16-05-23
இன்றைய நாளுக்கான கிருபை !
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய என்றென்றுமுள்ள நீதியுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
7. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8. எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.(ரோமர் 4:6-8 )NKJV.
அப்போஸ்தலராகிய பவுல் சங்கீதம் 32:1,2ல் இருந்து மேற்கோள் காட்டுகிற காரியமாவது , கடவுளால் மட்டுமே மனிதனை “நீதிமான்”என்று அறிவிக்க முடியும். இது சாதி, மதம், நிறம் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட கடவுளின் ஆசீர்வாதம். நம்மிடமிருந்து தேவைப்படுவது எல்லாம் அவரை ‘நம்புவது’ மட்டுமே.
மனிதன் தன் சொந்த தியாகத்தினாலோ அல்லது நற்காரியங்கள் மூலமோ கடவுளின் பார்வையில் நீதிமான் ஆக முடியாது.பூமியில் வாழ்ந்த மனிதர்களில் உண்மையான நீதிமானாக வாழ்ந்து காட்டியவர் இயேசு நாதர் மட்டுமே. அவர் பூமியில்வாழ்ந்த நாட்களில் நியாயப்பிரமானத்தின் அனைத்து தேவைகளையும் அவரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.உலகம் முழுவதற்கும் – இருந்தவர்களும், இருப்பவர்களும், வருபவர்களுமாகிய அனைவருடைய பாவங்களை சுமந்து அவர்களை நீதிமானாக்கத் தம்மையே அர்ப்பணித்தார்.
கடவுள் சிலுவையில் இயேசுவினுடைய இந்த பலியை ஒப்புக்கொண்டார், ஆகவே ,முழு உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் அவருடைய மகன் இயேசுவின் மீது சுமத்தினார். மேலும் தெய்வீக பரிமாற்றத்தின் மூலம் தேவ நீதியை இலவசமாக மனிதனுக்கு கொடுத்தார் .இதன் விளைவாக என்றென்றுமுள்ள நித்திய ஆசீர்வாதம் அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது.அல்லேலூயா !
எனவே ,இயேசுவின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறீர்கள். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு இந்த ‘என்றென்றும் நீதியுள்ள’ ஆசீர்வாதத்தால் உங்களை ஆசீர்வதித்தார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
உங்கள் செயலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் செயலோ இந்த ‘என்றென்றும் நீதியுள்ள’ஆசீர்வாதத்தை மாற்ற முடியாது.
நீ என்றென்றும் மாற்றமுடியாத நீதிமான்! எனவே,மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் இயேசுவின் பெயரில் மாற்ற முடியாத உங்கள் பங்காகும்! அவருடைய என்றென்றும் நீதி நம்மை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறது ! ஆமென் 🙏
இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய என்றென்றுமுள்ள நீதியுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.