இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

15-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51. அவர்களைt ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.லூக்கா 24:50-51 NKJV

உயிர்த்தெழுந்த இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலின் மூலம் புதிய சிருஷ்டியாக மாறிய தம் சீஷர்களை முதலில் ஆசீர்வதிக்காமல் அவர் பரலோகத்திற்கு ஏறியிருக்கமாட்டார்.
அவர் அவர்களை ஆசிர்வதித்த கணமே அவர்களிடமிருந்து பிரிந்தார் என்பதே உண்மை. மகிமையின் ராஜா மகிமையோடு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் ! அல்லேலூயா!!
விசுவாசிகள் (புதிய சிருஷ்டிகள்) பெற்ற இறைவனின் இந்த ஆசீர்வாதத்தின் தனித்தன்மை என்ன?
புதுசிருஷ்டி அழியாத, என்றென்றுமுள்ள ஆசீர்வாதம் நிறைந்தது என்பதாகும் ! அல்லேலூயா!

ஆபிரகாம் தனது மகன்களை ஆசீர்வதித்த பிறகு,அவர் மரித்து போனார்.ஈசாக்கு தன் மகன்களை ஆசீர்வதித்த பிறகு, அவரும் கடந்து சென்றார். யாக்கோபு அல்லது இஸ்ரேல் அவரது மகன்களை ஆசீர்வதித்த பிறகு,அவரும் கடந்து சென்றார், ஆரோன் மற்றும் மோசேயும் இப்படியே ஆசீர்வதித்தார்கள் . ஆனால் அந்த ஆசீர்வாதங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் அல்ல.
அந்த ஆசீர்வாதங்களைப் போலல்லாமல், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு அவர்களை ஆசீர்வதிக்கத் தேர்ந்தெடுத்தார், அவர் அவர்களை ஆசீர்வதித்த உடனேயே, அவர் பரலோகத்திற்கு பரமேறினார்.எனவே இந்த ஆசீர்வாதமானது நிரந்தரமாக என்றும் நிலைத்திருக்கும்.

இன்றும் என் பிரியமானவர்களே, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் பரலோகத்திற்கு ஏறி தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்போது, ​​நீங்கள் அவருடைய என்றென்றுமான ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் – உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதம்! இந்த ஆசீர்வாதம் யாராலும் மாற்ற முடியாதது. யார் உங்களை சபித்திருந்தாலும்,உயிர்த்தெழுதலின் இந்த ஆசீர்வாதத்திற்கு எதிராக எந்த சக்தியும் செயல்பட முடியாது. நீங்கள் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ! அல்லேலூயா! ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்!
கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *