மகிமையின் பிதாவை அறிவது உங்களுக்குக் கிருபைக்குப் கிருபையைப் பெறச் செய்கிறது!

img_106

25-03-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிவது உங்களுக்குக் கிருபைக்குப் கிருபையைப் பெறச் செய்கிறது!

2. மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.— ரூத் 2:2 (NKJV)
18. அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.— ரூத் 3:18 (NKJV)

மகிமையின் பிதா உங்களை இரண்டு வழிகளில் ஆசீர்வதிக்கிறார்:
1. நீங்கள் கிருபையை தேடி அடைவது.

2. கிருபை உங்களைக் கண்டுபிடிப்பது.

முதலாவதாக ரூத் முன்முயற்சி எடுத்தார்-அவள் கிருபை மற்றும் தயவின் வல்லமையை அறிந்து,கதிர்களைப் பொறுக்கச் சென்றாள்.அதன் விளைவாக,அவள் போவாசிடம் கிருபையைப் பெற்றாள்,தேவனின் நோக்கமுள்ள ஆசீர்வாதத்தைப் பெற (being blessed purposely) தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.

அன்பானவர்களே,கிருபையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்; தயவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். கிருபை உங்கள் முயற்சிகளைச் சார்ந்தது அல்ல, மாறாக தேவனின் நிபந்தனையற்ற அன்பைச் சார்ந்தது. சில சமயங்களில்,மற்றவர்கள் கிருபையைத் தவறாகப் பயன்படுத்துவதைக் காணும்போது,நாம் விரைவாகத் தீர்ப்பளிக்கலாம், ஆனால் நம்மை அறியாமலேயே அது இன்னும் பெரிய தயவைப் பெறுவதிலிருந்து நம்மை மட்டுப்படுத்தலாம்.

கிருபையில் வளர்தல்

நீங்கள் ஒரு முறை மட்டும் கிருபையைப் பெறுவதில்லை -நீங்கள் அதை தொடர்ந்து பெரிய அளவில் பெறுகிறீர்கள்.ரூத்தின் பயணம் இந்த முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது:

  • முதலில், அவள் கிருபைக்காக ஏங்கினாள் – அவள் கதிர் சேகரிக்க வயலுக்குச் சென்றாள்.
  • பின்னர், கிருபை அவளை தேடி வந்தது – அவள் உழைப்பிலிருந்து ஓய்வெடுப்பது, பெறுவது மற்றும் ஆட்சி செய்வது வரை முன்னேறி நகர்ந்தாள்.

அதிக கிருபையைத் திறப்பதற்கான திறவுகோல், பரிசுத்த ஆவியுடன் நீங்கள் எவ்வளவு சிறப்பாக ஒத்துழைக்கிறீர்கள் என்பதில் உள்ளது. நீங்கள் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்போது, ​​அவர் உங்களை உயர்ந்த கிருபையின் பரிமாணத்திற்கு அழைத்துச் செல்கிறார் – அங்கு நீங்கள் இனி பாடுபடாமல், கிருபையை பெற்று ஆட்சி செய்கிறீர்கள்.

தயவு நிலைகள்
1. நீங்கள் அறியாமல் தயவிற்குள் நுழைவது – அது தற்செயலாகத் தெரிகிறது.

2. வேண்டுமென்றே (being blessed purposely) உங்களைக் கண்டுபிடிக்கும் தயவு – அது தெய்வீகமாக ஒழுங்கமைக்கப்பட்டது.
3. உங்களை ஆட்சி செய்ய முடிசூட்டுகிற தயவு – அது உங்களை வெற்றியில் நிலைநிறுத்துகிறது.

இன்று நீங்கள் அவருடைய கிருபையில் இளைப்பாறி, உங்களை ஆட்சி செய்ய வழிநடத்தும் கிருபையைப் பெறுவீர்களாக! ஆமென்🙏

எங்கள் நீதியாகிய, இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *