Author: vijay paul

img_157

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

26-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. (பிரசங்கி 1:9-10 )NKJV

சூரியனுக்குக் கீழே உள்ள இந்த பூமியைப் பற்றிய விஷயங்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், வாழ்க்கை ஒரே வட்டத்தில் சுற்றி வருவது போல் உணரச்செய்கிறது.நம் அனுபவத்தில் புதிதாக எந்த மாற்றமும் இருக்காது.அது விரைவில் சலிப்பிலும்,நடுத்தர வாழ்விற்கும் வழிவகுக்கும், அது காலப்போக்கில் ஏமாற்றமளிக்கும்.இது தான் பிரசங்கியின் அனுபவமாக இருந்தது, இன்றும் நம்மில் பலரும் அப்படித்தான் இருக்கிறோம் .
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவை நாம் பார்க்கத் தொடங்காத வரை, நம் வாழ்வில் தேவனால் நியமிக்கப்பட்ட இலக்கை நாம் ஒருபோதும் அறிய முடியாது . இதன் விளைவாக, சிலர் இங்கே பூமியில் வாழ்வின் நோக்கத்தை (நம்பிக்கையை) இழந்து, வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி சிந்திக்கிறார்கள்.

என் அன்பான நண்பர்களே,உங்கள் வாழ்க்கையில் தேவன் சிறந்த திட்டங்களை வைத்திருக்கிறார்.உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திட்டவட்டமான நோக்கம் இருக்கிறது,அது சர்வவல்லமையுள்ள அவராலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது,அவரே உங்கள் விசுவாசத்தின் தொடக்கமும்,முடிவுமாக இருக்கிறார். சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆட்டுக்குட்டியான இயேசுவை நீங்கள் பார்த்தால் மட்டுமே உங்கள் ஆத்ம திருப்திக்கு வழிவகுக்கும்.இயேசு தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் உங்களை சலிப்பு தட்டுதலிலும், ,நடுத்தரத்திலிருந்தும் விடுவிப்பார்.அவருடைய தெய்விக இலக்கை அடையாமல் முடிவில்லாமல் முயற்ச்சி செய்கிற தீய சுழற்சியில் இருந்து அவர் உங்களை விடுவிப்பார்.

இவ்வாழ்க்கையில் நம்மை வெற்றியோடு ஆளச் செய்யும் ஆட்டுக்குட்டியான இயேசுவை சிங்காசனத்தில் காண நம் பிதாவாகிய தேவன் இந்த நாளில் நம் மனக்கண்களை திறக்கட்டும்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

25-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

11. பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்துதல் 5:11-12) NKJV.

எண்ணற்ற தேவதூதர்கள்,கர்த்தர் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தையும்,நான்கு உயிரினங்களையும் பெரியவர்களுடன் சூழ்ந்துகொண்டு,“ஆட்டுக்குட்டியானவர் துதிக்கு பாத்திரர் !” என்று ஒருமனதாக பாடு கிறார்கள்.ஒருமுறை கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியை அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வணங்குகிறார்கள்.பரலோகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் என்றென்றும் வாழ்கிறார்கள்.அவர்கள் ஒருபோதும் மரணத்தை அனுபவித்ததில்லை, இனி ஒருபோதும் மரிக்கவும் மாட்டார்கள்.

மரணம் என்பது தொலைந்தவர்கள் தங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் இடமாகும். அங்கு சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை. இருப்பினும்,அங்கு சென்று வெற்றியுடன் திரும்பிய ஒரே ஒருவர் தேவ ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே . ஆட்டுக்குட்டியானவர் தம்மை விசுவாசிக்கிறவர்களை மரணத்தினின்று மீட்பதற்காக, மனுக்குலத்தின் நிமித்தமாக அவர் அங்கு வந்தார். கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததால்,மரணம், நரகம் மற்றும் பிசாசு உட்பட அதன் அனைத்து குடிமக்களையும் வென்றதால் நமக்கு மீட்பு வந்தது.

ஆட்டுக்குட்டியானவர் மரித்தோரிலிருந்து எழுந்தது மட்டுமல்லாமல்,பரலோகத்திற்கு ஜெய கிறுஸ்துவாக சென்றார்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தார்,மேலும் பழைய ஏற்பாட்டு காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும்,அந்த மரணத்தின் உறைவிடத்திலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு தம்மோடு அழைத்துச் சென்றார்.ஒருபோதும் பாவம் செய்யாத அனைத்து பரலோகவாசிகளும் . ஆபிரகாமும் மற்றவர்களும் இதில் அடங்குவர்.ஆட்டுக்குட்டியான இயேசுவின் இரத்தம் சிந்தப்படும் வரை அவர்கள் காத்திருந்தனர்.இரத்தம் அவர்களை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டது.ஆட்டுக்குட்டியானவருக்கு அல்லேலூயா!

என் அன்பானவர்களே,ஆட்டுக்குட்டியின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீங்கள் நம்பினால், மரணம் உங்களைத் தாக்காது .பரலோகம் என்றென்றும் உங்கள் வசிப்பிடமாக மாறும்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

24-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

13. அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளிப்படுத்துதல் 5:13) NKJV.

ஒவ்வொரு உயிரினமும்,அதன் இருப்பிடம் எங்கிருந்தாலும்,இறுதியில் எல்லாம் வல்ல தேவனையும்,சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்து இயேசுவாகிய ஆட்டுக்குட்டியையும் போற்றி வணங்கும்.

தன் சுய விருப்பத்தின் காரணமாக,தேவனாகிய கர்த்தரை முழு மனதுடன் வணங்கும் எந்த மனிதனும் பாக்கியவான்,ஏனென்றால் அத்தகைய மனிதன் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட தேவனின் விவரிக்க முடியாத ஆசீர்வாதத்தை அனுபவிப்பான்.ஆட்டுக்குட்டியானவருக்கு அல்லேலூயா!

ஆட்டுக்குட்டியானவரை மிகவும் தனித்துவமாகவும்,அனைத்து வழிபாடுகளுக்கு பாத்திரராகவும், மரியாதையை பெறுவதற்கு தகுதியானவராகவும் ஆக்கியது எது? அது உங்கள் மீதும் என் மீதும் உள்ள அவரது உறுதியான அன்பு! நாம் பாவிகளாக இருந்தபோதே ,​​நம்மைச் சுற்றியுள்ளவர்களால் நாம் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே ,​​​​நம் சொந்த மனசாட்சியே நம்மைக் கண்டித்தபோதே , ​​கர்த்தராகிய இயேசுவின் கிருபை ஒன்றே நம்மைத் தேடிவந்தது,அவர் தொண்ணூற்றொன்பதை விட்டு விட்டு காணாமல் போன என்னை தேடி வந்தார.அவர் நமக்காக இறந்தார்,நம் மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.அவர் எப்பொழுதும் நம்மைக் கவனத்தில் கொள்கிறார்.அவர் நம்மைப் பற்றி நினைக்காமல் ஒரு கணம் கூட கடந்து போவதில்லை.அல்லேலூயா !!!

ஒரு தாய் தன் மார்பில் குழந்தையை மறந்துவிட்டு,தான் பெற்ற குழந்தையின் மீது இரக்கம் காட்டாமல் இருக்க முடியுமா? அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று அவர் கூறுகிறார். ! அவருடைய இரக்கம் ஒருபோதும் குறையாது.கைகளை உயர்த்தி ஆட்டுக்குட்டியானவரை வணங்குவோம்.அவர் ஒருவரே எல்லா கனத்திற்கு பாத்திரர் மற்றும் நம்மை முழுவதுமாக இரட்சித்து,மகிமை மற்றும் கௌரவத்தால் முடிசூட்ட வல்லவர்!ஆமென் 🙏

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_139

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

23-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6 )NKJV

தேவனின் ஆட்டுக்குட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் நீக்குவதைக் கண்டோம் . (யோவான் 1:29)
ஆட்டுக்குட்டியாக கொல்லப்பட்ட இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததையும்,இப்போது பரலோகத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியையும் பார்க்கிறோம். இவை இரண்டும் தீவிர முரண்பாடுகளாக இருக்கின்றன.

பூமியில் தேவனின் ஆட்டுக்குட்டியாக,அவர் சாந்தமாக இருந்தார். அவர் பலியிடுவதற்கு ஆட்டுக்குட்டியாகவும்,மயிர் கத்தரிப்பவருக்கு செம்மறி ஆடாகவும் கொண்டு செல்லப்பட்டார்,ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை,மாறாக அவர் தேவனின் கோபத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார்,ஏனென்றால் அவர் பாவம் செய்யாதவர் நமக்காக பாவமாக மாறினார்,அதனால் தான் அவர் தேவனிடம்,மனிதகுலதிற்காக உரிமையோடு பரிந்து பேசமுடிந்தது .

ஆனால் இப்போது,நம்மை தேவனிடம் சமரசம் செய்தபடியினால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார்,ஆகையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், ஒடுக்குபவர்களுக்கு நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றுவதற்கு பரலோகத்தின் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ஆதிக்கம் செய்யும் ஆட்டுக்குட்டியானவராக இருக்கிறார்.

என் பிரியமான நண்பர்களே, இந்த வாரம், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியனவரால் நிறைவேற்றப்பட்ட தேவனுடைய நீதியை உங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அவர் 4 வது முத்திரை மற்றும் 5 வது முத்திரையைத் திறந்தபடியால் – எல்லா தீமைகளிலிருந்தும் (அது மரணத்திற்கு கூட வழிவகுத்திருக்கலாம்) பாதுகாப்பின் ஆசீர்வாதம் மற்றும் இயேசுவின் பெயரில் உங்களுக்கு நீதியையும்,பரிபூரண ஆசீர்வாதங்களையும் வழங்குகிறது!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_126

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

20-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

1. அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.( II இராஜாக்கள் 7:1) NKJV

கிமு 9 ஆம் நூற்றாண்டில் மன்னர்கள் காலத்தில் சமாரியா நகரம் கடுமையான பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக்குறையை அனுபவித்து வந்தது. உண்மையில் அவர்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பது முக்கியமில்லாத ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் பசியைத் தணிக்க எதையெல்லாம் சாப்பிட்டார்கள் என்று விவரிப்பது மிகவும் அருவருப்பானதாக இருக்கலாம். அது ஒரு பரிதாபகரமான காலமாக இருந்தது.

உதாரணத்திற்கு நைஜீரியாவில்-ஒரு பையில் 5 கிலோ சிறந்த தரம் கோதுமை மாவு (இன்றைய வேதப் பகுதியில் உள்ள மெல்லிய மாவுக்கு சமம்) விலை நைரா 12,000.இன்றைய பொருளாதார சூழலில் எலிசா தீர்க்கதரிசியின்,தீர்க்கதரிசன வார்த்தையை நான் எடுத்துக் கொண்டால், _ஒரு ஷெக்கல் என்பது நைரா 290 அல்லது 300 என்று சொல்லலாம். (1 ஷெக்கல்=N 300/-).
அப்படியென்றால்,அந்த நாட்களில் தேவனின் அதீத அன்பின் தாக்கத்தை அவருடைய மக்கள் மீது உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
மேலே உள்ள எடுத்துக்காட்டில்,40 மடங்கு (40% அல்ல)விலை சரிந்தது .அதாவது நைரா 12,000மாகிய மாவு விலை சரிந்து நைரா 300 வரை மாறியது . என்ன அற்புதம்!

ஆம் என் பிரியமானவர்களே, தேவன் நம்மை இதே பாணியில் ஆசீர்வதிப்பார்,மேலும் நாம் கிருபையின் காலகட்டத்தில் இருப்பதால் நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார் !

ஆகவே ,இன்று நமக்கு தேவைப்படுவது நமது விசுவாசம் மட்டுமே! தேவனின் ஆட்டுக்குட்டியானவர் தனது சொந்த இரத்தத்தை நம்மை மீட்க விலையாகக் கொடுத்தார் என்று விசுவாசியுங்கள்.அவர் நம்மை “என்றென்றும் நீதிமான்களாக” தகுதிப்படுத்தினார்.பூமியில் என் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் நான் கிறிஸ்துவின் தியாகத்தில் தேவனின் ஐசுவரியங்களை அதாவது (கிருபை ) பெறுவதற்கு நான் தகுதி பெற்றுள்ளேன் என்பதே இதன் பொருள்.

என் பிரியமானவர்களே, நம்மில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் இயல்பாக “கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதி” என்று சொல்லுவதற்கு அவருடைய கிருபையை ஊக்கத்துடன் தேடுவோம்.நமக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் நீதி இன்று தேவனின் ஐசுவரியத்தை நமக்குத் திறக்கிறது!! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_118

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

19-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6-7 NKJV

20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.(ரோமர் 16:20) NKJV..

மக்கள் கவலைப்படுகிறதினால்,பதஷ்டமடைகிறார்கள்,சுய கட்டுப்பாட்டை இழக்கிறார்கள், ஆக்ரோஷமாக மாறுகிறார்கள,கஷ்டப்படுகிறார்கள்,தூக்கமின்மை ,பீதியடைந்து தாக்குதல்கள் அடைகிறார்கள் மற்றும் உணர்ச்சி முறிவு ஆகியவற்றின் விளைவாக தீர்க்க முடியாத சேதங்களில் முடிவடைகிறார்கள்.

கடவுள் அமைதியின் உருவானவர். அவர் ஒருவரே மனித குலத்திற்கு அமைதியை வழங்க முடியும். அவர் சமாதானத்தைக் கொண்டுவர கர்த்தராகிய இயேசுவின் மூலமாக வேலை செய்கிறார். இயேசு அமைதியின் ராஜா! அவர் மனிதகுலத்தின் மீது விதிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பைத் தானே ஏற்றுக்கொண்ட தேவ ஆட்டுக்குட்டியானவர்.*எனவே, நீங்களும் நானும் எல்லாப் புரிதலையும் கடந்த அமைதியைப் பெறலாம்..

என் அன்பானவர்களே,தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் மீது உங்கள் கவலைகளை வைத்து விடுங்கள்,ஏனென்றால் அவர் உங்களை கவனித்துக்கொள்கிறார்.தேவனிடம் உங்கள் பிரார்த்தனைகளில் உங்கள் கவலைகள் மற்றும் அச்சங்களை ஒப்படையுங்கள்.உலகில் எந்த மருந்தோ, சிகிச்சையோ கொடுக்க முடியாத ஒரு அற்புதமான அமைதியை அவர் உங்களுக்கு வழங்குகிறார் ! அல்லேலூயா !

அவர் இந்த நாளில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கி, இயேசுவின் பெயரில் நீண்ட காலமாக உங்களை வாட்டியெடுக்கும் உங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குகிறார்..உங்கள் அமைதிக்காக ஆண்டவர் ஏற்படுத்திய நாள் இன்று,அதனால் மகிழ்ச்சியடையுங்கள்! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_116

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

17-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.(வெளிப்படுத்துதல் 5:1,7) NKJV.

இயேசு கிறிஸ்துவாகிய,தேவனின் ஆட்டுக்குட்டி மட்டுமே போற்றுவதற்கு தகுதியானவர் மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனின் கையிலிருந்து சுருளை எடுத்து அதன் முத்திரைகளைத் திறக்க பாத்திரராயிருந்தார்,ஏனென்றால் அவர் தனது இரத்தத்தால் அனைத்து பாவிகளையும் மீட்டவர்;
அதன் காரணமாக அவர் ஒருவரே வானத்திலும் பூமியிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியையும்,நியாயத்தையும் கொண்டு வர முடியும்;
மேலும்,அவருடைய இரத்தத்தின் காரணமாக, படைப்பாளருக்கும்,அவரது படைப்புக்கும் இடையேயும் அவரது படைப்புகளுக்கு மத்தியிலும் இணக்கத்தை ஏற்படுத்த அவரால் மட்டுமே முடியும்.

7 முத்திரைகளைத் திறப்பது தேவனுடைய படைப்பின் மீதுள்ள ஆசீர்வாதங்களைத் திறக்கும்.மேலும் ஒவ்வொரு மனிதனின் மிக உயர்ந்த நோக்கமான தேவ ஆசீர்வாதத்தையும் பெறுவதாகும்.அதாவது, மனிதனைக் குறித்த சித்தத்தையும்,நோக்கத்தையும் அறியக்கூடிய தேவனின் கிருபையைப் பெறுவார்கள். இது எந்த மனிதனும் இதுவரை கண்டிராத, கேட்டிராத,மனிதனின் இதயத்தில் தோன்றியிராததாயிருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது “மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட,விவரிக்க முடியாத ஆசீர்வாதம்”என்று அழைக்கப்படுகிறது.

ஆம் என் அன்பானவர்களே,தேவனின் சிறந்த ஆசீர்வாதம் இந்த நாள் உங்களுடையதாகும்.தேவனின் ஆட்டுக்குட்டியானவர் இந்த 7 முத்திரைகளைத் திறந்தார்,ஒவ்வொரு முறையும் அவர் அதைத் திறக்கும்போது, ​​ஒரு தனித்துவமான ஆசீர்வாதம் வெளியிடப்படுகிறது. தேவனுடைய ஆட்டுக்குட்டியின் 7 மடங்கு ஆசீர்வாதமே என்றென்றும் உங்கள் பங்காகும். நான் இதை எழுதுகையில், கடவுளின் அற்புதமான பிரசன்னத்தை உணர்கிறேன், இந்த விசுவாசத்தில்,இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு வெளியிடுகிறேன்ஆமென் 🙏 !

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_106

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

16-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:5,6) NKJV

என் அன்பு நண்பர்களே, இந்த வாரம் தொடங்கும் போது, ​​விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன என்பதை தீர்க்கதரிசனமாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

வேதத்தில் உங்களுக்குத் தெரிந்த எல்லா அதிகாரங்களிலிருந்தும் அவருடைய வாக்குறுதி வசனங்களை தீர்க்க தரிசனமாக அறிக்கை செய்ய முயற்சித்திருக்கலாம்.அல்லது நீங்கள் இரவும் பகலும் உங்கள் சக்தியை மீறி அயராது ஜெபித்திருக்கக் கூடும், உங்களிடமிருந்த கொஞ்ச பலத்துடன் பலமுறை உபவாசம் இருந்திருக்கலாம்.
உங்கள் வேதனையான பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் எல்லா வழிகளையும் முயற்சித்திருக்கலாம் – அது நிதி நெருக்கடிகள், நோய்கள், தீர்க்கப்படாத நீதிமன்ற வழக்குபிரச்சனை அல்லது உங்கள் குழந்தையின் எதிர்காலம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மேலோங்கியிருக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியானவர்,பல ஆண்டுகளாக உங்களை நெருக்கிய இந்த பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளார் .
பிதாவின் நீதியை நிறைவேற்றுவதை விவரிக்கும் சுருளை எடுக்க ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே தகுதியானவர் என்பதால் தம் கையில் எடுத்தார் – உங்கள் வாழ்க்கையைப் பற்றிய இறுதிக் கூற்றை கூற அவரே வல்லவராயிருக்கிறார்.அல்லேலூயா!

ஆகவே,தேவ ஆட்டுக்குட்டியைப் போற்றி வணங்குங்கள்! அவரே உங்கள் மூச்சு.அவர்தான் உங்கள் உயிர். அவர்தான் உங்கள் எதிர்காலம்.அவர் உங்களுடையவர்,நீங்கள் அவருடையவர்.அவருடைய இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது.
அவருடைய ஆசீர்வாதங்கள் நீதிமான்கள் மீது தங்கியிருக்கின்றன: உங்களுக்காக உயிரைக் கொடுத்த ஆட்டுக்குட்டியானவரின் காரணமாக விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் இன்று உங்கள் பங்கு! அல்லேலூயா!! ஆமென் 🙏 !

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_117

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

13-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6) NKJV

பரிசுத்த ஆவியின் காரணமாகவே தேவன்,தேவனாயிருக்கிறார்.பரிசுத்த ஆவியானவர் மூலம், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்,அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்,அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அல்லேலூயா!

நேற்று நாம் பார்த்தது போல், ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் கொண்ட ஆட்டுக்குட்டி,தேவனின் பண்புகளை உருவகப்படுத்துகிறது.ஆட்டுக்குட்டியானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மற்றும் ஏழு கொம்புகளும்,ஏழு கண்களும்,தேவனாகிய பரிசுத்த ஆவியின் முழுமையையும்,மகத்துவத்தையும் குறிக்கிறது.

ஏழு கொம்புகள்,உலகத்தின் எல்லாவற்றின் மீதும் பரிசுத்த ஆவியின் முழுமையான மற்றும் பரிபூரண ஆதிக்கத்தைக் குறிக்கின்றன.அவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் இறையாண்மை கொண்டவர்.
ஏழு கண்கள்,எல்லா இடங்களிலும் அவருடைய பிரசன்னத்தைப் பற்றி பேசுகின்றன, இதன் விளைவாக ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் நேரடியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்கிறார்.இது உண்மையிலேயே அருமை! இந்த விழிப்புணர்வைத்தான் சங்கீதக்காரன் பின்வருமாறு கூறுகிறார், “உம் ஆவியிலிருந்து நான் எங்கு செல்ல முடியும்? உமது முன்னிலையில் இருந்து நான் எங்கே ஓடிப்போக முடியும்?” சங்கீதம் 139:7.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் நட்பை விரும்புகிறார்.அவர் உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை விட நெருக்கமாக இருக்க முடியும்.இன்றைய சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவர் உங்கள் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் .
என் அன்பானவர்களே,பரிசுத்த ஆவியானவரை ஒரு நண்பராக உங்கள் வாழ்வில் வர அழைப்புவிடுங்கள் , அவர் இயேசுவின் நாமத்தில் உன்னத ஆசீர்வாதங்களை இன்றே வெளிப்படுத்துவார்!ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

கிருபை நற்செய்தி தேவாலயம் .

g12

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

12-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6) NKJV

இயற்கையான புரிதலுக்கு அப்பால் உள்ள தேவனின் சிறந்த முறையைப் பார்க்க ஆண்டவரின் அன்பான அப்போஸ்தலன் யோவான் இப்போது பரலோகத்திற்கு அழைக்கப்படுகிறார் – அது விடுதலை, ஆசீர்வாதம், மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய வழிபாட்டின் ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான தெய்விக வழியை காண்பிப்பதாகும்.

ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் கொண்ட ஆட்டுக்குட்டியான தேவனின் யதார்த்தத்தின் உருவகப் பிரதிநிதித்துவத்தை வெளிப்பாட்டின் மூலம் யோவான் பார்க்கத் தொடங்குகிறார்.ஆட்டுக்குட்டியானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும்,ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் முழுமையையும்,மகத்துவத்தையும் குறிக்கிறது.

அன்பான அப்போஸ்தலன் யோவான் விளக்கியதும், அவருடைய வழிகாட்டியான யோவான் ஸ்னாநகர் போதித்து வெளிப்படுத்தியதும் ஒரே காரியம் தான் அதாவது தேவ ஆட்டுக்குட்டியாக,பூமியில் கிறிஸ்துவின் முதல் வருகையையும்,அவர் உலகத்தின் பாவத்தை நீக்குபவர், மற்றும் அவர் மீது பரிசுத்த ஆவியானது தங்கியிருக்கும் என்ற தூய வெளிப்பாட்டினை கூறினார்கள்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே,உங்கள் தேவை எதுவாக இருந்தாலும்,ஆன்மீகமாக இருந்தாலும் சரி, இயற்கையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, தனிப்பட்டதாக இருந்தாலும் சரி, பொருள் அல்லது பொருளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையில் இந்த ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவது அல்லது வெளிப்படுத்துவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே கூடும் . இதை ஆட்டுக்குட்டியானவர்,பரிசுத்த ஆவியானவருடன் இணைந்து காரியங்களைச் செயல்படுத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவரே தேவ ஆட்டுக்குட்டியை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார், இந்த வெளிப்பாட்டை நீங்கள் பெற்றவுடன், உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.ஆமென் 🙏
பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே, உமது நாமம் பரிசுத்தப்படுவதாக! இயேசு நாமத்தில் சொல்லப்படாத, கேள்விப்படாத மற்றும் முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்கும் இந்த நாளில் தேவ ஆட்டுக்குட்டியின் ஞானத்தையும் வெளிப்பாட்டையும் எங்களுக்குத் தந்தருளும்..ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

கிருபை நற்செய்தி தேவாலயம்