Author: vijay paul

img_185

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

10-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.ரோமர் 8:15 NKJV

மனிதகுலத்தின் வரலாறு முழுவதும், பாதிரியார்கள் / போதகர்கள் தேவனின் விஷயத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வில் அச்சுறுத்தல், தண்டனை மற்றும் நரகம் என்பதை போதிக்கிறார்கள்.அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு அடிமைத்தனமாக செயல்படுகிறது.

மனிதர்கள் பயத்தினால் தேவனுக்கு சேவை செய்தார்கள்,ஒருபோதும் அன்பினால் அல்ல. அப்படியே தோல்விக்கு பயந்து தசமபாகம் கொடுக்கிறார்கள்.மோசேயின் நியாயப்பிரமாணமானது,அந்த சட்டத்தின்படி இணங்காததற்கு பல சாபங்களைக் கொண்டிருந்தது.அந்த சாபங்கள் பற்றிய பயம் வழிபாட்டாளர்களைப் அச்சுறுத்தியது,மேலும் யாரேனும் நீண்டகால நோய் அல்லது நிரந்தர துரதிர்ஷ்டத்தால் அவதிப்பட்டால்,அது அவர்களின் பாவத்தின் காரணமாக எண்ணப்பட்டு தேவனின் தண்டனையாகக் கூறப்படுகிறது.
யோவான் 9:2 இல் இருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது ஒரு சிறந்த உதாரணம். குருடனாகப் பிறந்த மனிதனின் குருட்டுத்தன்மை அவனது பாவம் அல்லது அவனது பெற்றோரின் பாவம் என்று காரணம் காட்டப் ப்பட்டது.இந்த பிசாசின் தாக்குதலிலிருந்து யாரும் தப்பியதில்லை,நீதியுள்ள யோபு கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த பூமிக்கு இயேசுவின் வருகை மனிதகுலத்தின் பாவம்,மற்றும் சாபங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது மற்றும் அதனுடன் தொடர்புடைய பயம் மற்றும் தண்டனையிலிருந்து மனிதகுலத்தை விடுவித்தது. நம்மை என்றென்றும் நீதிமான்களாக்க அவர் பாவமாக மாறினார்.அவர் நம்மை என்றென்றும் ஆசீர்வதிக்க சாபமாக மாறினார்.அவர் உலகித்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் மரணத்தை ருசித்தார்,மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்பினால் தேவனை அப்பா,பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு கொடுத்தார்.நாம் இனி பயம் மற்றும் அடிமைத்தனத்தால் அழுவதில்லை. ஆமென் !

எனது அன்பு நண்பர்களே, தேவன் இப்போது நம் அப்பா,பிதா என்பது ஒரு அனுபவம். இது என்றென்றும் தொடரும் அனுபவம். இயேசுவின் அன்பை நாம் பெறும்போது பரிசுத்த ஆவியின் தெய்வீக செயல்பாட்டின் மூலம் இது நிகழ்கிறது.

நாம் பாவிகளாக,தேவபக்தியற்றவர்களாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காக மரித்தது,தேவன் நம்மை எவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதற்கு சான்று.இதை நினைக்கும்போது நம் மனம் துதியினால் நிறைந்து அவர் நாமத்தை உயர்த்துகிறது!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

9-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.(ரோமர் 5:8 NKJV

ஒருமுறை ஒரு திருடனும் கொலைகாரனுமானவன் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அமைதியை விரும்பும் குடும்பத்தின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தான்.வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டிருந்த போது,அந்த குடும்பத்தின் குமாரன் அவனை கையும் களவுமாக பிடித்தார். திருடன் விரைவாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள,அந்த வீட்டின் மகனைக் மோசமாகத் தாக்கி கொன்றுவிட்டான்.

இதோ, அந்த வீட்டின் மகன் தன் பெற்றோருக்கு ஒரே பேறானவன்.அந்த வழக்கு நகர நீதிபதி முன் வந்தது, கொலையின் கண் சாட்சியாக இருந்த தந்தை, சாட்சி பெட்டியில் இருந்து பேச எழுந்து நின்றார். அவருக்கு முன் இரண்டு சாத்தியங்கள் இருந்தன:
1. அவரது மகனின் இரத்தத்திற்கு நீதி தேடுவது ,அதன் மூலம் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது,அல்லது
2. கொலைகாரனை மன்னித்து, கொலையாளியின் விடுதலைக்காக நீதிபதியிடம் மன்றாடுவது.

மகனை இழந்த தந்தை இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தார் மற்றும் கொலையாளியை விடுவிக்க நீதிபதியிடம் மன்றாடுவதில் வெற்றி பெற்றார்.
ஆனால்,அவர் அதோடு நிற்கவில்லை.பின்னர் தந்தை கொலையாளியை அணுகி,“என் மகன் இப்போது இல்லை.அதற்கு பதிலாக நீங்கள் எங்கள் மகனாகி எனக்கும் என் மனைவிக்கும் மகிழ்ச்சியைத் தர முடியுமா?”என்று கேட்டார். ”_இந்த கட்டத்தில்,கொலையாளி மனம் உடைந்து அந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். இறுதியில் அவர் தந்தையின் வாரிசானார்,அந்த தந்தை நகரத்தின் மிகப்பெரிய பணக்காரர்.

அதேபோல், என் அன்பானவர்களே, யூதர்கள் மற்றும் ரோமானியர்களின் கைகளில் இயேசுவின் மரணத்திற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. அது உண்மை.ஆனால், நம்முடைய பாவங்களும் கர்த்தராகிய இயேசுவைக் கொன்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
தேவன் நம்மை மன்னித்து என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், நம்மை அவருடைய சொந்தக் பிள்ளைகளாக்கி,பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார்,அவரால் நாம் தேவனிடம் “அப்பா பிதாவே” என்று உரிமையோடு கூப்பிடுகிறோம்.
இன்று, அந்த மகனை இழந்த தந்தை எப்படி அந்த கொலையாளியை மகனாக ஏற்றது போல, தேவன் உங்கள் தந்தையாக மாற ஏங்குகிறார்,ஆம் உங்கள் அப்பா பிதா! அவருடைய ஒரே மகனின் இரத்தத்தின் மூலம் உங்கள் அப்பா.
இன்று உங்கள் இதயத்தைத் திறந்து அவரை உங்கள் தந்தையாகப் பெற மாட்டீர்களா?பெறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!ஆமென் 🙏

நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு,தந்தை நம்மை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதைப் பாருங்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

8-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. I யோவான் 3:1-NKJV
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? எபிரெயர் 1:5 NKJV

தேவதூதர்கள் மனிதர்களை விட வலிமையிலும் மகிமையிலும் மிக உயர்ந்தவர்கள், ஆனால் யோபு 1:6 போன்ற சில இடங்களில் அவர்கள் ‘தேவனின் மகன்கள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவர்களில் யாரும் தேவனை தங்கள் தந்தை என்று அழைக்க முடியாது. ஏனென்றால்,அவர்கள் படைக்கப்பட்டவர்கள் மேலும் அவர்களுக்கு தேவன் எலோஹிம்- அதாவது சிருஷ்டிகர் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் .

ஆதாம் கூட தேவனை தந்தை என்று அழைக்க முடியாது. அவரைப் பொறுத்தவரை,தேவன் கர்த்தராகிய தேவன் (LORD GOD ),அதாவது யெகோவா எலோஹிம்.என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்.காரணம் ஆதாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய சாயலிலும் அவருடைய சொரூபத்திலும் படைக்கப்பட்டவர் (ஆதியாகமம் 1:26). ஆகவே தேவன் தூதர்களுக்கு -எலோஹிமாகவும் , மனித இனத்திற்கு யெகோவாகவும் இருந்தார்.மனிதன் தன் சிருஷ்டிகரை மட்டுமே வணங்க தேவனுடன் உடன்படிக்கை கொண்டிருந்தான்..இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் புத்திரர்களால் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது . ,அவர்கள் தங்கள் தேவனை யெகோவா என்று அழைகின்றனர்.

இருப்பினும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது,ஒரே பேறானவராக தம் சொந்த குமாரனாக தேவன் அனுப்பினார்.மனித வரலாற்றிலும், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் வரலாற்றிலும் இது வரை இல்லாத ஒரு புது உறவாக,முதன் முறையாக இயேசு, தேவனை தனது தந்தை என்று அழைத்தார். மற்றும் பாவத்தில் விழுந்து போன மனுகுலத்திற்கும் இந்த தேவன் சர்வவல்லமையுள்ளவர், நம் தந்தையும் கூட என்று பிரசங்கித்தார்.இதற்காக இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் நம்முடைய பாவங்களைப் போக்க மிகப் பெரிய விலையாக தம் உயிரையேக் கொடுத்தார்.
இயேசுவை தனது சொந்த தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் பிதாவின் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் காரணமாக தேவன் மனிதனுடைய சொந்த தந்தையாக இருக்கிறார்.

நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, நம்மை தகுதிப்படுத்தி தேவன் நம்மை எவ்வளவாய் நேசித்தார் என்பதைப் பாருங்கள்! அல்லேலூயா! இன்று நாம் தேவனை நம் தந்தையாகக் கொண்டிருக்கிறோம்.- அப்பா பிதாவே என்று அழைக்க இயேசுவின் ரத்தம் நம்மை தகுதிப்படுத்தியது! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_208

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

7-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6 )NKJV
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
I யோவான் 3:1-NKJV

என் அன்பு நண்பர்களே,தேவனின் பிள்ளைகள் என்று நாம் அழைக்கப்படுவதுற்கு நம்மைத் தகுதி படுத்தியவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒருவரே அவரே நம்மை பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்கிறார்.ஏனென்றால், மனிதர்கள் எவ்வளவு துரோகம் செய்தாலும் எல்லா பாவங்களையும் போக்குவதற்காக நமக்காக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே தேவனுடன் சமரசம் செய்வதற்கான வழிமுறைகளை அமைத்துள்ளார்.

ஏன் இரத்தம்? பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது (லேவியராகமம் 17:11) அது உங்கள் ஆத்துமாக்களுக்குப் பரிகாரம் செய்யும் இரத்தம். எனவே,அவருடைய இரத்தத்தால் மட்டுமே பாவம் மன்னிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும், மரணம் அவருடைய ஜீவனால் மட்டுமே- அதாவது உயிர்த்தெழுதலின் வல்லமையே மரணத்தை மேற்கொண்டது .
இதன் விளைவாக,பாவத்திற்கு மரித்து,தூய ஆவியால் பிறந்து வேதத்தில் அழைக்கப்படும் மறுபிறப்பின் மூலம் தேவன் நம் பிதாவாகிறார். அல்லேலூயா!

ஆம் என் பிரியமானவர்களே,இயேசுவே நான் தேவனோடு ஒப்புரவாகும் வழி. அவரே சத்தியம் அதனால் அவருடைய அருளையும், கருணையையும் நான் பெறுகிறேன். அவரே ஜீவன் மற்றும் நித்திய ஜீவன் அதனால் எனது தந்தையாக நான் தேவனுடன் எப்போதும் இணைந்திருக்கிறேன். *அவரே என்றென்றும் என் அப்பா பிதாவாக இருக்கிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

6-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

இயேசு அவர்களை நோக்கி:தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
யோவான் 8:42,43 NKJV

