Author: vijay paul

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

06-06-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

.என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்(.எபிரெயர் 2:9) NKJV.

என் அன்பானவர்களே, ஒவ்வொரு முறையும் நான் மேற்கண்ட வசனத்தைக் காணும்போது, ​​இரண்டு விஷயங்கள் எப்போதும் என் இதயத்தை வெகுவாகக் கவர்ந்தன:

1. உண்மையிலேயே இயேசு எல்லோருக்காகவும் (நீங்களும் நானும் உட்பட) மரணத்தை ருசித்தார்.அவர் அதை நமக்காக செய்திருந்தால்,நீங்களும் நானும் ஏன் மரணத்தைச் ருசிக்க வேண்டும்?
2. உங்கள் மரணத்தையும் என் மரணத்தையும் இயேசு மரித்து, நம்மை மகிமையினாலும்,கனத்தினாலும் முடிசூட்டியிருந்தால் ,உங்களுக்கும் எனக்கும் இன்று அந்த கனமும் ,மகிமையும் எங்கே?

நாம் பெரும்பாலும் உண்மையை பார்க்காமல் நிஜதிற்க்கு ஆளாகிறோம், எப்பொழுதும் நமது இயல்பான உணர்வுகளைப் பார்க்கிறோம் மற்றும் செயல்பட ,புலனுக்கு எட்டும் சூழ்நிலைகளைப் பார்க்கிறோம், மேலே குறிக்கப்பட்ட உண்மையை நாம் இழக்கிறோம்.

நாம் பார்க்கும்அல்லது உணரும் நிஜத்திற்கும் , இயேசுவின் நற்செய்தியிலிருந்து நாம் கேட்கும் உண்மைக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருக்கலாம். ஆனால், உண்மை முன் நிஜம் தலைகுனியவும்,உண்மை வெற்றிபெறவும் நாம் விடாமுயற்சியுடன் அதைப் பற்றிக்கொள்ள அழைக்கப்படுகிறோம் !

உண்மை என்னவென்றால்,நான் மரிக்காமல் இருக்க இயேசு மரணத்தை ருசித்தார், அதற்கு இணையாக நாம் மகிமை மற்றும் கனத்துடன் முடிசூட்டப்பட வேண்டும் .
நாம் அதை நம்ப வேண்டும். நமக்கு பிதா கொடுத்த பங்கை உறுதிப்படுத்துவதற்கும் அதில் நடப்பதற்கும் நமது தொடர்ச்சியான விசுவாச அறிக்கையே இதை விளைவிக்கும் .

ஆம், நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன், அது என்னை மரணத்திலிருந்து தப்பிக்கச் செய்தது .
*நான் ஒரு புதிய சிருஷ்டி (கிறிஸ்து என்னில் வாழ்கிறார்) மகிமை மற்றும் கனத்துடன் நான் முடிசூட்டப்பட்டவன் – தெய்வீகமான,நித்தியமான, யாராலும் வெல்ல முடியாத, அழிக்க முடியாத மனிதன்! . அல்லேலூயா! .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

02-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

.இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,(II பேதுரு 1:17) NKJV.

கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எவ்வளவு அன்பாக நேசித்தார் என்பதை நாம் புரிந்துகொண்டால், அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் உண்மையிலேயே போற்றுவோம்!

கடவுள் நம்மை மிகவும் நேசித்ததால் அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்கு பதிலாக நம் இடத்தில் இறக்கும்படி கொடுத்தார். இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தம்மையே ஒப்புக்கொடுத்து, நம் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவர அவருக்கு பரிபூரணமாக கீழ்ப்படிந்தார். எனவே,கடவுள் இயேசுவைக் குறித்து மிகவும் மகிந்து அவரில் பிரியமடைந்தார் !

இயேசு தம்மை நமக்காகக் கொடுத்த விதம் பிதாவை மிகவும் பிரியப்படுத்தியது போல, நாமும் இயேசுவை முழு மனதுடன் நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வது பிதாவுக்கு மிகவும் பிரியம் அளிக்கிறது.

இயேசுவின் பலியை நமக்காக உணர்ந்து பெற்றுக் கொள்ளும்போது, ​​நாமும் பிதாவிடமிருந்து அதே சாட்சியைப் பெறுவோம், “இவர் என் அன்பு மகன்/ மகள், இவரில் நான் மிகவும் பிரியமாயிருக்கிறேன்” .

என் அன்பானவர்களே , இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள். ஆமென் 🙏

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

 

31-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.(யோவான் 11:25-26) NKJV.

