Author: vijay paul

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

10-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக ; லூக்கா 11:2 ‭NKJV.

பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களின் மீதும் தேவன் கொடுத்த ஆதிக்கத்தை மனிதன் பிசாசுக்கு இழந்த காலத்திலிருந்து, மனிதன் பிசாசின் தீய கட்டளைகளுக்கு ஆளானான். இதன் விளைவாக நோய்கள், கோளாறுகள், சீரழிவு, அழிவு, விரக்தி மற்றும் மரணதிற்கு உட்பட்டான்.

” உமது ராஜ்யம் வருவதாக,உமது சித்தம் நிறைவேறுவதாக ”என்பது ,ஆண்டவர் இயேசு போதித்தபடி, மனிதன்
இழந்த தனது ஆளுமையை மீட்டெடுக்க, நமது முதன்மையான ஜெப விண்ணப்பமாக இருக்க வேண்டும்.
ஆம் என் அன்பானவர்களே , நீங்கள் சூழ்நிலைக்கு பலியாவதை தேவன் விரும்பவில்லை. மாறாக, பிசாசின் தீய சூழ்ச்சிகளால் உங்களைப் பயமுறுத்த முயற்சிக்கும் எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.

பூமியில் அவருடைய ராஜ்ஜியத்தின் ஆட்சியும், உங்கள் வாழ்க்கையில் அவர் அருளிய மகிழ்ச்சியும், பிரதான எதிரிகளான பாவம் மற்றும் மரணத்திலிருந்து உங்களை மீட்க இரட்சகராகிய இயேசுவை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தது.
இந்த வாரம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளின் ஆதிக்கம் மேலோங்கும், மேலும் இயேசுவின் பெயரில் கடவுளின் மிக உயர்ந்த தயவையும்,கனத்தையும் நீங்கள் பெறுவீர்கள் ..ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!

07-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; (லூக்கா 11:2) NKJV‬‬
.
நமது அன்பான பிதாவுக்கு துதி மற்றும் கனத்துடன் தொடங்கும் பிரார்த்தனையானது நம் அப்பா பிதாவிடம் நெருங்கும் மிகவும் வல்லமை வாய்ந்த அணுகுமுறையாகும்.
ஒருவர் நம்முடன் நெருங்கி பழகினால் எப்போதும் நாம் அவருக்கு பரிச்சயமனதால் சில நேரங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் .ஆனால், தேவன் தேவனாகவே இருக்கிறார்.அவர் நம் பிதா என்றாலும் நமது நெருக்கமானது அவருடைய நீதியான தராதரங்களையும்,மகத்துவத்தையும் நமக்காக வளைக்க முடியாது . ” *உம் நாமம் பரிசுத்தபடுவதாக “என்றால் , ” அவர் கனத்துடன் மிகவும் மதிக்கப்படுகிவராயிருக்கிறார் “.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் உள்ளடக்கி, இந்தியா வரை தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தியிருந்த மன்னரும்,பேரரசருமாகியவர் எஸ்தெரின் கணவர். ராணி எஸ்தர் தனது கணவரிடம் ஒரு மனு செய்ய விரும்பியபோது, ​​​அவளுடைய அணுகுமுறையில் அவருக்கு உயர்ந்த மரியாதையும் கனமும் இருந்தது.

என் அன்பானவர்களே , நாம் தேவனை எவ்வளவு அறிந்திருந்தாலும், அவரைப் பற்றிய நமது அறிவுக்கு எப்போதும் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் . நாம் அனைத்தையும் அறிந்திருப்பது போல் நாம் அவரை அறிவோம் என்று கூறுவது சாத்தியமாகாது.அவருடைய வழிகள் ஆராய முடியாதவை.

செராஃபிம்களின் தரவரிசையில் உள்ள பெரிய தேவ தூதர்கள் கூட,தேவனுக்கு மிக நெருக்கமானவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் வல்லமை வாய்ந்தவர்களாகவும் புரிந்து கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் அவர்கள் ” பரிசுத்தர பரிசுத்தர் ” என்று துதிப்பதை நிறுத்துவதில்லை . . நான் இவற்றை விளக்க முற்பட்டால்,அந்த தூய்மையான வழிபாட்டின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தை இல்லாமல் போகும்.

எங்கள் பரம பிதாவே , நீங்கள் பெரியவர், மிகவும் போற்றப்படதக்கவர் .உங்களைப் போல வணக்கத்திற்கும் உயர்ந்த மரியாதைக்கும் தகுதியானவர் வேறு யாரும் இல்லை.உங்கள் வழிகளின் அற்புதத்தை கண்டு பிரமிப்பு மற்றும் பயபக்தியுடன் நிற்கிறோம். உமது பொறுமையும், நீடிய சாந்தமும் எங்களைத் பணியச்செய்கிறது , உமது உறுதியான அன்பு எங்களை வாஞ்சையோடுப் பணி செய்யும் ஊளியர்களாக்குகிறது.ஏனென்றால், உமது நிபந்தனையற்ற அன்புக்கு நாங்கள் அடிமைகள். எங்கள் இதயங்களில் ஆட்சி செய்ய இன்று காலை எங்கள் இதயங்களை உங்களுக்கு திறக்கிறோம் . ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அருமையை நமக்கு புரியச்செய்கிறது .!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அன்பான கரங்களால் நம்மை தழுவச் செய்கிறது !

06-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அன்பான கரங்களால் நம்மை தழுவச் செய்கிறது !

1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;(லூக்கா 11:1-2) NKJV.

நம்முடைய வாழ்க்கையில் ஜெபங்களுக்கு விரும்பிய பலனைக் காண வேண்டுமானால், இறைவனின் ஜெப முறை நமக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தபோது, ​​ தேவனை “எங்கள் பிதா” என்று அழைப்பதன் மூலம் அவர் உறவில் சொந்த உணர்வையும் நெருக்கத்தையும் கொண்டு வந்தார் . தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாகப் பெற்றிருக்கிறார். நாங்கள் அனாதைகளும் இல்லை, தெருவில் பிச்சை எடுப்பவர்களும் இல்லை. மாறாக , நாம் அவருடைய மகன்களாகவும் மகள்களாகவும் ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பினார்.  நாம் இயேசுவின் மூலம் தேவனுக்கு தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்று மாற்றப்படுகிறோம் .
பரலோக குடும்ப பந்தத்தை இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்தார்.

இன்று நம்மில் பலர் ,தாங்கள் யார் என்று அடையாளம் காணமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர், இது மக்களின் வாழ்க்கையில் பயங்கரமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,நாம் பரலோகத்தில் உள்ள சர்வவல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, நம்மைத் தம்முடைய சொந்த பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வதற்குத் தம்மைத் தாழ்த்தினார், இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் அவரைப் பற்றிய நமது அணுகுமுறை முற்றிலும் மாறும்.

அன்புள்ள தந்தையே, என்னை உங்கள் சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நான் தத்தெடுக்கப்பட்ட குழந்தையாக இருந்தாலும், என்னை உமக்கே சொந்தமாக்குவதற்காக உமது ஒரே
குமாரன் இயேசுவை தியாகம் செய்ததை நினைக்கும் போது, ​​உம் தியாகத்தை எண்ணி வியக்கிறேன், உங்களின் மாபெரும் தியாக அன்பிற்கு நான் இன்று பிரமிப்புடனும் வணக்கத்துடனும் நிற்கிறேன் !மிக்க நன்றி அப்பா பிதாவே ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அப்பா பிதாவின் அன்பான கரங்களால் நம்மை தழுவச் செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நம் பிரச்சனையின் தீர்வுகளை பரத்திலிருந்து பெற்றுத்தரச் செய்யும் !

05-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நம் பிரச்சனையின் தீர்வுகளை பரத்திலிருந்து பெற்றுத்தரச் செய்யும் !

1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; (லூக்கா 11:1-2 )NKJV.

நாம் ஜெபித்து,விரும்பிய பலனைக் காணாதபோது, ​​நம்முடைய ஜெபத்தின் முறையைச் சரிபார்க்க வேண்டிய நேரம் என்று நாம் சிந்திக்க வேண்டும் .

சீஷர்கள் இயேசுவினால் நிகழ்த்தப்பட்ட மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டனர் மற்றும் அவரிடமிருந்து தங்களைப் பிரித்திருக்கும் எல்லைக் காரணி அவருடைய பிரார்த்தனை முறை என்பதை உணர்ந்தனர். இது அவர்களில் ஒருவரை எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவிடம் கேட்கும்படி செய்தது.

ஆம் என் அன்பானவர்களே , நாம் அனைவரும் கற்க வேண்டியது “எப்படி ஜெபிக்க வேண்டும்” என்பதுதான். உங்களுக்கும் எனக்கும் இருக்க வேண்டிய முதல் உணர்தல் என்னவென்றால், பூமியில் கிடைக்கும் வளங்களை விட பரலோக வளங்கள் மிகவும் பெரியவை மற்றும் உயர்ந்தவை . உண்மையில், அதை ஒப்பிட முடியாது.

பூமியில் மனிதனின் விவகாரங்களில் பரலோக தலையீட்டைப் புரிந்துகொண்டு தேடும் மனிதன் பாக்கியவான் . இதுவே நம் வெற்றி வாழ்க்கைக்கான ஆரம்பப் புள்ளி.

” இது ஒரு வல்லமை வாய்ந்த பிரார்த்தனை”என்று நாம் பல நேரங்களில் கூறுகிறோம், ஆனால் ஜெபம் வல்லமை வாய்ந்த பலனைத் தந்ததா என்பதுதான் முக்கியமான விஷயம் .

பரலோகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் எண்ணம் நமக்கு இருந்தால், உண்மையிலேயே நம் வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் .

இன்றைய உலகில்,தகவல் தொழில்நுட்பம் அதன் தொழில்நுட்பத்தின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய நமக்குத் தொடர்ந்து அறிவுறுத்துகிறது, இல்லையெனில், மென்பொருள்/மொபைல் செயலியை இயக்க முடியாமல் போகலாம். மேலும் நாம் உபயோகிக்கும் கருவிகள் காலாவதியானது என்று முத்திரை குத்தப்படும் . இந்த உலகத்தைப் பற்றிய விஷயங்களில் இது உண்மையாக இருந்தால், பரலோகத்தைப் பற்றிய விஷயங்கள் எவ்வளவு அதிக நிச்சயமாக இருக்கும்?

அன்புள்ள பிதாவே, நான் உம்மை கனப்படுத்தவும்,என் வாழ்க்கையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் உம்முடைய சாம்ராஜ்யத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும் வந்திருக்கிறேன்.இன்றே அதை நீர் செய்தமைக்காக நன்றி . இயேசுவின் நாமத்தில் ஆமென்,! 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,நம் பிரச்சனையின் தீர்வுகளை பரத்திலிருந்து பெற்றுத்தரச் செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, என் தெய்வீக முன்குறிக்கப்பட்ட அமைப்பு முறையை பார்க்கச் செய்கிறது !

04-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, என் தெய்வீக முன்குறிக்கப்பட்ட அமைப்பு முறையை பார்க்கச் செய்கிறது !

14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது .( சங்கீதம் 139:14, 16 )NKJV.

உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் உருவாவதற்கு முன்பே தேவன் உங்களைப் பற்றிய முழுமையான புரிதல் கொண்டிருக்கிறார் .நீங்கள் தாயின் வயிற்றில் உருவம் இல்லாமல் இருந்தபோதும்,உங்கள் முழு உருவத்தையும் குணநலனையும் பார்த்தார்- நீங்கள் ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு நொடியும் என்ன செய்வீர்கள் என்பது கூட அவர் முன் அறிந்திருந்தார். எனவேதான் சங்கீதக்காரன் கூறுகிறார், “நான் பயத்தோடும்,அற்புதமாகவும் உருவாக்கப்பட்டதற்காக கடவுளைப் புகழ்கிறேன்,மேலும் என் ஆன்மா என் படைப்பாளரை நன்கு அறிந்திருக்கிறது”.

உண்மையில்,தேவன் நம்மைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் அறிந்திருப்பது மட்டுமல்லாமல், நம் தாயின் வயிற்றில் நாம் உருவாவதற்கு முன்பே அவர் தனது புத்தகத்தில் ஒவ்வொரு சிறிய விவரத்தையும் உன்னிப்பாக எழுதியுள்ளார். எந்த இரண்டு விரல் ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லாத அளவுக்கு நாம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளோம்.

ஆம் ! அவர் உண்மையிலேயே அற்புதமானவர்! அவரது முன்னறிவு மனதை வருடுகிறது!! நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் மற்றும் உங்கள் அடையாளம் உண்மையிலேயே தனித்துவமானது !!!

ஆகையால்,நான் நேற்று குறிப்பிட்டது போல், தேவன் உங்களை ஆசீர்வதிக்கவும், உங்களை செழிக்கவும் பரலோகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையை வைத்திருக்கிறார். ! உங்களை ஆசீர்வதிப்பதற்கும் உங்களை மேம்படுத்துவதற்கும் கடவுளின் அமைப்பு முறையை நீங்கள் பகுத்தறியாதபோதுதான் ஏமாற்றங்கள் ஏற்படும்.இது உறுதி!

இருப்பினும், நீங்கள் இயேசுவைப் பார்க்கவும், அவர்மீது கவனம் செலுத்தவும் உங்கள் கண்களைத் திருப்பினால், உங்கள் உண்மையான அடையாளத்தையும் கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் மகிமையான விஷயங்களையும் நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள் – உங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தெய்வீக அமைப்பு முறையை அறிந்துகொள்வீர்கள் !

ஜெபம்: “என் பிதாவாகிய தேவனே, உமது பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவை எனக்கு வெளிப்படுத்தும் , ஏனென்றால் அவரைப் பார்க்கும்போது நான் அவரிடமிருந்து பெயர்ந்து வந்த காரணத்தால் என்னைப் பார்க்க முடியும். நீங்கள் ஏற்கனவே உங்கள் புத்தகத்தில் என்னைப் பற்றிய அனைத்தையும் எழுதியுள்ளீர்கள், இப்போது பரிசுத்த ஆவியானவர் மூலம் எனக்கு இதை காண உதவுங்கள். இதன் மூலம் உம் சித்தம் பூமியில் செய்ய எனக்கு அருள் புரிவீராக .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது, என் தெய்வீக முன்குறிக்கப்பட்ட அமைப்பு முறையை பார்க்கச் செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவைப் நோக்கிப் பார்ப்பது,கடவுளின் மகிமையைப் பெற்று நம்மை செழிக்கச் செய்கிறது !

03-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவைப் நோக்கிப் பார்ப்பது,கடவுளின் மகிமையைப் பெற்று நம்மை செழிக்கச் செய்கிறது !

7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான் . அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. (யோவான் 5:7-9) NKJV

என் அன்பானவர்களே,இந்த ஜூலை மாதம் உங்களை ஆசீர்வதிப்பதற்கும் உங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கும் கடவுளின் தனித்துவமான அமைப்பு முறையை வெளிப்படுத்துகிறது !
38 வருடங்களாக துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த அந்த முடக்குவாதக்காரன், கடவுளின் அற்புதத் ஸ்பரிசத்தைக் காணாததால் மிகவும் விரக்தியடைந்து பெரும் ஏமாற்றமடைந்தான். அவன் குணமடைய தீவிரமாய் இருந்தான் ,ஆனால் ,மீண்டும் மீண்டும் தோல்விகளை எதிர்கொண்டாண்.ஒவ்வொரு முறையும் ஒரு தேவதூதன் தண்ணீரைக் கலக்கும் போது பெதஸ்தாவின் குளத்தில் இறங்க சுகமடைவதை மட்டும் அவன் மனதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையாக இருந்தது.

