18-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.எபிரெயர் 10:19-22 NKJV
பிதாவினுடைய சித்தம் அவருடைய ஒரேபேறான குமாரனை நம்மைப் போலவே ஒரு மனிதனாக பூமிக்கு அனுப்புவதுதான்.அவர் பெயர் இயேசு! அவர் வந்து பூமியில் தேவனின் விருப்பத்தை நிறைவேற்றினார். அவர் நமக்காக பாவம் ஆனார்.அவர் நம்முடைய பாவத்திற்கான ஜீவாதார பலியாகவும் ஆனார்,அதன் விளைவாக அவர் இப்போது நம் ஆத்துமாக்களின் இரட்சகராகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார்.
இப்போது, இயேசுவின் இரத்தம் தேவனிடம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது.அவருடைய இரத்தம் நமக்காக இரக்கத்தை மன்றாடுகிறது.அவருடைய இரத்தம் நம்மை பாவத்திலிருந்து காப்பாற்றுகிறது மேலும் அவருடைய இரத்தம் தேவனின் மிகச் சிறந்ததை நமக்கு உரிமையாக்கித் தருகிறது.
இயேசுவின் இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது.எனவே, நீங்கள் தைரியமாக தேவனை அணுகி அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் வாக்குத்தங்களை நிறைவேற்ற மன்றாடலாம். உங்கள் ஆசீர்வாதத்தை தடுக்க எந்த தீய சக்தியும் இல்லை.இயேசுவின் இரத்தத்தினிமித்தம் தேவன் உங்களை ஆசீர்வதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். இயேசுவின் நீதியின் நிமித்தம் உங்களை ஆசீர்வதிப்பதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.
என் பிரியமானவர்களே,தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக ஆக்கியதால், அவருடைய கனத்தினாலும், மகிமையினாலும் நீங்கள் முடிசூட்டப்பட்டிருக்கிறீர்கள்.
உங்கள் உண்மையான அடையாளம் நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று அல்ல, மாறாக உங்கள் உண்மையான அடையாளம் தேவன் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான்.அவர் உங்களை என்றென்றும் நீதிமான்களாகக் காண்கிறார்!அவர் உங்களை மனமகிழ்ச்சியாடு பார்க்கிறார்! அவர் உங்களை நித்திய அன்புடன் நேசிக்கிறார்.
மேலே கூறப்பட்ட இந்த ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள், இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நிரம்பி வழியும் ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் காண்பீர்கள். ஆமென் 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய அற்புதமான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!