8-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. I யோவான் 3:1-NKJV
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? எபிரெயர் 1:5 NKJV
தேவதூதர்கள் மனிதர்களை விட வலிமையிலும் மகிமையிலும் மிக உயர்ந்தவர்கள், ஆனால் யோபு 1:6 போன்ற சில இடங்களில் அவர்கள் ‘தேவனின் மகன்கள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவர்களில் யாரும் தேவனை தங்கள் தந்தை என்று அழைக்க முடியாது. ஏனென்றால்,அவர்கள் படைக்கப்பட்டவர்கள் மேலும் அவர்களுக்கு தேவன் எலோஹிம்- அதாவது சிருஷ்டிகர் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் .
ஆதாம் கூட தேவனை தந்தை என்று அழைக்க முடியாது. அவரைப் பொறுத்தவரை,தேவன் கர்த்தராகிய தேவன் (LORD GOD ),அதாவது யெகோவா எலோஹிம்.என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்.காரணம் ஆதாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய சாயலிலும் அவருடைய சொரூபத்திலும் படைக்கப்பட்டவர் (ஆதியாகமம் 1:26). ஆகவே தேவன் தூதர்களுக்கு -எலோஹிமாகவும் , மனித இனத்திற்கு யெகோவாகவும் இருந்தார்.மனிதன் தன் சிருஷ்டிகரை மட்டுமே வணங்க தேவனுடன் உடன்படிக்கை கொண்டிருந்தான்..இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் புத்திரர்களால் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது . ,அவர்கள் தங்கள் தேவனை யெகோவா என்று அழைகின்றனர்.
இருப்பினும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது,ஒரே பேறானவராக தம் சொந்த குமாரனாக தேவன் அனுப்பினார்.மனித வரலாற்றிலும், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் வரலாற்றிலும் இது வரை இல்லாத ஒரு புது உறவாக,முதன் முறையாக இயேசு, தேவனை தனது தந்தை என்று அழைத்தார். மற்றும் பாவத்தில் விழுந்து போன மனுகுலத்திற்கும் இந்த தேவன் சர்வவல்லமையுள்ளவர், நம் தந்தையும் கூட என்று பிரசங்கித்தார்.இதற்காக இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் நம்முடைய பாவங்களைப் போக்க மிகப் பெரிய விலையாக தம் உயிரையேக் கொடுத்தார்.
இயேசுவை தனது சொந்த தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் பிதாவின் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் காரணமாக தேவன் மனிதனுடைய சொந்த தந்தையாக இருக்கிறார்.
நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, நம்மை தகுதிப்படுத்தி தேவன் நம்மை எவ்வளவாய் நேசித்தார் என்பதைப் பாருங்கள்! அல்லேலூயா! இன்று நாம் தேவனை நம் தந்தையாகக் கொண்டிருக்கிறோம்.- அப்பா பிதாவே என்று அழைக்க இயேசுவின் ரத்தம் நம்மை தகுதிப்படுத்தியது! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம்.