12-04-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வெற்றியாளரை விட மேலானவராக ஆளுகை செய்யுங்கள்!
10.இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்
11.பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று*நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்*எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.பிலிப்பியர் 2:10-11 NKJV.
என் அன்பானவர்களே ,இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்றும் அவர் உங்கள் நீதி என்றும் அறிக்கைசெய்யும் போது,தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்.பிதாவாகிய தேவன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.அவர் மிகவும் கனமடைகிறார்.அவர் முகம் புன்னகையால் நிரம்புகிறது,ஏனென்றால் மனிதனால் சாத்தியமற்றது இப்போது அவர் குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் சாத்தியமாகியது,அவர் நம்மில் வசிக்கிறார்.அல்லேலூயா!
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறாக அறிக்கைசெய்கிறார்,”என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலம் நான் எல்லாவற்றையும் செய்ய முடியும்“.
என் பிரியமானவர்களே,பாவம்,மரணம்,நரகம்,பிசாசு ஆகிய அனைத்தையும் வென்றவர் உங்களில் வாழும் போது, நீங்கள் ஒரு வெற்றியாளரை விட மேலானவராக உயர்தப்படுகிறீர்கள்.
சவால்கள் உங்கள் வழியில் வரும்போது,அது நீங்கள் யார் என்பதைப் பற்றியது அல்ல உங்களில் யார் இருக்கிறார் என்பதை பொறுத்தது. அல்லேலூயா!
இந்த உணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள்.இதுதான் தேவநீதியின் உணர்வு! மகத்தான கர்த்தர் உங்களில் வாழ்கிறார்!உங்கள் மூலம் செயல்பட அவரை அனுமதியுங்கள் உங்கள் புதிய அத்தியாயத்தை இந்த உலகம் பார்க்கும்!
உலகத்தில் இருப்பவரை விட உங்களில் இருப்பவர் பெரியவர்.(1 யோவான் 4:4).ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வெற்றியாளரை விட மேலானவராக ஆளுகை செய்யுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!