Author: vijay paul

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நமக்காக நியமிக்கப்பட்ட மகிமையின் ஆவிக்குரிய புரிதலைப் பெறச் செய்கிறது !

24-07-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நமக்காக நியமிக்கப்பட்ட மகிமையின் ஆவிக்குரிய புரிதலைப் பெறச் செய்கிறது !

6. அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
7. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

என் அன்பான அன்பர்களே,தேவனின் சித்தத்தை நாம் புரிந்து கொள்ளுவதோடு, ​​” ஆவிக்குரிய புரிதல்” என்று அழைக்கப்படும் கடவுளின் சித்தத்தின் 3 வது பரிமாணத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமான அம்சமாகும் .
தேவனின் சித்தத்தின் இந்த அம்சத்தை நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினால்,தேவனின் வழிகளில் இருந்து நீங்கள் ஒருபோதும் தடுமாறவோ அல்லது விலகவோ முடியாது.

கொலோசெயர் ஜெபத்தில் உள்ள இந்த ” ஆவிக்குரிய புரிதல்” மேலே உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி “மறைக்கப்பட்ட ஞானம்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த “மறைக்கப்பட்ட ஞானம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாக மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் அருளப்படுகிற தேவனின் மேலான ஞானம். இந்த உயர்ந்த ஞானத்தின் மூலம்,விசுவாசி, உலகத்தாரை விட ஒவ்வொரு வாழ்க்கைத் துறையிலும், சமுதாயத்திலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

கர்த்தருக்குள் என் அன்பானவர்களே,இந்த வாரம் இயேசுவின் நாமத்தில் அவருடைய மறைவான ஞானத்தை பெற்று வாழ்வில்அதிக உயரத்திற்கு செல்வதை அனுபவிப்பீர்கள் ! இதைப்பற்றிய தீர்க்கதரிசன வசனம் ஏசாயா 45:3ல் இருந்து வருகிறது, “உன் பெயரைச் சொல்லி உன்னை அழைக்கிற கர்த்தராகிய நானே இஸ்ரவேலின் தேவன் என்பதை நீ அறியும்படிக்கு, இருளின் பொக்கிஷங்களையும், மறைவான ஐசுவரியங்களையும் உனக்குத் தருவேன்.”

” நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்” என்று ஒப்புக்கொள்வதன் மூலமும், மிக முக்கியமாக, இயேசுவின் நாமத்தில் நம்முடைய உதவியாளரான பரிசுத்த ஆவியானவருடன் கூட்டு சேர்வதன் மூலமும் நமது இலக்கை நோக்கி ஓட இந்த வல்லமை வாய்ந்த வசனத்தின் மூலம் உரிமை கொண்டாடுவோம் ! ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நமக்காக நியமிக்கப்பட்ட மகிமையின் ஆவிக்குரிய புரிதலைப் பெறச் செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும் !

21-07-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும் !

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
(லூக்கா 1:34-35)

தேவனுடைய சித்தத்தின் “எப்படி”என்ற மூன்றாவது பரிமாணத்தில் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். தேவனின் சித்தத்தை நிறைவேற்றும் ஆற்றல்மிக்க வழியைப் புரிந்து கொள்ளுமாறு அன்னை மரியாள் தேவதூதரிடம் கேட்டது போல் “எப்படி” என்ற கேள்வி ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளது.

முழு மனித இனத்தையும் மீட்பதற்காக அவருடைய ஒரே பேறான குமாரன் பூமியில் பிறக்க தேவனுடைய நேரம் வந்தது .ஆனால், மனிதகுல வரலாற்றில் இதுவரை நிகழாத கன்னிப் பிறப்பு “எப்படி” என்ற உண்மையான கேள்வியை எழுப்பியது.

ஆம் என் அன்பானவர்களே ,இன்றும் கூட,நம் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற நிதிக் கடன், நமது தொழில் சம்பந்தமான தகுதியின்மை, மலட்டுத்தன்மை, உடலில் நிரந்தரக் கோளாறு அல்லது நீண்ட நாள் பலவீனப்படுத்தும் சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் நிலை முற்றிலும் சாத்தியமற்றது என்று தோன்றினாலும்,தேவன் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தை இன்று செய்வார். எப்படி? பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத்தான் !
அவர் மிகவும் அன்பான மற்றும் பிரியமான நண்பர்.அவர் உங்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும். பரிசுத்த ஆவியுடன் முழுமையாய் ஒத்துழைப்பதே உங்களை விடுவிக்க உதவும் .

நம் வாழ்வில் சாத்தியமில்லாத காரியங்கள் “எப்படி” நிகழும் என்று யோசிக்கும் வேளையில்,பரிசுத்த ஆவியானவர் அதை இன்றே செய்வார், இப்போதே செய்யவார்,என்ற சத்தியம் உறுதிப்படுகிறது .

“ பரிசுத்த பிதாவே, உமது சித்தத்தைப் பற்றிய அறிவால் என்னை முழு ஞானத்திலும் ஆவிக்குரிய புரிதலிலும் நிரப்புங்கள். இயேசுவின் நாமத்தில், மனிதக் கண்களுக்கோ,காதுகளுக்கோ, மனித உணர்வுகளுக்கோ தெரியாத ஆவிக்குரிய உண்மைகளால் நான் அறிவொளி பெறுவதற்காக, என்னைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி ஞானஸ்நானம் கொடுப்பீராக .

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்கள் எப்படி நம் வாழ்வில் சாத்தியப்படும் என்பதை அறிவதாகும்.!

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாருக்குறீர்கள் ! ஆமென் 🙏!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்களில் அவரது புரிதலை பெறுவதாகும் .!

20-07-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்களில் அவரது புரிதலை பெறுவதாகும் .!

“ஏரோது அரசனின் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பின்பு, கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசனாகப் பிறந்தவர் எங்கே? ஏனென்றால், நாங்கள் அவருடைய நட்சத்திரத்தை கிழக்கில் கண்டோம், அவரை வணங்க வந்தோம்.
மத்தேயு 2:1-2 NKJV

கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு கடவுளின் சித்தம் பற்றிய அறிவும், இரட்சகரின் பிறப்பைப் பற்றிய அவருடைய நேரத்தின் புரிதலும் இருந்தது.
அவர்கள் யூதர்கள் அல்ல, ஆனால் ஒரு உண்மையான தேவன் மீது எளிமையான நம்பிக்கை கொண்டிருந்த சாஸ்திரிகள். தேவன் ஒவ்வொரு மனிதனிலும், அவருடைய சித்தத்தைப் பற்றிய அறிவை வைக்கிறார் (“கடவுளைப் பற்றி அறியக்கூடியது அவர்களுக்குத் தெளிவாக உள்ளது, ஏனென்றால் கடவுள் அதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.” ரோமர் 1:19 NIV). மனிதர்கள் கடவுளுடைய சித்தத்தை நாடும்போது, ​ சித்தத்தை நிறைவேற்றும் நேரத்தை அறியும் கிருபை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அவருடைய சித்தத்தின் ஞானம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவருடைய சித்தத்தின் மற்றொரு பரிமாணம் அவர்களுக்குத் தேவைப்பட்டது – ஆவிக்குரிய புரிதல்!

ராஜாக்கள் வசிக்கும் எருசலேமில் யூதர்களின் ராஜாவை அவர்கள் தேடிக்கொண்டிருந்ததால் அவர்களுக்கு இந்த ஆவிக்குரிய புரிதல் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்,ஏனெனில் ராஜாக்கள் அரண்மனைகளில் வசிக்கிறார்கள் என்பது உண்மைதான்.ஆனால் மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று மீகாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய ஆவிக்குரிய புரிதல் அவர்களுக்கு இல்லை.

என் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்கு அந்த ஆவிக்குரிய புரிதலை வழங்க முடியும். இது ஆவிக்குரிய புரிதல், இயற்கையான பகுத்தறிவு அல்ல. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, ​​இந்தப் புரிதலைப் பெற பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைக்கு அவர் உங்களை வழிநடத்துவார்.

“_பரிசுத்த பிதாவே, உமது சித்தத்தைப் பற்றிய அறிவால் என்னை முழு ஞானத்திலும் ஆவிக்குரிய புரிதலிலும் நிரப்புங்கள்.இயேசுவின் நாமத்தில், மனிதக் கண்கள், காதுகள் மற்றும் மனிதப் புலன்களுக்குப் புலப்படாத ஆவிக்குரிய உண்மைகளால் நான் அறிவொளி பெறும்படி, பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி ஞானஸ்நானம் செய்யுங்கள். ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,ஆவிக்குரிய காரியங்களில் அவரது புரிதலை பெறுவதாகும்.!

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவை புரிந்துகொள்வதாகும் .!

19-07-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவை புரிந்துகொள்வதாகும் .!

9. இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,(கொலோசெயர் 1:9) NKJV.
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, கலாத்தியர் 4:4

தேவனின் சித்ததைப் புரிந்துகொள்வது தேவனைப் புரிந்துகொள்வது என்பதாகும் !
அது முக்கியமாக மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளது: 1. கடவுளின் சித்தம் என்ன (அறிவு) ; 2. அவர் எப்போது அவருடைய சித்தத்தை (ஞானத்தை) நிறைவேற்றுவார்; 3. அவர் தனது சித்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவார் (புரிதல்).

அவருடைய சித்தத்தை அறிவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அவருடைய சித்தத்தின் நேரத்தையும் (ஞானம்) அவர் சித்தத்தை (ஆன்மீக புரிதல்) எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.
உண்மையில், அவர் தனது சித்தத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பது மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் . இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நித்திய ராஜ்யத்தை அருளும் மேசியாவை அவர்களிடம் அனுப்புவதாக தேவன் வாக்குறுதி அளித்தார்.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னும் மேசியாவை அனுப்பினார். ஆனால், அவர் தனது சித்தத்தை நிறைவேற்றிய விதம்,ஒரு கன்னிப் பெண்ணை பரிசுத்த ஆவியின் வல்லமையால் கருத்தரிக்க வைத்து யூதாவின் நகரங்களில் மிகச்சிறிய நகரமான பெத்லகேமில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏழ்மையாய் பிறக்க வைப்பதாகும். ஆவிக்குரிய புரிதலின் இந்த பரிமாணம் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது மற்றும் மனித மனங்களுக்கு திகைப்பூட்டுவதாக இருந்தது, இதன் காரணமாகவே பெரும்பாலான யூத மனங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது .

யூதர்களின் ராஜாவாகிய அவர்களின் மேசியா ஒரு அரண்மனையில் ஒரு அற்புதமான மற்றும் பெருமைமிக்க ஆளுமையாகப் பிறப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தபோது, ​​​​இயேசு ஒரு கந்தல் துணியால் மூடப்பட்டு மாட்டுத் தொழுவத்தில் பிறந்து நாசரேத் என்ற ஒரு கிராமத்தில் ஏழை தச்சன் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் . தேவன் தனது சித்தத்தை நிறைவேற்றிய விதம் மனித எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக இருந்தது. இயேசுவின் காலத்து யூதர்களில் பெரும்பாலோர் இந்த விஷயத்தை முற்றிலுமாகத் தவறவிட்டார்கள் மற்றும் அவருடைய சித்தத்திற்கு எதிராகப் போராடினார்கள், அது கர்த்தராகிய இயேசுவைக் கொல்லவும் வழிவகுத்தது. ஆனால்,தேவன் தனது பணியை முழுமையாகவும் இறுதியாகவும் நிறைவேற்றியதன் மூலம் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இதுவே தேவன் சித்தத்தை அறிகிற ஞானமும் புரிதலும் ஆகும் .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, தேவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற வைராக்கியமும், அவருடைய சித்தத்தைச் செய்ய மனம் இருந்தாலும்,தேவனுடைய சித்ததுடன் போரிடாமல் இருக்க,அவருடைய சித்தத்தின் இந்த மூன்று பரிமாணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.

” பிதாவே , எல்லா ஞானத்திலும் ஆவிக்குரியப் விவேகத்திலும் உமது சித்தத்தைப் பற்றிய அறிவால் என்னை நிரப்புங்கள். ” ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவை புரிந்துகொள்வதாகும்.!

கிருபை நற்செய்தி தேவாலயம்

66

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படுவதாகும். !

18-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படுவதாகும். !

9. இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,(கொலோசெயர் 1:9) NKJV.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ,
அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த ஒரு வாக்கிய ஜெபம் மிகவும் ஆழமானது, அதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
அவர் கொலோசெயர்களுக்காக இந்த ஜெபத்தை ஜெபிக்கிறார், இது இன்று நமக்கும் பொருந்தும், கடவுளின் சித்தம் என்ன என்பதை அறிவது ஒரு விஷயம்,ஆனால் கடவுளுடைய சித்தம் எப்போது நடக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது முற்றிலும் மற்றொரு பரிமாணம்.

பிதாவின் சித்தத்தை அறிகிற ஞானம்,பிதாவின் நேரத்தைப் பற்றிய புரிதலை நமக்கு அளிக்கிறது.  கிரேக்க மொழியில் இது ” கைரோஸ்” அல்லது “கடவுள் தருணம்” என்று அழைக்கப்படுகிறது.  இது மிகவும் வல்லமை வாய்ந்தது!
பிதாவின் நேரத்தைப் பற்றிய இந்த அம்சத்தைப் புரிந்துகொள்ள போராடிய மாபெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான மோசேயின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு நாற்பது வயதாக இருந்தபோது, ​​இஸ்ரவேல் புத்திரராகிய தன் சகோதரர்களைசந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. ஏனென்றால், பிதா தன் கையால் அவர்களை விடுவிப்பார் என்பதை அவருடைய சகோதரர்கள் புரிந்துகொள்வார்கள் என்று அவர் நினைத்தார், ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. (அப்போஸ்தலர் 7:23, 25). இஸ்ரவேலின் மீட்பராக அவர் இருப்பார் என்பது கடவுளின் சித்தமாக இருந்தபோதிலும், அது சரியான நேரம் அல்ல. அவர் கடவுள் தருணத்தை புரிந்து கொள்ள மேலும் 40 ஆண்டுகள் ஆனது.

அப்பா பிதாவே,இயேசுவின் நாமத்தில் இந்த புரிதல் குறைபாட்டிலிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டுகிறோம் .

என் அன்பானவர்களே , நாம் அனைவரும் பிதாவின் நேரத்த்தை அறிவதில் தடுமாறுகிறோம். அதனால்தான், எல்லா ஞானத்திலும் ஆவிக்குரிய விவேகத்திலும் அவருடைய சித்தத்தைப் பற்றிய அறிவால் நாம் நிரப்பப்பட வேண்டும் என்று பவுல் ஜெபிக்கிறார்.
இந்த அற்புதமான பிரார்த்தனையை இன்று நாமும் ஜெபிப்போம்:
” பிதாவே , எல்லா ஞானத்திலும் ஆவிக்குரிய விவேகத்திலும் உமது சித்தத்தைப் பற்றிய அறிவினால் என்னை நிரப்புங்கள்.” ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படுவதாகும். !

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,நம்முடைய ஜெபங்களுக்கு பெரிய பலன்களை உடனே பெறச்செய்கிறது !

17-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,நம்முடைய ஜெபங்களுக்கு பெரிய பலன்களை உடனே பெறச்செய்கிறது !

இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் , (கொலோசெயர் 1:9)NKJV.

கிறுஸ்துவுக்குகள் அன்பானவர்களே !
ஜெபத்தில் முக்கியமானது என்னவென்றால்,அது பிதாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜெபிப்பதாகும் . நாம் எதிர்கொள்ளும் சவால்கள் நிமித்தமாக ஜெபிப்பது அல்லது நம் பெற்றோர்கள்,முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த விதத்தில் ஜெபிப்பது,நாம் சரியான முறை என்று நினைத்து ஜெபிப்பது அல்லது இயந்திர பாணியில் ஜெபிப்பது அல்லது சலிப்பான முறையில் பிரார்த்தனை செய்வது . இவை,எல்லாவற்றிலும் மிக முக்கிய கருத்து என்னவென்றால் நாம் பிரார்த்தனை செய்வது விரும்பிய பலனைத் தருகிறதா இல்லையா என்பதுதான் .

பிதாவின் செயல்பாட்டைக் காணும் விதமாக பிரார்த்தனை செய்கிறேனா? எல்லா வரையறைகளுக்கும் பிறகு,ஜெபத்தைப் பற்றிய எளிமையான உண்மை கருத்து ஒன்றுதான் , “ஆண்டவரே என்னால் முடியாது, ஆனால் உங்களால் மாத்திரம் முடியும்!” என்று ஜெபிப்பது .

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர்களுக்காக எப்படி ஜெபித்தார் என்று காட்டுகிறார், அவருடைய ஜெபம் மிகப்பெரிய பலனைத் தந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போஸ்தலன் பவுலுக்கு பிதா கற்றுக் கொடுத்த ஜெப முறையை நீங்கள் பின்பற்றினால்,இன்று நீங்களும் மிகப்பெரிய பலனைப் பெறுவீர்கள்.
இந்த பிரார்த்தனை எளிமையானது மற்றும் மிகவும் வல்லமை வாய்ந்தது!

அது இவ்வாறு கூறுகிறது, “பிதாவே,நாங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டுகிரோம் .”.
ஆம் என் அன்பானவர்களே, இந்த வாரத்தில் நாம் மேற்கண்ட பிரார்த்தனையில் கவனம் செலுத்துவோம் . இயேசுவின் நாமத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் மகத்தான தெய்வீக பலன்களை நீங்கள் காண்பீர்கள். அதை இன்றே காண்பீர்கள் ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,நம்முடைய ஜெபங்களுக்கு பெரிய பலன்களை உடனே பெறச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !

14-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் ; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (I கொரிந்தியர் 2:9-10) NKJV.

பரிசுத்த ஆவியானவர்,திரித்துவத்தில் ஒருவர்,தேவனின் மிகவும் நேசத்துக்குரிய நபர்.பிதா மற்றும் குமாரன் இருவரும் பரிசுத்த ஆவியை மிகவும் நேசிக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியானவர் உணர்ச்சிகள்,சிந்தை மற்றும் சித்தம் கொண்ட ஒரு நபர். அவர் எல்லாம் வல்ல இறைவன் . அவர் ஒருவரே தேவனை நமக்கு உண்மையாகவும்,தெளிவாகவும் புரிய வைக்க முடியும். அவரால் மட்டுமே தேவனின் நோக்கங்களை நமக்கு வெளிப்படுத்த முடியும். அவர் தேவனின் சித்தம் மற்றும் அவரது இரகசியங்களை வெளிப்படுத்துபவர். பூமியில் தேவனின் செயல்திட்டத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டின் பின்னணியிலும் அவர் இருக்கிறார்.
இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கு அறிவிக்க காபிரியேல் தூதர் வந்தபோது, ​​அந்த பரிசுத்த ஆவியானவரால் தான் அற்புதப் பிறப்பு ஏற்படும் என்று அறிவித்தார்.

என் அன்பானவர்களே , இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு அற்புதமான நண்பர். நீங்கள் அவருடன் ஒரு நண்பராகப் பேசலாம், நடக்கலாம். அது ஒரு அற்புதமான அனுபவமாகும்.அவரும் நீங்களும் ஒன்றாக மாறும்போது அதுவே,உங்கள் வாழ்க்கைப் பாணியாக மாறும். நீங்கள் இயற்கையாகவும் ஆன்மீகமாகவும் இருக்கிறீர்கள்.அது உண்மையிலேயே அற்புதமான அனுபவம்.பரிசுத்த ஆவியானவருடனான ஆழமான நெருக்கமானது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, . ஆமென் 🙏

அன்புள்ள பிதாவே ,பரிசுத்த ஆவியானவர் எனக்கும் மிக அருமையான பரிசு.என் கற்பனைக்கு அப்பாற்பட்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே என் வாழ்க்கையில் நிகழும். கர்த்தராகிய இயேசு,பரிசுத்த ஆவியானவர் என் வாழ்விலும் வசிப்பதற்காக தம்முடைய விலைமதிப்பற்ற இரத்தத்தைக் கொடுத்தார். இன்று, நான் அவரை என் வாழ்க்கையில் அழைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, இந்த நாளில் எனக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுங்கள் மற்றும் பரிசுத்த ஆவியால் என் வாழ்க்கை முறையை வடிவமைக்க உதவுவீராக . ! ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பரிசுத்த ஆவியின் மூலம் பிதாவின் சித்தத்தை பெறச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,தேவன் எனக்காக முன்குறித்த எதிர்காலத்தை பெற்றுத்தருகிறது !

12-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,தேவன் எனக்காக முன்குறித்த எதிர்காலத்தை பெற்றுத்தருகிறது !

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
(I கொரிந்தியர் 2:9) NKJV

” தேவன் ஆயத்தம் செய்தவை” என்பது கடவுளின் சித்தம் .அவருடைய சித்தத்திற்குப் பதிலளிப்பவர்களுக்காக அவர் ஏற்கனவே விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்.அவருடைய சித்த த்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அவர் மீதான நமது அன்பு நேரடியாக பரிமாணப்படும் .
மேலும், தேவனின் அன்பை நம்மீது மிகவும் உறுதியானதாகவும், தெளிவாகவும் ஆக்குகிற அவருடைய பரிசுத்த ஆவிக்கு நாம் எவ்வளவு நம்மைத் திறக்கிறோம் என்பது அவர் சித்தத்தை அறிய உதவுகிறது.

எவ்வளவு பாதகமான சூழ்நிலைகள் தோன்றினாலும்,தேவன் எப்போதும் நமக்குச் சிறந்ததையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணரும்போது,எந்த மனிதனும் பார்க்காத, கேள்விப்படாத அல்லது கற்பனை செய்யாத, கடவுளின் மறைவான ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துபவரான அவருடைய ஆவியானவருக்கு நாம் நம்மைத் திறக்கிறோம். இது மிகவும் அருமையான காரியம் !
தேவனின் நோக்கங்கள், உங்களுக்கு சாதகமாக இருப்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா!? அது தான் பரம பிதாவின் அன்பு !

_அன்புள்ள பிதாவே , எனக்காக நீங்கள் ஏற்கனவே தயார் செய்திருப்பதையும், என்னைப் பற்றிய அனைத்தையும் குறித்து உமது பரிசுத்த ஆவியானவரால் எனக்கு தெளிவுபடுத்துங்கள். எனக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் பெற இன்று காலை என் இதயத்தைத் திறக்கிறேன்,இயேசுவின் பெயரில் அவற்றைப் பெறுகிறேன் ! ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,தேவன் எனக்காக முன்குறித்த எதிர்காலத்தை பெற்றுத்தருகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

90

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !

12-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !

32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் .லூக்கா 12:32 NKJV‬‬.

11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?(மத்தேயு 7:11) NKJV‬‬

பிதாவின் மகிழ்ச்சி,அவர் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதே. இதுவே அவர் சித்தமாயிருக்கிறது.அவரே நம்முடைய பரம பிதா ! நாம் நம் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்க அறிந்திருந்தால்,பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா நமக்கு நல்லதைக் கொடுப்பது மிக அதிக நிச்சயமாயிருக்கிறது . ஒரு உண்மையான தகப்பன் தன் குழந்தைகளுக்கு நல்லதையே நினைப்பான், செய்வான். அப்படியானால் , சர்வவல்லமையுள்ள தேவன் நம் பிதா எப்பொழுதும் நமக்குச் சிறந்ததாக இருக்கும் நல்லதையே நினைக்கிறார்,அதையே செய்கிறார் என்பது அதிக நிச்சயம் .

சங்கீதம் 8:4-ல் நம் பிதாவாகிய தேவன் நம்மைப் பற்றி நினைக்காமல் ஒரு கணம் கூட கடந்துபோவதில்லை
என்று எழுதுகிறார்.மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதைக் கருத்தில் கொண்டு நினைத்தால் ,
நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பிதாவினுடைய அந்த பெரிய அன்பு எவ்வளவு அற்புதமாய் தோன்றுகிறது .

ஆம் என் பிரியமானவர்களே, நம்மைப் பற்றிய அவருடைய சித்தமான மற்றும் அற்புதமான எண்ணங்கள் நிஜத்தில் நிகழச் செய்வதற்கு, “உம் ராஜ்யம் வருவதாக , உமது சித்தம் நிறைவேரேட்டும் ..”என்று கேட்கும் நமது பிரார்த்தனை மட்டுமே அவரிடம் கொண்டு செல்கிறது.

ஜெபத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவருடனான நமது ஒத்துழைப்பு அவருடைய ஆழ்ந்த நோக்கங்களை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்துகிறது, அவருடைய அற்புதத்தை கண்டு உலகம் விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நிற்கும்.
இன்று உங்கள் நாள்! அவருடைய இரக்கங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ள அவருடைய தயவை ஈர்க்கும், அவருடைய நோக்கங்களை இயேசுவின் நாமத்தில் நிறைவேற்றும்!! ஆகவே இன்றே எழும்பி பிரகாசியுங்கள் !!! ஆமென் 🙏!

இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது,பூமியில் அவருடைய பெரு மகிழ்ச்சியைப் பெற்றுத்தருகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, நாம் பூமியில் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க அவருடைய சித்தத்தை பெறுவதாகும்

11-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, நாம் பூமியில் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க அவருடைய சித்தத்தை பெறுவதாகும்

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக ; லூக்கா 11:2 ‭NKJV.

பூமியில் பரலோக ஆட்சியைப் பிரதிபலிப்பது ஒவ்வொரு விசுவாசியின் மனப்பான்மையாக இருக்க வேண்டும்.
பூமியில் மட்டுமே பலவிதமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சட்டங்கள், விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது.
ஆனால் பரலோகத்தில், ஆட்சி செய்பவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார், அவருடைய சட்டங்களும் அவருடைய செயல் நெறிமுறைகளும்,அந்த மண்டலம் முழுவதையும் ஆளுகை செய்கிறது

மாறாக சாத்தான் பூமியில் ‘“பிரிவினையில் ஆட்சி செய்’” என்ற கொள்கையில் செயல்படுகிறான் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய பொல்லாத பிளவுபடுத்தும் திட்டத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி, “உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக”என்று ஜெபிப்பதுதான், இது பரலோகத்தில் இருப்பதைப் போல பூமியிலும் கடவுளோடும் அவருடைய சித்தத்தோடும் நாம் ஒன்றிணைந்திருப்பதை எதிரொலிக்கிறது.

அப்படியானால் கடவுளின் விருப்பம் என்ன? அவருடைய விருப்பம் என்பது அவருடைய சித்தத்தைக் குறிக்கிறது. _அவருடைய சித்தம் அவருடைய மகிழ்ச்சியாக இருந்தால், அவர் உங்கள் நன்மையை பார்க்க விரும்புகிறாரா அல்லது தீமையை பார்க்க விரும்புகிறாரா? நீங்கள் குணமடைவதை அவர் பார்க்க விரும்புகிறார் அல்லவா? உங்கள் பரந்த கற்பனைக்கு அப்பால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதை அவர் விரும்புகிறாரிலையா ? இவை அனைத்திற்கும் பதில் ஒரு பெரிய ஆம்! அவருடைய சித்தம் உங்கள் மிகப்பெரிய கனவுகளுக்கு அப்பாற்பட்டது! அல்லேலூயா !!!

ஆம் என் அன்பானவர்களே , கடவுள் தம்முடைய மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறார். உங்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு, அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் ‘குற்றவாளி அல்ல’ என்று அறிவிக்கும்படி கொடுத்தது, அதற்கு பதிலாக “நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி”.என்ற தெய்விக பரிமாற்றம் உண்டானது . * *இயேசு கிறிஸ்து மூலம் அவருடைய நீதி உங்களை வாழ்வில் ஆளுகை செய்ய வைக்கிறது. இது அவருடைய சித்தம் !
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று அறிக்கையிட்டு, அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்களினால் நிரம்பி வழிவதை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள் .ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, நாம் பூமியில் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவிக்க அவருடைய சித்தத்தை பெறுவதாகும்

கிருபை நற்செய்தி தேவாலயம்.