06-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் ஆல்பாவும்,ஒமேகாவும்,ஆரம்பமும் மற்றும் முடிவுமாயிருக்கிறார்!
8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .(வெளிப்படுத்துதல் 1:8,) NKJV
“தேவன், பல்வேறு காலங்களிலும்,பல்வேறு வழிகளிலும் கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் மூலம் நம் முற் பிதாக்களிடம் பேசினார், இந்த கடைசி நாட்களில் தம் குமாரன் மூலம் நம்மிடம் பேசுகிறார்.
அவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்துள்ளார், அவர் மூலம் உலகங்களையும் படைத்தார். எபிரேயர் 1:1-2 NKJV
இயேசு ஆல்பா மற்றும் ஒமேகா என்பது தேவனின் வார்த்தை வடிவத்தின் வெளிப்பாடாகும்.அவர்,ஆரம்பமும் முடிவும் என்பது தேவனின் செயல் வடிவத்தின் வெளிப்பாடு ஆகும்.
தேவன் பழைய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார், ஆனால் இந்த கடைசி நாட்களில் அவர் நேரடியாக இயேசுவின் மூலம் பேசுகிறார்.பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் மறைந்திருக்கும் ஆல்பாவாக இயேசு இருக்கிறார் மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் இப்போது வெளிப்படுத்தப்பட்ட ஒமேகாவுமாய் இயேசு இருக்கிறார்.
அதேபோல்,தேவனின் நிரூபணமான வெளிப்பாட்டில்,இயேசுவே ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறார். இதன் பொருள்,தேவன் செய்யும் அனைத்தும் இயேசுவுடன் தொடங்குகிறது, மேலும் தேவன் செய்யும் அனைத்தும் இயேசுவுடன் முடிவடைகிறது.கடவுள் எல்லாவற்றையும் இயேசுவின் மூலம் படைத்தார். *‘இயேசுவே ஆரம்பம்’ என்றால் அவர் படைப்பாளர் என்றும் ‘இயேசுவே முடிவு’ என்றால் அவர் எல்லாவற்றின் வாரிசு – வானங்கள் மற்றும் பூமியின் உடைமையாளர் என்று அர்த்தமாகும் .
என் பிரியமானவர்களே,உங்கள் வாழ்வில் இயேசுவே முதல் மற்றும் இறுதியான வாக்கை சொல்லட்டும்.வியாதி இறுதி சொல்லாக இருக்க முடியாது, வறுமை இறுதி சொல்லாக இருக்க முடியாது, மரணம் இறுதி சொல்லாக இருக்க முடியாது மற்றும் தோல்விகள் இறுதி சொல்லாக இருக்க முடியாது, இயேசுவே இறுதி சொல்லாக இருக்கிறார்! அவரே ஒமேகா! எனவே,அவரே உங்கள் வாழ்வை நன்மையினால் ஆசீர்வதிக்கிறார்.ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவர் ஆல்பாவும்,ஒமேகாவும்,ஆரம்பமும் மற்றும் முடிவுமாயிருக்கிறார் !
கிருபை நற்செய்தி தேவாலயம் .