03-04-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது உங்களைப் புதுவாழ்வில் நடக்க வழிநடத்துகிறது!
“ஆகையால், கிறிஸ்து மரித்தோரிலிருந்து பிதாவின் மகிமையால் எழுப்பப்பட்டது போல, நாமும் ஜீவனின் புதுமையில் நடக்க வேண்டும் என்பதற்காக, ஞானஸ்நானம் மூலம் மரணத்திற்குள் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.” அவருடைய மரணத்தின் சாயலில் நாம் ஒன்றுபட்டிருந்தால், நிச்சயமாக நாமும் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் இருப்போம்.” ரோமர் 6:4,5 NKJV
புதியவாழ்வு என்பது உயிர்த்தெழுதலின் வாழ்க்கை ஆகும்! இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய பரிசுத்த ஆவியானவர் அதாவது பிதாவின் ஆவியாகவும், பிதாவின் மகிமையாகவும் இருக்கிறார் (ரோமர் 8:11), அவர் புது சிருஷ்டியில் நம்மை நடக்க வைக்கிறார். என்ன ஒரு ஆச்சரியமான உண்மை!
பரிசுத்த ஆவியானவர் இந்த அற்புதமான சத்தியத்திற்கு நம்மை அறிவூட்டும்போது,நம் வாழ்க்கை ஒரு எதிர்பாராத மாற்றத்திற்கு உட்படும்.
விசுவாசிகளாகிய நாம்,பிதாவின் குமாரன் மூலம் பிதாவைத் தேட வேண்டும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையாகிய – பிதாவின் மகிமையான, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் – நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுவார்.
பிரியமானவர்களே, இந்த மாதம் கிறிஸ்துவின் பாடுகளை வெளிப்படுத்துகையில், அது அவருடைய உயிர்த்தெழுதலின் மகிமையையும் வெளிப்படுத்துகிறது!
சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் உங்கள் “பழைய மனிதனுக்கு” முற்றுப்புள்ளி வைத்தது போல, அவரது உயிர்த்தெழுதல் உங்கள் “புதிய மனிதனுக்கு“- அதாவது கிறிஸ்துவில் ஒரு முடிவில்லாத புது சிருஷ்டியின் வாழ்விற்க்கு வழிவகுத்துள்ளது.
உங்கள் புதிய அடையாளம் இதுதான்:
கிறிஸ்து இயேசுவில் நீங்கள் தேவ நீதியாக இருக்கிறீர்கள்!
தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியுள்ளார் என்றும், உங்கள் பாவங்கள் அனைத்தும் என்றென்றும் மன்னிக்கப்பட்டுள்ளன என்றும் நீங்கள் உண்மையிலேயே நம்பும்போதுதான், இந்த புது சிருஷ்டியின் வாழ்வை அனுபவிக்க முடியும்.
அன்புள்ள பிதாவே, இந்த சத்தியத்தால் எங்கள் இதயங்களை ஒளிரச் செய்யுங்கள்! வாழ்க்கையின் புதுமையை அனுபவிக்க எங்களுக்குக் காரணமான உமது மகிமையின் வல்லமையைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில், ஆமென்🙏
நமது நீதியான இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!