Category: Tamil

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள் !

28-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள் !

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:5-6) NKJV.

என் அன்பானவர்களே ,நாம் ஒரு புதிய வாரத்தைத் தொடங்கி இந்த மாதத்தை முடிக்கிறவேளையில் நான் விசுவாசத்தோடு ஆணையிட்டு கூறுகின்ற காரியமாவது, கடந்த நாட்களில் உங்களைத் தொல்லை செய்த உங்கள் எதிரிகள் அனைவரும் மனிதனின் உதவியாளரான எபினேசரால் மட்டுமே வரும் உங்கள் மேன்மைக்கும்,உயர்வுக்கும் சாட்சியாக இருப்பார்கள்!

சஞ்சலமும், துக்கமும் நிறைந்த நாட்கள் முடிந்துவிட்டன . உன் தலையில் அபிஷேக எண்ணெய் குறையாது. விரைவான மற்றும் சூழ்நிலைக்கு பொருத்தமான முடிவுகளை எடுக்க உங்கள் பகுத்தறியும் வல்லமை கூர்மைப்படுத்தப்படும்.உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் ஏராளமான ஆசிர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.

தேவன், அவரது முழு வல்லமையோடும் மற்றும் நிரம்பி வழிகிற மிகுதியானஆசிர்வாதங்களோடும் உங்களை ஆக்கிரமிக்கின்றகாலம் , உங்கள் தேவைக்கு போதுமான ஆசிர்வாதங்களை மட்டும் பெறாமல்,தேவைக்கு மிஞ்சி மிகுதியான ஆசீர்வாதங்களை கிருபையாக இயேசுவின் நாமத்தில் பெருகிறீர்கள்!

உங்கள் வாழ்வு இயேசுவின் நாமத்தில் “காத்திருத்தல்” நிலையிலிருந்து “உடமையோடு நடக்க மற்றும் இளைப்பாறுதலோடு ஆட்சி செய்ய துரிதப்படுத்துகிறது .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

25-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

4.நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங்கீதம் 23:5)

வசனங்கள் 4 மற்றும் 5இல் மிகவும் தெளிவாக காண்பது எதிரிகள் உங்களுக்கு முன்பாக நிற்பது மட்டும் தான் ,ஆனால் வசனம் 5 இல் காணப்படாதது அவர் உங்கள் எதிரிகளுக்கு முன்பாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதாகும் .

ஆம் என் அன்பானவர்களே,இருளில் நாம் சரியாய்ப் பார்ப்பதில்லை அதனால் நம் ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்று அர்த்தம் அல்ல .எலிசா தீர்க்கதரிசியைக் கைதுசெய்ய சிரியாவின் இராணுவம் வந்தபோது, ​​​​எலிசாவின் வேலைக்காரன் படையைப் பார்த்து பயந்து கூக்குரலிட்டார், ஆனால் அவர் பார்க்காதது கடவுளின் மனிதரான எலிசாவைச் சுற்றியிருந்த தேவனின் படையானது எண்ணிக்கையில் எதிரிகளை விட அதிகமாக இருந்தது. _(2 இராஜாக்கள் 6:14-16).

நீங்கள் பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளது உண்மையாக இருக்கலாம் ஆனால் உங்கள் ஆத்துமாவின் மேய்ப்பர் உங்கள் மகிமைக்காக ஒரு விருந்தை தயார் செய்துள்ளார் என்பது சத்தியம்.அது விரைவில் வெளிப்படும்.
ஏசாயா 49:9 இல் கூறப்பட்டுள்ளபடி,” உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள் “என்ற மேய்ப்பரின் வார்த்தையைப் பெறுங்கள்.உங்கள் மேய்ப்பராகிய கிறிஸ்துவில் உங்கள் அடையாளம் அவருடைய நீதி மற்றும் உங்களில் அவருடைய வெளிப்பாடு மேன்மை! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதி என்றும், கிறிஸ்துவே உங்களில் வெளிப்பட்ட மகிமை என்றும் உங்கள் உறுதியான அறிக்கையை கேட்க தேவன் விரும்புகிறார் . அவர் இன்று உங்களிடம் சொல்கிறார் “உங்களை நீங்களே வெளிப்படுத்துங்கள்” உங்கள் வீழ்ச்சியை க் கண்டு மகிழ்ந்த எதிரிகள் இயேசுவின் பெயரில் நீங்கள் உயர்த்தப்படுவதைக் காண்பார்கள் என்று நான் அறிவிக்கிறேன் ! ஆமென் மற்றும் ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

24-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .

தேவன் நம்மைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றும்போது அல்லது அவரை அடைய முடியாததாகத் தோன்றும் போது,பயணம் மிகவும் பயமாகவும், தெளிவற்ற நிலையாகவும்,நிச்சயமற்றதாகவும் தோன்றும் போது, மிக ​​நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் , இந்த கட்டத்தில் உங்கள் உணர்வு உங்கள் விசுவாசத்திற்கு வழிசெய்கிறது.இயற்கையானது இயற்கைக்கு அப்பாற்பட்டதை வெளிப்படுத்த வழிவகுக்கின்றது.முட்டைப்புழுவானது எப்படி ஒரு பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ நீங்களும் புதிய உங்களை வெளிப்படுத்துகுறீர்கள் !

உங்கள் பாதை பயமாக இருந்தாலும், நீங்கள் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள் ! பள்ளத்தாக்கு வழியாக நீங்கள் நடப்பது தண்ணீரின் மேல் நடக்கின்ற அனுபவத்தை அளிக்கிறது. அல்லேலூயா!

எல்லா அச்சங்களும் விசுவாசத்தால் விழுங்கப்பட்டன, சாவானது,சாவாமையினால் விழுங்கப்பட்டது . மரணம், ஆண்டவருடைய வெற்றியில் விழுங்கப்பட்டது .மனித பலவீனம் இறுதியாக தெய்வீகத்திற்கு தலை வணங்கி அவர் மாட்சிமையின் பாதத்தில் அடிபணிந்தது !

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுகிறது ! சொல்ல முடியாத ஆனந்தக் கண்ணீர் மற்றும் மகிமையால் நிறைகிறது .

இயேசு,தன் உயிரைஉங்களுக்காக கொடுத்த நம்பிக்கையான மற்றும் உண்மையுள்ள
நல்ல மேய்ப்பன்! ஆமென் 🙏

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

23-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .

_நம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் பெரும் சோதனைகள் மரணத்தின் நிழல் மட்டுமே தவிர மரணம் அல்ல. பள்ளத்தாக்கு’ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடினமான பயணமாக இருக்கலாம் மற்றும் ‘பள்ளத்தாக்கு’ என்பது பூமியின் தாழ்வான பகுதி அதாவது வாழ்க்கையின் தாழ்வான நிலையை குறிக்கிறது.
ஆனால்,தேவனின் கோலானது அத்தகைய காலங்களில் தோன்றும் எல்லா தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் ,தேவனின் தடி வழிகாட்டுதலுக்காகவும் உதவுகின்றது ,எனவே கோலும் ,தடியும் ஒருவர் எப்போதும் பள்ளத்தாக்கில் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் நம்மைப் பாதுகாக்கின்றது .

ஆம், என் அன்பான நண்பர்களே , இருளில் இருக்கும்போது தான் ஒளியின் மகிமை மிகையாக பாராட்டப்படுகிறது.அப்படியே நாம் தனிமையில் இருக்கும்போதுதான் அவரது அன்பு பொக்கிஷமாக உணரப்படுகிறது .நீங்கள் வாழ்வில் எந்த சிகிச்சையும் பலன் தராமல் நோய்களை அனுபவித்திருக்கலாம். பல வருடங்களாக ஒரே மாதிரியான வேலையில், அதே சம்பளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம்.சில வேதனையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து வழிகளையும் முயற்சித்து தோல்வி அடைந்திருக்கலாம் ,பல ஆண்டுகளாக நீங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனம் உடைந்து போயிருக்கலாம்,ஒரு தொழில்முறைப் படிப்பை வெற்றியோடு முடிக்க நீங்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்திருக்கலாம் மற்றும் நான் குறிப்பிடாத வேறு ஏதேனும் போதைப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் பகிரங்கமாகப் பகிர முடியாத பிற தனிப்பட்ட விஷயங்கள் உங்களைத் துன்புறுத்துவதாக இருக்கலாம்.இவை அனைத்திற்கும் தீர்வு நல்ல மேய்ப்பர் மாத்திரமே!!

