11-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கிறது!
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (வெளிப்படுத்துதல் 5:6,7) NKJV
முழு மனித இனத்தின் மீட்பிற்காக, தியாகத்தை குறிக்கும் “தேவ ஆட்டுக்குட்டி” என்ற எளிய உருவகத்தை யோவான் நம் ஆண்டவர் இயேசுவுக்கு பயன்படுத்துகிறார்.உலகத்தின் பாவத்தைப் போக்க,ஆட்டுக்குட்டியானவர் தனது சொந்த இரத்தத்தைச் சிந்தினார் (யோவான் 1:9).
ஆட்டுக்குட்டியானவர்,சாந்தகுணமுள்ளவர் என்றாலும் பலவீனமானவர் அல்ல.எல்லா தேவதூதர்களை விட வலிமையானவர் கர்த்தராகிய இயேசு,ஏனென்றால் சர்வவல்லமையுள்ள தேவனின் வலது கரத்திலிருந்து நம் எதிர்காலத்தை சித்தரிக்கும் சுருளை எந்த தேவதூதராலும் அருகில் கூட செல்ல முடியவில்லை ஆனால் ஆட்டுக்குட்டியான இயேசு தன் தியாகத்தின் நிமித்தம் அந்த சுருளை எடுத்து அதை வெளிப்படுத்தவும் வல்லவராயிருக்கிறார்.
ஆட்டுக்குட்டி ஒரு உதவியற்ற ஜீவன், அப்படியே இயேசு உதவியற்ற நிலையில் சிலுவையில் தொங்கினார், அனைவராலும் கைவிடப்பட்டார் மற்றும் தேவனால் கூட கைவிடப்பட்டார், ஏனென்றால் அவர் முழு உலகின் அனைத்து பாவங்களையும் சுமந்து தீர்த்தார். ஆனால் அவர் ஏழு ஆவிகளைக் கொண்டவராகக் காணப்படுகிறார்,அவர் சர்வ வல்லமை வாய்ந்தவர் மற்றும் சர்வத்தையும் அறிந்தவர் என்பது அதன பொருள் ஆகும்.அவைகள் தேவனின் பண்புகள் ஆகவே அவர் தேவன்.
கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே , இன்றும் நீங்கள் தனிமையில் இருந்தாலோ அல்லது துரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, உதவியற்ற நிலையில் இருந்தாலோ அல்லது எல்லா நீதியும் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டதாகத் தோன்றினாலும்,கலங்காதிருங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள் இதோ நற்செய்தி , ஆட்டுக்குட்டியானவரே உங்கள் பாதுகாப்பு. அவரே உங்கள் நீதி. இக்கட்டான நாளில் அவரே உங்களின் உதவியாளர்.உங்களுக்கு எதிராக நின்ற அனைத்தையும் அவர் முறியடித்துவிட்டார். அவருடைய இரத்தம் உங்கள் எல்லா பாவங்களையும் கழுவி, உங்களை என்றென்றும் ஆசீர்வதித்தது. உலகம் என்ன சொன்னாலும், நீங்கள் உங்களை எப்படி பார்த்தாலும் எல்லாம் வல்ல தேவனின் கண்களுக்கு முன்பாக அவர் உங்களை நீதிமான்களாக்கினார். அல்லேலூயா!
இன்று உங்கள் நாள்! தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியதால், எல்லா ஆசீர்வாதங்களும் இயேசுவின் நாமத்தில் உங்கள் மீது தங்கியிருக்கும் .ஆமென் 🙏
ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம் .