இந்த மாத இறுதிக்கு வந்த வேலளையில் , இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ,நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.தன் மரணத்தால் ,மரணத்தை என்றென்றும் ஒழித்தார்.  (2 தீமோத்தேயு 1:10). இயேசுவை மட்டும் நம்பினால், நாம் ஒருபோதும் இறந்து போவதில்லை !  அல்லேலூயா!

விசுவாசிப்பது என்பது மிகவும் எளிதானது.அது சாதி,மதம், கலாச்சாரம்,சமூகம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமாகும்.மனிதர்களின் இரட்சிப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக கடவுள் அதற்குண்டான காரியங்களை மிகவும் எளிதானதாக செய்தார்.நாம் அவரை விசுவாசிக்க மாத்திரம் வேண்டும் ! அவ்விசுவாசம் மற்றும் சந்தேகம் என்பது சுய நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதாரங்களைத் தேடுவதன் விளைவாகும்.

அவருடைய உறுதியான அன்பையும், அயராத நன்மையையும் ,நம்மீது கொண்ட நீண்ட பொறுமையையும நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் , நாம் நிச்சயமாக அவரை நன்றியுடன் அரவணைப்போம் .

அவருடைய அன்பையும் ,நன்மையும் நினைத்தால் நிச்சயம் நன்றியுணர்வு உண்டாகும்.விசுவாசம் என்பது இதுதான். !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

30-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது . (அப்போஸ்தலர் 2:14, 16) NKJV.

தேவனுடைய வல்லமையின் மிகவும் அசாதாரணமான நிரூபணம் அப்போஸ்தலர் 2-ல் திடீரென்று நிகழ்ந்தது கர்த்தராகிய இயேசுவை நம்பியதால், தங்கள் சொந்த மக்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் .யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்க தரிசன நிறைவு இதுவே என்று பேதுரு தைரியமாக எழுந்து நின்று விளக்குகிறார் .

எருசலேமில் வசித்த பலரில் 120 பேர் மட்டுமே மேலறையில் கூடியிருந்தனர் .ஆனால் கடவுள் அவர்கள் பக்கம் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எப்போதும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், இகழப்பட்டோர் மற்றும் கொடிய நோயால் மரணப்படுக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பக்கம்தான் எப்போதும் இருக்கிறார் .

கடவுளின் வியத்தகு செயல் அனைத்து மக்களையும் திகைக்க வைத்தது, அதனால் பேதுரு எழுந்து நின்று “அதுதான் இது” என்று பிரகடனப்படுத்தினார், கடந்த காலங்களில் கடவுள் வாக்குறுதியளித்த, தீர்க்கதரிசனமாக கூறிய அனைத்தும் இப்போது நிறைவேறியதாக அவர் அறிவித்தார்! புதிய சகாப்தம் தொடங்கியது ,இன்றும் இப்போதும் கடவுள் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார் , ஏனென்றால் இந்த ஆசீர்வாதத்தை முறையாக நமக்காக தன் உயிரை விலையாக கொடுத்த இயேசுவின் நிமித்தம் பரிசுத்த ஆவியானவர் நிஜப்படுத்த வந்திருக்கிறார். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இன்று கடவுள் வாக்களித்த அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும் நாள்! இது தான் உண்மையிலேயே பெந்தெகொஸ்தே கொண்டாட்டம் !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது கொண்டாடுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

29-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:4, 8) NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குள் தம் ஆவியை ஊதினார்.அன்று, கர்த்தராகிய இயேசுவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அவர் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்த போது, ​​அவர்களை “என்றென்றுமுள்ள ஆசீர்வதித்தினால் “ஆசீர்வதித்தார், அவர்களை பிதாவின் வாக்குறுதியான பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி கட்டளையிட்டார் –
சபை உருவான ஆரம்பகாலத்தில் நடந்த இந்த நிகழ்வு பிற்காலத்தில் ,விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டும் ஒரே அனுபவம் என்று சிலர் நினைத்தார்கள்.

என் அன்பானவர்களே , அந்த இரண்டும் ஒன்றல்ல. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் . இவரே நம்மில் உள்ள கிறிஸ்து. நாம் புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்! இந்த பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் என்றென்றும் வசிப்பவர்.
இருப்பினும்,பிதாவின் வாக்குத்தத்தமாக ,விசுவாசிகள் மீது அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் ஒரு வித்தியாசமான அனுபவம் . விசுவாசிகள் மீது வந்த பரிசுத்த ஆவியானவர் இப்பொது அவர்கள் வாழ்க்கைக்கு தலைவராக இருக்கிறார் .

தண்ணீரைக் குடிப்பதும், தண்ணீரில் முற்றிலும் மூழ்குவதும் வேறு ,வேறான காரியம் . பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது நாம் தண்ணீரைக் குடிக்கின்ற அனுபவம் .நம்மீது உள்ள பரிசுத்த ஆவியானவர் நாம் தண்ணீரில் மூழ்கும், நம் வாழ்வின் தலைவராக செயல்படும் அனுபவமாக இருக்கிறர் .  பரிசுத்த ஆவியானவர் நம்மிலும்,நம்மீதும் இருக்கின்ற இவை இரண்டையும் இயேசுவின் நாமத்தில் இன்றே அனுபவிப்போம்- ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

25-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். I யோவான் 5:11 NKJV
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.I கொரிந்தியர் 1:9 NKJV

நித்திய ஜீவன் அளவுகோலாக வரையறுக்கப்படவில்லை. இது முடிவற்ற வாழ்க்கை மட்டுமல்ல. இது தரமான அனுபவமும் கொண்டது. நித்திய ஜீவன் என்பது நித்தியமானவருடனான உறவு.
நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அழைப்பு, அவருடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நல் உறவையும் மற்றும் ஐக்கியத்தையும் கொள்ள வேண்டும் என்பதாகும். ஏனென்றால், இயேசு நித்தியமானவர் !

அவர் அனைவருடனும் இருக்கிறார் ஆனால் அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது நித்திய ஜீவன். இதன் மூலம் நித்திய ஜீவன் நம் வாழ்வில் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமல்ல மாறாக நாம் நித்திய ஜீவனைஅனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.

புதிய சிருஷ்டி – எப்பொழுதும் இயேசுவோடு தொடர்ந்து ஐக்கியம் கொள்வது என்று அர்த்தம் .ஏனென்றால்,அவருடைய உயிர்த்தெழுதலின் சுவாசத்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள்.
அவரைப் போலவே நீங்களும் இப்போது இந்த வாழ்வில் நித்தியமாக இருக்கிறீர்கள் (1 யோவான் 4:17) ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

24-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவான் 17:3 ) NKJV .
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது . ( I யோவான் 1:3) NKJV.

அன்பான அப்போஸ்தலரான யோவான், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவது ‘நித்திய ஜீவன்’ என வரையறுக்கிறார் . * *இந்த அறிவு அவரோடு ஒருங்கிணையவும் / நல் நட்ப்பையும் விளைவிக்கிறது , இதை வேறுவிதமாகக் கூறினால், கடவுளை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகிறது.

பிராண நண்பர் இயேசு எனக்கு இருக்கிறார் !” என்று ஒரு அழகான பாடல் உள்ளது, அவரை ஒரு நண்பராக வைத்திருப்பதன் மூலம் நாம் எப்படி தேவையற்ற வலிகளைத் தவிர்க்கலாம், அமைதியுடன் நடக்கலாம், சோதனைகளை வெல்லலாம் என்று அந்த பாடல் சொல்கிறது. _இயேசுவைப் போல் உண்மையுள்ள ஒரு நண்பனை உலகம் முழுவதும் தேடினாலும் அப்படி ஒருவரை நாம் காண முடியாது என்று பாடலாசிரியர் தனது இதயப்பூர்வமான அனுபவத்தைக் கூறுகிறார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த, இயேசுவுக்கு மிக நெருக்கமான அப்போஸ்தலன் யோவான்- அவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவரை அறிந்தவர், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சிலுவையின் அடிவாரத்தில் நின்ற ஒரே அப்போஸ்தலன், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அப்போஸ்தலன். இன்று ,அவர் அப்படியான உறவையும் ,நட்ப்பையும் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கொண்டிருக்க நம்மை அழைக்கிறார்.

என் அன்பானவர்களே இயேசுவுடன் பேசத் தொடங்குங்கள், நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக அவருடன் ஒரு ஆழமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள். யோவான் மற்றும் பாடலாசிரியர் இயேசுவை சிறந்த நண்பராகக் கொண்ட அனுபவம் இன்று உங்களுக்கும் இருக்க விசுவாசிக்கிறேன் மற்றும் வேண்டிக்கொள்கிறேன் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

23-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:1-2 NKJV

ஆதாம் கடவுளிடமிருந்து பெற்றது ‘ஜீவ சுவாசம்’ அன்றி ‘நித்திய ஜீவன்’ அல்ல. அவர் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், அவர் இறந்திருக்க மாட்டார்.
ஆதாமும்,ஏவாளும், அவருக்குக் கீழ்ப்படிவார்களா என்று கடவுள் பார்க்க விரும்பினார்?
ஆனால் ! அவர்களோ கீழ்ப்படியாமல் பாவம் செய்தனர் . இதன் நிகர விளைவு என்னவென்றால், பாவமும் மரணமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் மனிதன் என்றென்றும் வாழ வேண்டும் என்ற கடவுளின் முதன்மையான நோக்கம் முறியடிக்கப்பட்டது.

சுவாரஸ்யமாக, ஏதேன் தோட்டத்தின் நடுவில் இரண்டு மரங்கள் வைக்கப்பட்டன, இரண்டும் அறிவின் மரங்கள் – நன்மை தீமை பற்றிய அறிவு மற்றும் கடவுளின் அறிவு (ஜீவ விருட்சம் ). ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சமாகிய கடவுளைப் பற்றிய அறிவைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் நன்மை தீமை அறியும் மரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்தை தங்கள் வாழ்வில் அனுமதித்தனர்.

மனிதனை இறுதிவரை விட்டுக்கொடுக்காத இறைவனுக்கே துதி. முதலாம் ஆதாம் இழந்ததை தம்முடைய குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனைப் பெறுவான் என்று அவரை இரண்டாம் ஆதாமாக அனுப்பினார் . மனிதன் இழந்ததை விட அவன் பெற்றது மிக அதிகம். அல்லேலூயா! கடவுளுக்கே துதி ,கனம் மகிமை !! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Good reads

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

22-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவான் 3:16 NKJV‬‬

நித்திய வாழ்வு என்பது நம் வாழ்வில் கடவுளின் விருப்பம் ஆகும் .  நித்திய ஜீவன் அவரில் இருப்பது போல, நம்மில் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவருக்கும் அவருடைய முதன்மையான நோக்கம்.
நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு மிகவும் பெரியது மற்றும் அளவற்றது என்பதால் தான் அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைக் கொடுத்தார், இது கற்பனை செய்ய முடியாதது,ஆகையால் நிச்சயமாக நம்மில் உள்ள மிக உயர்ந்த ஆசீர்வாதம் நித்திய வாழ்வு!

இந்த நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
“விசுவாசிக்க வேண்டும் “
ஆம், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

நித்திய ஜீவன் என்றால் என்ன?
“ஒன்றான மெய்த் தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிவதே நித்திய ஜீவன்.” யோவான் 17:3

பிதாவாகிய கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிவதே நித்திய ஜீவன். ஒரு நபரை அறிவதற்கும் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இயேசுவை தனிப்பட்ட முறையிலும்,ஆழத்தோடு மற்றும் நெருக்கமாக அறிவதே நம்மை நித்தியமாக்குகிறது .

நாம் மீண்டும் பரிசுத்த ஆவியானவரால் பிறக்கும்போது இது சாத்தியமாகும்- கடவுளால் நாம் பிறந்தோம். இந்த “புதிய சிருஷ்டி” உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவாசத்தால் பிறந்தது, எனவே இது புதிய சிருஷ்டி என்று அழைக்கப்படுகிறது.
இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, ​​நீங்கள் கடவுளிடமிருந்து பிறக்கிறீர்கள்.நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் மாறுகிறீர்கள் !கடவுளின் வார்த்தையாகிய அழியாத விதையிலிருந்து நீங்கள் மீண்டும் பிறக்கும்போது, ​​​​உங்களுக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது!  அல்லேலூயா!! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

19-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் .(எபேசியர் 1:3 )

ஆதாமின் காலத்திலிருந்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலம் வரை,கடவுளின் ஆசீர்வாதங்கள் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் மட்டுமே . ஏனென்றால், கடவுள் மனிதனுக்கு பூமியைப் பற்றிய அதிகாரத்தை மட்டுமே கொடுத்தார் (உயர்ந்த வானம் கர்த்தருடையது, ஆனால் பூமியை அவர் மனிதர்களுக்குக் கொடுத்தார்.” சங்கீதம் 115:16 NIV )
இருப்பினும், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தனது உயிர்த்தெழுதலின் வல்லமையை ,புதிய சிருஷ்டி வாழ்க்கையை விசுவாசித்த அனைவருக்கும் ஊதினார், இப்போது ஆசீர்வாதங்கள் பரலோகத்திற்கு நீட்டிக்கப்படுகின்றன (“பின்னர் இயேசு அவர்களிடம் வந்து, “எல்லா அதிகாரமும் வானமும் பூமியும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.என்று ” மத்தேயு 28:18 NIV).குறிப்பிடப்பட்டிருக்கிறது .

ஆம் என் அன்பானவர்களே , நீங்கள் கிறிஸ்துவில் இருந்தால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி! நீங்கள் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ! நீங்கள் இப்போது பூமி மற்றும் பரலோகம் ஆகிய இரண்டின் ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.  அல்லேலூயா! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்