17-08-23
இன்றைய நாளுக்கான கிருபை !
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.
என் அன்பானவர்களே, நீதியின் பாதையில் நடப்பது என்றால் , “என்னால் முடியாது ஆனால் உங்களால் முடியும்” என்று ஒப்புக்கொள்வதாகும்.எதிர்காலத்தைக் குறித்து முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும்போது அவரிடத்தில் முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்கு தைரியத்தை ஏற்படுத்துகிறது. ..
விசுவாசம் என்பது உணர்வல்ல ஆனால் உணர்வானது விசுவாசத்தைப் பின்பற்றும்.
விசுவாசம் என்பது ” எனக்குத் தெரியும்” என்று கூறுவதில் இல்லை ,மாறாக விசுவாசமானது ” எனக்கு தெரியாது” என்று ஒப்புக்கொண்டு ஆண்டவரிடம் விசுவாசத்தை வைப்பதாகும். உங்கள் உணர்வுகள் சூழ்நிலைக்கு எதிர்மாறாகப் பேசலாம், தீவிர கவலைகளை வெளிப்படுத்தும் சந்தேகங்கள், அச்சங்கள் மற்றும் தடுமாற்றத்தையும் கூட ஏற்படுத்தலாம்.இந்த காரியம் அப்படிஆகவில்லை என்றால் என்ன செய்வது மேலும் அந்த காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் நம்மிடம் பிளான் B இருக்கிறதா?” என்று யோசித்து கொண்டே இருக்கச்செய்யும்.
ஆனால் , விசுவாசம் என்பது ‘நான் எதை நம்புகிறேன் என்பதல்ல, மாறாக ‘யாரை’ நம்புகிறேன் என்பதாகும் . (2 தீமோத்தேயு 1:12).
தாவீது தேவனை மேய்ப்பனாக பாவித்தார் .அவர் எல்லா விஷயங்களிலும் மேய்ப்பருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார் – குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர் தனது மேய்ப்பராகிய தேவனிடம் ஆலோசிக்கத் தொடங்கினார், அவர் உணர்ந்த அனைத்தையும், அவர் நினைத்த அனைத்தையும், அவரது ஆசைகளிலும் ,அச்சங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். அவர் தனது குடும்பத்தில் கடைசியாக பிறந்தவர், ஆனால் தேவன் அவரை நாட்டின் முதல் குடிமகனாக மாற்றினார் . இந்த காரியம் உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது*!
என் அன்பானவர்களே , இயேசு என்று அறியப்பட்ட ஆண்டவர் , உண்மையான மற்றும் ஒரே நல்ல மேய்ப்பன். அவர் உங்களுக்காக உயிரைக் கொடுத்தார், பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை . அவரை உங்கள் இரட்சகராகவும், உங்கள் மேய்ப்பராகவும், உங்கள் நீதியாகவும் ஆக்குங்கள், நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள்.அவர் உங்களை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டார். அவரை நம்புங்கள்! * *உங்கள் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுங்கள், அவர் உங்கள் வாழ்க்கையை அழகாகவும்,ஆசிர்வாதமாகவும் , போற்றத்தக்கதாகவும் இன்றே மாற்றுவார் ! ஆமென் 🙏
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !
கிருபை நற்செய்தி தேவாலயம்