மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது, அவருடைய நீதியில் நடக்க எனக்கு உதவுகிறது!

img_205

09-05-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிந்துகொள்வது, அவருடைய நீதியில் நடக்க எனக்கு உதவுகிறது!

“இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரின் ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே உங்கள் சாவுக்கேதுவான சரீரங்களுக்கும் உயிர் கொடுப்பார்.”— ரோமர் 8:11 (NKJV)

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு ஒரு மகிமையான நோக்கம் உள்ளது – உங்களையும் என்னையும் தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆக்குவதே அந்த நோக்கமாகும்.
மனித குமாரர்களாகிய நாம் தேவனுடைய குமாரர்களாக மாறுவதற்காகவே தேவனுடைய குமாரன் மனுஷ குமாரரானார்.

தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்,அவரை தேவனுடைய குமாரன் என்று அறிவிக்க மட்டுமல்ல (ரோமர் 1:4),மாறாக அவருடைய ஆவி விசுவாசிகளின் இருதயங்களில் வாசமாயிருக்கும்படியும் (ரோமர் 8:11). அப்படி செய்தார்.
இயேசுவின் பிறப்பில், தேவன் இம்மானுவேலாக மாறினார் – அதாவது தேவன் நம்முடன் இருக்கிறார்.
அப்படியே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில், தேவன் நமக்குள் கிறிஸ்துவாக வாசம் பண்ணுகிறார் – அவரே நமது மகிமையின் நம்பிக்கை!

தேவன் உங்களுடன் இருக்கும்போது, ​​அவர் உங்களை ஆதரிக்கிறார்.

தேவன் உங்களுக்குள் இருக்கும்போது, ​​அவர் உங்களுக்கு அதிகாரம் அளித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை ஒரு வல்லவராக மாற்றுகிறார்! அல்லேலூயா!

தேவன் உங்களுடன் இருக்கும்போது, ​​உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது.

அதேசமயம் தேவன் உங்களுக்குள் இருக்கும்போது, ​​எந்தத் தீமையும் உங்களைத் தாக்காது, எந்த வாதையும் உங்கள் வாசஸ்தலத்தை நெருங்காது. அவர் உங்களைப் பாதுகாத்து, உங்களைப் பலப்படுத்தி, வெற்றியில் நடக்கச் செய்கிறார். நீங்கள் எதிரியை மிதித்து, என்றென்றும் வெற்றிகரமான ராஜாவாக ஆட்சி செய்வீர்கள்!

இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய பிதாவின் ஆவி உங்களில் நிச்சயமாக, நிரந்தரமாக வாசமாயிருக்கிறார்!

நீங்கள் கிறிஸ்துவில் தேவ நீதியாக இருக்கிறீர்கள், உங்களுக்குள் உள்ள கிறிஸ்து உங்கள் எல்லா வழிகளையும் சரியாக்குகிறார். ஆமென் 🙏

நமது உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *