இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

12-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.அப்போஸ்தலர் 16:25-26 NKJV

மனிதனுக்கு உதவி அனுப்பும் வழிகளில் ஒன்று தேவன் ஒரு மனிதனை பயன்படுத்துகிறார்.

மேற்கண்ட வேத பகுதியில் பார்க்கின்ற கைதிகள் பிணைக்கப்பட்டு மற்றும் அவர்கள் விடுதலைக்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்திருந்த நிலையில் காணப்பட்டனர்.ஆனால் தேவன் வேறு திட்டங்களை வைத்திருந்தார்,மேலும் இந்த கைதிகளை விடுவிக்க பவுல் மற்றும் சீலா ஆகிய நபர்களை அனுப்பினார். அவர்களின் ஜெபங்களும் துதிகளும் தேவனின் ஒப்பற்ற மற்றும் இணையற்ற வல்லமையின் திடீர் தோற்றத்திற்கு வழிவகுத்தன, இதன் விளைவாக அவர்களின் சங்கிலிகள் மட்டுமல்ல, கைதிகளும் திடீரென விடுவிக்கப்பட்டனர்.

என் அன்பானவர்களே,இந்த நாளில் தெய்வீகஉதவியானது மனித உருவில் இயேசுவின் மூலம் உங்களிடம் வரவும், உங்கள் விடுதலைக்கு காரணமாக இருக்கவும் நான் அறிகையிட்டு ஆணையிடுகிறேன்!

ஆமென் 🙏

அந்த கைதிகள் ஜெபிக்கவில்லை மற்றும் அவர்களின் முன்குறிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவியவர்களான பவுல்,சீலாவுடன் சேர்ந்து ஜெபிக்கவும் இல்லை பாடவும் இல்லை. ஆனால், “அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்” என்று வார்த்தை கூறுகிறது. கேட்பது விசுவாசத்தை உருவாக்குகிறது, ஏனெனில் விசுவாசம் கிறிஸ்துவின் வார்த்தையை மீண்டும் ,மீண்டும் கேட்பதாலே மட்டுமே வருகிறது.
என் பிரியமானவர்களே, எதுவும் செயல்படாதபோது, தேவனுடைய வார்த்தையை உன்னிப்பாகக் கேட்பது பயனளிக்கும். எனது பிரசங்கங்களையும் ஆராதனைகளையும் தொடர்ந்து கேட்கும்படி என் சபை உறுப்பினர்களிடம் நான் எப்போதும் கூறுவதற்க்கும் கரணம் இதுவே .

சில சமயங்களில்,நம் வாழ்வின் திருப்புமுனைக்குத் தேவையான அறிவுரைகள் எதிர்பாராத ஒருவரிடமிருந்து வரலாம்.
குஷ்டரோகியான நாமானின் சுகம் அவனுடைய சொந்த வீட்டு வேலைக்காரியின் ஆலோசனையின் வார்த்தையிலிருந்து வந்தது (2 இராஜாக்கள் 5:3).

இயேசுவின் நாமத்தில் நம் வாழ்வில் தேவனால் நியமிக்கப்பட்ட எதிர்காலத்தை அடைய உதவும் உதவியாளர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் கவனத்துடன் வைத்திருக்க வேண்டுகிறேன்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது.நம் காதுகளைத் திறந்து, திடீரென்று நம் வாழ்வில் முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *