24-03-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது,எல்லையற்ற மற்றும் முன்னோடியில்லாத தயவை நீங்கள் அனுபவிக்க உதவுகிறது.
“பின்பு அவள் புறப்பட்டு, அறுவடை செய்பவர்களுக்குப் பிறகு வயலில் போய்ப் பொறுக்கினாள். எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்த போவாஸுக்குச் சொந்தமான வயலின் பகுதிக்கு அவள் தற்செயலாக வந்தாள்.
மேலும், மூட்டைகளிலிருந்து தானியங்கள் வேண்டுமென்றே அவளுக்காக விழட்டும்; அவள் பொறுக்கட்டும், அவளைக் கடிந்துகொள்ளாதே.”— ரூத் 2:3, 16 (NKJV)
ரூத் இன்றைய திருச்சபையின் பிரதிபலிப்பு.அதில் நீங்களும் நானும் ஒரு பகுதியாக இருக்கிறோம். நகோமி நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துகிறார்.
ஏழை விதவையான ரூத்,தேவனின் தயவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தாள்.அந்த முடிவு அவளை பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கும், விதவைத்தன்மையிலிருந்து பெரும் செல்வத்தின் இணை உரிமைக்கும் அழைத்துச் சென்றது.தேவனின் நன்மையையும் தகுதியற்ற தயவையும் அனுபவிக்கும் அவரது பயணம் மனித வரலாற்றில் முன்னோடில்லாததாயிருந்தது.
பிரியமானவர்களே, இந்த வாரம், நீங்கள் தேவனின் அசாதாரண தயவை அனுபவிப்பீர்கள் -அதாவது நிபந்தனையற்ற, தகுதியற்ற, வரம்பற்ற மற்றும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட தயவாகும்.
ரூத் போவாஸின் வயலில் இருக்க “நேர்ந்தது” என்று குறிக்கப்படுவது எபிரேய வார்த்தையான “காரா” என்பதாகும். அது தெய்வீக தயவில் நுழைவதைக் குறிக்கிறது – இன்று நீங்கள் தற்செயலாகத் தோன்றக்கூடிய ஆனால் தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை சந்திப்பீர்கள்.
ரூத் வேண்டுமென்றே ஆசீர்வதிக்கப்பட்டதை – எபிரேய வார்த்தையான “ஷாலால்” குறிக்கிறது. அதாவது வலுக்கட்டாயமாக ஆசீர்வத்திக்கப்படுவது என்று அர்த்தம்-நீங்களும் உங்கள் தேவைகளுக்கு அப்பால், உடனடியாகவும் ஏராளமாகவும், இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
அவருடைய காராவும் ஷா-லால்லும் இன்றும் இந்த பருவத்திலும் உங்கள் பங்காக இருக்கட்டும்! ஆமென்🙏.
எங்கள் நீதியான இயேசுவைத் துதியுங்கள்!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!