Author: vijay paul

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

19-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இயேசுவே தேவன் ! அவர் சதாகாலமும் வாழ்பவர்.அவரில் ஜீவன் இருக்கிறது (யோவான் 1:3). அவரே ஜீவன் (யோவான் 14:6).
மனிதர்களால் புரிந்துகொள்ள கடினமான காரணம் என்னவெனில், சதாகாலமும் வாழ்பவர்,அவரில் ஜீவன்
இருக்கிறது ,அவரே ஜீவனாகவும் இருகிறார்,அப்படி இருக்க அவர் எப்படி இறக்க முடியும்?

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளி அளிக்கும் சூரியன் இருளாக மாற முடியுமா? அல்லது இருளால் ஒளியை விழுங்க முடியுமா? மாறாக, இருள் என்பது ஒளி இல்லாததை குறிக்கின்றது.அதுபோலவே, மரணம் என்பது வாழ்வின்மயை குறிக்கின்றது.

என் பிரியமானவர்களே,மனித குலத்தின் மேலான நன்மைக்காக எதுவாக இருந்தாலும் தேவன் அதை செய்ய முடியும். ஆகவே மரிக்க முடியாதவர் மனித குலத்திற்காக மரணத்தை சுவைத்தார் (எபிரேயர் 2:9) தம் மரணத்தின் மூலம் மரணத்தின் மீது வல்லமையுள்ள பிசாசை அழித்து,மரணத்திலிருந்தும் வாழ்நாளெல்லாம் மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவித்தார் (எபிரேயர் 2:14, 15)

பாவமே அறியாத இயேசு,ஒருபோதும் பாவம் செய்யாதவர் நமக்காக பாவம் ஆனார், இதனால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆக முடியும். தேவன் தனது சித்தம் மற்றும் முன்னறிவிப்பின்படி மனிதனை மீட்டெடுப்பதற்காக,மனிதனின் அதி மேன்மையான நன்மைக்காக எதையும் செய்ய முடியும் மற்றும் எதுவாகவும் மாற முடியும் அது தான் அவர் அன்பு !.ஆமென் 🙏

ஆண்டவரே! ஒன்றுமில்லாத மனிதன் மீது நீங்கள் கண்ணோக்கமாக இருக்க அவன் எம்மாத்திரம்?!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

18-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

18. மரித்தேன்,ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)K J V.

என் அன்பானவர்களே, மேற்கூறிய கடவுளின் குரலை இன்று உங்களுக்காக நான் விளக்க வேண்டுமானால், அது பின்வருமாறு இருக்கும் ,

“நான் நித்திய தேவனாயிருந்தாலும் ,மனிதகுலத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனிதனாக பிறந்து ,மனிதனுக்காக ஜீவனை அளித்து மரித்தேன்,ஆனால் இப்போது நான் சதாகாலமும் வாழ்கிறேன்.மேலும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நரகத்தையும் மரணத்தையும் நான் வென்றுவிட்டேன்.ஜீவன் மற்றும் இறப்பு என்ற தீய சுழற்சியில் இருந்து நான் மனிதகுலத்தை முற்றிலும் விடுவித்தேன்.இப்போது, ​​நான் நித்தியமாய் வாழ்வது போல் நீங்களும் நித்தியத்தில் வாழ்கிறீர்கள் .ஆமென்!”

மனிதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன், அவனுக்கு ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு- பிறப்பதற்கு ஒரு நேரம்,இறப்பதற்கு ஒரு நேரம் என்று பிரசங்கி புத்தகம் மனிதனின் விரக்தியை அழகாக வரையறுக்கிறது, ஏனெனில் அவன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன்.
மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் இல்லாத வரை விரக்தி நிலைத்திருக்கும். இதற்குக் காரணம், மனிதன் தன் வரையறுக்கப்பட்ட அறிவின்படி தன்னை புரிந்து கொண்டு தெய்வீகத்தின் தேவையைப் பார்க்கவில்லை ,மாறாக தன்னிடம் திறமையும்,ஞானமும் இருப்பதாக அவன் திருப்தி அடைகிறான்,எனவே அவ தன்னைத்தானே மெச்சிக்கொண்டுஞானமும், திறமையும் கடவுளிடமிருந்து வருகிறது என்பதை அறியாத்திருக்கிறான்.

அவன் குழப்பமான,தீர்க்க முடியாத பிரச்னையை சந்திக்கும்போது, ​தனக்கு மேலான ஒரு சிருஷ்டிகர் இருப்பதை அவன் உணர்கிறான். அவன் தனது காலத்தின் தொடக்கத்தில் இதை உணர்ந்திருந்தால், அவன் தனது வாழ்க்கையின் பல விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம். அதை அவன் உணரும் போது, தாமதமாகிவிட்டது.ஆனால், நித்திய தேவன் காலக்கட்டத்தில் நுழைந்து, இது மிகவும் தாமதமாகவில்லை என் தாசனே ,இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக செய்கிறேன் என்று கூறுகிறார்! அல்லேலூயா!

ஆம் என் பிரியமானவர்களே, எல்லாவற்றையும் புதிதாக்கவும், இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கவுமே இயேசு வந்தார்.அவர் என்றென்றும் வாழ்கின்றதால் ,இந்த வாரம் உங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவருடைய அற்புதமான மறுசீரமைப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

15-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்(மாற்கு 9:22-24) NKJV.

மேற்கண்ட வேத பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மிகவும் ஆறுதல் அளிக்கும் பகுதி.காதுகேளாத மற்றும் ஊமையாய் இருந்த ஒரு மகனின் தந்தையைப்பற்றிப் பேசப்படுகிறது .அவர் மகனுக்கு பேசவோ கேட்கவோ முடியவில்லை காரணம் அவன் ஒரு அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருந்தான். அது அவர் மகனை கொல்லும் நோக்கத்துடன் பலமுறை நெருப்பில் தள்ளியது .
அவர் தனது மகனின் வாழ்க்கையில் விடுதலையைக் காண எல்லா வழிகளையும் முயற்சித்தார், ஆனால் பயனில்லாததால் அந்த மகனின் தந்தை மிகவும் அவநம்பிக்கையுடன் மற்றும் நம்பிக்கையை இழந்த நிலையில் காணப்பட்டார். கடைசியாக, அவர் தனது மகனை சர்வவல்லமையுள்ள இயேசுவிடம் கொண்டு வந்தார்.அல்லேலூயா!

தன் மகனுக்கு இதுவரை எந்தப் பரிகாரத்தையும் பார்க்க முடியாததால்,விசுவாசத்தை இழந்தது மாத்திரமல்ல,மேலும் தேவனால் குணப்படுத்த முடியுமா என்ற தீவிர சந்தேகமும் கூட இருந்தது. ,”உம்மால் கூடுமானால் செய்யும் “என்று தகப்பன் சொல்லிய கூற்றிற்கு இது தான் காரணம்.

கர்த்தராகிய இயேசு அவருக்கு “*உங்கள் மகனைக் குணப்படுத்த எனக்கு (இயேசு) விசுவாசம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால்,எல்லாம் கூடும்*”என்று பதிலளித்தார் .

அவர் (தந்தை), விரக்தியடைந்து, தனது மகன் குணமடைவதைக் காணும் ஏக்கத்தில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்றவராக இருந்ததால், தாம் எப்படியாவது இயேசுவின் விசுவாசத்தில் இணைத்து விடுதலையைக் கொண்டுவர முடியும் என்று உறுதியாயிருந்தார்.,எனவே அவர் தனது மகன் சுகமடையும் முன்பு அவருடைய விசுவாசக் குறைபாட்டை முதலில் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கதறுகிறார்.

எல்லா மனிதரையும் காப்பாற்றவும்,விடுவிக்கவும்,குணப்படுத்தவும்,வல்லவரான இயேசுவால் தந்தை மற்றும் மகன் இருவரும் உடனடியாக குணமடைந்தனர்.

ஆம் என் பிரியமானவர்களே, உங்களுக்கு போதிய விசுவாசம் இல்லாவிட்டாலும்,அற்புதங்கள் செய்ய தேவையான அனைத்து விசுவாசமும் இயேசுவிடம் உள்ளது.அவருடைய விசுவாசத்தில் இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் தேவைகளை வழங்குவதற்கு அவருடைய அற்புதங்களைச் செய்யும் திறனைப் பற்றிக் கொள்ளுங்கள்*. அல்லேலூயா! அவர் இரக்கமும்,அன்பும், பொறுமையும், கருணையும் உள்ளவர்,உங்கள் விசுவாசமின்மையை தம் விசுவாசத்தால் குணப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:14-16 NKJV

அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில், ​​கர்த்தராகிய இயேசு ஒருமுறை 10 தொழுநோயாளிகளை குணப்படுத்தினார்.அந்த நாட்களில் தொழுநோய்,கோவிட் போன்ற மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது. அது தொற்றுநோயாக இருந்தது மற்றும் கிட்டத்தட்ட எந்த சிகிச்சையும் இல்லை.எவரும் தங்கள் சுகத்தைப் பெற்றதில்லை.
பத்து தொழுநோயாளிகள் கர்த்தராகிய இயேசுவிடம் அவருடைய இரக்கத்திற்காக மன்றாடினார்கள், கர்த்தர் பத்து பேரையும் குணமாக்கினார்,ஆனால் ஒருவர் மட்டுமே தேவனுக்கு நன்றி சொல்லவும் மகிமைப்படுத்தவும் திரும்பினார்.
தேவனின் வல்லமையின் மதிப்பு ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் தனது பிரச்சனையின் தீவிரத்தை அறிந்திருந்தார், மேலும் அந்த மாபெரும் பிரச்சனையை கர்த்தர் மட்டுமே தீர்க்கமுடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

என் அன்பானவர்களே, உங்கள் பிரச்சனை பாரதூரமானதாகவும் தீர்க்க முடியாததாக இருந்தாலும்,தேவனால் அதை தீர்க்க முடியும். தேவனுக்கு நீங்கள் ஏறெடுக்கும் நன்றியின் வெளிப்பாடு, உங்கள் தேவைக்கான தீவீரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.

அந்த தொழுநோயாளி இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தி,தேவனை மகிமைப்படுத்தினார்.அவர் குணமடைந்த பிறகு அவரது நன்றியின் அழுகை,குணமடைவதற்கு முன் அவரது அவநம்பிக்கையான அழுகையை விட சத்தமாக இருந்தது. அவர் உண்மையிலேயே தேவனின் வல்லமையை ப் புரிந்துகொண்டார் – அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! நன்றியுணர்வு என்பது நம் உதடுகளில் அல்ல மாறாக நம் இதயத்தின் ஆழத்திலிருந்து நம் முழு ஜீவனையும் உள்ளடக்கியதாகும் .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கும் பகுதிகளில் அவருடைய அற்புதமான வல்லமையை அனுபவிப்பீர்கள் என்று இந்த நாளில் நான் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். அவருடைய ஒப்பற்ற நற்குணம் உங்களைத் தாழ்த்தி,சர்வவல்லமையுள்ள இயேசுவின் நாமத்தில் நன்றியுணர்வுடன் உங்களை நிரப்பும்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

13-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். (மத்தேயு 9:27-28 NKJV)

இரண்டு பார்வையற்ற மனிதர்கள் கர்த்தரின் கருணையைப் பார்க்கும்படி கூக்குரலிட்டனர்.கர்த்தர் தங்கள் பார்வையை மீட்டெடுக்க விரும்புகிறாரா என்று உறுதியாகத் தெரியாததால் அவர்கள் கதறினர். எனவே, அவர் அவர்களை சுகமாக்க சித்தம் கொண்டு இறங்குமாறு இயேசுவைத் தேடி கூக்குரலிட்டனர்.

என் அன்பு நண்பரே, பிதா உங்கள் கோரிக்கையை எப்போதும் நிறைவேற்ற தயாராக இருக்கிறார். அதனால்தான் அவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

ஆனால்,நம்முடைய கிருபையுள்ள கர்த்தராகிய இயேசு பூமியில் நடமாடிய நாட்களிலும், இன்றும் உள்ள கேள்வி அவருக்கு சித்தமா இல்லையா என்பது அல்ல (அவர் சித்தமில்லை என்றால்,அவர் ஏன் வந்து மனித குலத்திற்காக சாக வேண்டும்? ) *மாறாக அன்றும்,இன்றும் இருக்கும் ஒரே கேள்வி – அவரால் இதைச் செய்ய முடியும் (HIS ABILITY ) என்று நீங்கள் நம்புகிறீர்களா என்பதுதான் .

ஆம் என் பிரியமானவர்களே,*அவரால் செய்ய முடியும் என்பதை விசுவாசிப்பதில் தான் பிரச்சினை ,மேலும் நாம் கேட்பதற்கும் அல்லது நினைப்பதற்கும் மேலாக கூட அவரால் செய்ய முடிகிறது (எபேசியர் 3:20). நம்மை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேட்பதில் இருந்து*நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டு அவரால் செய்யமுடியும் என்று அவரை நம்புவதற்கு நம்மில் வேலை செய்யும்படி நம்முடைய பிரார்த்தனை இருக்கட்டும். அல்லேலூயா!

_நம்மில் உள்ள கிறிஸ்து, அவருடைய திறமையை நமக்குள்ளும்,நம் மூலமாகவும் வெளிப்பட பிராத்திக்கிறேன் _. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய என்றென்றுமான நீதியை அனுபவியுங்கள்!

12-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய என்றென்றுமான நீதியை அனுபவியுங்கள்!

20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,எபேசியர் 3:20 NKJV.

தேவன் எல்லாம் வல்லவர்.என்னுடைய பிரார்த்தனைகளை விடவும், என் கற்பனையை விட அதிகமாகவும் அவரால் செய்ய முடியும்.
ஆம் என் அன்பானவர்களே ! நாம் நினைப்பதை விட கடவுளின் திறன் மிக அதிகம். ஆனால் நாம் அவரை மட்டுப்படுத்தமுடியும் (சங்கீதம் 78:41).எப்படி ? நம் யோசனைகளால்!

ஒரு அழகான பாடல் உள்ளது – பிரபஞ்சத்தை உருவாக்க தேவனுக்கு ஒரு வாரம் தான் தேவைப்பட்டது.ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மை இயேசுவின் சாயலில் மாற்ற பொறுமையாக செயல்படுகிறார்,மேலும் நம்மில் தொடர்ந்து செயல்படுகிறார்.

நாம் அவருடன் ஒத்துழைக்கும்போதும் அவர் நம் எண்ணத்தை மாற்றுகிறார். நாம் வித்தியாசமாக சிந்திக்காவிட்டால்,நம் வாழ்வில் தேவனின் நோக்கம் நிறைவேறுவதை நாம் காண முடியாது.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளும் அளவுக்கு நம்மை அன்புடன் நேசிக்கிறார். நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதிசெய்ய அவர் தம்முடைய குமாரனை மனமுவந்து தியாகம் செய்தார்.இயேசு நமக்கான பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றினார், அவர் சிலுவையில் நிர்வாணமாக மரணத்தை எடுத்துக்கொண்டு, அவருடைய குற்றமற்ற இரத்ததால் நம்மை நீதிமான்கள் என்று அறிவித்தார். இயேசு என்றென்றும் உயிருடன் இருப்பதால், இந்த நீதியை நம்மில் என்றென்றும் பாதுகாக்க பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.ஆமென்!

இயேசு அதோடு நிறுத்தவில்லை, அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குள் ஊதினார், நம்மை தேவனுடைய ஆலயமாக்கினார். எப்பொழுதும் நமக்காக இருந்த தேவன், நம்முடனே இருக்க இம்மானுவேலாக வந்தார்,”நம்மில் இருக்கும் கிறிஸ்து“இன்று பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் வசிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,உங்களில் வாழ்கிறவரை உங்களுக்குள் வேலை செய்ய அனுமதியுங்கள், அவர் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டு உங்கள் மூலம் செயல்படுவார்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் என்றென்றும் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்பதை அறிக்கையிட எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய என்றென்றுமான நீதியை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்தியத்தை இப்போதே அனுபவியுங்கள்!

08-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்தியத்தை இப்போதே அனுபவியுங்கள்!

8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV.

என் அன்பானவர்களே,நேற்று சிந்தித்த வேத தியானத்திலிருந்து தொடர்கிறேன், நாம்‘காலத்தை’ மதிக்கிறோம், ஏனென்றால் அது தேவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. தேவன் செய்கிற அனைத்தும் நல்லது மற்றும் அது நமக்கு மிகவும் நல்லது!

‘நேரம்’ மற்றும் ‘நித்தியம்’ ஆகியவற்றை நான் கணித ரீதியாக வரையறுக்க வேண்டும் என்றால், ‘நேரம்’ என்பது நித்தியத்தின் துணைக்குழு’ மற்றும் ‘நித்தியம்’ என்பது காலத்தின் மேல்நிலை ஆகும். அதன்படி, ‘நேரம்’ நித்தியத்தின் சில பண்புகளைக் கொண்டிருக்கலாம்,ஆனால் அது அனைத்தும் அல்ல.ஆனால் ‘நித்தியம்’ நேரத்தின் எல்லா பண்புகள் மற்றும் இன்னும் பல பண்புகளைக் கொண்டுள்ளது.

இப்போது, ​​மேற்கூறியவற்றை ஆன்மீக ரீதியில் பார்க்கும்பொழுது,தேவனின் வார்த்தை நித்தியமானது, வரம்பற்றது.காலப்போக்கில் இயேசு என்று அழைக்கப்பட்ட மனிதனாக மாறியது, அவர் காலம், இடம் மற்றும் பொருள் ஆகியவற்றுடன் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டதால்,மனிதர்களாகிய நாம் நித்தியத்துடன் ஒன்றிணைந்து நித்தியமாக வெளிப்பட முடியும்.அல்லேலூயா!

நித்தியத்தில் ஒன்றிணைவதற்கு,கடந்த காலத்தின் வருத்தங்கள்,எதிர்காலத்தைப் பற்றிய நனவாகாத கனவுகள் போன்ற கடினமான விளிம்புகள் நம் அனைவருக்கும் இருப்பதால், நம்முடைய சொந்த காலத்தின்படி நாம் ஒரு சரியான வட்டத்திற்குள் வடிவமைக்கப்பட வேண்டும்,ஏனெனில் வசனம் இவ்வாறாக எழுதப்பட்டுள்ளது, “உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போல் நீங்கள் பூரணமாக இருங்கள்” .(மத்தேயு 5:48).

ஆதலால் இயேசு ‘இருக்கிறவர் ‘ நமது நிகழ்கால நிலையை எடுத்துக்கொண்டு, ‘இருந்தவர்’என்று கடந்த கால இழப்புகளை இப்போது மீட்டெடுத்து,”வரப்போகிறவர்” என்று எதிர்காலத்தில் முன்னேறி, மறந்துவிட்டதாகத் தோன்றிய நம் கனவுகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்.அதை இப்போது செய்கிறார்.
இது காலத்தின் நித்தியம் என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டவராகிய இயேசுவே வாரும் ! எங்களின் அனைத்து இழப்புகளையும் மீட்டெடுத்து,இந்த நாளில் எங்களுக்கான உங்கள் கனவுகள் அனைத்தையும் நனவாக்குங்கள்! ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே இருக்கின்றவர்,இருந்தவர்,வரப்போகிறவர்!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்தியத்தை இப்போதே அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

07-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV

“இருக்கிறவர்,இருந்தவர் மற்றும் வரப்போகிறவர்”என்பது தேவனின் அற்புதமான மற்றும் மகிமையான அம்சமாகும்.இதன் வெளிப்பாடு நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஊக்குவிக்கும் என் அருமை நண்பர்களே.

இயேசுவே அல்பாவும் ஒமேகாவும்,அவர் ஆரம்பமும் முடிவும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​அவர் தன்னை இருப்பவராகவும்,இருந்தவராகவும்,வரப்போகிறவராகவும் வெளிப்படுத்துகிறார்என்பதையும் அறிவீர்கள்.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் கிருபையுடன் எனக்கு வழங்கிய நுண்ணறிவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்:
காலங்களைப் பார்க்கும் போதல்லாம்,அது ‘நேரத்துடன்’ தொடர்புடையதாயிருக்கிறது. இருக்கிறவர் என்பது நிகழ்காலத்தில்,இருந்தவர் என்பது கடந்த காலத்தையும்,வரப்போகிறவர் என்பது வரவிருக்கும் எதிர்காலத்தையும் குறிக்கிறது.
இருப்பினும்,தேவன் நித்தியமானவர்.அவரை ‘காலத்தால்’ அளவிட முடியாது.அவர் காலத்தால் மட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல,அவர் நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை மாறாக அவருக்காக நேரம் காத்திருக்கிறது.அவர் காலத்திற்கு அப்பாற்பட்டவர்._ இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து,அவர் மூடிய கதவை ஊடுருவி நடந்தபோது பூமிக்குரிய விதி அவரை மட்டுப்படுத்த முடியவில்லை _ (யோவான் 20:19).அவர் “இடம்” மூலம் வரையறுக்கப்படவில்லை.

கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற காலத்திற்கு கட்டுப்படாத ஆண்டவர் நித்யத்திலிருந்து இந்த காலகட்டத்திற்கு மனித குலத்திற்காக காலடி வைத்தார்.ஏன் என்றால் மனிதன் காலத்திற்கு உட்பட்டு நேரத்தில் பிறந்து,நேரத்திற்காகக் காத்திருந்து காலப்போக்கில் இறந்துவிடுகிறான்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே! நித்திய தேவன் உங்கள் நேர மண்டலத்தில் அடியெடுத்து வைக்கும்போது நீங்கள் நித்தியத்தை அனுபவிப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் காலத்தை கடந்து செல்வீர்கள்.

_நாம் நேரத்தை மதித்தாலும் காலத்தைக் கட்டுப்படுத்தும் எல்லாம் வல்லதேவனை வணங்குகிறோம்!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

07-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

8.*இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்*: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV

“இருக்கிறவர்,இருந்தவர் மற்றும் வரப்போகிறவர்*”என்பது தேவனின் அற்புதமான மற்றும் மகிமையான அம்சமாகும்.*இதன் வெளிப்பாடு நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஊக்குவிக்கும் என் அருமை நண்பர்களே*.

இயேசுவே அல்பாவும் ஒமேகாவும்,அவர் ஆரம்பமும் முடிவும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​அவர் தன்னை இருப்பவராகவும்,இருந்தவராகவும்,வரப்போகிறவராகவும் வெளிப்படுத்துகிறார்என்பதையும் அறிவீர்கள்*.அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் கிருபையுடன் எனக்கு வழங்கிய நுண்ணறிவைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்:
காலங்களைப் பார்க்கும் போதல்லாம்,அது ‘நேரத்துடன்’ தொடர்புடையதாயிருக்கிறது. இருக்கிறவர் என்பது நிகழ்காலத்தில்,இருந்தவர் என்பது கடந்த காலத்தையும்,வரப்போகிறவர் என்பது வரவிருக்கும் எதிர்காலத்தையும் குறிக்கிறது.
இருப்பினும்,தேவன் நித்தியமானவர்.அவரை ‘காலத்தால்’ அளவிட முடியாது.அவர் காலத்தால் மட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல,அவர் நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை மாறாக அவருக்காக நேரம் காத்திருக்கிறது.அவர் காலத்திற்கு அப்பாற்பட்டவர்._ இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து,அவர் மூடிய கதவை ஊடுருவி நடந்தபோது பூமிக்குரிய விதி அவரை மட்டுப்படுத்த முடியவில்லை _* (யோவான் 20:19).*அவர் “இடம்”*மூலம் வரையறுக்கப்படவில்லை.

கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற காலத்திற்கு கட்டுப்படாத ஆண்டவர் நித்யத்திலிருந்து இந்த காலகட்டத்திற்கு மனித குலத்திற்காக காலடி வைத்தார்.ஏன் என்றால் மனிதன் காலத்திற்கு உட்பட்டு நேரத்தில் பிறந்து,நேரத்திற்காகக் காத்திருந்து காலப்போக்கில் இறந்துவிடுகிறான்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே! நித்திய தேவன் உங்கள் நேர மண்டலத்தில் அடியெடுத்து வைக்கும்போது நீங்கள் நித்தியத்தை அனுபவிப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் காலத்தை கடந்து செல்வீர்கள்.*

*_நாம் நேரத்தை மதித்தாலும் காலத்தைக் கட்டுப்படுத்தும் எல்லாம் வல்லதேவனை வணங்குகிறோம்!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,நித்திய வாழ்வை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் ஆல்பாவும்,ஒமேகாவும்,ஆரம்பமும் மற்றும் முடிவுமாயிருக்கிறார்!

06-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் ஆல்பாவும்,ஒமேகாவும்,ஆரம்பமும் மற்றும் முடிவுமாயிருக்கிறார்!

8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV

“தேவன், பல்வேறு காலங்களிலும்,பல்வேறு வழிகளிலும் கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் மூலம் நம் முற் பிதாக்களிடம் பேசினார், இந்த கடைசி நாட்களில் தம் குமாரன் மூலம் நம்மிடம் பேசுகிறார்.
அவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்துள்ளார், அவர் மூலம் உலகங்களையும் படைத்தார். எபிரேயர் 1:1-2 NKJV

இயேசு ஆல்பா மற்றும் ஒமேகா என்பது தேவனின் வார்த்தை வடிவத்தின் வெளிப்பாடாகும்.அவர்,ஆரம்பமும் முடிவும் என்பது தேவனின் செயல் வடிவத்தின் வெளிப்பாடு ஆகும்.

தேவன் பழைய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார், ஆனால் இந்த கடைசி நாட்களில் அவர் நேரடியாக இயேசுவின் மூலம் பேசுகிறார்.பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் மறைந்திருக்கும் ஆல்பாவாக இயேசு இருக்கிறார் மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் இப்போது வெளிப்படுத்தப்பட்ட ஒமேகாவுமாய் இயேசு இருக்கிறார்.

அதேபோல்,தேவனின் நிரூபணமான வெளிப்பாட்டில்,இயேசுவே ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறார். இதன் பொருள்,தேவன் செய்யும் அனைத்தும் இயேசுவுடன் தொடங்குகிறது, மேலும் தேவன் செய்யும் அனைத்தும் இயேசுவுடன் முடிவடைகிறது.கடவுள் எல்லாவற்றையும் இயேசுவின் மூலம் படைத்தார். *‘இயேசுவே ஆரம்பம்’ என்றால் அவர் படைப்பாளர் என்றும் ‘இயேசுவே முடிவு’ என்றால் அவர் எல்லாவற்றின் வாரிசு – வானங்கள் மற்றும் பூமியின் உடைமையாளர் என்று அர்த்தமாகும் .

என் பிரியமானவர்களே,உங்கள் வாழ்வில் இயேசுவே முதல் மற்றும் இறுதியான வாக்கை சொல்லட்டும்.வியாதி இறுதி சொல்லாக இருக்க முடியாது, வறுமை இறுதி சொல்லாக இருக்க முடியாது, மரணம் இறுதி சொல்லாக இருக்க முடியாது மற்றும் தோல்விகள் இறுதி சொல்லாக இருக்க முடியாது, இயேசுவே இறுதி சொல்லாக இருக்கிறார்! அவரே ஒமேகா! எனவே,அவரே உங்கள் வாழ்வை நன்மையினால் ஆசீர்வதிக்கிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் ஆல்பாவும்,ஒமேகாவும்,ஆரம்பமும் மற்றும் முடிவுமாயிருக்கிறார் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .