06-08-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதா நமக்கு நீதியின் உருவகமாக பரிபூரண பரிசைத் தருகிறார்
“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், பூரண பரிசுகள் ஒவ்வொன்றும் மேலிருந்து வருகின்றன, ஒளிகளின் பிதாவிடமிருந்து வருகின்றன, அவரிடத்தில் எந்த மாற்றமும் நிழலும் இல்லை.” யாக்கோபு 1:17 NKJV
தேவனின் படைப்பில் அவர் முதலில் செய்தது ஒளியின் படைப்பாகும்.
“ஒளி உண்டாகட்டும்” என்று அவர் கூறினார், ஒளி வெளிப்பட்டது.
பூமி:
- உருவம் இல்லாமல்
- வெறுமையாக
- ஆழமான இருளில் மூடப்பட்டிருந்தது.
மேற்பரப்பிலேயே அவ்வளவு இருள் சூழ்ந்திருந்தால்,அது கீழே எவ்வளவு ஆழமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
ஆனாலும், ஒளியானது, பூமியை தேவனின் அசல் நோக்கத்திற்கு மீட்டெடுக்கத் தொடங்கியது.
தேவன் தனது ஒளியின் மூலம் உருவமற்ற பூமியை மீட்டெடுக்க முடிந்தால், ஒளிகளின் பிதா, உலகத்தின் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உங்களை இன்னும் எவ்வளவு மீட்டெடுக்க முடியும்.
“அவர் இருளில் பிரகாசிக்கும் ஒளி, இருள் அதை மேற்கொள்ளவில்லை”யோவான் 1:5
“உலகில் வரும் அனைவருக்கும் ஒளியைக் கொடுக்கும் உண்மையான ஒளி அவரே.” யோவான் 1:9
இந்த ஒளி இப்போது பரிசுத்த ஆவியின் மூலம் செயல்படுகிறது.
என் அன்பானவர்களே, உள்ளே எவ்வளவு ஆழமான இருள் இருந்தாலும்,முன் காலத்தில் ஒழுங்கின்மையான பூமியின் மீது அசைவாடிய பரிசுத்த ஆவியானவர், இப்போது உங்கள் வாழ்க்கையில் அசைவாடுகிறார் – உங்களில் கிறிஸ்துவைப் பிறப்பித்து, உங்களுக்குள் வசிக்கிறார்.
அவர்:
- நம்மில் பிதாவின் மகிமையானவர் கிறிஸ்துவாக வெளிப்படுகிறார்.
- ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியாக,
- ஒளிகளின் பிதாவை அறிய நம்மை அறிவூட்டுபவராக,
- நமது நித்திய உதவியாக,
- உண்மையுள்ள, மாறாத, அசைக்க முடியாத மற்றும் தடுக்க முடியாத தேவனாக அவர் இருக்கிறார்.
இப்போது:
- உருவமின்மையிலிருந்து – இப்போது தெய்வீக அமைப்பு வருகிறது
- வெறுமையிலிருந்து – இப்போது மிகுதி வருகிறது
- இருலிருந்து – இப்போது மகிமையின் முழுமைக்கு வருகிறது
நீங்கள் கிறிஸ்து இயேசுவின் மூலம் ஆளுமைப்பெற்ற நீதிமானாக மாறும்படி ஒளிகளின் பிதா உங்களைத் தம்முடைய அசல் நோக்கத்திற்கு மீட்டெடுக்கிறார்.
நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! 🙌 ஆமென்!
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!