17-03-25
இன்றைய நாளுக்கான கிருபை!
நீங்கள் அவரில் இளைப்பாறி மகிமையின் பிதாவை அறிவது அபரிவிதமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது!
“அப்போது அவளுடைய மாமியார் நகோமி அவளை நோக்கி, ‘என் மகளே, உனக்கு நன்மை உண்டாகும்படி நான் உனக்குப் பாதுகாப்புத் தேடாதிருப்பேனா?’”— ரூத் 3:1 (NKJV)
ரூத் தன் ஆரம்பக் காலத்தில் மகிழ்ச்சியை விட அதிக துன்பத்தை அனுபவித்தாள். அவள் இளம் வயதிலேயே விதவையானாள்,ஒரு மோவாபியப் பெண்ணாக, இஸ்ரவேலர்களிடையே ஒரு அந்நிய பெண்ணாக அவதிப்பட்டாள்.அவளுடைய இழப்புகள் அதிகமாக இருந்தபோதிலும், அவள் தன் மாமியார் நகோமியுடன் தங்கி, அவளுக்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தாள்.
ரூத் தன் வாழ்க்கையை உழைத்தே கழித்தாள், ஆனால் தேவன் அவளைத் தம்முடைய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவர விரும்பினார். இன்றைய தியான வசனத்தில், ரூத்துக்கு “பாதுகாப்பை” உருவாக்க நகோமி தானாகவே பொறுப்பேற்கிறாள். “பாதுகாப்பு” என்பதற்கான எபிரேய வார்த்தை மனோவாக், அதாவது ஓய்வு இடம், அமைதியான ஓய்வு, ஒரு நிலையான வீடு. மனோவாக் என்ற இந்த வார்த்தை தெய்வீக பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதம் என்ற கருத்தையும் கொண்டுள்ளது.
அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் நீங்கள் மனோவாக்கிற்குள் நுழைவதை விரும்புகிறார் – இது ஆண்டவராகிய இயேசு உங்களுக்காக ஏற்கனவே செய்து முடித்ததை நீங்கள் நம்பும்போது, மனித முயற்சிகளிலிருந்து உங்களை விடுவிக்கும் ஒரு ஓய்வை பெறுவீர்கள். இந்த வாரம்,நீங்கள் அவருடைய சிறந்ததைப் பெற கர்த்தர் உங்களை அவருடைய ஓய்வுக்குள் கொண்டு வருவார். அவருடைய ஓய்வு உங்கள் பாதுகாப்பு – உங்கள் எதிர்காலம் அவரில் பாதுகாப்பானது.
ரூத் நகோமிக்குச் செவிசாய்த்து இந்த ஓய்வை ஏற்றுக்கொண்டபோது, அவள் ஆறு மடங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றாள். இந்த வாரம் உங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் அதுவே நடக்கும்! ஆமென் 🙏
நீங்கள் அவரில் இளைப்பாறி மகிமையின் பிதாவை அறிவது அபரிவிதமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!