04-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்த்து,உங்கள் அற்புதம் திடீரென்று நடக்க மறுரூபமடையுங்கள்!!
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்துதல் 22:7 NKJV.
மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தின் வாழ்த்துக்கள்!
என் அன்பானவர்களே,இந்தப் புதிய மாதத்தைத் தொடங்கும்போது,நீங்களும்,
உங்கள் குடும்பத்தையும் பற்றிய அனைத்தும் காரியங்களிலும் இயேசுவின் நாமத்தில் ஒரு புதிய பரிமாணத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாழ்த்துகிறேன்!
இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாம் நுழையும் போது,கர்த்தரும் அவருடைய பரிசுத்த ஆவியானவரும் இயேசுவை நமக்கு கிருபையாய் வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் இயேசுவின் அந்த வெளிப்பாட்டின் மூலம்,அவர் வாக்குறுதியளித்ததை நாம் நிச்சயமாக அனுபவிப்போம் என்று உறுதியாய் இருங்கள்.ஆமென்!
பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட இயேசுவின் வெளிப்பாடு மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன்.இந்த அறிவு தெய்வீகத்தால் வெளிப்படுத்தப்படுகிறது,மனிதனால் அல்ல, இயற்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் இயற்கையாக அல்ல,நேரடியாக பரத்திலிருந்து கீழ்நோக்கி வருகிறது. இந்த அறிவு இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படும் நபரைப் பற்றிய அறிவு.
ஒவ்வொரு முறையும், “இதோ” என்ற வார்த்தை வேதத்தில் தோன்றும்,அது ஆன்மீக கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள தேவன் நமக்கு ஒரு அழைப்பு கொடுக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும் மற்றும் அது இயற்கையானது அல்ல.அப்படியாக தேவன் விரும்பும் விதத்தையும்,தேவன் பேசும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள நமக்கு உதவ,பரிசுத்த ஆவியானவரின் உதவி (HELPER ) நிச்சயமாக தேவைப்படுகிறது .அவரே நம்மை சரியாக புரிந்து கொள்ளச்செய்கிறார்.அல்லேலூயா !!
இயேசு,“இதோ நான் சீக்கிரமாக வருகிறேன் என்று சொன்னார்”சத்தியமாகவே அவர் சீக்கிரமாக வருகிறார். “விரைவாக“என்பது “திடீரென்று” என்றும் பொருள் கொள்ளலாம்,அதாவது அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.உண்மையில்,அது மிகவும் எதிர்பாராத நேரத்தில் நடக்கும்.எனவே உங்கள் தெய்வீக சந்திப்பை இன்று ஆவலுடன் எதிர்பாருங்கள்!
மேலும்,எனது அன்பு நண்பர்களே,இந்த டிசம்பர் மாதத்தை “திடீர் மாதமாக“அறிவிக்கிறேன். திடீரென்று உங்கள்பலநாள்ப்பட்ட நோய்கள் குணமடையும்!திடீரென்று உங்கள் வாழ்வில் உயர்வு ஏற்படும்! .திடீரென்று,உங்கள் கடவுள்- தருணம் (KAIROS MOMENT )வெளிப்படும்!*திடீரென்றுஉங்கள் கற்பனைக்கு எட்டாத எதிர்பாரத அற்புதங்கள் இயேசுவின் நாமத்தில் நடக்கும்!ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்த்து,உங்கள் அற்புதம் திடீரென்று (வேகமாக) நடக்க மறுரூபமடையுங்கள்!!
கிருபை நற்செய்தி தேவாலயம்.