உங்கள் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக மற்றொருவரின் மாதிரியை அல்லது அமைப்பு முறையை நீங்கள் கடைப்பிடிக்கவோ அல்லது பின்பற்றவோ உகந்ததல்ல .இன்னொருவருக்கு வேலை செய்யும் அமைப்பு முறை உங்களுக்கு வேலை செய்யாமல் போகலாம்.

உங்களை ஆசீர்வதிப்பதற்காகவும், உங்களை செழிக்கசெய்யவும் தேவன் பரலோகத்தில் ஒரு தனிப்பட்ட வடிவத்தை அல்லது அமைப்பு முறையை வைத்திருக்கிறார். உங்களை ஆசீர்வதிக்க அல்லது உங்களை ஊக்குவிக்கும் கடவுளின் அமைப்பு முறையை நீங்கள் அறியாதபோது ஏமாற்றமும் விரக்தியும் ஏற்படும்.
பக்கவாதக்காரனின் விரக்தியானது பகுத்தறிவு இல்லாததை குறிக்கிறது .

பிதாவானவர் மகிமைப்படுவாராக.பெதஸ்தா குளத்தின் மாதிரியை,இரக்கத்தின் ஐசுவரியமுள்ள தன் சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பியதன் மூலம் அற்புதம் செய்தார . அவன் இயேசுவை ஏறெடுத்துப் பார்த்தபோது, ​​இயேசுவின் மிகவும் இரக்கமுள்ள கண்கள் அவனுடைய முடங்கிப்போன நிலையைப் பார்த்தபோது பிதாவின் அற்புதமான வல்லமை வெளிப்பட்டு ,அவனை முழுமையாகவும் உடனடியாகவும் குணமாக்கியது.

இன்று, அதே இரக்கத்தின் இயேசு உங்கள் வாழ்க்கையைப் பார்த்து, உங்களை முழுமையாக்கி, நிரந்தரமாக ஆசீர்வதிக்கிறார். ஆமென் 🙏

இயேசுவைப் நோக்கிப் பார்ப்பது,கடவுளின் மகிமையைப் பெற்று நம்மை செழிக்கச் செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜாவான இயேசுவைப் பார்ப்பது,நம்மை ஒரு ஜெயங்கொள்பவராக ஆக்குகிறது!

29-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜாவான இயேசுவைப் பார்ப்பது,நம்மை ஒரு ஜெயங்கொள்பவராக ஆக்குகிறது!

. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:8 )NKJV

இயேசு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்தைக் கண்டால், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உங்கள் வெற்றிகளை அனுபவிக்க முடியும் .
கர்த்தராகிய இயேசு பரமேறுகிறதற்கு சற்று முன்பு, அவர் தம்மைப் பின்பற்றுபவர்களிடம்,பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வரும்போது, ​​அவர்கள் அவருடைய சிங்காசனத்திற்கு சாட்சிகளாக இருப்பார்கள் என்று கூறினார்.

ஆம் என் அன்பர்களே, இரட்சகராகிய இயேசுவின் மரணம் எவ்வாறு கடவுளுடைய சொந்த நீதியை நம்மில் விளைவித்ததோ , அதேபோல் கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மில் புதிய சிருஷ்டியை ஏற்படுத்தியதோ ,நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவின் பரமேற்றம் “என்றென்றும் உள்ள ஆசீர்வாதத்தை”நம் வாழ்வில் ஏற்படுத்தியதோ. அப்படியே ,ராஜாக்களின் ராஜாவாகிய கர்த்தராகிய இயேசு சிம்மாசனத்தில் அமர்வது பிதாவின் மிகப்பெரிய பரிசை – அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் – சர்வவல்லமையுள்ள தேவனை நம்மீது இறங்கச்செய்கிறது.  அல்லேலூயா!

இயேசுவை (அவருடைய மரணம், உயிர்த்தெழுதல்,பரமேற்றம்) விசுவாசிக்கும் ஒவ்வொருவர் மீதும் பரிசுத்த ஆவியின் வருகை அவருக்கு சாட்சியாக நிற்கிறது, அவர் உண்மையிலேயே ராஜாக்களின் ராஜாவாக சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார், ஒவ்வொரு முழங்காலும் வணங்கும், ஒவ்வொரு வாயும் அவர் இறைவன் என்று ஒப்புக்கொள்ளும்.எல்லாவற்றிற்கும் மேலாக (வானத்தில் உள்ளவை, பூமியில் உள்ளவை மற்றும் பூமியின் கீழ் உள்ளவை) இது எல்லாவற்றிலும் உங்களை ஜெயங்கொள்பவராக ஆக்குகிறது மற்றும் இயேசுவோடு என்றென்றும் ஆட்சிசெய்ய வழி செய்கின்றது – இதன் மூலம் இன்று,மனிதகுலத்திற்கு ஆதாம் இழந்த “ஆளுமை” மீட்டெடுக்கப்பட்டது! அல்லேலூயா!! ஆமென் 🙏

சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜாவான இயேசுவைப் பார்ப்பது,நம்மை ஒரு ஜெயங்கொள்பவராக ஆக்குகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசு,வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பது,நம்முடைய ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றியை உண்டாக்குகிறது!

28-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு,வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பது,நம்முடைய ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றியை உண்டாக்குகிறது!

நம்முடைய விசுவாசத்தை தொடங்கியவரும்,முடிப்பவருமாகிய இயேசுவை நோக்கி,
2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் .( எபிரெயர் 12:2) NKJV.

இந்த வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுவை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு முழுமையாக கவனம் செலுத்த நாம் அழைக்கப்பட்டதன் மகத்துவம் என்ன?
ஆளுமை அல்லது ஆதிக்கம் !
பிதாவானவர்,சர்வவல்லமையுள்ளவர். அவரும் ,அவர் குமாரனாகிய இயேசுவும் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.அது மனிதன் ஏதேன் தோட்டத்தில் இழந்த ஆதிக்கத்தை மீட்டெடுக்க அவர்கள் தங்கள் முழு மனதோடு செயல்படுவதன் காரணம் .

ஆம் என் பிரியமானவர்களே, நம்முடைய விசுவாசத்தின் தொடக்கமும்,முடிவுமான இயேசுவை நோக்கிப் பார்க்க்கும்போது, அவர் பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பது,ஒவ்வொரு எதிரியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவர் காலடியில் விழச்செய்கிறது . கொரோனா வைரஸ் உட்பட அனைத்து நோய்களும் இயேசுவின் பாதப்படியாகின்றன !
கிறிஸ்து அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள மேலானவற்றை நீங்கள் நாடும்போது உங்களுக்கு எதிராகப் போரிடும் அனைத்து எதிரிகளும் அவர் பாதப்படியில் இருப்பதைக் கண்டு வெற்றியை அனுபவிப்பீர்கள்.

அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காண்பது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உங்கள் வெற்றிகளை அனுபவிக்க வைக்கிறது. இன்று உங்கள் நாள்! உங்களுக்கான கிருபையானது இன்று அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை நீங்கள் கண்டு வெற்றியை அனுபவிக்க செய்கிறது. அல்லேலூயா! ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்

இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவரே நமது விசுவாசத்தின் ஆதியும் ,அந்தமுமாயிருக்கிறார் !

27-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவரே நமது விசுவாசத்தின் ஆதியும் ,அந்தமுமாயிருக்கிறார் !

1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.(எபிரெயர் 12: 1,2) NKJV

என்னை பெரிதும் உந்துவித்து, மேன்மையைத் தொடரும்படி செய்த வேதாகமத்தின் வசனங்களில் இதுவும் ஒன்று!
“இயேசுவை நோக்கியிருப்பது” என்பது வாழ்க்கையில் இலக்கை நோக்கி கவனம் செலுத்தவதாகும் வாழ்க்கையில் இயேசுவை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு கவனம் செலுத்துவது நம்மை மேன்மையும்,மகத்துவமும் அடைய உறுதியான வழியாகும்.

அவரே நமது விசுவாசத்தின் ஆரம்பமும் மற்றும் முடிப்பவருமாயிருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் நம்மில் வேலை செய்ய அனுமதிப்பதுதான். நம்முடைய விசுவாசம் சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அல்லது பலமாக இருந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் தனது சொந்த விசுவாசத்தை , “பிதாவின் வகையான விசுவாசத்தை” நம்மில் செயல்படுத்துகிறார். நான் விசுவாசத்தில் குறைவாக இருந்தபோது, ​​​​இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் பக்கங்களைப் புரட்டுவது என்னை பெரிதும் ஆசீர்வதித்தது, அவருடைய ஒப்பற்ற விசுவாசம் என்னைத் தூண்டி, அவருடைய அன்பில் என்னை வேரூன்றி, உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துவதை நான் உணர்ந்தேன் .

என் அன்பானவர்களே , உண்மையாகவே அவர் உங்கள் விசுவாசத்தின் ஆதியும்,அந்தமுமாயிருக்கிறார். அவருடைய போதுமான தன்மை உங்கள் அனைத்து குறைபாடுகளையும் மறைக்கிறது. அவருடைய பலம் உங்கள் பலவீனங்களையெல்லாம் விரட்டுகிறது.
நீங்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்கும்போது அல்லது அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, ​​அவருடன் நமக்குண்டான ஒற்றுமையை அனுபவிப்பீர்கள்.
அவர் உங்களில் வெளிப்படுகிறார்,அதனால் உலகிற்கு கண்கவர் காட்சியாக நீங்கள் இருப்பது அவர்தானா அல்லது நீங்களா என்பதை உங்களால் வேறுபடுத்திக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அவர் செயல்படுகிறார்.
அல்லேலூயா! ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,இந்த பூமியில் நம்மில் ஆளுமையை ஏற்படுத்துகிறது!

26-06-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,இந்த பூமியில் நம்மில் ஆளுமையை ஏற்படுத்துகிறது!

1. நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
2. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோசெயர் 3:1-2) NKJV.

கிறிஸ்து அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேலே உள்ள விஷயங்களைத் தேடுவதே இரட்சிக்கப்பட்ட விசுவாசியின் பங்கு . “கிறிஸ்துவுடன் எழுப்பப்பட்டது” என்பது மீண்டும் பிறந்து மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலின் சுவாசம் நமக்குள் இருப்பது. நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி என்று அர்த்தம்!

உங்கள் இறைவனும் , இரட்சகருமானவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, உங்களுடைய அனைத்தையும் உள்ளடக்கிய இவ்வுலகில் உள்ள வாழ்க்கையின் அனைத்து விவகாரங்களையும் ஆளுகிறார்.
இப்போது, ​​புதிய சிருஷ்டியாகிய நீங்கள், அவரைத் தேடி, அவருடன் ஆட்சி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கும் உங்கள் மீதும் உள்ள பரிசுத்த ஆவியானவர், இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் விவகாரங்களை வழிநடத்த கிறிஸ்துவுடன் இணைந்து உங்களுக்கு உதவுகிறார் மற்றும் செயல்படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்களது மேம்படுத்தப்பட்ட அறிவு உங்களை “உயர்ந்த வாழ்க்கை முறையை” வாழ வைக்கும். அவரை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவருடன் அரசாளுவீர்கள் .

_அன்புள்ள பரிசுத்த ஆவியானவரே ,என்னிலும் எனக்குள்ளும் வசிக்கின்றதுக்கு நன்றி. நீங்கள் கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்துகிறவர்.என் ஆண்டவரும் கிறிஸ்துவும் அமர்ந்திருக்கும் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் நான் அங்குள்ள மேலானவைகளை நாடுவதற்கு என் மனதைப் புதுப்பிக்கவும். இயேசுவின் மீது தணியாத பசியை என்னுள் உருவாக்குங்கள், அப்பொழுது என் முழு இருதயமும்,ஆத்துமாவும் இயேசுவைத் தேடும். இது எங்களின் விரும்பிய புகலிடத்திற்கு எங்களை வழிநடத்த வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களைத் தீர்க்கும்.ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்.