உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

28-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV

கடவுள் 6 நாட்கள் உலகத்தை படைத்து முடித்தப் பிறகு 7ஆம் நாளில் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:1-2:1). அவர் செய்த வேலை சரியாகவும் முழுமையாகவும் முடிந்ததால்,கடவுள் மனிதனிடம் எதிர்பார்த்தது அவன் அவருடைய படைப்பில் ஓய்வெடுத்து அதை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆகும் . ஆனால்,ஆதாமும்,ஏவாளும் பிசாசினால் ஏமாற்றப்பட்டு, தங்களிடம் இல்லாத ஒன்று இன்னும் ஏதோ எஞ்சி இருக்கிறது என்று நம்பி, முழுப் படைப்பையும் சிதைத்து வீழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
இதுவே படைப்பின் வீழ்ச்சியடைந்த நிலையில் கடவுளை மறுவேலை செய்ய வைத்தது .”மறுவேலை என்பது -மீட்பு”என்று அழைக்கப்படுகிறது. இது இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் நிறைவேறியது . மீட்பின் வேலையின் விளைவாக, ‘புதிய படைப்பு’ தோன்றியது.

இயேசுவை தனது ஆண்டவராகவும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய சிருஷ்டியாயிருக்கிறார்கள் . அவனுடைய / அவளுடைய வாழ்க்கையின் பழைய விஷயங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன, எல்லாமே புத்தம் புதியதாகிவிட்டன. அல்லேலூயா !

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், இயேசு உங்கள் கடந்த காலத்தை முற்றிலும் நீக்கி புத்தம் புதிய வாழ்க்கையை உங்களுக்கு வழங்குகிறார். கடவுளின் வகையான இந்த புது சிருஷ்டி காலத்திற்குக் கட்டுப்படாத நித்திய வாழ்க்கையாகும் . இந்த புது சிருஷ்டி (new creation) ஒருபோதும் பலவீனம்,வலி,மற்றும் மரணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் நம்மை வெற்றி வாழ்க்கை வாழச்செய்கிறது . ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *