Author: vijay paul

ggrgc

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

03-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.சங்கீதம் 24:1 NKJV

பூமியும் அதன் முழுமையும் தேவனுடையது என்பது நம்மில் பலருக்குத் தெரியும். மேலும் இதை மனிதகுலம் அனுபவிக்க அவர் கொடுத்துள்ளார். இருப்பினும் நாம் அதைப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியாது.

ஒவ்வொரு மனிதனும் அவனுக்காக/அவளுக்காக வடிவமைக்கப்பட்ட தேவனின் நோக்கத்தை அடைவதை உறுதிசெய்ய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
தேவனின் இந்த நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதை உறுதிப்படுத்த,தேவனின் குமாரனின் மரணம் தேவைப்பட்டது.

பாவம் முதலில் தீர்க்கப்பட வேண்டும்,அதற்காக அவருடைய குமாரன் மனுக்குலத்தை மீட்க இரட்சகராக வந்தார்.

மரணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது,அவர் அதை தேவனுடைய குமாரனாக வென்றார்.
உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக அவர் மகிமையின் ராஜாவாக மரணத்தை ஜெயித்து எழுந்தார்.

என் அன்பானவர்களே தயாராகுங்கள்,இது உங்கள் நாள்,இன்று இயேசுவின் நாமத்தில் உங்கள் வாக்குத்தத்தம் நிறைவேறும் நாள்.ஆமென் ! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

29-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.(பிலிப்பியர் 3:13-14) NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதியிலும்,இந்த ஆண்டின் இறுதியிலும் நாம் வந்துவிட்டதால்,தேவனின் குமாரனாகிய இயேசுவை நமக்கு மிகவும் அழகாகவும்,கிருபையுடனும் காண்பித்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.2 கொரிந்தியர் 3:18ல் 2023ஆம் ஆண்டின் வாக்குத்தத்த வசனம் படி “இயேசுவைக் கண்டு, கிறிஸ்துவாக மாறுங்கள்”என்ற கருத்தின்படி நம்மை மகிமையால் மறுரூபமடையும் செய்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆண்டவரில் உங்கள் சகோதரனாகவோ அல்லது நண்பராகவோ அல்லது தந்தையாகவோ,நான் கூறும் அறிவுரை –வருகின்ற புதிய ஆண்டை எதிர்நோக்குவது கடந்த காலத்தை மறப்பதன் மூலம் இருக்க வேண்டும் என்பதே. அதுதான் உங்கள் தற்போதைய நிலை.இந்த ஆண்டு நடந்த நல்ல காரியங்களுக்காகவும், உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இல்லாத விஷயங்களுக்காகவும் கூட தேவனுக்கு நன்றி செலுத்த நேரம் ஒதுக்குங்கள், ஏனென்றால் எல்லாமே நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன.

கடந்த கால பெருமைகளையும்,கடந்த கால ஏமாற்றங்களையும் மறக்க தேவன் அருள் புரிவாராக. வாழ்க்கையில் முன்னேற கடந்த காலத்தை மறக்க வேண்டும் ,குறிப்பாக ஏமாற்றங்களையும் வேதனைகளையும் மனதில் சுமக்கும் போது நமக்கு பின்னடைவு ஏற்படுகிறது,மறப்பது என்பது மனிதனால் முடியாது.அதற்கு தேவனுடைய கிருபை தேவை பழைய ஏற்பாட்டின் யோசேப்பு இதைப் புரிந்துகொண்டு, என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்“… ஆதியாகமம் 41:51.

என் அன்பானவர்களே, 2024 இல் கடவுள் நமக்காக பெரிய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன், இயேசுவின் பெயரில் புத்தாண்டில் உடல் ரீதியாக நுழைவதற்கு முன்பு மனதளவில் முன்னேறுவோமாக!

இந்த 2023 ஆம் ஆண்டின் அனைத்து நாட்களிலும் எங்கள் சபையோடும்,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியோடும் இணைந்ததற்கு நன்றி.

அவருடைய அற்புதமான கிருபையால் 2024ல் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! இப்போதைக்கு விடை பெறுகிறேன்.தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென் ! 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

image

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

28-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.மத்தேயு 1:23 NKJV.

இயேசு இம்மானுவேலாக இருக்கிறார் – கடவுள் நம்முடன் இருக்கிறார் என்று பொருள்படும்!

தேவ குமாரனை நாம் விசுவாசிக்கும்போது,தேவ குமாரர்களாக,என்றென்றும் வாழ,மற்றும் நீதியினாடை அணிந்து,மேன்மையான அரசர்களாக வாழ்வோம் என்பதற்கு அடையாளமாக,கந்தை துணியால் போர்த்தப்பட்ட தொழுவத்தில் அவர் பிறந்தார்.

காலப்போக்கில் வரலாறான இயேசுவின் பிறப்பு,இன்று நம்மூலம் வெளிப்பட கிறிஸ்து நம்மில் பிறந்து, நம்மில் வாழும் போது தேவனின் இரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது .

ஒவ்வொரு முறையும் நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ​​நம்மை நாம் சரிபார்க்க இது ஒரு மென்மையான நினைவூட்டல் –
1. கிறிஸ்து உண்மையில் நம்மில் இருக்கிறாரா?
2 நம்மில் உள்ள கிறிஸ்து ஞானத்திலும்,வளர்த்தியிலும் கடவுளின் தயவிலும். எல்லா மனிதர்களின் தயவிலும் வளர்ச்சியைக் காண்கிறாரா? (லூக்கா 2:52)

அவர் இம்மானுவேலாக நமக்குள் வந்தார் – இன்று மனிதனுக்குள் குடிகொண்டிருக்கிறார்.“In man is El”! ! அல்லேலூயா!

என் அன்பானவர்களே,நம்மோடு இருக்கிற இம்மானுவேல் இன்று நமக்குள் இருக்கிறார்.தேவன் நமக்குள் வாழ்கிறாரா என்று சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம் ? என்னில் கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது தேவன் வெளிப்படுத்தப்பட்ட, வாழ்க்கை மாற்றப்பட்ட, வல்லமை நிரூபிக்கப்பட்ட மற்றும் தேவன் நியமித்த இலக்கை அடைந்த வாழ்வாகும். ஆமென் ! 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி! உங்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பது வாக்கு நிறைவேறிய அடையாளம்!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கிறுஸ்துமஸின் நிறைவேறுதலை எண்ணில் காணச்செய்கிறது!

27-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கிறுஸ்துமஸின் நிறைவேறுதலை எண்ணில் காணச்செய்கிறது!

11.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:11-12 NKJV

அடையாளம் என்பது கிரேக்க மொழியில் “டோக்கன்” என்று பொருள்படும்,ஒரு ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தத்தை முடிப்பதற்கு ஒரு முன்பணம் கொடுக்கப்பட்டு அந்த ஒப்புதலை நிர்ணயம் செய்வது டோக்கன் (TOKEN ) என்று அழைக்கப்படுகிறது .அது ஒப்பந்தத்தின் நிறைவேறுதலை அடைய ஆவலுடன் எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.

கந்தை துணியில் சுற்றி மாட்டுத்தொழுவத்தில் குழந்தை இயேசு கிடத்தியிருந்தார் என்பதே கொடுக்கப்பட்ட அடையாளம்,அதுபோலவே மனித குலத்தின் மகத்துவத்தையும் நித்திய வாழ்வையும் உண்டாக்கும் ஜீவ அப்பமாக இயேசுவானவர் இருப்பார் என்று கீழ்கண்ட வசனங்களில் சுட்டிக்காட்டபடுவது அதன் பொருளாகும். (மத்தேயு 4:4; யோவான் 6:55 -58).

*நீங்கள் மாளிகையில் வாழ்வதற்காக இயேசு தொழுவத்தில் பிறந்தார் (யோவான் 14:2)அந்தப்படியே
நாம் வழிபடும் தேவாலயங்களும் இன்று விசுவாசிகளின் தெய்வீக இலக்கை அடைய அவர்களுக்கு உணவளிக்கும் தொழுவங்களாக கருதப்படுகிறது*. (எபிரெயர் 10:25). அல்லேலூயா!

அன்பானவர்களே,ஆவியானவரின் வழிநடத்துதலோடு செயல்படுகிற தேவாலயத்துடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.சூழ்நிலைகளின் காரணமாக நிகழ்நிலையில்(ONLINE ல்) கலந்து கொண்டாலும் எங்கு இயேசுவைப் பற்றி பிரசங்கிக்கபடுகிறதோ,இயேசுவை மையமாக பேசப்படுகிறதோ மற்றும் எங்கு இயேசுவின் நாமம் உயர்த்தபப்டுகிறதோ அந்த ஆலயத்தோடு இணைந்திருங்கள்.அதனால்,கிறிஸ்துமஸ் மூலம் உச்சக்கட்டத்தின் அடையாளம் உங்கள் வாழ்வில் கொடுக்கப்படும்.ஏனென்றால்,உச்சக்கட்டத்தின் அடையாளமே நீங்கள் தான்.இதுதான் நற்செய்தி !!!

மனிதகுலத்தைப் பற்றிய தேவனின் சிந்தனை இயேசுவை பரலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தது, இயேசுவைப் பற்றிய நமது சிந்தனை நம்மை பூமியிலிருந்து பரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆமென் ! 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கிறுஸ்துமஸின் நிறைவேறுதலை எண்ணில் காணச்செய்கிறது*!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_139

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,ஆண்டவர் எனக்கு முன்குறித்த எதிர்காலத்தை அனுபவிக்க உதவுகிறது!

26-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,ஆண்டவர் எனக்கு முன்குறித்த எதிர்காலத்தை அனுபவிக்க உதவுகிறது!

11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:11-12 NKJV

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேசியாவின் வருகையின் நிறைவேற்றத்தை தேவதூதர் அறிவித்தார்! அவர் உண்மை பிறயிலேயே பிறந்தவர்.

பின்னர் தேவதூதன் மேய்ப்பர்களிடம் பேசுகையில்,தெய்வ குழந்தை பிறந்ததற்கு அடையாளமாக தொழுவத்தில் துணியால் சுற்றப்பட்டு முன்னணையிலே கிடத்தியிருக்கும் என்று கூறினார்.

அடையாளம் என்பது இறுதி நோக்கத்தைக் குறிக்கும் அறிகுறியாகும். உதாரணமாக ஒரு அடையாள இடுகை இறுதி இலக்கை நோக்கி செல்லும் வழிகாட்டியாக விளங்குகிறது.

புனித கோவில் ஸ்தலங்களில் பலியிடப்படுவதற்காக முன்குறித்த ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போதே தேர்நதெடுத்தது போலவே இயேசுவும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டெடுக்க ஜீவாதார பலியாக வேண்டுமென்று பிதாவானவர் முன்குறித்திருந்தார்.ஸ்வாட்லிங் துணிகளால் ஆட்டுக்குட்டிகள் பிறந்தவுடன் மூடிவைக்கப்படும்.அவை அதை பாதுகாக்கவும்,பாதிக்கப்படாமல் வைக்கும் நோக்கத்துடன் போடப்பட்டது அதேபோல் இயேசுவும் பிறந்தவுடன் சுத்தமான,கைத்தறி துணியால் மூடப்பட்டிருந்தார். .

எனவே, இந்த குழந்தையைப் பற்றிய தேவதூதரின் அறிவிப்பு என்னவென்றால், அவர் உலகின் பாவத்தைத் தன் மீது சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி – தியாக ஆட்டுக்குட்டி.

தேவன் என்னை தேவனின் மகனாகவும் மகளாகவும் ஆக்குவதற்காக என் சார்பாகப் பலியிடப்படுவார் என்ற தேவனின் இறுதி நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக, தேவன் தம் மகனை மாட்டுக் கொட்டகையில் ஒரு துணியால் போர்த்தி உலகத்திற்கு அனுப்பினார். அல்லேலூயா!

முதல் கிறிஸ்துமஸில் கொடுக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் புரிந்துகொள்வது, அர்த்தமுள்ள கிறிஸ்துமஸைக் கொண்டாடவும், இன்று தேவனின் நோக்கத்தை அனுபவிக்கவும் செய்கிறது.

இது தான் உண்மையான கிறிஸ்துமஸ்! 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,ஆண்டவர் எனக்கு முன்குறித்த எதிர்காலத்தை அனுபவிக்க உதவுகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

fg

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் மீது உள்ள தேவனின் பேரொளியை மனிதர்களுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறது!

21-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் மீது உள்ள தேவனின் பேரொளியை மனிதர்களுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறது!

10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.லூக்கா 2:10, 17 NKJV

மரியாளும்,யோசேப்பும் கலிலேயாவிலிருந்து பெத்லகேம் என்ற தாவீதின் நகரத்திற்கு வந்தனர்,அங்கு அவர்களது உறவினர்களோ நண்பர்களோ இல்லை.

இயேசுவின் பிறப்பு பற்றி யாருக்கும் தெரியாவிட்டாலும் தேவனும்,பரலோக சேனைகளும் நியமிக்கப்பட்ட நேரத்தை அறிந்தபடியால் அதை விளம்பரப்படுத்தினார்கள்.

அப்படியிருந்தும், என் அன்பானவர்களே!நீங்கள் பூமியில் தனிமையாக வாழலாம் மேலும் உலகம் உங்களை அறியாது இருக்கலாம்,உங்கள் தாலந்துகளும்,திறமைகளும் இன்னும் செயலற்றதாகவும் இருக்கலாம்.ஆனால்,கிறிஸ்துவில் உள்ள தேவனின் பேரொளி உங்கள் மீது இருப்பதால்,நீங்கள் இதுவரை மனிதர்களால் கவனிக்கப்படாமல் போயிருந்தாலும்,உங்கள் தேவதருணத்தைப்பற்றி(KAIROS MOMENT) முழுமையாக அறிந்த பரலோக ராஜ்ஜியம் அதை உலகுக்கு அறிவிப்பார்கள்.

உங்கள் இலக்கின் இணைப்பாளர்கள் சில நேரங்களில் தேவதூதர்களாக கூட வரலாம்!
இந்த இணைப்பாளர்கள் உங்களில் வெளிச்சத்தைக் கண்டு உங்களைப் பற்றிய நல்ல செய்திகளை உலகிற்கு விளம்பரப்படுத்துவார்கள்.

*இன்றைய தினம்,உங்கள் இலக்கின் இணைப்பாளர்களை தூண்ட தேவதூதர்களை
கட்டளையிடுகிறேன்,அவர்கள் உங்கள் மீதுள்ள தெய்வீக ஒளியையும்,உங்களில் உள்ள கிருபையையும் கவனித்து,இயேசுவின் பெயரில் மக்களுக்கு விளம்பரப்படுத்துவார்கள்*.ஆமென் 🙏

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரட்சகர் பிறந்தார் என்பதை நினைவூட்டுவது மட்டுமல்ல கிறிஸ்துமஸ் செய்தி, மாறாக இந்த இரட்சகர் இன்று நம்மை வேறு பரிமாணத்திற்கு உயர்த்துவதற்காக நம் வாழ்வில் கிருபையை வெளிப்படுத்துவதே அந்த நற்செய்தி! ஆமென் 🙏

நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம் என்னவென்றால் :“நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்! என்னில் உள்ள கிறிஸ்து தேவனின் பேரொளியின் வெளிப்பாடு! ”ஆமென்!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் மீது உள்ள தேவனின் பேரொளியை மனிதர்களுக்கு முன்பாக வெளிப்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img123

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

20-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். லூக்கா 2:15-16 NKJV

மேற்கண்ட அந்த மேய்ப்பர்களின் எதிர்வினை மிகப் பிரமாதமாக இருந்தது.தேவதூதர் இயேசுவின் பிறப்பை அறிவித்த தருணத்தில்,அந்த மேய்ப்பர்கள் தேவதூதர் சொன்னது உண்மையா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்கச் செல்லவில்லை,மாறாக அவர்கள் அதை உண்மை என்று முடிவு செய்தனர்,மேலும் அவர்கள் ஒரு சாட்சியாக இருக்க விரும்பி புதிதாகப் பிறந்த ராஜாவின் பேரொளியை அனுபவிக்க நாடி சென்றனர்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்குப் புறப்பட்டபோது,அது உண்மையிலேயே அப்படி இருக்குமா என்று சோதிக்க 12 வேவுகாரர்களை அனுப்பினார்கள். அந்த 12 பேரில், காலேப் மற்றும் யோசுவா ஆகியோர் மட்டும் தேவனின் அறிக்கையை சரிபார்க்க விரும்பவில்லை, மாறாக அவர்கள் கர்த்தர் சொன்னதால் உண்மை என்று நம்பி உடனே தேசத்தை ஆக்கிரமிக்க விரும்பினர்.
இது தான் விசுவாசம் – ஏனென்றால், அவர்கள் கண் பார்க்காததை நம்பினர்!

அவர்களுடைய விசுவாசத்தினாலேயே,அப்படியே வயல்களில் இருந்த மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்க்க விரைந்தார்கள்.ஆம்! அவர்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்பட்டனர்! அந்த விசுவாசம் தான் இன்று நம்மிடம் தேவைப்படுகிறது!

என் பிரியமானவர்களே,உங்கள் இருதயத்தையும் ஆன்மாவையும் நீங்கள் இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்கும் போது ,கிறிஸ்துவில் உள்ள தேவனின் பேரொளி உங்கள் மீது தங்கியிருக்கும்.அப்போது உங்கள் இலக்கிற்கு உதவும் உதவியாளராகள் விரைவாக உங்களை தேடி வருவார்கள்.நீங்கள் தகுதியானவரா அல்லது தகுதியுள்ளவர் இல்லையா என்பதைச் சரிபார்க்க அவரகள் வருவதில்லை. மாறாக உங்களுக்கு உதவவே வருகிறார்கள்

இன்றைய தினம், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுவின் பெயரில் உங்களுக்கு உதவ இதுபோன்ற தெய்வீக எதிர்கால இணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் நிதியாளர்கள் உங்களை நோக்கி விரைந்து வர தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன்.ஆமென் 🙏

நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம்:”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்! அல்லேலூயா !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

19-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

13.அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14.உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15.தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, லூக்கா 2:13-15 NKJV.

தேவதூதர்கள் இயேசுவின் பிறப்புக்காக காத்திருந்தனர்,ஏனென்றால் மரியாள் கருவுற்ற காலத்திலிருந்தே தேவனின் பேரொளி கர்த்தராகிய இயேசு மீது இருந்தது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
அவர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து,வயல்களில் தங்கள் மந்தைகளைப் காத்துக் கொண்டிருந்த சில மேய்ப்பர்கள் முன் திடீரென்று தோன்றினர்.

அந்த மேய்ப்பர்கள் அகில உலகின் மிகப்பெரிய நற்செய்தியைக் கேட்டபோது, ​​​மனுக்குலத்தை ஆசீர்வதிக்க மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்த இறைவனைத் தேடி வந்தனர்.ஆண்டவராகிய இயேசுவை வணங்குவதற்கு வழிகாட்டிய வால் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து வந்த ஞானிகளும்கூட தங்கள் விலைமதிப்பற்ற பரிசுகளோடு அவரைப் பணிந்தனர்.

என் அன்பான நண்பர்களே,கிறிஸ்துவில் இருக்கும் தேவனின் அருளை நீங்கள்பெற்றால், மனிதர்களும் ,மாமன்னர்களும்,தேவர்களும் கூட உங்களைப் பற்றி அறிந்து உங்களைத் தேடி உங்களை ஆசீர்வதிக்க வருவார்கள்.அல்லேலூயா!

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இதயத்தைத் திறந்து, இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதுதான். நீங்கள் கடவுளுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு உங்கள் இதயம் மட்டுமே .அவரிடம் நீங்கள் கூறவேண்டியதெல்லாம்,”என்னுடையது அனைத்தும் உம்முடையது, என் ஆத்தும மீட்பரே”.

நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்கும்போது, ​​​தேவனின் ஒளி உங்கள் மீது தங்கும்,மேலும் தேவனின் சிறந்த மற்றும் முன்னோடியில்லாத இணையற்ற,கற்பனை செய்ய முடியாத மற்றும் மகிமை நிறைந்த தயவால் அலங்கரிக்கப்படுவீர்கள்!

இந்த வாரத்தில் உங்கள் மீது தீர்க்கதரிசனமாக பேசப்படும் கிறிஸ்துமஸின் இரண்டாவது ஆசீர்வாதம் இதுவே !ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

18-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2:7 NKJV

எனது அன்பானவர்களே, நாம் ஏற்கனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மனநிலையில் இருப்பதால், இந்த நாளிலும் இந்த வாரத்திலும் பரிசுத்த ஆவியின் அற்புதமான சிந்தனையை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிகவும் தனித்துவமானது மற்றும் என்றென்றும் அப்படியே இருக்கும்.நாம் அனைவரும் இந்த உலகில் பிறந்த விதம் – மருத்துவமனை,இல்லங்கள்,மற்றும் பயணம் செய்த இடம் போன்றவையாக இருக்கலாம்.ஆனால்,- சர்வவல்லமையுள்ள தேவனின் ஒரே பேறான குமாரனான இயேசுவின் பிறப்பு, ஒரு அரச பரம்பரையில் (தாவீது)இருந்து வந்தாலும் ,ஏழைக்கோலமெடுத்து பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஆம், பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு விடுதியின் மாட்டுக்கொட்டகையில் நித்திய வார்த்தையானவர் மாம்சமாகி பிறந்தார் .இது உண்மையில் நம் மனதைக் கவர்வதும் மற்றும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றுகிறது.

ஆனால்,சர்வவல்லமையுள்ள தந்தையின் ஒரே பேறானவரின் தெய்வீக பிறப்பு ,அழிவிலும் இருளிலும் மூழ்கியிருந்த தாழ்ந்த மனிதகுலத்தின்மீதான அவரது அன்பின் பிரதிபலிப்பு என்பது புரிந்துகொள்ளச்செய்கிறது.
.ஆயினும்கூட,தேவ குமாரன் தொழுவத்தில் பிறந்த காரணம் மாபெரும் தேவன் தாழ்ந்த மனுகுலத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட அவருடைய அன்பையும் தேவ நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது .
இதுவே பரிசுத்த அவையானவர் நமக்கு கொடுக்கும் மனுகுமாரனின் தாழ்மையான பிறப்பின் வெளிப்பாடாகும்.

ஆனால் இயேசுவின் மீது இருந்த தேவனின் மகிமையான ஒளியின் நிமித்தம் வானத்தில் திரளான தேவா தூதர் கூட்டம் தோன்றி இந்த நற்செய்தியை மேய்ப்பருக்கு அறிவித்ததனர் .தேவனின் இந்த மகிமையின் நற்செய்தி பேரானந்தத்தை ஏற்ப்படுத்தியது.

என் அன்பு நண்பர்களே,உங்களுக்கும் எனக்கும் கூட இதுவே நற்செய்தி:உங்கள் பின்னணி என்னவாக இருந்தாலும்,அதே தேவனின் ஒளிவட்டம் உங்கள் மீதும் தங்கியிருக்கும், அவருடைய தயவு உங்களை என்றென்றும் சூழ்ந்திருக்கும்,இதனால் அனைத்து மக்களும் (தேவதூதர் மற்றும் மனித இனங்கள் இருவரும்) ) உங்களைத் தேடிக் கெளரவிப்பார்கள்.பூமியில் அவருடைய அமைதியையும், அளவற்ற நல்லெண்ணத்தையும் அனுபவிக்க அவருடைய நன்மை உங்களைத் சூழ்ந்திருக்கும்படி பிராத்திக்கிறேன்!

இயேசுவின் மீது இருந்ததைப் போலவே உங்கள் மீதும் தேவனின் ஒளிவட்டத்திற்காக ஏங்குங்கள், உங்களைச் சுற்றியுள்ள தேவனின் தயவை நீங்கள் அனுபவிப்பீர்கள்,அது உங்களை உயர்த்தும் என்று இயேசுவின் நாமத்தில் வாக்களிக்கிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்!

15-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்!

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:17 NKJV.

பாவம்,வியாதி,வறுமை,அழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை மீட்க தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
ஒரு மனிதனின் பாவத்தினால்தான் முழு மனித இனமும் அழிவில் மூழ்கியது.
ஆனால்,அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு,விழுந்துபோன மனிதகுலத்திற்கு மீட்பைக் கொண்டு வந்தார்.அவருடைய கீழ்ப்படிதலின் வாயிலாக எல்லா நீதியான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்தார் அதன் மூலம் பிதா மகிமைப்படுத்தப்பட்டார்.
.

ஆகையால்,ஒரே மனிதனின்(ஆதாமின்) தவறால் முழு மனித இனமும் வீழ்ந்தது போல்,ஒரே மனிதனின் நீதியால் -இயேசு கிறிஸ்துவின் நீதியால் இரட்சிப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைத்தது.
கர்த்தராகிய இயேசு கீழ்ப்படிந்து,யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கான முதல் அடியை எடுத்த தருணத்தில்,தேவன் தம்முடைய தலைசிறந்த படைப்பாகிய மனிதகுலம் இறுதியாக மீட்கப்பட்டதாகத் தம்முடைய மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பரலோகம் இனி மூடப்படாது.அல்லேலூயா!

தேவன் தம் மகனையும்,அவருடைய கீழ்ப்படிதலையும் (தேவனின் நீதி) பார்த்து நம்மை ஆசீர்வதிக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தேவை அல்லது பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு முறையும், தேவன் தம் மகனாகிய இயேசுவையும் அவருடைய கீழ்ப்படிதலையும் பார்த்து, இயேசுவின் நிமித்தம் பிரச்சனையை தீர்க்கிறார்.அதனால்தான்,இயேசுவே நமக்குத் தீர்வு என்று ஒவ்வொரு பிரச்சனையிலும் அவரை நோக்கிப் பார்த்து விடுதலை அடைகிறோம்! அவரே நம்மைக் குணப்படுத்துபவர்! அவரே நம் விடுதலை! அவரே நம் வழக்கறிஞர் ! அவரே தான் நம் பதவி உயர்வு!அவரே நமது நிறைவேறுதல் ! இதுவே நம் விசுவாசம். .ஆமென் 🙏 !

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்.