பிதாவின் மகிமையை அறிவது, உங்களில் உள்ள புதிய மனிதனை வெளிப்படுத்துகிறது!

07-01-25
இன்றைய நாளுக்கான கிருபை!

பிதாவின் மகிமையை அறிவது, உங்களில் உள்ள புதிய மனிதனை வெளிப்படுத்துகிறது!

6.மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால்,அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
7.ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.கலாத்தியர் 4:6-7 NKJV

ஆமென்! கிறிஸ்துவில் நம் அடையாளத்தை (IDENTITY) இது எவ்வளவு வல்லமையாக நினைவூட்டுகிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில்,பரிசுத்த ஆவியானவர் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது வந்தபோது,அவர் அவர்களை உன்னதமான தேவனை பின்பற்றுபவர்களாகவும் ஊழியர்களாகவும் ஆக்கினார்.இருப்பினும், புதிய ஏற்பாட்டின் காலத்தில், பரிசுத்த ஆவியானவரை அனுபவிக்கும் விசுவாசிகள் பரலோகப் பிதாவின் அன்பான பிள்ளைகளாக மாறுகிறார்கள். உன்னதமான தேவனுக்கு அல்லேலூயா! இந்த உருமாறும் உண்மை நம்மை வேறுபடுத்தி, தேவனை நம் “அப்பா, பிதா என்று நெருங்கி அணுகுவதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியத்தை அளிக்கிறது.

பழைய ஏற்பாடு தேவனின் மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தியது, ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தின் காரணமாக, இயேசுவின் பிதாவை நம் பிதாவாகக் காண்கிறோம் அவர் மும்முறை பரிசுத்தமாகவும்,மாட்சிமை பொருந்தியவராகவும், உயர் மீது இருந்தாலும், நாம் அவருடைய குழந்தைகளாக உரிமை கொண்டாடி அவர் அன்பை புரிந்து கொள்ள முடிகிறது.

நம்மில் வசிக்கும் அவருடைய குமாரனின் ஆவியானவர் இந்த குமாரத்துவத்தின் முத்திரையாக இருக்கிறார், அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு நம்மை வாரிசுகளாகவும்,அவருடைய தெய்வீக சுபாவத்தின் பங்காளிகளாகவும் ஆக்குகிறார். அல்லேலூயா!

இந்த உண்மையை நாம் உள்வாங்கும்போது,ராஜாவின் மகன்கள் மற்றும் மகள்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி, புது சிருஷ்டியாக வாழ்வில் நம்பிக்கையுடன் நடக்கிறோம்.
உண்மையிலேயே, இது புத்தாண்டுக்கான வாக்குறுதி “புதிய சிருஷ்டியாகுங்கள்” பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக! பிதாவின் இந்த வெளிப்பாடு, இந்த ஆண்டின் ஒவ்வொரு பருவத்திலும் உங்களை வழிநடத்தி பலப்படுத்தட்டும். ஆமென் 🙏

பிதாவின் மகிமையை அறிவது,உங்களில் உள்ள புதிய மனிதனை வெளிப்படுத்துகிறது

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *