Category: Tamil

img123

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

20-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். லூக்கா 2:15-16 NKJV

மேற்கண்ட அந்த மேய்ப்பர்களின் எதிர்வினை மிகப் பிரமாதமாக இருந்தது.தேவதூதர் இயேசுவின் பிறப்பை அறிவித்த தருணத்தில்,அந்த மேய்ப்பர்கள் தேவதூதர் சொன்னது உண்மையா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்கச் செல்லவில்லை,மாறாக அவர்கள் அதை உண்மை என்று முடிவு செய்தனர்,மேலும் அவர்கள் ஒரு சாட்சியாக இருக்க விரும்பி புதிதாகப் பிறந்த ராஜாவின் பேரொளியை அனுபவிக்க நாடி சென்றனர்.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்குப் புறப்பட்டபோது,அது உண்மையிலேயே அப்படி இருக்குமா என்று சோதிக்க 12 வேவுகாரர்களை அனுப்பினார்கள். அந்த 12 பேரில், காலேப் மற்றும் யோசுவா ஆகியோர் மட்டும் தேவனின் அறிக்கையை சரிபார்க்க விரும்பவில்லை, மாறாக அவர்கள் கர்த்தர் சொன்னதால் உண்மை என்று நம்பி உடனே தேசத்தை ஆக்கிரமிக்க விரும்பினர்.
இது தான் விசுவாசம் – ஏனென்றால், அவர்கள் கண் பார்க்காததை நம்பினர்!

அவர்களுடைய விசுவாசத்தினாலேயே,அப்படியே வயல்களில் இருந்த மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்க்க விரைந்தார்கள்.ஆம்! அவர்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்பட்டனர்! அந்த விசுவாசம் தான் இன்று நம்மிடம் தேவைப்படுகிறது!

என் பிரியமானவர்களே,உங்கள் இருதயத்தையும் ஆன்மாவையும் நீங்கள் இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்கும் போது ,கிறிஸ்துவில் உள்ள தேவனின் பேரொளி உங்கள் மீது தங்கியிருக்கும்.அப்போது உங்கள் இலக்கிற்கு உதவும் உதவியாளராகள் விரைவாக உங்களை தேடி வருவார்கள்.நீங்கள் தகுதியானவரா அல்லது தகுதியுள்ளவர் இல்லையா என்பதைச் சரிபார்க்க அவரகள் வருவதில்லை. மாறாக உங்களுக்கு உதவவே வருகிறார்கள்

இன்றைய தினம், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், இயேசுவின் பெயரில் உங்களுக்கு உதவ இதுபோன்ற தெய்வீக எதிர்கால இணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் நிதியாளர்கள் உங்களை நோக்கி விரைந்து வர தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன்.ஆமென் 🙏

நீங்கள் செய்ய வேண்டிய பிரகடனம்:”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்! அல்லேலூயா !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் இலக்கின் உதவியாளர்களை தாமதமின்றி உங்களிடம் அனுப்புகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

19-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

13.அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14.உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15.தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, லூக்கா 2:13-15 NKJV.

தேவதூதர்கள் இயேசுவின் பிறப்புக்காக காத்திருந்தனர்,ஏனென்றால் மரியாள் கருவுற்ற காலத்திலிருந்தே தேவனின் பேரொளி கர்த்தராகிய இயேசு மீது இருந்தது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
அவர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து,வயல்களில் தங்கள் மந்தைகளைப் காத்துக் கொண்டிருந்த சில மேய்ப்பர்கள் முன் திடீரென்று தோன்றினர்.

அந்த மேய்ப்பர்கள் அகில உலகின் மிகப்பெரிய நற்செய்தியைக் கேட்டபோது, ​​​மனுக்குலத்தை ஆசீர்வதிக்க மாட்டுத் தொழுவத்தில் வந்து பிறந்த இறைவனைத் தேடி வந்தனர்.ஆண்டவராகிய இயேசுவை வணங்குவதற்கு வழிகாட்டிய வால் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து வந்த ஞானிகளும்கூட தங்கள் விலைமதிப்பற்ற பரிசுகளோடு அவரைப் பணிந்தனர்.

என் அன்பான நண்பர்களே,கிறிஸ்துவில் இருக்கும் தேவனின் அருளை நீங்கள்பெற்றால், மனிதர்களும் ,மாமன்னர்களும்,தேவர்களும் கூட உங்களைப் பற்றி அறிந்து உங்களைத் தேடி உங்களை ஆசீர்வதிக்க வருவார்கள்.அல்லேலூயா!

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இதயத்தைத் திறந்து, இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதுதான். நீங்கள் கடவுளுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு உங்கள் இதயம் மட்டுமே .அவரிடம் நீங்கள் கூறவேண்டியதெல்லாம்,”என்னுடையது அனைத்தும் உம்முடையது, என் ஆத்தும மீட்பரே”.

நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்கும்போது, ​​​தேவனின் ஒளி உங்கள் மீது தங்கும்,மேலும் தேவனின் சிறந்த மற்றும் முன்னோடியில்லாத இணையற்ற,கற்பனை செய்ய முடியாத மற்றும் மகிமை நிறைந்த தயவால் அலங்கரிக்கப்படுவீர்கள்!

இந்த வாரத்தில் உங்கள் மீது தீர்க்கதரிசனமாக பேசப்படும் கிறிஸ்துமஸின் இரண்டாவது ஆசீர்வாதம் இதுவே !ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,முன்னோடியில்லாத ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

18-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2:7 NKJV

எனது அன்பானவர்களே, நாம் ஏற்கனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மனநிலையில் இருப்பதால், இந்த நாளிலும் இந்த வாரத்திலும் பரிசுத்த ஆவியின் அற்புதமான சிந்தனையை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிகவும் தனித்துவமானது மற்றும் என்றென்றும் அப்படியே இருக்கும்.நாம் அனைவரும் இந்த உலகில் பிறந்த விதம் – மருத்துவமனை,இல்லங்கள்,மற்றும் பயணம் செய்த இடம் போன்றவையாக இருக்கலாம்.ஆனால்,- சர்வவல்லமையுள்ள தேவனின் ஒரே பேறான குமாரனான இயேசுவின் பிறப்பு, ஒரு அரச பரம்பரையில் (தாவீது)இருந்து வந்தாலும் ,ஏழைக்கோலமெடுத்து பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஆம், பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு விடுதியின் மாட்டுக்கொட்டகையில் நித்திய வார்த்தையானவர் மாம்சமாகி பிறந்தார் .இது உண்மையில் நம் மனதைக் கவர்வதும் மற்றும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றுகிறது.

ஆனால்,சர்வவல்லமையுள்ள தந்தையின் ஒரே பேறானவரின் தெய்வீக பிறப்பு ,அழிவிலும் இருளிலும் மூழ்கியிருந்த தாழ்ந்த மனிதகுலத்தின்மீதான அவரது அன்பின் பிரதிபலிப்பு என்பது புரிந்துகொள்ளச்செய்கிறது.
.ஆயினும்கூட,தேவ குமாரன் தொழுவத்தில் பிறந்த காரணம் மாபெரும் தேவன் தாழ்ந்த மனுகுலத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட அவருடைய அன்பையும் தேவ நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது .
இதுவே பரிசுத்த அவையானவர் நமக்கு கொடுக்கும் மனுகுமாரனின் தாழ்மையான பிறப்பின் வெளிப்பாடாகும்.

ஆனால் இயேசுவின் மீது இருந்த தேவனின் மகிமையான ஒளியின் நிமித்தம் வானத்தில் திரளான தேவா தூதர் கூட்டம் தோன்றி இந்த நற்செய்தியை மேய்ப்பருக்கு அறிவித்ததனர் .தேவனின் இந்த மகிமையின் நற்செய்தி பேரானந்தத்தை ஏற்ப்படுத்தியது.

என் அன்பு நண்பர்களே,உங்களுக்கும் எனக்கும் கூட இதுவே நற்செய்தி:உங்கள் பின்னணி என்னவாக இருந்தாலும்,அதே தேவனின் ஒளிவட்டம் உங்கள் மீதும் தங்கியிருக்கும், அவருடைய தயவு உங்களை என்றென்றும் சூழ்ந்திருக்கும்,இதனால் அனைத்து மக்களும் (தேவதூதர் மற்றும் மனித இனங்கள் இருவரும்) ) உங்களைத் தேடிக் கெளரவிப்பார்கள்.பூமியில் அவருடைய அமைதியையும், அளவற்ற நல்லெண்ணத்தையும் அனுபவிக்க அவருடைய நன்மை உங்களைத் சூழ்ந்திருக்கும்படி பிராத்திக்கிறேன்!

இயேசுவின் மீது இருந்ததைப் போலவே உங்கள் மீதும் தேவனின் ஒளிவட்டத்திற்காக ஏங்குங்கள், உங்களைச் சுற்றியுள்ள தேவனின் தயவை நீங்கள் அனுபவிப்பீர்கள்,அது உங்களை உயர்த்தும் என்று இயேசுவின் நாமத்தில் வாக்களிக்கிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவ தயவின் பேரொளி உங்களை சூழ்ந்திருப்பதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்!

15-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்!

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:17 NKJV.

பாவம்,வியாதி,வறுமை,அழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை மீட்க தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
ஒரு மனிதனின் பாவத்தினால்தான் முழு மனித இனமும் அழிவில் மூழ்கியது.
ஆனால்,அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு,விழுந்துபோன மனிதகுலத்திற்கு மீட்பைக் கொண்டு வந்தார்.அவருடைய கீழ்ப்படிதலின் வாயிலாக எல்லா நீதியான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்தார் அதன் மூலம் பிதா மகிமைப்படுத்தப்பட்டார்.
.

ஆகையால்,ஒரே மனிதனின்(ஆதாமின்) தவறால் முழு மனித இனமும் வீழ்ந்தது போல்,ஒரே மனிதனின் நீதியால் -இயேசு கிறிஸ்துவின் நீதியால் இரட்சிப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைத்தது.
கர்த்தராகிய இயேசு கீழ்ப்படிந்து,யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கான முதல் அடியை எடுத்த தருணத்தில்,தேவன் தம்முடைய தலைசிறந்த படைப்பாகிய மனிதகுலம் இறுதியாக மீட்கப்பட்டதாகத் தம்முடைய மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.பரலோகம் இனி மூடப்படாது.அல்லேலூயா!

தேவன் தம் மகனையும்,அவருடைய கீழ்ப்படிதலையும் (தேவனின் நீதி) பார்த்து நம்மை ஆசீர்வதிக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தேவை அல்லது பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு முறையும், தேவன் தம் மகனாகிய இயேசுவையும் அவருடைய கீழ்ப்படிதலையும் பார்த்து, இயேசுவின் நிமித்தம் பிரச்சனையை தீர்க்கிறார்.அதனால்தான்,இயேசுவே நமக்குத் தீர்வு என்று ஒவ்வொரு பிரச்சனையிலும் அவரை நோக்கிப் பார்த்து விடுதலை அடைகிறோம்! அவரே நம்மைக் குணப்படுத்துபவர்! அவரே நம் விடுதலை! அவரே நம் வழக்கறிஞர் ! அவரே தான் நம் பதவி உயர்வு!அவரே நமது நிறைவேறுதல் ! இதுவே நம் விசுவாசம். .ஆமென் 🙏 !

இயேசுவை நோக்கிப் பார்த்து,உடனடியாக ஆசீர்வாதம் பெறுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இதோ இயேசுவின் திடீர் சந்திப்பு நம்மை முற்றிலும் மறுரூபமடையச்செய்கிறது!

14-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இதோ இயேசுவின் திடீர் சந்திப்பு நம்மை முற்றிலும் மறுரூபமடையச்செய்கிறது!

அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;அப்போஸ்தலர் 9: 3 NKJV.

அப்போஸ்தலனாகிய பவுல் என்றும் அழைக்கப்படும் சவுலின் வாழ்க்கையில் ஏற்பட்டது பரலோக சந்திப்பு. கிறிஸ்துவில் உள்ள அனைத்து விசுவாசிகளையும் அழிக்கும் ஒரு தீய நோக்கத்துடன் பயணம் செய்த அவருக்கு இயேசு திடீரென்று பரலோகத்திலிருந்து இறங்கி தோன்றினார்.முதல் கிறிஸ்தவ தியாகியான ஸ்தேவானைக் கொல்வதில் அவர் வெற்றி பெற்ற பிறகு,இந்தத் தீங்கிழைக்கும் செயலைச் செய்ய அவர் தீவிரமாக உந்தப்பட்டார்.

உயிர்த்தெழுந்த மற்றும் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜாவான இயேசுவின் நபரில் உள்ள பிரபஞ்சத்தின் தேவன் அதில் தலையிட்டார்.அது சவுலின் வாழ்க்கையை உள்ளிருந்து வெளிப்புறமாக மாற்றியது. அல்லேலூயா! அவர் ஒரு வித்தியாசமான மனிதராக மாறினார்,ஒரு ஆணவக் கொலைகாரனாக இருந்து, எல்லா காலத்திலும் போற்றக்கூடிய மிகப்பெரிய அப்போஸ்தலராக மாறினார், கிருபை மற்றும் நீதியின் மிகப்பெரிய நற்செய்தியைக் கொண்டு உலகெங்கும் ஊழியம் செய்யும் கருவியாக பயன்படுத்தப்பட்டார்,இந்த நற்செய்தி துன்பப்படும் மனிதகுலத்தின் மீது தேவனின் அன்பை வெளிப்படுயது.

என் அன்பு நண்பர்களே, தேவனால் முடியாதது எதுவுமில்லை!
உங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய உறவில் விரிசலினால் நம்பிகையை நீங்கள் விட்டுவிட்டீர்களா?
உங்கள் பிரார்த்தனைகள் இன்னும் பதிலளிக்கப்படாததால் தேவன் ஒரு மில்லியன் மைல்கள் தொலைவில் இருப்பதாக உணருகிறீர்களா?
நீங்கள் அநீதி மற்றும் பொது அவமதிப்பு அல்லது அவமானம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவராக காணப்படுகுறீர்களா ?
நீங்கள் நினைப்பதற்கு மேலாக தேவன் உங்களோடு நெருக்கமாக இருக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் முழுமையாக அறிந்திருக்கிறார். நிச்சயமாக, ஒரு திடீர் அற்புதமான சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் 180 டிகிரி திருப்பத்தையும் 360 டிகிரி மாற்றத்தையும் கொண்டுவர இயேசுவின் நாமத்தில் பிராத்திக்கிறேன்.ஆமென் 🙏 !

இதோ இயேசுவின் திடீர் சந்திப்பு நம்மை முற்றிலும் மறுரூபமடையச்செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

13-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்;அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.ஏசாயா 48:3 NKJV

நாம் அவரை கவனித்துக் கேட்கும்போது, நம்முடைய விசுவாசம் துளிர்விட்டு, தேவனின் கீழ்கண்ட இந்த பண்புகளை சார்ந்திருக்கும் :

1. அவர் எல்லாவற்றையும் செய்ய முடியும் மற்றும் அவரால் முடியாதது எதுவும் இல்லை என்ற தேவனின் திறமை.
2. தேவனின் நேர்மை,அவர் சொல்வதைச் செய்ய அவர் உண்மையுள்ளவர்.நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அது நிறைவேறும். அவர் வார்த்தைக்கு உண்மையாக இருக்கிறார்.அவர் பேசும் தருணத்தில்,அவர் சொன்னதைச் செய்ய அவருடைய வல்லமையின் ஆற்றல் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட வேத வசனத்தில் அவருடைய வார்த்தையைப் பார்த்தால்- 1. அவர் தனது வார்த்தையை அறிவித்தார்; 2. வார்த்தை அவருடைய வாயிலிருந்து வெளியேறியது; 3. அவர் வார்த்தையைக் கேட்கும்படி செய்தார்; 4. திடீரென்று அவர் தம் வார்த்தையை நிறைவேற்றினார். ஆம்!

என் பிரியமானவரே, அவர் உங்களுக்கு வாக்குறுதிகளை அறிவித்த காலத்திலிருந்து நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் கடந்திருக்கலாம் ,ஆனால் அவருடைய வார்த்தையின் செயல்திறனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
ஆனால்,அவருடைய நீதியைப் பற்றிக் கொண்டு, அவர் சொன்னதைத் திரும்பத் திரும்பக் கேட்டு, அவர் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். திடீரென்று அவருடைய வல்லமையின் வெளிப்பாட்டை அனுபவிப்பீர்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை மற்றும் அவரது நோக்கத்தை நிறைவேற்றாமல் அவருடைய வார்த்தை தரையில் விழாது.அவர் சொன்னதைச் செய்ய வல்லவர் மற்றும் அவருடைய வல்லமை எல்லையற்றது. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து அவருக்கு செவிகொடுக்கச்செய்கிறது பின்னர் திடீரென்று அவைகளை நடிப்பிக்கின்றது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

12-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப்போஸ்தலர் 16:25-26 NKJV

மனிதனுக்கு உதவி அனுப்பும் வழிகளில் ஒன்று தேவன் ஒரு மனிதனை பயன்படுத்துகிறார்.

மேற்கண்ட வேத பகுதியில் பார்க்கின்ற கைதிகள் பிணைக்கப்பட்டு மற்றும் அவர்கள் விடுதலைக்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்திருந்த நிலையில் காணப்பட்டனர்.ஆனால் தேவன் வேறு திட்டங்களை வைத்திருந்தார்,மேலும் இந்த கைதிகளை விடுவிக்க பவுல் மற்றும் சீலா ஆகிய நபர்களை அனுப்பினார். அவர்களின் ஜெபங்களும் துதிகளும் தேவனின் ஒப்பற்ற மற்றும் இணையற்ற வல்லமையின் திடீர் தோற்றத்திற்கு வழிவகுத்தன, இதன் விளைவாக அவர்களின் சங்கிலிகள் மட்டுமல்ல, கைதிகளும் திடீரென விடுவிக்கப்பட்டனர்.

என் அன்பானவர்களே,இந்த நாளில் தெய்வீகஉதவியானது மனித உருவில் இயேசுவின் மூலம் உங்களிடம் வரவும், உங்கள் விடுதலைக்கு காரணமாக இருக்கவும் நான் அறிகையிட்டு ஆணையிடுகிறேன்!

ஆமென் 🙏

அந்த கைதிகள் ஜெபிக்கவில்லை மற்றும் அவர்களின் முன்குறிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவியவர்களான பவுல்,சீலாவுடன் சேர்ந்து ஜெபிக்கவும் இல்லை பாடவும் இல்லை. ஆனால், “அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்” என்று வார்த்தை கூறுகிறது. கேட்பது விசுவாசத்தை உருவாக்குகிறது, ஏனெனில் விசுவாசம் கிறிஸ்துவின் வார்த்தையை மீண்டும் ,மீண்டும் கேட்பதாலே மட்டுமே வருகிறது.
என் பிரியமானவர்களே, எதுவும் செயல்படாதபோது, தேவனுடைய வார்த்தையை உன்னிப்பாகக் கேட்பது பயனளிக்கும். எனது பிரசங்கங்களையும் ஆராதனைகளையும் தொடர்ந்து கேட்கும்படி என் சபை உறுப்பினர்களிடம் நான் எப்போதும் கூறுவதற்க்கும் கரணம் இதுவே .

சில சமயங்களில்,நம் வாழ்வின் திருப்புமுனைக்குத் தேவையான அறிவுரைகள் எதிர்பாராத ஒருவரிடமிருந்து வரலாம்.
குஷ்டரோகியான நாமானின் சுகம் அவனுடைய சொந்த வீட்டு வேலைக்காரியின் ஆலோசனையின் வார்த்தையிலிருந்து வந்தது (2 இராஜாக்கள் 5:3).

இயேசுவின் நாமத்தில் நம் வாழ்வில் தேவனால் நியமிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவும் உதவியாளர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் கவனத்துடன் வைத்திருக்க வேண்டுகிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவர் மகிமைக்கு நம்மை மறுரூபமடையச்செய்கிறது!

11-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவர் மகிமைக்கு நம்மை மறுரூபமடையச்செய்கிறது!

25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப்போஸ்தலர் 16:25-26 NKJV

பெரிய தேவ தருணங்கள்(KAIROS MOMENTS) திடீரென்று நடக்கும்!
பவுலுக்கும் சீலாவுக்கும் அதுதான் நடந்தது,அவர்களுடைய ஜெபங்களையும் பாடலையும் கேட்டுக்கொண்டிருந்த அனைத்து கைதிகளுக்கும் கூட அது நடந்தது,ஆராதித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று தேவன் அனைவருக்கும் அவரது தெய்வீக விடுதலையை வழங்கினார்.அல்லேலூயா!

என் அன்பு நண்பர்களே,இது “திடீர் அற்புதங்கள் நிகழ்கின்ற மாதம்“.நீங்கள் எவ்வளவு காலம் பிணைக்கப்பட்டிருந்தாலும் – பழக்கவழக்கமான பாவத்தில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பொருள் வறுமையில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மனித அடிமைத்தனத்தில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது தொடர்ச்சியான பற்றாக்குறையில் அல்லது நோயில் பிணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மன இயலாமையில் அதாவது “என்னால் இது முடியாது” என்ற மனப்பாண்மையில் பிணைக்கப்பட்டிருந்தாலும் ஆகியவைகளிலிலிருந்து உங்கள் அடிமைச் சங்கிலிகள் இன்றே இயேசுவின் பெயரில் நிரந்தரமாக உடைக்கப்படுகின்றன!

இந்த வாரம், இந்த தருணம் தொடங்கி, எல்லாம் வல்ல தேவன் திடீரென்று தோன்றுவார் என்று எதிர்பாருங்கள். ஆமென் 🙏. பிரியமானவர்களே,ஆவி மண்டலத்தில் தொடர்ந்து ஒலிக்கும் ‘ஆமென்’ சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. ஆகவே,இது உங்கள் நாள்! அல்லேலூயா!

உங்களால் அல்லது உங்கள் தந்தையால் அல்லது உங்கள் முன்னோர்களால் இதுவரை செய்ய முடியாததை, இயேசுவின் நாமத்தில் நிறைவேற்றி அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது!
தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள் மற்றும் கிறிஸ்து இயேசுவில் நீங்கள் தேவனின் நீதி என்று அறிக்கையிடுங்கள்,இன்று உங்கள் விடுதலையை நீங்கள் அனுபவிப்பீர்கள்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவர் மகிமைக்கு நம்மை மறுரூபமடையச்செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_171

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.உங்களில் உள்ள கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறது!

08-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.உங்களில் உள்ள கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறது!

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:11,13-14 NKJV

தாவீதின் ஊரான பெத்லகேமில் தேவனின் ஒரே பேறான குமாரன் பிறந்தார் என்பதை முதலில் அறிந்தவர்கள் மேய்ப்பர்கள்.திடீரென்று பரலோகத்திலிருந்து தேவதூதர்களின் சேனையும் ,மாபெரிய வெளிச்சமும் ,நற்செய்தியும் மகிமையாய் அறிவிக்கப்பட்டது.

உலகிற்கு,கிறிஸ்துமஸ் என்றால் இயேசு பிறந்ததினம் என்று கருதப்படுகிறது ,ஆனால் அன்னை மரியாளுக்கு இயேசு வயிற்றில் கருவுற்றபோதே கிறிஸ்துமஸாக இருந்தது.

மரியாளுடைய கருத்தரிப்பு அதிசயமும்,அற்புதமும் ,தெய்வீகமானது.அது திடீரென்று நடந்தது.கிறிஸ்து அவளுக்குள் இருந்தார்,ஆனால் உலகத்திற்கு மறைக்கப்பட்டார்.மேலும் கர்ப்பமான 9 மாதங்கள் வரை,பிதாவின் வாக்குத்தத்தம் உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டது.

அதுபோலவே,என் அன்பு நண்பர்களே,பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட முறையிலும்,அந்தரங்கத்திலும் உங்களோடு திடீரென்று இடைப்பட்டு ,உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக செய்யப்போகிறார்.மரியாளைப் போலவே,நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்திருக்கலாம்,வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு இன்னும் நிலுவையில் இருக்கலாம் . ஆனால் உங்களிலுள்ள கிறிஸ்து திடீரென்று உங்கள் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்துவார்.மகிமை!!!
தேவனின் மகிமையின் திடீர் வெளிப்பாட்டைக் கண்டு மேய்ப்பர்கள் ஆச்சர்யமடைந்தது போல் உங்களுக்குள் இருக்கும் தேவவாக்கின் மகிமையான நிறைவேறுதலைக்கண்டு உலகம் ஆச்சரியப்படும். ஆம்! “புறஜாதிகள் உங்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள், ராஜாக்கள் உங்கள் எழுச்சியின் பிரகாசத்திற்கு வருவார்கள்.” (ஏசாயா 60:3). அதுதான் இன்று உங்களின் அரும்பெரும் வெளிப்பாடு!

என் அன்பானவர்களே, நிறைவேறும் காலம் வரை உங்கள் இதயத்தில் தீர்க்கதரிசனத்தை தீவிரமாகவும், உயிரோட்டமாகவும் காத்து வைத்திருங்கள்.நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து அறிக்கையிடுங்கள். ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.உங்களில் உள்ள கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_200

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவருடைய மகிமைக்குள் மறுரூபமடையச்செய்கிறது!

07-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவருடைய மகிமைக்குள் மறுரூபமடையச்செய்கிறது!

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்துதல் 22:7 NKJV.

தேவனின் பெரிய- தருணங்கள் ( KAIROS MOMENTS ) திடீரென்று நடக்கும்! உண்மையைச் சொல்வதானால், ‘விரைவாக’ மற்றும் ‘திடீர் ‘ என்று சொல்வதில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு இடத்தை விரைவாக அடைவது என்பது வேறு,திடீரென்று அங்கு சென்றடைவது வேறு.அதுவே அவரின் பாணியாக உள்ளது.!!

மனிதர்கள் வாழ்வில் அவரது சந்திப்புகள் திடீரென்று நிகழ்ந்தன. இம்மாதம் நாம் கொண்டாடும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி பார்ப்போமானால் -கன்னிப் பிறப்பைப்பற்றி மரியாளுக்கு தேவதூதன் திடீரென்று தோன்றி கூறியதும் மரியாள் அதிர்ச்சியுடனும்,வியப்புடனும் காணப்பட்டாள்*.தேவகுமாரன் பிறப்பை அறிவிக்க அன்னை மரியாளிடம் வந்த தேவதூதன் அவள் அதிர்ச்சியுற்றதை கண்டதும் , முதலில் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது.

கன்னியாகிய அவள் தன் வயிற்றில் கருத்தரிக்கப் போகிறாள் என்ற அந்த நற்செய்தியின் அறிவிப்பு அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது,ஏனென்றால் இன்னும் திருமணம் ஆகாததால் அது எப்படி சாத்தியமாகும் என்று அவள் கேள்வி எழுப்பினாள்.
ஆம்! தேவ தருணங்கள் நிகழும்போது அது அனைத்து தர்க்கங்களையும் இயற்கையான பகுத்தறிவையும் மீறும்.அது இயற்கைக்கு அப்பாற்பட்டது!

இருப்பினும், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால்,அவள் விரைவாகக் கருவுறவில்லை,ஆனால் திடிரென்று கருவுற்றாள்.அவளுடைய கருவுறுதல் தெய்வீகமானது.ஆம்,ஒரே பேறான குமாரனின் கருத்தரிப்பு தனித்துவமானது.பரிசுத்த ஆவியின் வல்லமையால் அது உருவானது-அதை நினைத்தால் ஆச்சரியமானதுமாய்,அருமையுமாய் நம் மனதை வருடுகிறது!

என் அன்பான நண்பர்களே,நீங்கள் தெய்வீக தலையீட்டை தீவிரமாக நாடும் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையிலும் இத்தகைய திடீர் அற்புதத்தை கொண்டு வர முடியும். இது உங்கள் தருணம்! இப்போது உங்கள் நேரம் !! அல்லேலூயா !

உங்கள் பதவி உயர்வு இப்போதே!உங்கள் குணமடைதல் திடீரென்று இன்றே துளிர்விடும்!! நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறீர்கள்!!! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.திடீரென்று அவருடைய மகிமைக்குள் மறுரூபமடையச்செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.