27-03-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவின் இருதயத்தை அறிவது, உங்களை தெய்வீக பரிமாற்றத்திற்குக் கொண்டுவருகிறது!
“பின்பு போவாஸ் மூப்பர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்குச் சொந்தமான எல்லாவற்றையும், கிலியோனுக்கும் மக்லோனுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் நகோமியின் கையிலிருந்து நான் வாங்கிவிட்டேன் என்பதற்கு இன்று நீங்கள் சாட்சிகள். மேலும், மக்லோனின் விதவையான மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாகப் பெற்றேன், இறந்தவரின் பெயர் அவரது சகோதரர்களிடமிருந்தும், வம்சாவழியில் அவர் வகித்த பதவியிலிருந்தும் துண்டிக்கப்படாமல் இருக்க, இறந்தவரின் பெயரை அவரது சுதந்தரத்தின் மூலம் நிலைநிறுத்துவதற்காக. இன்று நீங்கள் சாட்சிகள். ”
— ரூத் 4:9-10 (NKJV)
ரூத் தனது கணவரை இழந்தாள், ஆனால் தனது மாமியார் நகோமிக்கு விசுவாசமாக இருந்தாள். இந்த முடிவின் காரணமாக, அவள் தனது மாமனார் எலிமெலேக்கின் சுதந்தரத்திற்குள் கொண்டுவரப்பட்டாள். நகோமியின் வழிகாட்டுதலின் கீழ், ரூத் தாழ்மையுடன் போவாஸை தனது மீட்பராக நாடினாள்.அவளை ஏற்றுக்கொண்டதன் மூலம், போவாஸ் ரூத்தை மட்டுமல்ல, அவளிடம் உள்ள அனைத்தையும் மீட்டார். ரூத்துக்குச் சொந்தமானது இப்போது போவாஸுக்குச் சொந்தமானது, போவாஸுக்குச் சொந்தமானது இப்போது ரூத்துக்குச் சொந்தமானது.
இது கிறிஸ்துவில் நமது மீட்பின் வல்லமைவாய்ந்த காட்சியாக தோன்றுகிறது. நீங்கள் பரிசுத்த ஆவியானவரிடம் சரணடையும்போது, இயேசுவை – உங்கள் (KINSMAN REDEEMER) மீட்பராக – வெளிப்படுத்துகிறார்.
இயேசு உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தம்முடன் அன்பான மணவாட்டியாக உட்கார வைத்து, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி மீட்டு எடுத்தார்.
ஒரு காலத்தில் உங்களைச் சுமையாகக் கொண்டிருந்த அனைத்தையும் அதாவது – உங்கள் பாவங்கள், பலவீனங்கள், நோய், துன்பம், அவமானம் மற்றும் பற்றாக்குறை – இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக, அவருக்குச் சொந்தமான அனைத்தும் – அவருடைய நீதி, பலம், ஆரோக்கியம், சுதந்திரம், பெயர், மிகுதி மற்றும் செல்வங்கள் – இப்போது உங்களுக்குச் சொந்தமானது. நீங்கள் கிறிஸ்துவுடன் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளீர்கள்! இதுவே தெய்வீக பரிமாற்றம்.
இந்த தெய்வீக பரிமாற்றத்தைப் பற்றி நாம் பேசும்போது – இதில் ரூத் வழங்கக்கூடியது அவளுடைய துக்கங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் மட்டுமே, நன்மையைப் பற்றிப் பேசுவதற்கு கூட அவளிடம் ஒன்றும் இல்லை.போவாஸின் விவரிக்க முடியாத மற்றும் எப்போதும் நிறைந்திருக்கும் செல்வங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் அற்பமானதாக தோன்றுகிறது!இன்றும் நாம் அப்படியே இயேசுவிடம் இருந்து பெறும் தெய்விக பரிமாற்றத்திற்கு நன்றி!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதையெல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவருடைய முழுமையை உங்களில் பெறுவதுதான். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களை வழிநடத்தவும், உங்கள் வாழ்க்கையில் அவரை அனுமதித்து சிறப்பான காரியங்கள் வெளிப்படுவதை பார்த்து மகிழுங்கள். ஆமென்🙏
நம் நீதியாகிய, இயேசுவைத் துதிப்போமாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!