மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

img_106

10-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

17.அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே,அந்த ஒருவன்மூலமாய்,மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

முதல் மனிதனின் (ஆதாமின்) குற்றத்தால் பரிசுத்த ஆவியானவர் ஆதாமை விட்டு வெளியேறினார், தேவனின் மகிமை வெளியேறியதின் நிமித்தமாக ஆதாமும், ஏவாளும் தங்களை நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தனர்.அதனிமித்தம் – தேவனின் நீதியையும் இழந்து,தேவனுடன் சரியாக நிற்கும் தகுதியையும் இழந்து,மற்றும் தேவன் மனிதகுலத்திற்கு கொடுத்த ஆதிக்கத்தையும் (கிரீட மகிமையையும் ) தவறிவிட்டனர். மரணம் புதிய ஆட்சியாளராக மாறியது (மரணம் ஆட்சி செய்தது).
எனவே, மனிதகுலம் இழந்த மூன்று காரியங்கள் -அ) பரிசுத்த ஆவி, ஆ) தேவ நீதி மற்றும் இ) ஆதிக்கம்.

ஆனால் தேவனின் அன்பானது இந்த மூன்றையும் மனிதகுலத்திற்கு மீட்டுக்கொடுக்க தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பியது..இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தர்,தம்முடைய பாவமற்ற நிலை மற்றும் பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்ததின் மூலம்,ஒவ்வொரு மனிதனுக்கும் இழந்ததான – பரிசுத்த ஆவியானவர்,தேவ நீதி மற்றும் தேவன் கொடுத்த ஆதிக்கம் ஆகியவற்றை மீட்டுக்கொடுத்தார் . இதில் நற்செய்தி என்னவென்றால், ஆதாமின் மூலம் மனிதன் இழந்ததை விட இயேசுவின் மூலம் மீட்டெடுத்த காரியங்கள் மிகப் பெரியது. இன்று பரிசுத்த ஆவியானவர் என்றென்றும் உங்களுடன் தங்கியிருப்பார், இதன் விளைவாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக இருப்பீர்கள் மற்றும் என்றென்றும் ஆளுகை செய்வீர்கள்.

ஆகவே, என் அன்பானவர்களே,பரிசுத்த ஆவியானவரே உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கி, இயேசுவின் நிமித்தம் அனைத்து இருளின் அந்தகார சக்திகளையும் ஆளுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் நெருங்கிய நண்பராக இருக்கட்டும். இன்றே அவரை உங்கள் வாழ்வில் அழையுங்கள்,அவரைப் பொக்கிஷமாகக் கருதுங்கள்,அவரோடு பேசிக்கொண்டே இருங்கள்.அப்பொழுது, நீங்கள் ஒருபோதும் இருந்த வண்ணமாக இருக்க மாட்டீர்கள். அல்லேலூயா! ஆமென் !!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

எங்கள் நேர்மை இயேசுவை போற்றுங்கள் !!
கிரேஸ் புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *