Author: vijay paul

img_93

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கிறது!

11-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கிறது!

6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (வெளிப்படுத்துதல் 5:6,7) NKJV

முழு மனித இனத்தின் மீட்பிற்காக, தியாகத்தை குறிக்கும் “தேவ ஆட்டுக்குட்டி” என்ற எளிய உருவகத்தை யோவான் நம் ஆண்டவர் இயேசுவுக்கு பயன்படுத்துகிறார்.உலகத்தின் பாவத்தைப் போக்க,ஆட்டுக்குட்டியானவர் தனது சொந்த இரத்தத்தைச் சிந்தினார் (யோவான் 1:9).

ஆட்டுக்குட்டியானவர்,சாந்தகுணமுள்ளவர் என்றாலும் பலவீனமானவர் அல்ல.எல்லா தேவதூதர்களை விட வலிமையானவர் கர்த்தராகிய இயேசு,ஏனென்றால் சர்வவல்லமையுள்ள தேவனின் வலது கரத்திலிருந்து நம் எதிர்காலத்தை சித்தரிக்கும் சுருளை எந்த தேவதூதராலும் அருகில் கூட செல்ல முடியவில்லை ஆனால் ஆட்டுக்குட்டியான இயேசு தன் தியாகத்தின் நிமித்தம் அந்த சுருளை எடுத்து அதை வெளிப்படுத்தவும் வல்லவராயிருக்கிறார்.

ஆட்டுக்குட்டி ஒரு உதவியற்ற ஜீவன், அப்படியே இயேசு உதவியற்ற நிலையில் சிலுவையில் தொங்கினார், அனைவராலும் கைவிடப்பட்டார் மற்றும் தேவனால் கூட கைவிடப்பட்டார், ஏனென்றால் அவர் முழு உலகின் அனைத்து பாவங்களையும் சுமந்து தீர்த்தார். ஆனால் அவர் ஏழு ஆவிகளைக் கொண்டவராகக் காணப்படுகிறார்,அவர் சர்வ வல்லமை வாய்ந்தவர் மற்றும் சர்வத்தையும் அறிந்தவர் என்பது அதன பொருள் ஆகும்.அவைகள் தேவனின் பண்புகள் ஆகவே அவர் தேவன்.

கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே , இன்றும் நீங்கள் தனிமையில் இருந்தாலோ அல்லது துரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, உதவியற்ற நிலையில் இருந்தாலோ அல்லது எல்லா நீதியும் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டதாகத் தோன்றினாலும்,கலங்காதிருங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள் இதோ நற்செய்தி , ஆட்டுக்குட்டியானவரே உங்கள் பாதுகாப்பு. அவரே உங்கள் நீதி. இக்கட்டான நாளில் அவரே உங்களின் உதவியாளர்.உங்களுக்கு எதிராக நின்ற அனைத்தையும் அவர் முறியடித்துவிட்டார். அவருடைய இரத்தம் உங்கள் எல்லா பாவங்களையும் கழுவி, உங்களை என்றென்றும் ஆசீர்வதித்தது. உலகம் என்ன சொன்னாலும், நீங்கள் உங்களை எப்படி பார்த்தாலும் எல்லாம் வல்ல தேவனின் கண்களுக்கு முன்பாக அவர் உங்களை நீதிமான்களாக்கினார். அல்லேலூயா!

இன்று உங்கள் நாள்! தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியதால், எல்லா ஆசீர்வாதங்களும் இயேசுவின் நாமத்தில் உங்கள் மீது தங்கியிருக்கும் .ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_87

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் பிரச்சனைக்கான இறுதி தீர்வாகும்!

10-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் பிரச்சனைக்கான இறுதி தீர்வாகும்!

2. புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
7.அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்தனர் :
(வெளிப்படுத்துதல் 5: 2,7-8) NKJV

கிறிஸ்துவின் அன்பிற்குரிய அப்போஸ்தலர் யோவான் மிக உயர்ந்த பரலோகத்தில் அவர் கண்டவற்றின் ஒரு அறிக்கையை இங்கே விளக்குகிறார்.தேவன் யோவானை கிருபையுடன் பரத்திற்கு அழைத்துச் சென்று,அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தினார்.தேவன் உங்களையும் இந்த நாளில் பரத்திற்கு அழைத்துச் சென்று யோவானுக்கு காண்பித்த அனைத்தையும் காண்பிக்க முடியும்,ஏனென்றால் அவர் ஒரு பாரபட்சமற்ற தேவன் மற்றும் அவர் ஏன் அதைச் செய்கிறார் என்றால் அவருடைய நன்மையின் நிமித்தமாகவே அன்றி நமது நற்செயல்களினால் அல்ல. அல்லேலூயா !

எனது அன்பு நண்பர்களே,பரலோகத்தில் எப்போதும் மனித குலத்தின் தேவைகள் மற்றும் அழுகைக்கு தீர்வுகளை கொண்டு வரவே ஆலோசனை நடைபெறுகிறது. பிரச்சனையின் மூல காரணத்தை அவர்கள் ஒருபோதும் விவாதிப்பதில்லை அல்லது பிரச்சனைக்கு யார் காரணம் என்று ஆராய்வதில்லை. மாறாக,பிரச்சினைகளைத் தீர்க்க யாரிடம் அணுகி சுகம், மறுசீரமைப்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு வர முடியும் என்பதை ஆலோசிக்கிறார்கள்.

ஒருவேளை பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது என்று அவர்கள் கண்டால், அவர்கள் அனைவரும் உடனடியாக உலகின் பாவத்தை (பிரச்சனையை) சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை பார்க்கிறார்கள்.தேவ ஆட்டுக்குட்டியானவரிடம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு மட்டுமல்லாமல், இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவரே தீர்வாக இருக்கிறார்.

ஆம் கிறிஸ்த்துவுக்குள் அன்பானவர்களே, இதோ,ஆட்டுக்குட்டியான இந்த இயேசுவே உங்களை குணப்படுத்துபவர், உங்கள் மீட்பர், உங்கள் ஆசீர்வாதம். உங்கள் மேன்மை மற்றும் உதவிக்காக நீங்கள் அவரைப் பார்க்கும்போது,அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.இன்றும் கூட இயேசுவின் நாமத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பால், உங்கள் பிரச்சினையைத் தீர்க்க ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். ஆமென் 🙏

உங்களை நீதிமான்களாக்கிய எப்போதும் சுத்திகரிக்கும் அவருடைய இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதி என்று விசுவாசமாய் அறிக்கையிட்டு, இன்று தேவனின் ஒப்பற்ற வல்லமையை அனுபவியுங்கள் இன்று உங்கள் பிரச்சனைகளுக்கு ஆட்டுக்குட்டியானவர் மூலம் நிச்சயம் தீர்வு உண்டு.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் பிரச்சனைக்கான இறுதி தீர்வாகும் !.

கிருபை நற்செய்தி தேவாலயம் .

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

09-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

7.அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்தனர் :
(வெளிப்படுத்துதல் 5:7-8) NKJV

என் அன்பான நண்பர்களே ,தேவன் உங்களுக்காக சிறந்த திட்டங்களை வைத்திருக்கிறார்.இது வரை யாரும் பார்த்திராத, கேட்டிராத, மனிதனுடைய இருதயத்தில் தோன்றிராத ஆசீர்வாதங்கள் உங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது.1 கொரிந்தியர் 2:9.கூறப்பட்டபடி தேவனிடமிருந்து உறுதியான வாக்குறுதி இருப்பதால் ,இந்த மாதத்தில் தேவன் அதை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.. ஆமென்!

ஆம் என் பிரியமானவர்களே, நாம் ஒரு புதிய வாரத்தைத் தொடங்கும்போது, ​​இந்த நாளிலிருந்து தேவனின் திட்டங்கள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால், கேள்வி என்னவென்றால்,நமக்காக தேவனுடைய எல்லா திட்டங்களையும் சுமந்து இருக்கும் சுருளைக் கர்த்தராகிய இயேசுவைத் தவிர மற்ற ஒருவராலும் திறக்க முடியாதபடி தேவன் ஏன் செய்ய வேண்டும்?

ஏனென்றால், உங்களுக்காகவும் எனக்காகவும்,மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும் துன்பங்களைச் சந்திக்க,பாவங்களை சுமக்க,சிலுவையில் மரிக்க தயாராக இருந்த இயேசுவானவருக்குத்தான் புகழும்,தகுதியும் சேர வேண்டும்.இங்கு குறிக்கப்படும் ஆட்டுக்குட்டியான இயேசு,தேவனின் சாந்தத்தோடும் மனத்தாழ்மையயோடும்,மனிதகுலத்தின் துன்பத்தை ஏற்க தயாராக இருந்த நோக்கத்தின் நிமித்தமாக தேவன் அவரை நிகரற்றவராகவும், என்றென்றும் தகுதியுடையவராகவும் ஆக்க்கினார் !

ஆகவே பலியான ஆட்டுக்குகுட்டியான இயேசுவினுடைய இரத்தம் உங்களுக்காக அவருடைய திட்டங்களை வெளிப்படுத்துகிறது. இந்த வாரம், கர்த்தர் உங்களுக்காக தேவனின் இணையற்ற மற்றும் உன்னதமான திறவுகோலை கொண்டு நமக்கு முன்குறிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் வெளிப்படுத்துகிறார்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!.

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை தகுதியும்,வலிமையும் உடையவராய் ஆக்குகிறது!.

06-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை தகுதியும்,வலிமையும் உடையவராய் ஆக்குகிறது!.

5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். (வெளிப்படுத்துதல் 5:5-6) NKJV

அந்தச் சுருளின் முத்திரைகளைத் திறப்பதற்குத் தகுதியான மற்றும் வலிமையான எவரும் காணப்படாததால், யோவான் அழுதுகொண்டிருந்தார்.அப்போது மூப்பர்களில் ஒருவர்,யூதா கோத்திரத்தின் சிங்கமாகிய இயேசுவைக் காட்டி அவருக்கு ஆறுதல் கூறினார்.ஆனால் யோவான் பார்க்கையில்,ஆட்டுக்குட்டியானவரான இயேசுவைக் கண்டான்.

சிங்கத்தை விட தைரியமும் வலிமையும் உடையவர் யார்? ஆட்டுக்குட்டியைவிட சாந்தகுணமுள்ளவர் யார்?

இயேசுவே மரணம், பாதாளம் மற்றும் பிசாசை வென்ற யூதா கோத்திரத்தின் சிங்கம் மேலும் உலகின் பாவங்களுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரும் அவரே.

ஆம் என் அன்பானவர்களே,மகிழ்ந்து களிகூறுங்கள், இயேசுவின் இரத்தம் உங்கள் எல்லா பாவங்களையும் நீக்கி,தேவனின் சிறந்ததை உங்களுக்கு வெளிப்படுத்தத் தகுதியானது.
தேவனின் ஆட்டுக்குட்டியானவரின் இந்த அம்சத்தை மட்டும் அறிவது அவர் தியாகத்தின் பாதியை மட்டுமே அறிவதாகும்.ஆனால்,மகிழுந்து களிகூறுங்கள்!இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற உன்னதனமான சத்தியம் உங்களையும்,என்னையும் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் மேற்க்கொண்டு எல்லா வெற்றிக்கும் பாத்திரராக்குகிறது.இதுவே உண்மையான சத்தியம்.அல்லேலூயா!

உங்களை என்றென்றும் மிகவும் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதற்காக இயேசு ஆட்டுக்குட்டியாக கொல்லப்பட்டார்.மற்றும் உங்களை என்றென்றும் வலிமையுள்ளவர்களாக ஆக்குவதற்காக சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற இடிமுழக்க தொனியுடன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா!ஆமென் 🙏

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிங்கமும்,ஆட்டுக்குடியானவருமாய் இருப்பவருக்கு நிகரானவர் யார்! பரம்பொருளேப் போற்றி ( PRAISE ADONAI ) !!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை தகுதியும்,வலிமையும் உடையவராய் ஆக்குகிறது!.
.
கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்- அது உங்களுக்கான தேவனுடைய மிக சிறந்ததாகும் .!

05-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்- அது உங்களுக்கான தேவனுடைய மிக சிறந்ததாகும் .!

4. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.(வெளிப்படுத்துதல் 5:4-5) NKJV.

6. எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
7. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? (பிரசங்கி 8:6,7).

மனுகுலத்தைக் குறித்து எல்லா தகவல்களுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதை யோவான் அறிந்திருந்தார், மேலும் யோவான் உட்பட உங்களையும்,என்னையும் உள்ளடக்கிய ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் அவர் தனது சுருளில் அனைத்தையும் எழுதியுள்ளார்.ஆனால்,அதில் எழுதியிருந்தவைகளை அவர் அறியாதபடி அந்த சுருள் முத்திரையிடப்பட்டிருந்ததால் யோவான் மிகவும் மனதுருகி அழுதார்.

எனக்கு அநேக நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்? இவை எப்பொழுது நிறைவேறும்,எந்த வகையில் இவை நிகழும் என்று யாரால் சொல்ல முடியும்? நாம் இதை அறியாமல் இருக்கும் போது துன்பம் அதிகரிக்கிறது.நாம் சிறந்ததை எதிர்பார்க்கிறோம், ஆனால் அது தாமதமாகும்போது சிறந்ததை விட குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். ஆம்,எதுவுமே நடக்காதபோது வேதனை அதிகரிக்கிறது,எப்போது நடக்கும் என்று தெரியாமல் வாழ்வில் ஒரு இலக்கில்லாமல் தத்தளிக்கிறோம் .

ஆனால் என் பிரியமானவர்களே,தேவன் உங்களுக்காக சிறந்ததைத் திட்டமிட்டிருந்ததால்,அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த அவர் தனது சொந்த குமாரனை ஆயத்தப்படுத்தி,நிறுத்தினார் அவர் தான் நம் நாதர் இயேசு கிறிஸ்து! அல்லேலூயா.

உங்களுக்காக தேவனின் சிறந்ததை வெளிப்படுத்த தேவன் தேர்ந்தெடுத்த நபர் இயேசு,இன்றே உங்களுக்கான தேவனுடைய நேரம் (KAIROS MOMENT ).இன்றே உங்கள் இரட்சணிய நாள்(ACCEPTED TIME) .அவர் தனது பரிசுத்த ஆவியை அனுப்பியதன் மூலம் தனது திட்டங்களை நிறைவேற்றுகிறார் (வெளிப்படுத்துதல் 5:6).

உங்கள் இருதயத்தைத் திறந்து, கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய பரிசுத்த ஆவியையும் உங்கள் இருதயத்தில் வரவேற்கவும்.நீங்கள் உங்கள் இதயத்தைத் திறக்கும்போது,உங்களுக்கான தேவனுடைய சிறந்தது அடங்கியிருக்கிற இலக்கை இயேசுவின் நாமத்தில் திறக்கிறார். ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்-உங்களுக்கான தேவனுடைய மிக சிறந்ததாகும்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

04-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

1. கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
2. என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
(சங்கீதம் 139:1-3) NKJV

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சர்வவல்லமையுள்ள தேவன்,தம் வலது கையில் முன்னும் பின்னுமாக எழுதப்பட்ட சுருளில்,உங்களையும் என்னையும் பற்றிய முழுமையான புரிதலை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் மேற்கண்ட வசனங்களில் சங்கீதக்காரன் மிகவும் அழகான வார்த்தைகளில் ஒப்புக்கொண்டு வெளிப்படுத்துகிறார்.

ஆனால் என் அன்பானவர்களே,இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது –
பரிசுத்த வேதாகமத்திலிருந்து அல்லது இந்த நாளுக்கான கிருபை (GFYT) மூலம் நாம் படிக்கும்போது நாம் தெரிந்துகொள்ளும் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற ஞானம்
மற்றும்
அவர் என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்ற வலுவான ஆன்மீக உள் விழிப்புணர்வைக் கொண்டுவரும் ஞானம் ,இது பரிசுத்த ஆவியிலிருந்து நேரடியாக வருகிறது.

பிந்தையது ஒரு அனுபவ அறிவாகும், இது அவரது இறையாண்மையின் விருப்பத்திற்கு முற்றிலும் சரணடைவதற்கு நம்மை வழிநடத்துகிறது,எல்லா நேரங்களிலும்,சூழ்நிலைகள் சாதகமாக இல்லாத போதிலும்அவரைப் புகழ்ந்து பேசுங்கள்.ஏனென்றால், தேவன் நம் வாழ்க்கையை தம் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

இந்த அனுபவ அறிவு, படிப்படியாகவும் இறுதியில் நம்மை உன்னதமான இலக்கின் திறவுகோலுக்குக் கொண்டுசெல்லுகிறது என்று நான் நம்புகிறேன். அல்லேலூயா!

இதுவே உன்னதமான இலக்கைத் திறப்பதற்கான நமது பிரார்த்தனையாக இருக்க வேண்டும்:- ”நான் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய துன்பங்களின் ஐக்கியத்தையும், அவருடைய மரணத்திற்கு இணங்க,மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை எந்த வகையினாலாகிலும் நான் அடையவேண்டும் என்று பிலிப்பியர் 3:10-11ல் கூறியபடி வேண்டுகிறேன் .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

03-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
17.தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
18. அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். (சங்கீதம் 139:16-18) NKJV.

சாதி,மதம், நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனைப் பற்றிய ஞானம் மற்றும் புரிதல் நம் உண்மையான தேவனுக்கு மட்டுமே உண்டு என்கின்ற சத்தியத்தை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.

நம்மைக்குறித்த அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் கூட்டினால் பூமியின் மணலின் எண்ணிக்கையை விட அதிகம்! இது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாததும்,நம் சிந்தைக்கு எட்டாததுமாய் இருக்கிறது !.

நீங்களும் நானும் உருவாவதற்கு முன்பே இவை அனைத்தும் அந்த சுருளில் எழுதப்பட்டுள்ளன.உங்கள் முழு வாழ்க்கை வரலாற்ற்றை வரைந்து அதன் பாதுகாவலராக இருப்பவர் தேவன் மட்டுமே.அவரே நமது விசுவாசத்தை தொடங்குகிறவரும் மற்றும் முடிப்பவராயிருக்கிறார்.அவரே ஆல்பா மற்றும் ஒமேகா.அவர் பெயர் இயேசு! அல்லேலூயா!!

ஆம் என் அன்பானவர்களே,இயேசுவே உங்களுடைய மற்றும் என்னுடைய வாழ்க்கையின் ஒமேகாவாயிருக்கிறார்.உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களிலும் அவர்தான் இறுதி முடிவைக் கூறுவார் இந்த மாதத்தில் அவர் உங்களைப் பற்றிய உன்னதமான இறுதிச் சொல்லை வெளிப்படுத்துகிறார,அவர் உங்களை உயர்த்தி என்றென்றும் ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!

பரிசுத்த ஆவியே வாரும் ! எங்கள் வாழ்க்கையில் முழுவதுமாய் ஆட்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்குகிறோம்,இதன்மூலம் இயேசுவின் பெயரில் எங்கள் வாழ்க்கையில் தேவனின் இறுதிக்கூற்றை புரிந்துகொண்டு அனுபவிக்க எங்களுக்கு உதவுவீராக.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

29-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.( வெளிப்படுத்துதல் 1:8,18) KJV

என் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும் வேளையில், ஆண்டவராகிய ​​இயேசுவை கிருபையுடன் நமக்கு போதித்த பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன், நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்திற்காக,ஆத்துமாக்களின் மேய்ப்பவராகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காக வெளிப்படுத்தினார்,

பரிசுத்த ஆவியானவர் மூலமாக வரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வெளிப்பாடு மட்டுமே நம் வாழ்வில் தேவனின் அற்புத வல்லமையை கொண்டு வர முடியும்.

ஒவ்வொரு முறையும், நாம் ஒரு சவாலை எதிர்கொள்கிற நேரத்தில்,நாம் பரிசுத்த ஆவியானவரிடம், இயேசுவை வெளிப்படுத்தும்படி கேட்கிறோம்.மரணம் உட்பட நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அவரே இறுதி முடிவைக் கூறுகிறார். உண்மை என்னவென்றால், மரணமும் நரகமும் கூட சுதந்திரமாக இயங்க முடியாது, ஏனென்றால் பாதாளத்தின் மற்றும் மரணத்தின் சாவிகள் – இயேசுவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.அவரே ஒமேகாவும்,அதாவது முடிவுமாயிருக்கிறார்.

நோய், வறுமை, இழப்புகள், தோல்விகள் மற்றும் மரணம் உட்பட பலவற்றால் உங்களை அழிக்க முடியாது.ஏனென்றால், நீங்கள் இயேசுவை உங்கள் ஒமேகா என்று முடிவு செய்ததால் இவை எதற்கும் உங்கள் மீது எந்த முடிவுகட்டும் வல்லமையும் இல்லை.

பல சமயங்களில் நம் சொந்த மனப்பான்மையே தேவனின் இணையற்ற அன்பையும் கற்பனை செய்ய முடியாத வல்லமையையும் நம் வாழ்வில் பெறுவதைத் தடுக்கிறது.
கடந்த பல ஆண்டுகள் முன் நடந்த விஷயங்களில் நம் மனசாட்சி நம்மிடம் தவறு கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. நமது வரையறுக்கப்பட்ட புரிதல் (LIMITED KNOWLEDGE) நமது வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தடுக்கிறது. எனவே,நமக்குத் தொடர்ந்து பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவின் வெளிப்பாடு தேவைப்படுகிறது ,குறிப்பாக இயேசு நமக்காக பாவமாக மாறினார்,இதன் விளைவாக நாம் கிறிஸ்துவில் தேவ நீதியாக இருக்கிறோம் என்ற வெளிப்பாடு. .

இந்த உணர்தல் மற்றும் கிறிஸ்துவில் நாம் தேவநீதி என்ற தீவிர ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையைக் கொண்டு வர முடியும், ஏனெனில் அவை இறுதியாக பாவக் காரணிக்கு பரிகாரம் அளிக்கிறது ..

என் பிரியமானவர்களே, இந்த மாபெரும் விசுவாசஅறிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள்-நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி. இந்த செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி. அடுத்த மாதம் தேவன் உங்களுக்கு இன்னும் பெரிய மற்றும் அற்புதமான ஆசீர்வாதங்கள் வைத்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

28-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி,எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். (II கொரிந்தியர் 10:4-5 )NKJV

வலுவான நம்பிக்கையோடு( STRONGHOLD) ஒரு காரியத்தை மனதில் கோட்டைக்கட்டி நம்புபவர்கள்- பொதுவாக வாதங்கள், கையாளுதல்(MANIPULATION), பெருமை பேசுதல், தன்னை உயர்த்திக் கொள்ளுதல், புண்படுத்தப்பட்டவர்களின் உணர்வைக் கூட பொருட்படுத்தாமல் தேவனைப் பற்றிய அறிவுக்கு எதிராக (FAULTY PATTERN ) ஒரு கருத்தை முன்வைப்பதில் குறியாக இருப்பார்கள் .

வாதத்தில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. நான் வாதத்தில் தோற்றாலும், அந்த நபரை வெல்வது தான் மிகவும் முக்கியம். இதுவே கிறிஸ்துவின் வெளிப்பாடு – கிறிஸ்துவின் சாயல்.

தூய ஆவியின் மூலம் மட்டுமே மனக்கோட்டைகளுக்கு எதிராகப் போராடி வெல்லமுடியும். அதைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்-ஒருவருடைய சொந்த வாழ்க்கையில், அவருடைய ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு ஒவ்வொரு சிந்தனையையும் மனநிலையையும் எடுத்துச் சென்று அவர் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.அதுவே இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு நம்மை கீழ்ப்படுத்துவதாகும். இதுதான் நம்மை நீதிமான்களாக்கிய தேவநீதி , நம்முடைய கீழ்ப்படிதல் அல்ல கிறிஸ்துவின் கீழ்ப்படிதலே தேவநீதி (ரோமர் 5:18,19).

இதன் அடிப்படையில் என் சுபாவம்(RIGHTEOUS NATURE )கிறிஸ்துவின் சுபாவத்தை போல புதுசிருஷ்டியாக்கப்பட்டிருக்கிறது – புதிய சிருஷ்டி( NEW CREATION ). ஒவ்வொரு மனிதனும் இயேசுவை ஆண்டவராகவும்,இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் போது இந்த தேவ நீதி பரிசாக வழங்கப்படுகிறது .

உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் இயேசுவை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, உங்களுக்காக சிலுவையில் (உங்கள் இடத்தில்) அவர் மரித்து பிதாவுக்கு கீழ்ப்படிந்ததே உங்களை நீதிமான்களாக்கியது என்றும் அவருடைய உயிர்த்தெழுதல் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது என்றும் விசுவாசியுங்கள் .நீங்கள் கிறிஸ்துவிலிருந்து பெயர்க்கப்பட்ட தேவநீதி என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் மற்றும் இதனால் தேவன் உங்களை உள்ளேயும் அதற்கேற்ப வெளியேயும் முழுமையாக மாற்றுகிறார்.உங்கள் மனம் இந்த புதிய முறைக்கு ஏற்ப மறுரூபமடைகிறது,இந்த மனதில் மறுரூபமாக்கப்பட்ட புது சிருஷ்டியின் உன்னத வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

27-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.(யோவான் 1:45-46 )NKJV
52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். (யோவான் 7:52) NKJV

ஒரு தவறான மனநிலை என்பது, மேலே உள்ள வசனத்தில் நாம் பார்ப்பது போல, கடந்த கால அனுபவங்கள் காரணமாக வலுப்பெற்று சிந்தனையில் காணப்படும் ஒரு நிலையான வடிவமாகும்.
இயேசுவின் நாட்களில் அறிஞர்கள் மற்றும் ‘ஆன்மீக குருமார்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் தேவனின் மேசியாவாகிய கிறிஸ்து,கலிலேயா மாகாணம்,மற்றும் குறிப்பாக நாசரேத் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து தோன்றுவதற்கான சாத்தியத்தை மறுத்தனர் ஏனென்றால் அந்த மனநிலை உருவாக அவர்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட அறிவையும் கடந்த கால அனுபவங்களையுமே நம்பினர்.

அனுபவம் மிகவும் அவசியமானது,ஆனால் நம்பிக்கையின் கோட்டையாக மாறும் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை சார்ந்திருப்பது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

யூதர்கள் தங்கள் மேசியாவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தவறான சிந்தனை முறையால் அவரைத் தவறவிட்டனர், அது அவர்களை ஏமாற்றி,அசுத்த
ஆவிகளுக்குத் தங்கள் மனதைத் திறந்து, மிகப்பெரிய முடிவில்லா ஆசீர்வாதத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்தது.

என் பிரியமானவர்களே, “உங்கள் சுயபுத்தியில் சாயாமல்,உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.” (நீதிமொழிகள் 3:5) என்ற வசனத்திற்கேற்ப உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பரிசுத்த ஆவியானவரை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்,அவர் தாம் விரும்பிய புகலிடத்திற்கு இன்று உங்களை வழிநடத்துகிறார்,இதுவே இன்று இயேசுவின் பெயரில் உங்களுக்காக முன்குறிக்கப்பட்ட உங்கள் எதிர்காலமாக மாறுகிறது . ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .