மகிமையின் பிதாவை உள்ளுணர்வாக அறிவதே ஒவ்வொரு கவலைக்கும் மருந்தாகும்!

15-01-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை உள்ளுணர்வாக அறிவதே ஒவ்வொரு கவலைக்கும் மருந்தாகும்!

48. தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். லூக்கா 2:48,49 NKJV

தேவனைத் தேடுவது மிகவும் வேதப்பூர்வமானது ஆனால் பதட்டத்துடன் தேவனைத் தேடுவது வேதப்பூர்வமானது அல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,அது நடக்குமா நடக்காதா என்று நிச்சயமற்ற நிலையில் அவரை அணுகுவது என்று அர்த்தம்.இது அவிசுவாசத்தை குறிக்கிறது!

யாக்கோபு 1:6-8 ல் அசைக்க முடியாத விசுவாசத்தின் வல்லமையை நமக்கு நினைவூட்டுகிறது, சந்தேகத்தால் தள்ளாடுவதை விட, நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தேவனை அணுகும்படி வலியுறுத்துகிறது.

அதேபோல், இயேசு தம் பெற்றோரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டு பதிலளித்தார்:“நீங்கள் ஏன் என்னை (கவலையுடன்) தேடினீர்கள்? உங்களுக்குத் தெரியாதா…? இது ஒரு ஆழமான உண்மையைப் பிரதிபலிக்கிறதுபிதாவையும் அவருடைய நோக்கத்தையும் அறிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் நம் கவலை நிறைந்த மனங்களுக்கு அமைதியையும், நம் வாழ்வில் தெளிவையும் தருகிறது, நமது ஜெபங்களை மிகவும் வல்லமை வாய்ந்ததாக ஆக்குகிறது.

இந்த பிரதிபலிப்பு, இந்த மாதத்திற்கான வாக்குறுதிக்கு நம்மை அழைத்து செல்கிறது: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டும்,இதனால் உங்கள் புரிதலின் கண்கள் ஒளிரும் உங்கள்வாழ்வில் அவரது நோக்கத்தையும், அவரது ஆஸ்தியையும்,அவரது வல்லமையையும் நீங்கள் அறிவீர்கள். (எபேசியர் 1:17-20).

என் அன்பானவர்களே, எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டுமானால், நமக்கு அறிவுப்பூர்வமான புரிதல் தேவை. இதைத்தான் ஆண்டவர் இயேசு தம் பெற்றோரிடமும் இன்றும் நம்மிடமும் பேசுகிறார்.

இந்த மாதத்தின் வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் விசுவாசத்தோடு அறிக்கை செய்வோம்: மகிமையின் பிதாவை அறிவது நம் வாழ்விற்கான அவருடைய நோக்கத்தை (PURPOSE) புரிந்துகொள்ள வைக்கும்.
இந்த ஜெபமானது இந்த மாதம் மற்றும் எப்போதும் உங்கள் விசுவாசப் பயணத்தின் அடித்தளமாக மாறட்டும்!
ஆமென்🙏

மகிமையின் பிதாவை உள்ளுணர்வாக அறிவதே ஒவ்வொரு கவலைக்கும் மருந்தாகும்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *