10-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் பிரச்சனைக்கான இறுதி தீர்வாகும்!
2. புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
7.அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்தனர் :
(வெளிப்படுத்துதல் 5: 2,7-8) NKJV
கிறிஸ்துவின் அன்பிற்குரிய அப்போஸ்தலர் யோவான் மிக உயர்ந்த பரலோகத்தில் அவர் கண்டவற்றின் ஒரு அறிக்கையை இங்கே விளக்குகிறார்.தேவன் யோவானை கிருபையுடன் பரத்திற்கு அழைத்துச் சென்று,அங்கு நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தினார்.தேவன் உங்களையும் இந்த நாளில் பரத்திற்கு அழைத்துச் சென்று யோவானுக்கு காண்பித்த அனைத்தையும் காண்பிக்க முடியும்,ஏனென்றால் அவர் ஒரு பாரபட்சமற்ற தேவன் மற்றும் அவர் ஏன் அதைச் செய்கிறார் என்றால் அவருடைய நன்மையின் நிமித்தமாகவே அன்றி நமது நற்செயல்களினால் அல்ல. அல்லேலூயா !
எனது அன்பு நண்பர்களே,பரலோகத்தில் எப்போதும் மனித குலத்தின் தேவைகள் மற்றும் அழுகைக்கு தீர்வுகளை கொண்டு வரவே ஆலோசனை நடைபெறுகிறது. பிரச்சனையின் மூல காரணத்தை அவர்கள் ஒருபோதும் விவாதிப்பதில்லை அல்லது பிரச்சனைக்கு யார் காரணம் என்று ஆராய்வதில்லை. மாறாக,பிரச்சினைகளைத் தீர்க்க யாரிடம் அணுகி சுகம், மறுசீரமைப்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு வர முடியும் என்பதை ஆலோசிக்கிறார்கள்.
ஒருவேளை பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது என்று அவர்கள் கண்டால், அவர்கள் அனைவரும் உடனடியாக உலகின் பாவத்தை (பிரச்சனையை) சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவை பார்க்கிறார்கள்.தேவ ஆட்டுக்குட்டியானவரிடம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு மட்டுமல்லாமல், இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவரே தீர்வாக இருக்கிறார்.
ஆம் கிறிஸ்த்துவுக்குள் அன்பானவர்களே, இதோ,ஆட்டுக்குட்டியான இந்த இயேசுவே உங்களை குணப்படுத்துபவர், உங்கள் மீட்பர், உங்கள் ஆசீர்வாதம். உங்கள் மேன்மை மற்றும் உதவிக்காக நீங்கள் அவரைப் பார்க்கும்போது,அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.இன்றும் கூட இயேசுவின் நாமத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பால், உங்கள் பிரச்சினையைத் தீர்க்க ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார். ஆமென் 🙏
உங்களை நீதிமான்களாக்கிய எப்போதும் சுத்திகரிக்கும் அவருடைய இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதி என்று விசுவாசமாய் அறிக்கையிட்டு, இன்று தேவனின் ஒப்பற்ற வல்லமையை அனுபவியுங்கள் இன்று உங்கள் பிரச்சனைகளுக்கு ஆட்டுக்குட்டியானவர் மூலம் நிச்சயம் தீர்வு உண்டு.ஆமென் 🙏
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்கள் பிரச்சனைக்கான இறுதி தீர்வாகும் !.
கிருபை நற்செய்தி தேவாலயம் .