையின் பழைய விஷயங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன, எல்லாமே புத்தம் புதியதாகிவிட்டன. அல்லேலூயா !

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், இயேசு உங்கள் கடந்த காலத்தை முற்றிலும் நீக்கி புத்தம் புதிய வாழ்க்கையை உங்களுக்கு வழங்குகிறார். கடவுளின் வகையான இந்த புது சிருஷ்டி காலத்திற்குக் கட்டுப்படாத நித்திய வாழ்க்கையாகும் . இந்த புது சிருஷ்டி (new creation) ஒருபோதும் பலவீனம்,வலி,மற்றும் மரணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் நம்மை வெற்றி வாழ்க்கை வாழச்செய்கிறது . ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

27-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். (எபிரெயர் 10:5, 7, 10) NKJV.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது அவருக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினார்.  கர்த்தராகிய இயேசு தம்மை முழுமையாக தேவனோடு இணைத்து, மனுஷீகத்தை ஏற்று, பூமியில் அவதரித்தார். அவர் பூமியில் வந்தபோது மாம்சத்திற்குரிய பலவீனம், வலி, சோதனை மற்றும் மரணம் ஏற்படக்கூடிய (susceptible) மாம்சத்தில் வெளிப்பட்டார் . பாவத்தின் மீதான கடவுளின் தீர்ப்பை அவர் தனது சொந்த உடலின் மீது ஏற்றுக்கொண்டார். உலகத்தின் சிருஷ்டி முழுவதற்கும் மீட்பைக் கொண்டுவருவதற்காக அவர் தனது உடலை, இரக்கமின்றி அடிக்கவும் ,சிலுவையில் அறையவும் அனுமதித்தார். நம்முடைய பாவங்களைத் துடைத்தழிக்க அவர் தம் விலைமதிப்பற்ற இரத்தத்தையும் சிந்தினார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உண்மையாகவும், நிறைவாகவும் முடித்தார். இதுவே இயேசுவைப் பற்றிய கடவுளின் சித்தம் .

இன்று, நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் கிருபாதார பலியை ஏற்றுக்கொள்வதே நமக்கான தேவனுடைய சித்தம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நம் ஆசீர்வாதத்திற்கு தேவையானதை இயேசு ஏற்கனவே செய்து முடித்தார்,அது முற்றிலும் போதுமானது என்பதை நாம் நம்ப வேண்டும்.

என் அன்பானவர்களே, இந்த வாரம் எல்லாம் வல்ல தேவன் தனது அற்புதமான ஆசீர்வாதங்களையும் அதிசய ங்களையும் உங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார். அது நிச்சயமாக நம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி பிரமிக்கவைக்கும் .இந்த ஆசீர்வாதங்கள் ஏற்கனவே உங்கள் பெயரில் செய்து முடிக்கப்பட்டுள்ளதை நம்புங்கள் அதனிமித்தம் ஆண்டவருக்கு நன்றி மாத்திரம் சொல்லுங்கள் . சொல்லப்படாத, கேட்கப்படாத மற்றும் கற்பனைக்கூட செய்யப்படாத அவருடைய ஆசீர்வாதங்களை இயேசுவின் பெயரில் அனுபவிக்க விசுவாசத்தோடு நன்றி பலி செலுத்துங்கள் .
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ நீதியாயிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

24-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

12. ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.(பிலிப்பியர் 2:12-13)NKJV.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.(எபிரெயர் 4:1) NKJV.

கடவுள் நம்மில் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டது நமது வேலை. *கடவுள் நமக்குள்ளும் நம் மூலமாகவும் செயல்படுவதற்கு பரிசுத்த ஆவியானவருடன் நமது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அவர் செய்து முடித்தார்.அப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?அவரது இரட்சிப்பை முழுமையாக இவ்வாழ்கையில் அனுபவிக்க அழைக்கப்படுகிறோம் இரட்சிப்பு என்றால் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு பாவமும் செய்யாமல்,சாகும்வரை எல்லாவற்றிலும் பிதாவு க்கு முழுமையாக கீழ்ப்படிந்திருந்தார். ஆனாலும், சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தி, பாடனுபவித்து, பாவம், நோய், சாபம், மரணம் ஆகியவற்றிலிருந்து மனுக்குலத்தை மீட்டெடுத்தார். இதுவே இரட்சிப்பு (REDEMPTION).
அவர், “முடிந்தது” என்று கதறினார். அவர் பூமியில் வாழ்ந்ததும்,பாடனுபவித்ததும், மரித்ததும், என் நிலையில் எனக்காக(AS ME & FOR ME) ஆற்றிய இரட்சிப்பின் செயல். இதன் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது இருந்த பிசாசின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நம் அனைவருக்கும் சுகம் ,செல்வாக்கு மற்றும் அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்கு உரித்தாக்கினார் .
அவர் செய்து முடித்த இரட்சிப்பின் வேலை முழுமையும் ,பரிபூரணமும் ஆகும் .அதனோடு கூட்ட வேண்டியது வேறு எதுவும் இல்லை.

ஆகவே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவால் நிறைவு செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டவற்றிலிருந்து இன்று நாம் நமது ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .

நடைமுறையில் நாம் எப்படி இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது ?
சிலுவையில் இயேசு செய்த ஒவ்வொரு மீட்பின் செயலுக்கும், கர்த்தராகிய இயேசுவுக்கும் சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனுக்கும் நன்றி செலுத்துவதன் மூலம், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .
உதாரணமாக,நீங்கள் குணமடையத் தேடுகிறீர்களானால், இயேசுவின் தழும்புகளால் நான் குணமடைந்தேன் என்பதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்.அப்போது, நான் என் சரீரத்தில் அதைப் பார்க்காவிட்டாலும் உணராவிட்டாலும், விசுவாசத்தோடு நன்றி கூறுகிறேன் .
இந்த மனப்பான்மை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்தி, இயேசு ஏற்கனவே செய்ததை இப்போது வெளிப்படுத்துகிறது. அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது என்பதன் பொருள் இதுதான். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,வாழ்வில் ஆட்சி செய்ய அவரில் இளைப்பாறுங்கள் !

23-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,வாழ்வில் ஆட்சி செய்ய அவரில் இளைப்பாறுங்கள் !

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். (சங்கீதம் 127:3) NKJV.

மேற்கண்ட வசனம் எபிரேய மொழியில், “அவர் தனக்கு பிரியமானவன் நித்திரை செய்யும்பொழுது அவனுக்கு கொடுக்கிறார் ” இது உண்மையிலேயே அற்புதம்!
நாம் அவருடைய அன்புக்குரியவர்கள் (மிகவும் விருப்பமானவர்கள்)! இயேசுவின் இரத்தம் நம்மை நீதிமான்களாக்கியதால், நாம் உயர்வானவர்களாய் இருக்கிறோம்.இப்படிப்பட்ட பாக்கியம் நமக்கு அருளப்பட்டு இருக்கிகிறது

நாம் ஓய்வெடுக்கும்போது, ​​கடவுள் நமக்காக வேலை செய்கிறார்!  நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! வேதத்திலிருந்து சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டுகிறேன்:

தேவன் ஆதாமுக்கு நித்திரையை உண்டாக்கி அவனிடமிருந்து ஏவாளை உண்டாக்கினார் .

அவண்ணமாகவே ஆபிரகாமுக்கு ஆழ்ந்த நித்திரையை உண்டாக்கி கடவுள் அவனோடு நித்திய உடன்படிக்கை செய்தார் .

மாபெரும் ஞானியான சாலொமோன் ராஜா உறக்கத்தில் கடவுள் அவருக்குத் தோன்றியபோது எல்லா ஞானத்தையும் மிஞ்சிய ஒரு புரிந்துகொள்ளும் இதயத்தைக் கொடுத்தார் .

என் அன்பானவர்களே , நீங்கள் ஓய்வெடுக்கும்போது, ​​அவர் செயல்படுகிறார். அவரை நம்புவது என்பது அவரது முடிக்கப்பட்ட செயல்களில் இளைப்பாறுவதாகும் .
*கர்த்தர் முடித்த வேலையில் ஓய்வெடுங்கள், மற்றதை அவர் செய்வார்! *

கர்த்தரில் இளைப்பாறி ஆவர் கிருபையை பெறுங்கள் ! கிருபையை பெற்று வாழ்வில் ஆட்சி செய்யுங்கள் !! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நம் ஐஸ்வர்ய சம்பன்னர் !

22-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நம் ஐஸ்வர்ய சம்பன்னர் !

5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். (ஆதியாகமம் 3:5-6) NKJV.

பிசாசின் சோதனையானது,மனிதன் தன்னிடம் இல்லை என்று நினைக்கும் ஒன்றை ஆசைப்பட வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் அவன் அதை பெற /உழைக்க முயற்சி செய்கிறான்.  பிசாசு இதை அடைய முடிந்தால், கிறிஸ்துவின் ஓய்விலிருந்து மனிதனை வெற்றிகரமாக நகர்த்திவிடுகிறான். அதிருப்தியே ஒரு நபரின் ஓய்வை பறிப்பதற்கு முக்கிய காரணம் .

ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்பிக்கப்படுவது என்னவென்றால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தங்கள் உரிமையான இடத்தை (“ஓய்வு” – ஏதேன் தோட்டம்) இழந்த ஆதாம் மற்றும் ஏவாளைப் போலல்லாமல், நம் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் வேண்டும்.ஆனால் அவர்களின் “அதிருப்தி” தான் இறுதியில் அவர்களின் “கீழ்ப்படியாமைக்கு” வழிவகுத்தது என்பதை நாம் உணர தவறிவிடுகிறோம் .
திருப்தியுடன் கூடிய தேவபக்தி பெரும் ஆதாயம் (1 தீமோத்தேயு 6:6),  இன்று பலர் தெய்வபக்தி ஒரு ஆதாயத்தின் வழி என்று நினைக்கிறார்கள்.
அவர்கள் பேராசையில் ஐசுவரியத்தைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய உண்மையான ஐசுவரியமாகிய கிறிஸ்து மற்றும் அவருடைய நீதியிலிருந்து விலகிச் செல்கிறார்கள்!

முழு மனித இனத்தையும் நிரந்தரத் தண்டனையிலிருந்து மீட்பதற்காக இயேசு சிலுவையில் செய்த உன்னத தியாகத்தின் விளைவாக நமக்குள் இருக்கும் “கிறிஸ்து இயேசு” நமது மிகப்பெரிய பொக்கிஷம்.  ஆதி பெற்றோர்களாகிய ஆதாம்,ஏவாள் நம் அனைவரையும் இழிநிலையில் ,மரணத்தில் ஆழ்த்தினாலும், இயேசு கிறிஸ்து அந்த சாபத்திலிருந்து நம்மை மீட்டு,அவருடைய உண்மையான இளைப்பாறுதலை அளித்திருக்கிறார் .

என் அன்பானவர்களே ! இயேசுவின் இந்த அன்பை விசுவாசியுங்கள் மற்றும் அவருடைய அன்பைத் தழுவுங்கள். அவருடைய முடிக்கப்பட்ட மீட்பின் வேலை உண்மையில் பிசாசையும், மரணத்தையும்,ஒட்டுமொத்தமாக சிலுவையில் முடித்துவிட்டது.
நாம் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாயிருக்கிறோம் ! எனவே, நாம் இவ்வாழ்க்கையில் ஆட்சி செய்ய அவரில் இளைப்பாறுகிறோம் !! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நம் ஐஸ்வர்ய சம்பன்னர் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள் !

21-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள் !

7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்துதேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். (ஆதியாகமம் 12:7, 10-12) NKJV.

ஆதியிலிருந்தே,பிசாசின் சோதனையானது மனிதனை கடவுளின் இளைப்பாறுதலிலிருந்து நகர்த்துவதாகவே இருந்தது.

ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியான சுதந்திரம் கானான் தேசம். (v7). இது ஆபிரகாமுக்கு கடவுள் தேர்ந்தெடுத்த இளைப்பாறும் இடம். ஆனால், பிசாசின் சோதனையானது கடுமையான “பஞ்சத்தின்” மூலம் கடவுள் அவருக்குக் கொடுத்த இந்த ஓய்விலிருந்து ஆபிரகாமை நகர்த்துவதாகும்.

பஞ்சத்தின் காரணமாக ஆபிரகாம் கடவுள் காண்பித்த இளைப்பாறும் தேசத்தை விட்டு எகிப்துக்கு செல்ல விரும்பினார். தேவன் தனக்குக் காட்டிய தேசத்தைவிட எகிப்து பிரகாசமாக இருப்பதைக் கண்ட அவர் பஞ்ச தேசத்திலிருந்து வளமான நிலத்திற்குச் சென்றார். இருப்பினும், அவர் எகிப்துக்கு அருகில் வந்தபோது, ​​​​அவரது இதயத்தில் பயம் தொடங்கியது.
 இது கடவுளுடைய சித்தத்தை ஆவியில் உணராமல் இருப்பதின் விளைவு : கடவுள் கொடுத்த வாக்குத்தத்த நிலத்தை விட்டு வளமான நிலத்திற்கு அவர் உடல் ரீதியாக விலகிச் சென்றதால், ஆபிரகாம் ஆன்மீக ரீதியிலும் விசுவாசத்தை விட்டு விலகி பயத்திற்கு நகர்ந்தார்.
அவர் எகிப்திற்குள் நுழைந்தபோது ஆன்மீகச் சரிவு ஏற்பட்டது மட்டுமல்லாமல், கடவுள் சொன்ன இளைப்பாறுதல் தேசத்துக்கு திரும்பியபோது ஆகார் மூலம் ஒரு பெரிய பளுவை சுமப்பதாயிற்று .

என் பிரியமானவர்களே, இயேசுவே உங்கள நீதி ( JEHOVAH TSIDKENU )என்று நீங்கள் உண்மையிலேயே நம்பும் போது, ​​அவர் உங்களைச் தவறான பாதைக்கு செல்லாதபடி காத்து ,தவறு செய்யாமலும் தடுக்கிறார்.தவறான முடிவுகளினால் வாழ்நாள் முழுவதும் கண்ணீரோடு சுமக்கும் தேவையில்லாத பாரத்திலிருந்து காத்து விடுவிக்கிறார்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியிருக்கிறீர்கள் ! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

20-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.(எபிரெயர் 4:4 ) NKJV‬‬.

ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்தார், அவர் சோர்வாக இருந்ததால் அல்ல, ஏனெனில் நித்திய கடவுள் சோர்ந்து போவதுமில்லை,களைத்து போவதுமில்லை (ஏசாயா 40:30). படைப்பின் வேலை முடிந்துவிட்டதாலும், அதற்கு மேல் ஒன்றும் கூட்ட தேவையில்லாததினால் அவர் ஓய்வெடுத்தார்.

உதாரணமாக,ஒரு ஓவியர் ஒரு உருவப்படத்தை வரையத் தொடங்கும் போது, ​​அவர் தனது வேலை மிகவும் சரியானது என்று உணரும் போது, ​​அவர் தனது தூரிகையை கீழே வைக்கிறார்,ஒரு புள்ளிக் கூட கூட்ட தேவையில்லை என்று நினைக்கிறார்.மேலும், தொடர்வது அழகான ஓவியத்தை கெடுத்துவிடும் என்று அவர் அறிவார் .
அவண்ணமாகவே ,கடவுள் மனிதனைப் படைத்தபோது, ​​​​அவர்கள் இளைப்பாறவும்,அனுபவிக்கவும் வேண்டும் என்ற வாஞ்சையோடு மற்ற படைப்புகள் அனைத்தையும் படைத்து முடித்த பிறகு அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் படைத்தார்.அது ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தது!

அவரது படைப்பு முழுமையடைந்தது, ஆனால் மனிதன் உண்மையில் அதைச் சிறப்பாக பயன்ப்படுத்த பல ஆண்டுகள் மற்றும் நூற்றாண்டுகள் எடுத்தன. கடவுளின் படைப்பில் இருந்து பெறப்பட்டதைத் தவிர, உண்மையான அர்த்தத்தில் மனிதன் கண்டுபிடித்தது அல்லது உருவாக்கியது எதுவும் இல்லை.
எடுத்துக்காட்டாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் கணினி சில்லுகளை (micro chips ) உருவாக்கப் பயன்படும் குறைக்கடத்தியான சிலிக்கான் முதன்முதலில் வானத்தையும் பூமியையும் உருவாக்கும் கட்டத்திலேயே எல்லாம் வல்ல தேவனால் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அது பூமிக்குள்ளாகஇருக்கிறது என்பதை மனிதன் கண்டுபிடித்தான்.

சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூலிகை மற்றும், அலோபதியில் பயன்படுத்தப்படும் ரசாயனம், மற்றும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு தயாரிப்பும் கடவுளின் ஆதி படைப்பில் இருந்து எடுக்கப்பட்டு பிற்காலத்தில் மனிதனால் கடவுள் கொடுத்த ஞானத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுள் படைத்த படைப்பின் காரியங்களினால் மனித நோய்களுக்கு சிகிச்சையும் தீர்வும் கிடைக்குமானால், அகிலத்தையும் படைத்த படைப்பாளியால் (தேவனால்) மனித குலத்தின் நோய்களையும், வேதனைகளையும் கட்டாயம் குணப்படுத்தமுடியும். மனிதனக்கு ஓய்வையும் மற்றும் பொழுதுபோக்கையும் உருவாக்குவதே அவரது படைப்பின் நோக்கம்.( REST & RECREATION ).

ஆம் என் பிரியமானவர்களே, கர்த்தர் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் ஏற்கனவே பரிபூரணமாக்கி விட்டார், அதில் உங்கள் பெலவீனத்தில் அவரின் சுகம் மற்றும் உங்கள் விடுதலையும் அடங்கும். இந்த வாழ்வில் ஆட்சி செய்ய ஒவ்வொரு பகுதியிலும் அவரது முடிக்கப்பட்ட பணியை நடைமுறைப்படுத்த அவரது அருளைப் பெறுங்கள்! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்