15-08-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதா தம்முடைய நட்பின் பரிபூரண பரிசை நமக்குத் தருகிறார்
“ஒருவரின் குற்றத்தினாலே மரணம் ஒருவரின் வழியாக ஆட்சி செய்தது என்றால், நீதியின் மிகுதியான கிருபையையும் இலவச வரத்தையும் (டோரியா) பெறுபவர்கள், அந்த ஒருவரான இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜீவனில் ஆட்சி செய்வார்கள்.” ரோமர் 5:17 YLT
பிரியமானவர்களே!
பொதுவாக“பரிசு” என்ற வார்த்தையைக் கேட்கும்போது, நாம் அடிக்கடி ஒரு பொருளைப் பற்றியது என்று நாம் சிந்திக்கிறோம்.ஆனால் கிரேக்க வார்த்தையான “டோரியா” ஒரு நபரை ஈவாக பேசுகிறது.
புதிய ஏற்பாட்டின் மூலம் அதன் பயன்பாட்டை நாம் கண்டுபிடிக்கும்போது இதை நாம் தெளிவாகக் காண்கிறோம்:
- யோவான் 4:10 – இயேசு சமாரியப் பெண்ணுக்கு “தேவனின் வரத்தை” வழங்குகிறார்.
அப்போஸ்தலர் 2:38; 8:20; 10:45; 11:17 – பரிசுத்த ஆவியயானவர் ஈவாக வெளிப்படுகிறார்.
அப்போஸ்தலன் பவுல் மற்றொரு குறிப்பைத் தருகிறார்:
- ரோமர் 5:15 & 5:17– இங்கே,பரிசு (டோரியா) அதாவது தேவ நீதி என்று அழைக்கப்படுகிறது.
இது நமக்கு என்ன அர்த்தம் தருகிறது?
நதியின் பரிசு என்பது பரிசுத்த ஆவியியாகிய நபரை நமக்கு அளிக்கிறது.
அவர் மூலம், நாம் தொடர்ந்து தேவ நீதியைப் பெற்று,இயேசு கிறிஸ்துவின் ஆள்தன்மையாக மாறுகிறோம்.
இது வாக்குறுதியை இவ்வாழ்வில் நிஜமாக்குகிறது:
“அவர் இருப்பது போல, நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.” (1 யோவான் 4:17)
எனவே…
“கிறிஸ்து இயேசுவில் நான் தேவனுடைய நீதி” என்று நாம் தைரியமாக ஒப்புக்கொள்ளும்போது,
ஒவ்வொரு (Identity crisis) என்ற அடையாள போராட்டத்தையும் நாம் அமைதிப்படுத்துகிறோம்.ஆகையால் நம் இலக்கை துரிதமாக அடைகிறோம்.
• நம் வாழ்க்கைக்கான தேவனின் இலக்குடன் நாம் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.🙌ஆமென்!
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!