28-07-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் இரகசியங்களை அறிய அவருடன் ஒரு நெருக்கத்தை வளரச்செய்கிறது!
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (I கொரிந்தியர் 2:10) NKJV
பரிசுத்த ஆவியானவர் மட்டுமே பிதாவையும்,பிதாவின் ஆழமான விஷயங்களையும் அறிவார்! தேவனின் மறைவான ஞானத்தை உள்ளடக்கிய ஆழமான விஷயங்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
தேவனுடனான நமது நெருக்கம்,தேவனின் மறைவான ஞானத்தை உள்ளடக்கிய தேவனின் ஆழமான விஷயங்களைத் திறந்து, நமக்கு புரிய வைக்கின்றது.
பரலோக மொழியில் பேசுவது உங்களை கடவுளுடன் நெருக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது . நமது அன்றாட வாழ்வில் கூட, சில ரகசியமான விஷயங்களைப் பிறர் அறியக்கூடாது என்று நாம் விரும்பும்போது, அவற்றை நம் தாய்மொழியில் பேசுகிறோம், அப்பொழுது நாம் திட்டமிட்ட நமது நோக்கங்களைச் செயல்படுத்துவது நமக்கு மட்டுமே புரியும்.
1. ” அந்நிய பாஷை” என்று அழைக்கப்படும் பரலோக மொழியில் பேசுவது உங்களை, யாரும் புரிந்து கொள்ள முடியாத தேவனின் ரகசியங்களுக்குள் அழைத்துச் செல்லும், யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் (1 கொரிந்தியர் 14:2).
2. அந்நிய பாஷையில் பேசுவது உங்களை மேம்படுத்துகிறது . “என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக நான் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் சாட்சி உங்களுடைய உற்சகமான சாட்சியாகவும் இருக்கும் .
(1 கொரிந்தியர் 14:4; பிலிப்பியர் 4:13).
3. *அந்நியபாஷைகளில் பேசுவது உங்கள் விசுவாசத்தை வளர்த்து , பிசாசின் ஒவ்வொரு தீய சூழ்ச்சியையும் அழிக்கிறது (யூதா 1:20)
ஆம் என் அன்பானவர்களே , பரலோக மொழியில் பேச ஆசைப்படுங்கள் . இயேசுவின் நாமத்தில் பிதாவிடம் கேளுங்கள், நிச்சயமாக அவர் அதை உங்களுக்குத் தருவார் இந்த வரத்தைக் கேட்கும்போது பிதாவுடன் நெருக்கம் கொள்ளுவது மாத்திரம் உங்கள் கவனமாக இருக்கட்டும்!.ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் இரகசியங்களை அறிய அவருடன் ஒரு நெருக்கத்தை வளரச்செய்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.