 

எனவே ,மகிழ்ச்சியாக இருங்கள் என் அன்பான நண்பர்களே ! கர்த்தராகிய இயேசுவே உங்கள் நல்ல மேய்ப்பன்! இந்த நாளில் நீங்கள் நிச்சயமாக எந்த பெரும் சோதனையிலிருந்து வெளியே வருகிறீர்கள்! அவருடைய நீதியின் ஒளி உங்களைச் சூழ்ந்துள்ளது. எனவே, நீங்கள் மூழ்க மாட்டீர்கள்! நீங்கள் சாக மாட்டீர்கள் !! உங்கள் நம்பிக்கை அற்றுப்போகாது . _ஒரு வேதனையான பள்ளத்தாக்கு இருந்தால், நிச்சயமாக மகிமையின் ஒரு மலையும் இருக்கிறது, நீங்கள் அதை நோக்கி இயேசுவின் பெயரில் செல்கிறீர்கள்! மரணத்தின் நிழல் உங்களைச் சூழ்ந்திருந்தால், நிச்சயமாக நீங்கள் இயேசுவின் நாமத்தில் அவருடைய மகிமையின் பிரகாசத்தால் இன்று அணியப்படுவீர்கள் ! அல்லேலூயா !

அவர் மீது நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள் ! அவரது நீதியை நிலைநாட்டுங்கள்!! நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள் !!! உங்கள் விடுதலை நீங்கள் நினைப்பதை விட வேகமாக உங்களை நோக்கி வருகிறது !!!! (ரோமர் 9:28,33) ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

22-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.

பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான ஊழியமானது, இயேசுவே இரட்சகர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாகும்.மற்றும் விசுவாசிகளுக்கு இயேசுவே நம்முடைய யெகோவா சிட்கெனு -நீதியாயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகும். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே ! பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்டனம் செய்வதற்காக அனுப்பப்படவில்லை,மாறாக நீங்கள் நீதிமான்கள் என்று உங்களை நம்பவைக்க அவர் இங்கே நம்மோடிருக்கின்றார்.ஏனென்றால் கடந்த காலமோ அல்லது நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ எதுவாக இருந்தாலும்,நம்முடைய எல்லா பாவங்களையும் இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் சுமத்தினார் . இயேசுவின் ஜீவாதார பலியின் காரணமாக நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டு நீதிமான்களாக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள் !

அவருடைய தயவைப் பெறுவதற்கான திறன் உங்கள் பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்பட்டது என்ற முழு உறுதியின் மீது உள்ளது!

நம் வாழ்வில் ஆவியில் நடக்க இயலாமைக்கும்,தெய்வீக ஆரோக்கியத்தில் நடக்க இயலாமைக்கும், அவருடைய தயவு தேவை என்பதை நாம் புரிந்து கொள்ளாததால் தான். நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டது என்ற உறுதியில் அவருடைய தயவை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள் .

எனவே,என் அருமை நண்பர்களே! மேற்கூறிய உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வதும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்ற தொடர்ச்சியாக வாக்குமூலம் செய்வதும் அவருடைய தயவால் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது . அவருடைய தயவு எல்லா தாக்குதல்களுக்கும் எதிராக ஒரு கேடயமாக செயல்படுகிறது (சங்கீதம் 5:8,12).
இன்று,வாழ்வில் வெற்றி நடைபோட அவர் உங்கள் நீதி என்று அறிக்கையிட்டு,தயவினால் சூழப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் இருங்கள்! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

21-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.

மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சங்கீதக்காரன் நீதியின் பாதைகளில், மேய்ப்பரால் வழிநடத்தப்பட்ட அனுபவத்தை சாட்சியமளிக்கிறார்,அது அவர் வாழ்வில் கடினமான மற்றும் சவாலான நேரங்களிலும் கடவுளுடன் நடக்க அவரை ஆயத்தப்படுத்தியது, தன்னில் நல்ல வேலையைத் தொடங்கியவர் அதை முடிப்பார் என்று மேய்ப்பரை நம்பினார்.தேவன் உண்மையுள்ளவர் மற்றும் ஒருபோதும் நம்மைத் தோல்வியடையவிட மாட்டார்.

ஆம்,என் பிரியமானவர்களே,கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றி, ஆவியில் நடக்க உங்களைத் தயார்படுத்துகிறது.ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம், நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நீதியின்) சரியான செயலை அடிப்படையாகக் கொண்டதாகும் ! பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்,ஏனென்றால் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பலனடையச் செய்யும்.தேவனின் நித்திய மீட்பீற்காக,இயேசு சிலுவையில் கிரையம் செலுத்தினார் மற்றும் தேவைக்கு அதிகமாக செலுத்தினார் – எனவே அந்த கிருபையோடு இந்த நாளையும் இந்த வாரத்தையும் இயேசுவின் நாமத்தில் அனுபவிக்கவும்!

என் அன்பானவர்களே, இன்று நான் நல்ல மேய்ப்பருடன் சேர்ந்து, இயேசுவின் பெயரில்,யாராலும் நிறுத்த முடியாத பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வெளியிடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

18-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். ( சங்கீதம் 23:3 ) NKJV.

நீதியே பாவத்தை குணப்படுத்துகிற மாற்று மருந்தாக விளங்குகிறது .நீதியின் அளவுகோலிலிருந்து குறைவாக காணப்படுவது பாவம் என்று கூறப்படுகிறது 2 கொரிந்தியர் 5:21 – நம்முடைய எல்லாப் போராட்டங்களுக்கும் மிகவும் வல்லமை வாய்ந்த தீர்வுகளில் ஒன்றைத் தருகிறது. ” நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத இயேசுவை தேவன் நமக்காக பாவமாக்கினார் .” ஆமென்!

இயேசுவாகிய ஆண்டவர், தூயவர் மற்றும் நீதிக்கெல்லாம் அதிபதியானவர்,ஒரு பாவமும் அறியாத அவர் நமக்காக பாவம்ஆனார்.எனவே பாவிகள் மற்றும் பாவ இயல்பு கொண்ட நாம் கடவுளின் நீதியாக மாற்றப்பட்டோம். இதுவே கல்வாரி சிலுவையில் நடந்த தெய்வீக பரிமாற்றம் ஆகும் .ஆகையால் பரிசுத்த ஆவியானவர் இந்த வகையான நீதிக்கு நம்மை வழிநடத்துகிறார்.இது தேவனின் வகையான நீதியே தவிர மனித உரிமை அல்லது மனித நன்மையினால் உண்டானதல்ல.

இரண்டாவதாக,அவர் என்னை “நீதியின் பாதைகளில்” வழிநடத்துகிறார் என்று வாக்குறுதியாக வசனம் கூறுகிறது. இது “பாதைகள்” மற்றும் “பாதை” அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் . ‘எல்லா சாலைகளும் ரோம் நகரத்திற்குச் செல்கின்றன’ என்ற பழைய பழமொழி எனக்கு நினைவிற்கு வருகிறது, அதாவது நம் வாழ்வில் அனைத்து தேர்வுகள், முறைகள் அல்லது செயல்கள் இறுதியில் ஒரே முடிவைக் கொண்டுவரும். மேலும், ஒவ்வொருவரின் வெவ்வேறு பிரச்சனைகளுக்கும், தீர்வுகளைக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கலாம், *இருப்பினும் இவை அனைத்தும் “அவரது நீதிக்குள் ” அடங்க வேண்டும்.
ஒரு மருத்துவமனையில் இருப்பதைப் போலவே, இருதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் மற்றும் பல பிரிவுகள் இருக்கலாம். முடிவில்நோயாளிக்கு ஆரோக்கியத்தை தருவதே அதன் நோக்கமாயிருக்கிறது .

என் பிரியமானவர்களே, நீங்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியது எல்லாம், ” நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி ” 2 கொரிந்தியர் 5:21 வசனத்தை அறிக்கை செய்யும்போது சில சமயங்களில் நீங்கள் ஒரு மந்திரத்தை சொல்வது போல் தோன்றினாலும், இந்த வாக்குமூலத்தை தீவிரமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் .அப்போது , நீங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிகிறதினால் ,அது என்றென்றும் ஆசீர்வாதத்தையும், குணப்படுத்துதலையும்,விடுதலையையும் உங்களுக்குள் கொண்டுவருகிறது. இதுவே அவருடைய நீதி!
ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

17-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.

என் அன்பானவர்களே, நீதியின் பாதையில் நடப்பது என்றால் , “என்னால் முடியாது ஆனால் உங்களால் முடியும்” என்று ஒப்புக்கொள்வதாகும்.எதிர்காலத்தைக் குறித்து முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும்போது அவரிடத்தில் முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்கு தைரியத்தை ஏற்படுத்துகிறது. ..

விசுவாசம் என்பது உணர்வல்ல ஆனால் உணர்வானது விசுவாசத்தைப் பின்பற்றும்.
விசுவாசம் என்பது ” எனக்குத் தெரியும்” என்று கூறுவதில் இல்லை ,மாறாக விசுவாசமானது ” எனக்கு தெரியாது” என்று ஒப்புக்கொண்டு ஆண்டவரிடம் விசுவாசத்தை வைப்பதாகும். உங்கள் உணர்வுகள் சூழ்நிலைக்கு எதிர்மாறாகப் பேசலாம், தீவிர கவலைகளை வெளிப்படுத்தும் சந்தேகங்கள், அச்சங்கள் மற்றும் தடுமாற்றத்தையும் கூட ஏற்படுத்தலாம்.இந்த காரியம் அப்படிஆகவில்லை என்றால் என்ன செய்வது மேலும் அந்த காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் நம்மிடம் பிளான் B இருக்கிறதா?” என்று யோசித்து கொண்டே இருக்கச்செய்யும்.
ஆனால் , விசுவாசம் என்பது ‘நான் எதை நம்புகிறேன் என்பதல்ல, மாறாக ‘யாரை’ நம்புகிறேன் என்பதாகும் . (2 தீமோத்தேயு 1:12).

தாவீது தேவனை மேய்ப்பனாக பாவித்தார் .அவர் எல்லா விஷயங்களிலும் மேய்ப்பருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார் – குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர் தனது மேய்ப்பராகிய தேவனிடம் ஆலோசிக்கத் தொடங்கினார், அவர் உணர்ந்த அனைத்தையும், அவர் நினைத்த அனைத்தையும், அவரது ஆசைகளிலும் ,அச்சங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். அவர் தனது குடும்பத்தில் கடைசியாக பிறந்தவர், ஆனால் தேவன் அவரை நாட்டின் முதல் குடிமகனாக மாற்றினார் . இந்த காரியம் உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது*!

என் அன்பானவர்களே , இயேசு என்று அறியப்பட்ட ஆண்டவர் , உண்மையான மற்றும் ஒரே நல்ல மேய்ப்பன். அவர் உங்களுக்காக உயிரைக் கொடுத்தார், பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை . அவரை உங்கள் இரட்சகராகவும், உங்கள் மேய்ப்பராகவும், உங்கள் நீதியாகவும் ஆக்குங்கள், நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள்.அவர் உங்களை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டார். அவரை நம்புங்கள்! * *உங்கள் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுங்கள், அவர் உங்கள் வாழ்க்கையை அழகாகவும்,ஆசிர்வாதமாகவும் , போற்றத்தக்கதாகவும் இன்றே மாற்றுவார் ! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

16-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.

அவருடைய நீதியின் பாதையில் நடப்பது என்பது, கர்த்தருடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதற்கு மனப்பூர்வமாகத் நாம் தெரிவு செய்வதாகும் .அது ஒரு தாழ்மையான தொடக்கமாக இருந்தாலும்,கடைசி முடிவு யாராலும் கற்பனை செய்வதை விட மிகவும் புகழ்பெற்றதாக இருக்கும்!

நீதியின் பாதையில் நடப்பது என்பது, இயேசு தன் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததை எனது ஒரே அடிப்படையாகக் கொண்டு சரியானதை, சரியான நேரத்தில், சரியான வழியில் பெறுவதாகும்.

நீதியின் பாதையில் நடப்பது என்பது, என் வாழ்வில் சவால்கள் வந்தாலும் அல்லது தடைகள் என் வெற்றியைத் தடுத்தாலும் அவருடைய நீதியானது பிதா எனக்கென்று முன்குறித்த ஸ்தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்,அங்கு எனக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்திய ஸ்தலத்தில் நான் ஒரு இணையற்ற மற்றும் சவாலற்ற ஆளுமை கொண்ட மனிதனாக வெளிப்படுவேன்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ,இன்று இயேசு என்று அழைக்கப்படும் தம் மேய்ப்பன் மூலம் தேவன் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம் நான் நம்புகிறேன் என்றால் அவரை உங்கள் நீதியாக ஆக்குங்கள்,நீங்கள் நீதியின் பாதையில் நடக்கும்போது சில சவால்களை சந்தித்தாலும் நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்குறீர்கள் ! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

15-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV

மேய்ப்பரின் அற்புதமான செயல் இது!  ஆடுகளின் இயல்பான போக்கு வழிதவறிச் செல்வது. பின்னடைவு என்பது காலப்போக்கில் நடைபெறுவது அது திடீரென்று நடப்பது அல்ல . உண்மையிலிருந்து விலகிச் செல்வது அந்த நபர் கூட உணராதபடி படிப்படியாக இழுத்துச்செல்லுவதாகும் .

பொதுவாக விண்வெளியில் ராக்கெட் வெடிக்கும்போது, ​​இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்லாது , ஆகவே ,ஒவ்வொரு 8வது வினாடியிலும் ஒரு வழித்திருத்தம் செய்யப்படுகிறது இந்த வழித்திருத்தம் இல்லாமல், விண்வெளி விண்கலம் அதன் இலக்கை (விரும்பிய இலக்கு) அடையாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் இப்படியே நடக்கிறது . ஆனால், இயேசு நம்முடைய உண்மையான மற்றும் நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை சரியான பாதையில் அல்லது நீதியின் பாதையில் வழிநடத்துகிறார், ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல, ஆனால் அவருடைய நாமத்தின் நிமித்தமாக நாம் நல் மேய்ப்பரால் நீதியின் பாதையில் வழி நடத்தப் படுகிறோம் .

வேத வசனத்தில் கூறியபடி அவர் நம் ஆத்துமாவை மீட்க்கிறார்’ என்றால் வாழ்வில் வழி விலகிப்போன நம்மை திரும்ப சரியான பாதையில் நடத்துவது என்று பொருள் .உலகத்தின் பொறுப்பகளினாலும் , செல்வத்தின் வஞ்சகத்தினாலும் நமது ஆத்துமா சோதிக்கப்பட்டு நாம் வழி விலகிச் செல்கிறோம். நம்முடைய நல்ல மேய்ப்பராகிய இயேசு நம் வாழ்வில் தலையிட்டு, அவருடைய நாமத்தினிமித்தம் அவருடைய நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்.

ஆம், என் பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நல் மேய்ப்பர் , நம் நீதியாக இருக்கிறார் ( our T’sidkenu) .. “இயேசு என்னோடு இருக்கிறார்,என் நீதியாய் இருக்கிறார், எனவே நான் வழிதவறவும் இல்லை, வெட்கப்படவும் மாட்டேன்”என்று தொடர்ந்து அறிக்கை செய்வோம் . நிச்சயமாக, உங்கள் நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு உங்கள் தேவனாகிய பிதா – விரும்பிய- ஏதிர்காலத்தை நோக்கி உங்களை வழிநடத்துவார். *இயேசுவின் நாமத்தில் சரியான முறையில் ,சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருப்பீர்கள்! . ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம் .