நான் புறப்பட்டு,தேவனிடத்திலிருந்து வந்தேன் என்பது அற்புதமானது,பிரமிக்கத்தக்க மற்றும் நிச்சயமான உண்மை.அவர் தேவனிடமிருந்து வந்தவர்.அவர் ஒருவரே தேவனை உள்ளேயும் வெளியேயும் அறிவார், ஏனென்றால் அவரே தேவன்.அந்த நாட்களில்,யூதர்கள் மத்தியில் இதுவே மிகப்பெரிய தடையாக மனதில் இருந்தது.
கர்த்தராகிய இயேசு தாம் பிதாவிடமிருந்து வந்ததாகக் கூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால்,தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசம்செய்பவர்.(1தீமோத்தேயு 6:16).ஆகவே,அவர்களைப் போன்ற பலவீனமான ஒரு மனிதன் தான் தேவனிடமிருந்து வந்தவன் என்று எப்படிக் கூற முடியும்? மேலும், இந்த தேவனைத் தன் பிதா என்றும்,தான் ஒரே பேறான குமாரன் என்றும் அவர் எப்படிக் கூற முடியும்?” கர்த்தராகிய இயேசுவின் இந்த கூற்று அவரை மோசே உட்பட அனைத்து தீர்க்கதரிசிகளையும் விட பெரியதாக காண்பித்தது .இது யூத மதவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இன்றும் கூட,இயேசு தேவனின் மகன் என்பதை ஏற்றுக்கொள்வது யூதரில் பலருக்கு கடினமாக உள்ளது
அவர்கள் அவரை ஒரு புனிதர்கள் என்று காண்கிறார்கள் அல்லது பல கடவுள்களில் அவரும் ஒருவர் என்று ஒப்பிடுகிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், இயேசுவே வழியும் ,சத்தியமும்,ஜீவனுமாயிருக்கிறார். அவர் மூலமாகத் தவிர யாரும் பிதாவிடம் வர முடியாது.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட நேரத்தில் ,தேவன் உங்கள் பிதாவாக மாறுகிறார்,மேலும் இந்த வாரம் அவருடைய கனம்,மேன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அற்புதமான வழியை நீங்கள் அனுபவிப்பீர்கள்,அவருடைய ஜீவன் உங்களை அறிவூட்டி,இயேசுவின் பெயரில் உங்களை மீட்டெடுத்து வால வயதுள்ளவராக்கும்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

3-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

இயேசு அவர்களை நோக்கி:தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். யோவான் 8:42 NKJV

முனிவர்கள்,துறவிகள்,மகரிஷிகள் மற்றும் இப்படிப்பட்ட தேவனை அறிய நினைத்த -மனிதர்கள் அனைவரும் கடந்த காலங்களில்,தேவனை அடைய தங்கள் நேரத்தை ஒதுக்கி,இறுதியில் தேவனின் ஒரு வகையான அம்சத்தின் ஞானத்தின் ஒளியைப் பெற்றனர்.அது ஒரு சந்திப்பு அல்லது அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளைப் பாருங்கள், “நான் புறப்பட்டு,தேவனிடத்திலிருந்து வந்தேன்”. இது அற்புதமானது,பிரமிக்கத்தக்க மற்றும் நிச்சயமான உண்மை. அவர் தேவனிடமிருந்து வந்தவர். அவர் தேவனை அடையவில்லை, மாறாக அவர் தேவனிடமிருந்து வந்தார்.இது முன்பு வாசித்த முனிவர்களுடைய பாங்கை விட முற்றிலும் எதிர்மறையாகத் தோன்றுகிறது.!

சமீபத்தில்,இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி நிறுவனம், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ள முதல் சூரியன்-பூமி லாக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை ஏவியது. சூரியன் என்று அழைக்கப்படும் தேவனின் படைப்புகளில் ஒன்றை அவர்கள் நெருங்குவதற்கு இதுவே சிறந்த முயற்சி .அப்படியென்றால் சூரியனில் இருந்து வருபவரைப் பற்றி சிந்தியுங்கள். இது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய்த் தோன்றுகிறது! இது அபத்தமானது அல்லது சாத்தியமற்றது என்று நாம் வாதிடலாம். ஆனால்,சூரியனைப் பற்றிய இந்த விண்கலம் அளிக்கும் எல்லா அறிக்கைகளையும் நம்புவது சாத்தியமானால்,சூரியனில் இருந்து வந்த நபர் கொடுக்கின்ற அறிக்கை ,விண்கலத்தை விட மில்லியன் மடங்கு துல்லியமாக இருக்கும் என்பது அதிக நிச்சயம் அல்லவா ?!

அதுபோலவே, பிதாவிடமிருந்து வந்த ஆண்டவராகிய இயேசு தேவனை நிச்சயமாகவே அறிந்திருக்கிறார், அவருடைய சாட்சியானது மனிதகுல வரலாற்றில் புனித மனிதர்கள் அனுபவித்த அனைத்து அனுபவங்களையும்,சந்திப்புகளையும் விட மில்லியன் மடங்கு பெரியது, உயர்ந்தது மற்றும் உண்மையானது. குமாரன் பிதாவினிடமிருந்து புறப்பட்டு அவரிடமிருந்தபடியால், அவருடைய சாட்சியே சத்தியம்!
_ஆம், பிதாவை உண்மையாக அறிந்துகொள்ள நான் இயேசுவை நோக்கிப்பார்க்கிறேன்! அல்லேலூயா!! _ ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

2-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான் 1:18) ‭NKJV.

இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இனிய நவம்பர் மாதத்தின் வாழ்த்துக்கள்!

பூமியில் மனிதகுலத்தின் வரலாறு முழுவதுமாக, மனிதர்கள் தேவனை விவரிக்க முயற்சித்திருக்கிறார்கள்.சிலர் தேவனைப் பார்க்காமலேயே தேவனை வரையறுக்க முயன்றனர்.
ஒரு சிலர் தங்கள் உண்மையான அனுபவங்கள் அல்லது தேவனுடனான சந்திப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்,ஆனால் அவர்களின் சந்திப்புகள் அல்லது அனுபவங்கள் தேவனின் ஒரு அம்சத்தை மட்டுமே சித்தரிக்கின்றன,தேவனின் முழுமையை அல்ல.
தேவனை முழுமையாக அறிந்தவர் மற்றும் தேவனை முழுமையாக பார்த்த ஒரே ஒருவர் இயேசுநாதர் மட்டுமே.!

தேவனைப் பற்றிய இயேசுவின் அறிவு தேவனின் ஒரு அம்சம் மாத்திரம் அல்ல,ஏனென்றால் அவர் எப்போதும் தேவனோடு இருக்கிறார். அவர் தேவனை உள்ளேயும் வெளியேயும் அறிவார்.
தேவனைப் பற்றிய இயேசுவானவருக்கு உள்ள அறிவு அனுபவங்கள் அல்லது சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அது மனிதகுல வரலாற்றின் போது சில புனிதர்களுக்கு கிடைத்த சந்திப்பு அனுபவம் அல்ல மாறாக இயேசு எப்போதும் தேவனுடன் இருக்கிறார்.அவரே தேவனாகவும் இருக்கிறார் ! அல்லேலூயா!!
தேவன் யார் என்பதை மனிதர்களுக்கு வெளிப்படுத்த தேவன் தம்முடைய ஒரே குமாரன் இயேசுவை அனுப்பினார்.இயேசு சர்வவல்லவரின் முழுமையான மற்றும் உண்மையான பிரதிநிதி.

தேவனின் ஒரே பேறான குமாரன் பூமியில் வருவதன் நோக்கம்,ஒரே உண்மையான தேவனை வெளிப்படுத்துவது மட்டுமல்ல,அந்த வெளிப்பாட்டின் மூலம் மனிதன் பாவத்தின் மூலம் இழந்த தேவனின் சாயலாக மாற்றப்படுகிறான் அல்லது மீட்டெடுக்கப்படுகிறான்.
இயேசுவைப் பார்ப்பது நம்மை கிறிஸ்துவாக மாற்றுகிறது! ஆமென் 🙏
மேலும் இயேசு தேவனை தேவனாக வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக தேவனை நம் பிதாவாக வெளிப்படுத்தவும் வந்தார். அல்லேலூயா!
இயேசுவைக் காணும்போது பிதாவை அறிகிறோம் ! அல்லேலூயா! .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_185

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!!

31-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!!

17. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.(வெளிப்படுத்துதல் 7:17) NKJV.

என் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும்வேளையில் நம் தேவ ஆட்டுக்குட்டியானவர் செய்த தியாகங்களை நினைப்பூட்ட விரும்புகிறேன்.​​மனித குலத்தைக் காப்பாற்ற மனிதனாக உருவெடுத்து,நம்மை செல்வந்தராக மாற்ற ஏழைக்கோலமாக அவதரித்தார்,அப்படியே நம்மை ஆசீர்வதிக்க அவர் சாபமாக மாறினார்,நம்முடைய பாவங்களுக்காக அவர் பாவமாக மாறி விலைமதிப்பற்ற ரத்தத்தைச் சிந்தி நம்மை நீதிமான்களாக மாற்றினார்.மனுகுலத்திற்காக மரணத்தை ருசித்து,அதை ஜெயித்து மரணத்தை என்றென்றும் ஒழித்ததினால் மனிதனை என்றென்றும் சாவாமை அடையச்செய்தார் மற்றும் நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கினார்.அல்லேலூயா!

அவர் நம்மை மேய்ப்பராக பாதுகாத்து வழி நடத்துகிறார்.நம் கண்களிலிருந்து ஒவ்வொரு கண்ணீரையும் துடைத்து ஜீவ தண்ணீரின் அஸ்திபாரங்களுக்கு நம்மை வழிநடத்துகிறார். மரணமோ,நோயோ,துக்கமோ,வலியோ நமக்கு இராமல் என்றென்றும் தம்முடன் நித்தியத்தில் வைத்திருக்கிறார். இயேசுவின் நிமித்தம் பிதாவாகிய தேவன் நமக்கு என்றென்றும் நம் நித்திய தந்தை ஆனார்.7 வது முத்திரையைத் திறப்பதன் மூலம் வெளிப்படுகிற விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை நமக்கு அளிக்கிறார்.ஆமென் 🙏

என் அன்பான நண்பர்களே,இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஆட்டுக்குட்டியானவரின் வெளிப்பாட்டின் பயணத்தின் மூலம் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.என்றென்றும் ஆட்சி செய்யும் சிம்மாசனத்தில் உள்ள ஆட்டுக்குட்டியை கிருபையுடன் நமக்கு வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவரை நான் வணங்குகிறேன்.
நம் நித்திய பிதாவை இயேசுவின் நாமத்தில் நெருக்கமாக அறிந்துகொள்ள நவம்பர் மாதத்தில் எங்கள் ஊழியத்துடன் இணைந்து ஆசீர்வாதம் பெறுங்கள்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது.!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_171

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

30-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (வெளிப்படுத்துதல் 5:9-10) NKJV.

தேவனை அறிய புத்தகங்கள்,சமூக ஊடகங்கள்,மாதாந்திர இதழ்கள் போன்றவற்றின் மூலம் இருப்பினும் ,பரிசுத்த ஆவியானவர் மட்டுமே தேவனை சிறந்த முறையில் நமக்கு வெளிப்படுத்த முடியும்.மேலும் இயேசு கிறிஸ்து என்ற நபரின் மூலமும் தேவனை அறிய முடியும்.

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துவது தான் இயேசுவை நோக்கிப் பார்ப்பது என்று அழைக்கப்படுகிறது. இயேசுவை அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, ​பரிசுத்த ஆவியானவர் இயேசுவில் உள்ள தேவனின் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார் அல்லது நம் மனக் கண்களை திறக்கிறார்- சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டி மட்டுமே ஒவ்வொரு ஜீவனின் இலக்கையும் (DESTINY யை )அறிந்திருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் தேவ ஆட்டுக்குட்டியை சிங்காசனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது, ​​இந்த பூமியில் ராஜாக்களாகவும்,ஆசாரியர்களாகவும் உங்களை மாற்றி உங்கள் இலக்கை (DESTINY யை ) நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.
ஆட்டுக்குட்டியானவரை ஆராதிப்பதின் மூலம் தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்கை பார்பதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் உன்னதமாக அதை நடைமுறையில் யதார்த்தமாக்கவும் முடியும். நீங்கள் எவரை வழிபடுகிறீர்களோ அவருடைய சாயலாக மாற்றப்படுகிறீர்கள்.அதன் அடிப்படையில் தேவ ஆட்டுக்குட்டியை சிம்மாசனத்தில் வைத்து வழிபடுவது உங்களை அரியணையில் அமர்த்தும்.இது எல்லாருக்கும் பொருந்தும் சட்டம் ! (சங்கீதம் 106:19,20).

நாங்கள் (GRGC தேவாலயம்) நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)ஆராதனையில் கிட்டத்தட்ட 3 மணிநேர தொடர்ச்சியான துதி ஆராதனையை மேற்கொண்டோம் – சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு எங்கள் துதியின் காணிக்கைகளை அர்பணித்தோம்.சமூக ஊடகங்களில் ( YOUTUBE ல் ) எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து,தேவ ஆட்டுக்குட்டியானவரை ஆராதிக்கும் வேளையில் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு உங்கள் வாழ்க்கையின் இலக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பூமியில் நிஜ வாழ்க்கையில் அதை அனுபவிப்பீர்கள் என்று தீர்க்க தரிசனமாக உரைக்கிறேன்! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_169

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

27-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.(உபாகமம் 4:19) NKJV.

மனிதன் தன் இலக்கை அறியவும், தனக்கென ஒரு பெயரைப் பெறவும்,சில சமயங்களில் விண்ணுலகைப் பார்த்து, அவற்றைத் தன் வழிபாட்டுப் பொருளாக ஆக்கிக் கொள்கிறான்,இவை எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டு மற்றும் தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் மூலம் படைக்கப்பட்டது என்பதை மறந்து போனான்.அவர் ஒருவரே அனைத்து வழிபாடுகளுக்கும்,ஆராதனைக்கும் என்றென்றும் தகுதியானவர்.

குறி சொல்பவர்கள் தங்கள் சொந்த கணிப்புகள் அல்லது சில நட்சத்திரங்களின் நிலைப்பாட்டின் காரணங்களைப் பயன்படுத்தி வணிகம், வேலை, திருமணம் மற்றும் பலவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி கதைகளை உருவாக்குகிறார்கள்.ஆனால் ,தேவன் இவை அனைத்தையும் படைத்து மனித குலத்திற்கு பாரம்பரியமாக கொடுத்துள்ளார் என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும்.

என் அன்பானவர்களே,பரலோகத்தின் தேவன் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க இந்த விண்ணுலகை படைத்துள்ளார்.நீங்கள் சிம்மாசனத்தில் இருக்கும் தேவ ஆட்டுக்குட்டியைப் பார்க்கும்போது,அவர் விண்ணுலகைக் கையாளும் 6 வது ஆசீர்வாதத்தைத் திறக்கிறார்.ஆகையால் பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் உங்களைத் தாக்காது (சங்கீதம் 121:6).தேவன் ஒவ்வொரு நாளையும் உங்களுக்கு ஆசீர்வாதமாக படைத்தார்.
அவருடைய நன்மைக்காக அவருக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு சாதகமாக வானத்தின் சாஸ்த்ரங்களும்,பரலோகத்தின் ஆசீர்வாதங்களும் இணைந்து உங்களை ஆசீர்வதிக்க இன்று தேவன் நியமிக்கப்பட்ட நேரம்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .